இசக்கி நீக்கம்....

  • ஊழல் விவகாரங்களை வெளிப்படுத்தும்உரிமை  சிஏஜி அதிரடி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீடு மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் முறைகேடு போன்ற விஷயங்களில் தலையிட தலைமைக் கணக் குத் தணிக்கை அலுவலகத் திற்கு (சிஏஜி) உரிமை உண்டு என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் தெரிவித்தார்.

    @அவுட்லுக் ஏட்டிற்கு அளித்த பேட்டியில், கிருஷ்ணா-கோதாவரி டி6 படுகையில் எடுக்கப்பட்ட எரிவாயு ஒதுக்கீட்டில் பெட்ரோலியம் அமைச்சர வையின் வழியாக ரிலை யன்ஸ் நிறுவனம் ஒப்பந்தத் தின்படி நடந்து கொள்கி றதா? என்பது போன்ற கேள் விகளைக் கேட்கிறோம் என்று கூறிய வினோத்ராய், ஜூன் 26ம் தேதி நிதியமைச் சகம் வெளியிட்ட கடிதத் தில், தலைமைக் கணக்குத் தணிக்கைக்கு அனைத்து ஆவணங்களையும் தடை யற்றவகையில் பரிசீலிக்க உரிமை உள்ளது. மேலும், சிஏஜியின் தணிக் கை முறை மிகவும் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

தற்போது, 2ஜி ஸ்பெக்ட் ரம் ஆகட்டும், அல்லது பெட்ரோலியம் உற்பத்தி யில் லாபப்பங்கீட்டு முறை யாகட்டும், மக்களின் சொத்து தனியாருடன் பங் கிடப்படுகிறது. எனவே, இவற்றை தணிக்கைக்குட் படுத்தவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சமீபகாலமாக தலை மைக்கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்தகாலத்தில் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவ லகம் அரசின் கொள்கை முடிவுகள் குறித்து கேள்வி யெழுப்பியதில்லை. அரசி யல் சாசனப்படியான அதி காரவரம்பிற்குள் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவ லகம் செயல்படவேண்டும் என்று பிரதமர் மன்மோ கன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் எரிவாயு ஒதுக்கீடு குறித்த தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை யில் தங்களது கருத்துகள் கேட்கப்படவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் விமர்சனம் செய்திருந்தது. அதுகுறித்து, நாங்கள் எங் கள் அறிக்கையை அமைச் சகத்திடம் அளித்துவிட் டோம். தனியார் நிறுவனத் தின் செயல்பாடுகள் குறித்து 3 தரப்பினரும் (அமைச் சரகம், தனியார் நிறுவனம், தலைமைக்கணக்குத் தணிக் கை அலுவலகம்) தகவல் களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வினோத்ராய் தெரிவித்தார்.
File photo of Vinod Rai, Comptroller and Auditor General of India. Rai ...
                             வினோத் ராய்

