குருவியும் -பனம் பழமும்
ஆ.ராசா வாதாட தயார்..... | ||
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களின் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின் குற்றச்சாட்டுகள் மீதான விவாதங்கள் அடுத்த வாரம் துவங்க உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னாள் மத்திய அமைச்சர் ராசா நீதிபதி ஓ.பி. சைனியிடம் கூறியதாவது: குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை வரும் போது நான் எனக்காக வாதாட மாட்டேன். நான் அப்படி வாதாடும் பட்சத்தில் நான் தெரிவிக்கும் தகவல்களை வைத்தே எனக்கு சாதகமாயிருக்கும் சிலவற்றை கலைத்து சி.பி.ஐ மூன்றாவது குற்றப்பத்திரிகையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிய வாய்ப்பு இருக்கிறது.எனவே 3வது குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி சி.பி.ஐ.வாதம் முடிந்த பின்னர் வாதாடுகிறேன்” என்றார் ராசா. ராசா கூறினால் சரிதான் ராசா. =========================================================================
|