விளையாட்டு

இங்கிலாந்து நாட்டில் 2012-ல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக வடிவமைக்கப்பட்ட பதக்கங்கள் ஒலிம்பிக் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் பிரிட்டனின் டிராவல்கர் சதுக்கத்தில் வெளியிடப்பட்டன. இங்கிலாந்து கலைஞர் டேவிட் வாட்கின்ஸ் வடிவமைத்துள்ள இதில் வெற்றியை குறிக்கும் நைக் என்ற கிரேக்க பெண் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறம் லண்டன் தேம்ஸ் நதிக்கரையை குறிக்கும் படங்களும் இடம் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 2,100 பதக்கங்கள் பல்வேறு போட்டிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஞாபகம் வருதா,,,..
                                                      
காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் புரிந்ததாக சி.பி.ஐ.விசாரணையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ,போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடிக்கு  எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை பகுதியினை ஸ்கேன் செய்து பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக டில்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில், பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாக, போட்டியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சுரேஷ் கல்மாடி மீது புகார் கூறப்பட்டது. சி.பி.ஐ. விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கல்மாடிக்கு ஞாபக மறதி நோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதற்காக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி தல்வாந்த்சிங் ,கல்மாடியை இதயம் மற்றும் நரம்பியல் சம்பந்தமான சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை பகுதியினை ஸ்கேன் செய்து உண்மையினை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது. பலத்த போலீஸ்பாதுகாப்புடன் எய்மஸ் மருத்துவமனையி்ல் தங்கியுள்ள கல்மாடியினை சந்திக்க உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக திகார் சிறைத்துறை செய்தி தொடர்பாளர் சுனில்குப்தா கூறினார்.
ஆனால். ஸ்கேன் எடுத்து திரும்பும் போது பத்திரிகையாளர்களிடம் பேசிய கல்மாடி, நான் நன்றாக இருக்கிறேன். என்னைப்பற்றி வரும் தகவல்கள் தவறானவை. நான் எனது வழக்கமான பரிசோதனைக்கே வந்தேன். நேரம் வரும் போது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன என்று கூறினார். 
அரசியல்வாதிகளுக்கும் மக்கள் சொத்தில் ஆட்டையை போடுகிறவர்களுக்கும் இந்த செலக்டிவ் அம்னீசியா போன்ற நோய்கள் வசதியாகி விட்டது.
நான் நலமாகத்தான் இருக்கிறேன் என மறதி இல்லாமல் கல்மாடி கூறுகிறார்.ஆனால் சி/பி/ஐ,யும் சிறையினரும் அவருக்கு மறதி நோய் என்கிறார்கள்.அங்கே என்ன நடக்கிறது.?
ஆசியப்போட்டியை தான் நடத்தியதை அவர் மறக்க வேண்டும் என்று யாரோ நினைப்பதுபோல் தெரிகிறது.
______________________________________________________________________________________________
வால்ட் டிஸ்னியின் தமிழக வருகை.
தமிழ் மற்றும் பல இந்தியா மொழிகளில் சின்னத்திரை,வெள்ளித்திரை துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய நிறுவனமான யுடிவி-யை ரூ.2014 கோடிக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமா உலக அளவில்செல்ல நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. முன்பு யுடிவி நிறுவனத்தின் 50.5 பங்குகளை வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கி வைத்திருந்தது. இப்போது மீதமுள்ள பங்குகளையும் ரூ 1000 வீதம் டிஸ்னி நிறுவனம் வாங்க முடிவு செய்து ஒப்பந்தமும கையழுத்தானது. யுடிவியின் நிறுவனர்களான ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசமுள்ள பங்குகளையும் சேர்த்து வாங்குகிறது டிஸ்னி. இதன் மூலம் புதிதாக 454 மில்லியன் டாலர் அதாவது ரூ 2014 கோடியை யுடிவியில் முதலீடுசெய்துள்ளது வால்ட் டிஸ்னி.
                                        
