சாதிவாரி -தேவை இல்லை..

சாதிவாரி கணக்கெடுப்பு
இந்திய கணக்கெடுப்பு
இந்தியாவில், சமூக பொருளாதார விவரங்களுடன் இணைந்த சாதிவாரி கணக்கெடுப்பு துவங்கி விட்டது.
இந்தக் கணக்கெடுப்பு முறை ஏமாற்று வேலை என்று,சில சமூக அமைப்புக்களும் விமர்சனம் செய்துள்ளன.
திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்தக் கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமாகத் துவக்கிவைக்கப்பட்டது. ஆனால், இந்தக் கணக்கெடுப்பு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்த உறுதிமொழிக்கு மாறானது என்றும், சமூக, பொருளாதார விவரங்களுடன் கூடிய சாதி வாரிக்கணக்கெடுப்பு ஏமாற்று வேலை என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏழ்மை நிலை பற்றிய கணக்கெடுப்பையும், சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை என்றும், அது சாதிவாரிக் கணக்கெடுப்பின் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்றும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக, பொருளாதார விவரங்களுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதைக் கைவிட வேண்டும் என்றும், 1948-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் புகார் கூறியுள்ளார்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்டு கணக்கெடு்ப்பு நடத்தாமல், கிராமப்புற ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பயனாளிகளைக் கொண்டு அதை மேற்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும், அதன் மூலம் முறையான புள்ளிவிவரங்கள் கிடைக்காது என்றும் சரத்யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
     நிச்சயமாக இந்த சாதிவாரியான கணக்கெடுப்பே தேவையற்றது.மனிதர்களை மட்டும் கணக்கெடுத்ததே போதுமானது.சாதி எதற்கு?
 சாதியை வைத்து அரசியல் செய்து லாபம் பெறும் கூட்டமே இந்த சாதிவாரியை  வலியுறுத்துகின்றன.
    அதன் மூலம் பெரும்பான்மை-சிறுபான்மை என லாவனி அரசியல் நடத்தவும்,சலுகைகளை பெறவுமே சாதிவாரி ஆதரவாளர்கள் முயல்கின்றனர்.
     அதன் மூலம் பாதிக்கப்படப் போகிறவர்கள் குறைவான எண்ணிக்கை கொண்ட சாதியினர்தான்.
    மற்றபடி சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மக்களுக்குக் கிடைக்கப் போகும் நன்மை என ஒன்றைக்கூற இவர்களால் முடியாது.
     சாதிப் பெரும்பான்மையைக்காட்டி அரசியல் செய்யவும் ,தேர்தலில் இடங்களைக் கேட்கவும் மட்டுமே பயன் படும்.
      சாதியினால் கலவரங்கள் மட்டுமே வரும் நிலையில் அரசு சாதியை ஒழிக்க முயலாமல் சாதிச்சான்றை கட்டாயமாகக் கேட்பதும்-சாதிவாரி வேலைவாய்ப்பை வழங்குவதும்,இது போன்ற கணக்கெடுப்புகளை நடத்துவதும்  தவறானவைகளாகும்.         
============================================================================================================================    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?