நினைவுகள்பழசு
2ஜியில் மட்டும் அப்படி என்ன நியாயம் பொங்குகிறது.அம்பானி என்றால் ஒரு நீதி, கனிமொழி,ராசா என்றால் ஒரு நீதியா?
நாட்டில் நடக்கும் முறைகேடுகள் முழுக்க அம்பானிகள் மட்டும் செய்யலாம் என அரசாணை ஏதும் மத்தியில் காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளதா?
தணிக்கைத்துறைக்கு இருக்கும் உணர்வும் -நாணய உணர்வும் நீதித்துறைக்கு இல்லையா?
ஒரு பெரிய குற்றத்தைக்கொண்டுவந்தால் அதை விசாரிக்க மாட்டேன் .இதில் தலையிடமாட்டேன்.கருத்து சொல்ல மாட்டேன் என்று ஒரு தேசத்துரோகிக்கு துணைபோனால் அதுவும் தேசத்துரோகம்தானே?
2ஜி முறைக்கேட்டில் பாய்ந்து.பாய்ந்து அடிக்கும் நீதித்துறை அம்பானி என வந்ததுமே வாளை சுருட்டி உறையில் போட்டது ஏன்?