”வாட்” டப்போகும் விலை உயர்வுகள்...

கடனை தந்துட்டு கச்சா எண்ணை வாங்கு,,,
கச்சா எண்ணைக்கு இந்தியா வளைகுடா நாடுகள்ளிடம்தான் போக வேண்டியுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து  அதிகமான அளவு கச்சா எண்ணையை இந்தியாவாங்குகிறது. அதற்குஅடுத்து ஈரான் நாட்டில் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குகிறது.

 மாதம் ஒன்றுக்கு ஈரானில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணை இந்தியா வாங்குகிறது.  இந்தியாவின் ஒட்டு மொத்த கச்சா எண்ணை தேவையில் 12 சதவீதம் ஈரான் நாட்டில் இருந்து வாங்கப்படுகிறது.

இந்த கச்சா எண்ணைக்காக ஈரானுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை இந்தியா கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளது.. 5 பில்லியன் டாலர் அளவு இந்தியா கடன் வைத்துள்ளது. இந்த கடன் தொகையை உடனே தர வேண்டும் என்று ஈரான் பல முறை கோரிவந்துள்ளது. ஆனால் இந்தியா கண்டுகொள்ளாமல் சரியான பதில் கூறாமல் இருந்துள்ளது.

இதையடுத்து வரும் ஆகஸ்டு முதல் கச்சா எண்ணை கடனுக்கு தரமாட்டோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் நாட்டின் எண்ணை அமைச்சகம் இந்தியாவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசு மாதம் -நாள் தவறினாலும் பெட்ரோல் கச்சா எண்ணை விலை உயர்ந்து விட்டது என பெட்ரோல் விலையை கூட்டத்தவறுவதில்லை.
அந்தப் பணத்தை எல்லாம் என்ன செய்தது.வாங்கிய கடனை ச் செலுத்தாமல் நமது எண்ணை நிறுவனங்கள் எப்படி பற்றாக்குறையில் செயல்பட்டு இந்திய அரசுக்கு மட்டும் லாபத்தில் ஈவுத்தொகையை கொடுத்து வந்தது?
ஈரான் கச்சா எண்ணை தராவிட்டால் எப்படி சமாளிக்கப் போகிறது?
பொருளாதாரப்புலிகள் ஆட்சியில் வாங்கியக் கடனைக் கூட கொடுக்க முடியாமல் இந்தியா கேவலப்படுகிறதே.
===========================================================================================
ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

அணுமின் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியம் ஆந்திராவில் மிக அதிகளவில் உள்ளது என அணுசக்தி கொமிஷன் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்தார்.
1.5 லட்சம் டன் இருக்கலாம் என அணு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆந்திராவின் தும்பலப்பள்ளி சுரங்கங்களில் யுரேனியம் அதிகளவில் குவிந்து உள்ளதாகவும், உலகிலேயே அதிகளவிலான யுரேனியம் இங்கு கிடைக்கக் கூடும் என தெரிவித்து உள்ளார்.

மேலும் ஜார்கண்ட், மேகாலயா, கர்நாடகா மாநிலங்களில் யுரேனியம் இருப்பதை யுரேனியம் கொர்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் கண்டறிந்துள்ளது.

கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியம் உயர்வகையை சேர்ந்தது என்றும் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் யுரேனியம் சாதாரண வகையை சேர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
 கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியம் சுரங்கத்தில் 49 ஆயிரம் டன் யுரேனியம் தாதுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், அங்கு அதைவிட 3 மடங்கு அளவுக்கு அதிகமாக யுரேனியம் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.  சுமார் 1.5 லட்சம் டன் யுரேனியம் தாது அங்கு இருந்தால், அது உலகின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கமாக இருக்கும். இந்த அளவு யுரேனியம் இருந்தால், 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள அணுமின் நிலையத்துக்கு 40 ஆண்டுகளுக்கு எரிபொருள் சப்ளை செய்ய முடியும். 

புதிய சுரங்கத்தில் யுரேனியம் வெட்டி எடுக்கும் பணி இன்னும் 6 மாதத்தில் தொடங்கும். தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு யுரேனிய சுரங்கங்கள் உள்ளன. ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சுரங்கத்தையும் சேர்த்து கணக்கிட்டால் 1.7 லட்சம் டன் யுரேனியம் தாதுக்கள் நம் நாட்டில் உள்ளது. இதன் மூலம் யுரேனியம் எரிபொருள் தேவைக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறையும். பிரான்ஸ் மற்றும் கஜகஸ்தானிலிருந்து நாம் தற்போது யுரேனியம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஒப்பந்தம் நீண்ட காலத்துக்கு இல்லை. 

220 மெகா வாட் திறனுள்ள அணுமின் நிலையத்துக்கு ஆண்டுக்கு 45 டன் யுரேனியமும் 700 மெகாவாட் திறனுள்ள அணுமின் நிலையமாக இருந்தால் ஆண்டுக்கு 100 டன் யுரேனியமும் தேவை. ஆனால் நம் நாட்டில் 1.7 லட்சம் டன் அளவுக்கு யுரேனியம் தாது உள்ளது. இதை வைத்து நாம் அதிக அளவில் மின்உற்பத்தி செய்ய முடியும்.

எப்படியோ இனி யுரேனியத்தேவைக்காக கண்டநாடுகளிடம் அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நாட்டை அடகு வைக்க வேண்டாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 தமிழக அரசு உயர்த்தியுள்ள வாட் வரிவிதிப்பால் அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். தமிழக அரசு சமீபத்தில்3900 கோடிக்கு வரியை-வாட் வரிவிதிப்பை அதிகரித்து உத்தரவிட்டது. பொதுமக்களின் உயிர் காக்கும் அத்தியாவசிய தேவையான மருந்துப்பொருட்களும் இந்த வாட் வரிவிதிப்பிலிருந்து தப்பவில்லை. மருந்துக்கடைகளில் நாப்கின், பேபி பவுடர், பேபி ஆயில், சோப் போன்ற அயிட்டங்களுக்கு முன்பு இருந்த 12.5 சதவீத வரிவிதிப்பு தற்போது 14.5 சதவீதமாகவும், மற்ற மருந்துப்பொருட்களான மாத்திரை, டானிக் மற்றும் மருத்துவ உபகரண வகைகளுக்கு முன்பு இருந்த 4 சதவீத வரிவிதிப்பு தற்போது 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த வரிவிதிப்பு கடந்த ஜூலை 12 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மருந்துப்பொருட்களின் விலை திடீர் உயர்வு கண்டுள்ளது. இதனால் மருந்துக்கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருந்துப்பொருட்களின் விலையை கூடுதலாகக்கி விற்பனைசெய்யப்படுகிறது. மருந்து வியாபாரம் செய்வோர் தங்களுக்கான லாப கமிஷனை இழக்காமல் இருக்க தங்கள் மீதான வரிச்சுமையை நேரடியாக நுகர்வோர் மீது திணித்தும் விலையை உயர்ட்திவிற்பனை செய்துகின்றனர்.
இப்போது இவர்கள் வழியிலேயே மற்றப் பொருட்களையும் வியாபாரிகள் விலை ஏற்றம் செய்து வருகின்றனர்.ஏற்கனவே அரசு விரைவுப் பேருந்துகளில் 50 ரூபாய் முதல் 75 ரூபாய்வரை கட்டணம் கூடுதலாக பெற்ப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?