குளறுபடி குழுவில்தான்

பள்ளிக்கூட மாணவர்கள்
இந்திய உச்ச நீதிமன்ற உத்திரவின்படி, கடந்த திமுக அரசினால் உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தினை ஆராயவென இன்றைய அஇஅதிமுக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முந்தைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன, அவற்றை முழுவதுமாக ஆய்ந்து, இக்கல்வியாண்டிலேயே புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது இயலாது எனக் கூறியிருக்கிறது

500 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை. மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் வகையில் இல்லை. குறிப்பாக 2005 ஆம் ஆண்டு கல்வி குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான அகில இந்திய அமைப்பான National Council of Educational Research and Training, NCERT வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படவில்லை, அவசர அவசரமாக பாடங்கள் தயாரிக்கப்பட்டதால் பிழைகள் மலிந்துள்ளன, இவற்றையெல்லாம் சரி செய்து இந்தக் கல்வியாண்டில் பயன்படுத்த முடியாது என தெரிவித்திருக்கிறது.
   நாம் எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே ஜெயலலிதாவின் கல்வியாளர்கள்[?]
 அறிக்கையைத் தந்துள்ளனர்.
   தமிழகத்தில் கல்விப்பணி செய்பவர்களே கிடையாது என தனியார்[கல்விக் கட்டணக் கொள்ளையர்கள்]பள்ளி உரிமையாளர்களை-அதுவும் சமச்சீர் கல்வி வருவதால் தங்கள் பிழைப்புக் கெடும் என குரல் எழுப்பும் கல்வி வியாபாரிகளை கல்வியாளர்கள்  என்ற பெயரில் குழுவாக நியமனம்செய்து தான் விரும்பியது போல் அறிக்கையை ஜெ,,பெற்றுள்ளார்.
 உயர் நீதிமன்றம் இக்குழுவினர் பின்னணியை விசாரித்து இக்குழுவை யும்-அந்தக்குழு கொடுத்த அரிக்கையையும் தள்ளுபடி செய்து உடனே தனது மேற்பார்வையில் குழு அமைத்து அறிக்கை கேட்க வேண்டும்.
  ஜெயலலிதாவும் அவர் அமைத்த குழுவும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டன.
 ஜெயலலிதாவும் ,கல்வி வியாபாரிகளும் இம்முறை வென்றுவிட்டனர்.கல்வி வியாபாரம் தொடரக்கூடாது.
 
 குளறுபடி ஜெயலலிதாவிடமும் -அவர் அமைத்தக் குழுவிடமும்தான்.சமச்சீர் கல்வியில் இல்லை.
 ==================================================================
 
கூகுளுக்குப் போட்டி
                     %   சமூகவலையமைப்பானபேஸ்புக்வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்து பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.
பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அந்தச்சேவைஎன்னவென  எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல்வந்துள்ளது.
பேஸ்புக் தற்போது சுமார் 750 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது, ஸ்கைப் 170 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.
ஸ்கைப்பைநிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் டாலர்கள் செலவில்மே மாதம் கையகப்படுத்திருந்தது.
தற்போதுகூகுள்நிறுவனம்  “கூகுள் +” என்ற சமூகவலையமைப்பைஅறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வீடியோ செட்டிங் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பேஸ்புக் இவ்வசதியை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
  Somali refugees Kenyaஉணவுக்காக
[சோமாலிய அகதிகள்]

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?