எந்த ஒரு தனியார் நிறு வனத்துடனும் நாங்கள் தொடர்பு கொள்வது கிடை யாது. அவர்களின் கோரிக் கைகளை ஏற்றுக் கொள் வதும் கிடையாது என்று கூறிய வினோத் ராய், பெட் ரோலிய அமைச்சரவை யின் 2006ம் ஆண்டு கோரிக்கையை ஏற்று நாங் கள் தணிக்கை செய்கிறோம். லாபப் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ் பல விஷயங்கள் கவனிக் கப்பட வேண்டும். ரிலையன் ஸை மட்டும் அல்ல என்று அவர் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் மற்றும் கெய்ர்ன் நிறுவனம் கண்ட றிந்த ஒட்டுமொத்த எரிவாயு படுகையிலும் எரிவாயு எடுக்க அனுமதி அளித்த தன் மூலம், பெட்ரோலியத் துறை அமைச்சரவையின் தொழில்நுட்பப் பிரிவான ஹைட்ரோகார்பன்ஸ் இயக்குநரகம் தனியார் நிறுவனத்துக்கு சாதகமாகச் செயல்பட்டுள்ளது. உற் பத்தி பகிர்வு ஒப்பந்தத்தை மீறி கூடுதல் பகுதி அளிக் கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மூலதனச் செலவு களைக் கண்டுகொள்ளா மல் விட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தணிக்கை அறிக்கை கசிய விடப்பட்டதான குற் றச்சாட்டு குறித்த கேள் விக்கு, அதனால் என்ன லாபம் என்று திருப்பிக் கேட்டார். தணிக்கை அறிக் கையை ஒரே வீச்சாக வெளி யிடுவதே எங்கள் விருப்பம். துணுக்குகளாக ஏன் வெளி யிட வேண்டும் என்று பதி லளித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் என்ற தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையைக் குப்பை என்று ஒதுக்கிய மத்திய அமைச்சர் கபில்சிபலின் கருத்து குறித்த கேள்விக்கு, ”தணிக்கையாளர் அறிக்கை இவ்வளவு தொகை நஷ்டம் என்று தெரிவிக்கிறது. அது குறித்து விவாதிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
==========================================================================
45 நாட்களில் இரண்டாவது....
தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த 45 நாட்களுக்குள் தமிழக அமைச்சரவையில் 2 வது முறையாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 கடந்த 15 ம் தேதிமுதல்வராக பொறுப்பேற்றஜெயலலிதா  34 அமைச்சர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டார். இதில் பெரும்பான்மையானவர்கள் புதியவர்கள். இவர்களில் மரியம் பிச்சை பதவியேற்குவரும் வழியிளேயே விபத்தில் இறந்துவிட்டார்.அவருக்குப் பதிலாக  கடந்த 27 ம்தேதி அமைச்சர்கள் இலாகாக்களை மாற்றியும், மேலும் புதிதாக முகம்மது ஜான் என்பவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கைத்தறி துறை அமைச்சராக இருந்த பி.வி.,ரமணன் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் சேர்த்து கவனிப்பார், சுற்றுலா துறை அமைச்சராக இருந்த புத்திச்சந்திரனுக்கு உணவுத்துறையும், உணவுத்துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு வணிகவரித்துறையும், வணிக வரித்துறை அமைச்சராக இருந்த கோகுலஇந்திராவுக்கு சுற்றுலா துறையும், ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெ., உத்தரவின்படி கவர்னர் மாளிகை வட்டாரம் இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
 கடையநல்லூர் தொகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டியன் காதி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் நாளை பொறுப்பேற்பார் என்றும், சட்ட அமைச்சராக இருந்த இசக்கிசுப்பையா நீக்கப்பட்டு , செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராக இருக்கும் செந்தமிழன், சட்டத்துறையை சேர்த்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  •         
     திடீர் அமைச்சர் இசக்கிசுப்பையா.திடீர்நீக்கம், : சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் இசக்கிசுப்பையா. இவரது தந்தை இசக்கி,தென்காசியை அடுத்துள்ளஆயிரப்பேரியை சேர்ந்தவர். நடிகர் சிவாஜிகணேசனுக்கு சொந்தமான நிலபுலன்களை கவனித்துக்கொண்டதால் அவரது குடும்பத்துடன் நெருக்கம். அந்த வகையில் சிவாஜிகணேசனின் பேரனை கதாநாயகனாக்கிஇசக்கி குடும்பத்தினர், வெற்றி பெறாத "சக்சஸ்' என்ற படத்தை தயாரித்து வெளியிட்டனர். அ.தி.மு.க வின் எந்த நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொள்ளாத, கட்சியினருடன் அறிமுகம் இல்லாத திடீர் கட்சிக்காரர் இசக்கி சுப்பையாவிற்கு எம்.எல்.ஏ.,அமைச்சர் என அடுத்தடுத்த பதவிகள் தரப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
    . நெல்லையில் டாஸ்மாக் கடைகளை அ.தி.மு.க.,வினருக்கும்,உறவினர்களுக்கும் டெண்டர் கொடுத்ததிலும்  இவர் தப்பித்துக்கொண்டார். சென்னையில் நில பிரச்னைதொடர்பாக எழுந்த புகாரின் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதிலும் தங்கள் நிலையை விளக்கியிருந்தார். இருப்பினும் சுப்பையா, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அவரைத்தவிர யாருக்கும் அதிர்ச்சியைஏற்படுத்தவில்லை. குற்றாலத்தில் இசக்கி ரிசார்ட் என்ற ஸ்டார் ஓட்டல் நடத்தி வரும் இசக்கிசுப்பையா, இந்த சாரல்விழாவில் அமைச்சராக பங்கேற்பார் என்று குடும்பத்தார் எதிர்பார்த்துக்காத்திருந்தனர். ஆனால் சாரல் விழாவிற்கு முன்பாகவே பதவி போய்விட்டது.தற்போது புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தூர்பாண்டியன்,அண்மையில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவுடன் செந்தூர்பாண்டியன், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் பத்துக்கும் மேற்பட்ட கார்களுடன் அடைத்துக்கொண்டு சென்றது பொதுமக்களையும்,பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை எரிச்சல் பட வைத்தது.
    இப்போது அமைச்சராகி விட்டார்.என்ன அலட்டலோ?
      ஆமாம் முதல்வர் தனக்குக் கீழேயுள்ள அமைச்சர்களுக்கு உத்திரவிடலாம்.
      ஆனால் நமது முதல்வரோ ஆளுநருக்கு உத்திரவிட்டு முதல்வர் ஜெயலலிதா உத்திரவின் பெயரில் கவர்னர் ஆணைகளைப் பிறப்பிக்கிறாரே? முதல்வரின் உத்திரவின் பெயரில் ஆணைகள் பிறப்பிக்கும் ஆளுநர் இந்தியாவிலேயே   தமிழக ஆளுநர் பர்னாலாவாகத்தான் இருக்கும்.

    =========================================================================

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    2025ல் தங்கம் விலை

    வினேஷ் போகத் வென்றார்!

    முடிவுக்கு வருகிறதா?