பாலிவுட் டில் படங்கலைத்தயாரித்தயுடிவிதற்போதுதமிழில் திரைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இப்போது இந்த நிறுவனம் டிஸ்னி வசம் செல்வது, தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்கை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. யுடிவி வெளியிட்ட தெய்வத்திருமகள் படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுபோக இந்நிறுவனம் அடுத்து வெளிவர இருக்கும் வேட்டை, வழக்கு எண் 18/9 , கும்கி படங்களின் உரிமையையும் யுடிவி பெற்றுள்ளது. இந்தப் படங்கள் இனி வால்ட் டிஸ்னி பெயரில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதேபோல், யுடிவியின் நேரடித் தயாரிப்பில் உருவாகும் முகமூடி படம் வால்ட் டிஸ்னி தயாரிப்புபெயரிலேயே வெளியாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்னொரு சிகப்பு ரோஜா.?

thumbnail
----------------------------------------------------------------------
கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் புதிய படமான விஸ்வரூபம் படத்தில்
சிவப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்தது போன்று நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறாராம் கமல்ஹாசன். வெகு நாட்களாக நெகட்டிவ் ரோலில் நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம் கமல். அதிலும் குறிப்பாக சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்தது போன்ற ஒரு கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். நியாயமான காரணத்திற்காக காதலை வெறுக்கும் ஒரு ஹீரோ, சைக்கோ கொலையாளியாக மாறி ஒவ்வொரு பெண்ணாக போட்டுத் தள்ளுகிற கதைதானாம் விஸ்வரூபம் படத்தினுடையது. ஆனால் இதிலும் கமலுக்கு அழகான ஒரு லவ் இருக்கும்.
படப்பிடிப்பு நடத்தப்போகும் இடங்களையெல்லாம் புகைப்படங்களாக்கி, தயாராக வைத்திருக்கும் கமல்ஹாசன் சூட்டிங்கிற்கு தயாராகி விட்டார். ஆனால் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நாயகிதான் யாரென்று இன்னமும் தெரியாமலேயே இருக்கிறது. அதேநேரம் படத்தில் இடம்பெறும் முக்கிய கேரக்டரில் நடிகை ப்ரியா ஆனந்தை கமல் நடிக்கவைக்கிறார் செய்திருக்கிறார் கதாநாயகிதான் யார் என தெரியவில்லை.

=========================================================================
கென்யா அகதிகள் முகாமில் உள்ள 7 மாதக்குழந்தை இது.
           கொஞ்ச முடியுமா?
உள்நாட்டுக்கலவரமும்.பொறுப்பற்ற அரசுமே இந்த அவலத்தின் மூலக்காரணிகள்.
       இது கென்ய பள்ளியில் வழ்ங்கப்படும் சத்துணவு[?]சாப்பிட முயலும் மழலையர்.
==============================================================================================

எடியூரப்பா ஒருபடியாக பதவி விலகி விட்டார்>!<?
                     
வெறும் 25 எம்.எல்.ஏ.க்கள் வரை மட்டுமே தன்னை ஆதரித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
தனது ராஜினாமாக் கடிதத்தை கட்சித் தலைவர் நிதின் கட்காரிக்கு அவர் அனுப்பி வைத்தார். கர்நாடக சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலமைச்சர் எடியூரப்பா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. இன்று காலை உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தெரிவு செய்ய, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை நடக்கிறது என்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஆனால் இதை முதலில் எடியூரப்பா ஏற்கவில்லை. மாறாக, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தை அவர் அதிரடியாக பெங்களூருவி கூட்டினார். ஆனால் அவருக்கு அங்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அவர் கூட்டிய கூட்டத்துக்கு அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே வந்திருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியுற்ற எடியூரப்பா தனது பிடிவாதத்தை தளர்த்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து கட்காரியுடன் தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு பேசினார். கட்சி முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?