நான் எழுதுவது கடிதமல்ல,,,,,,.

கோபியின் கடிதம் அழகிரி கைது.?

மதுரையில் நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். கோபி வீடு- தோட்டத்தில் கடந்த 2 நாட்களக புறநகர் போலிசார்  சோதனைசெய்தனர்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின. இதில் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில் எஸ்.ஆர். கோபி குறிப்பிட்டுள்ளதாக கூறியதாவது: என் உயிராக நினைத்து கொண்டிருக்கும் என் அண்ணன் அழகிரிக்கு. என் குடும்பமே கவுன்சிலர் லீலாவதி கொலையில் சம்பந்தப்படாமலேயே சிக்கியதால் மருதுவையும், மாமா முத்துராமலிங்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அதனால் தான் ஒரு வெறியுடன் தங்களின் கட்டளையை செய்ய முடிந்தது.
அருப்புக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்தோம். நான் பதவி கேட்கும் போதெல்லாம் நண்பர் சுரேஷ்(பொட்டு சுரேஷ்)  உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கொடுத்தாகி விட்டது என்று திரும்ப திரும்ப சொல்வார்.
அப்படி பார்த்தால் தளபதியின் தங்கைக்கு நகராட்சி தலைவர் பதவி, தளபதிக்கு எம்.எல்.ஏ. சீட், மாநகர் மாவட்ட செயலாளர் பதவி, துணைமேயராக இருந்த கவுஸ்பாட்சாவுக்கு எம். எல்.ஏ. சீட் அவர்களெல்லாம் உங்களுக்கு என்ன தியாகம் செய்தார்கள்.
நான் செய்த தியாகத்தில் ஒரு சதவீதமாவது விசுவாசமாக நடந்திருப்பார்களா? நான் கவுன்சிலர் சீட் கேட்டேன். ஆவின் சேர்மன் பதவி கேட்டேன். எதையாவது கொடுத்தீர்களா? எனக்கு மட்டும் பதவியில் அமர ஆசை இருக்காதா? யாரையோ திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தப்போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள்? இவ்வாறு அந்த கடிதத்தில் எஸ்.ஆர்.கோபி கூறி உள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் பஸ் எரிப்பு, இடைத்தேர்தல் வன்முறை, அக்னி ராஜ், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வீடுகளில் நடந்த தாக்குதல், தா. கிருஷ்ணன் கொலை ஆகியவை பற்றி அவர் கூறியிருப்பதாக போலிசார் தெரிவித்தனர்.
இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்த  திட்டமிட்டுள்ளனர். ஆனால் அழகிரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
எஸ்.ஆர்.கோபி எனக்கு எந்த கடிதமும் எழுதவில்லை.போலிசார் போலியாக ஒரு கடிதத்தை தயார் செய்து அவதூறு பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
அழகிரிக்கு மட்டுமல்ல எனக்கும் போலிசாரின் கடிதத்தின் மீது சந்தேகமாக இருக்கிறது.
கடிதத்தை எழுதி வீட்டிலேயே வைத்திருந்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது.அதுவும் தங்கள் கட்சி தோற்று வந்தக்கட்சி தி.மு.க,வினர் மீது குற்ற சாட்டுகளைக் கூறி உள்ளே தள்ள எது கிடைக்கும் எனத் தேடும் போது இப்படி ஒருகடிதத்தை எழுதவோ-அதை வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கவோ யாரும் முயற்சிக்க மாட்டார்கள்.
அதுவும் தான் செய்த குற்றங்களை பட்டியலிட்டு எழுதுவது என்பது சற்று மனநிலை சரியில்லாதவர் செயல் போல் உள்ளது-
_______________________________________________________________________________________________
குண்டு வைத்தவன்.
                          


நார்வே குண்டு வெடிப்புக்கு காரணமானவன் என பிடிபட்டவன் இவன்.ஆண்டர்ஸ் பெக்ரிங் எனக்கூறப்படும் இவன் கிறிஸ்தவ மத அடிப்படைவாதி எனவும் தெரிகிறது.
32 வயதாகும் இவன் நார்வேயில் அனைத்து மத ஒற்றுமை கலாச்சாரத்தை எதிர்க்கும் கிறிஸ்தவ அமைப்பில் ஈடுபாடுள்ளவன்.
3 துப்பாக்கிகள் இவன் பெயரில் நார்வே துப்பாக்கிச்சுடுவோர் சங்கத்தில் பதிவாகியுள்ளதாம்.நார்வே ராணுவ அடிப்படை பயிற்சியும் பெற்றுள்ள
ஆண்டர்ஸ் ‘ஹிட்லரை புகழ்ந்து அடிக்கடி பேசுபவனாம்.
சரி.இந்த 92 பேர்களைக்கொன்று அப்படி என்ன சாதிக்க நினைத்தான்.
  இது போன்ற தீவிரவாதிகள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகத்தான் கருத வேண்டியதிருக்கிறது.
குண்டு வெடிப்பில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள்தான்.அதனால் இவர்களின் நோக்கங்களோ-கோரிக்கைகளோ ஒன்றும் நிறைவேறப்போவதில்லை.ஆயிரம் கனவுகளுடன் உலவும் மனிதர்கள் உடல்தான் அவர்களின் கனவுகள்,எதிர்காலத்துடன் சிதறி சின்னா பின்னமாகிறது.இந்த மனித மிருகங்கள் என்றுதான் சுய நினைவுக்கு வரப்போகிறதோ? .
=========================================================================


உங்கள் கணினியை வைரஸ் தாக்கியுள்ளதா?  கூகுளின் புதிய சேவை
நம் கணினியில் நுழைந்து மால்வேர்களும், வைரஸ்களும் செய்யும் அட்டகாசம் நாம் அறிந்ததே.நமக்கு தெரியாமலே நம் கணினிக்குள் நுழைந்து நம்முடைய முக்கிய கோப்புக்களை அழித்து உச்சகட்டமாக நம் கணினியையே முடக்கி விடும். இதில் வேடிக்கை என்னவென்றால் நம்முடைய கணினி பாதிக்கபட்டிருக்கிறதா இல்லையா என்று கூட நம்மால் சுலபமாக கண்டறிய முடியாது.

சில வைரஸ்களை நம் ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களும் தவற விடுகின்றன. பெரும்பாலான வைரஸ்கள் இணையம் மூலமே நம் கணினியில் பரவுகிறது. இந்த நிலையில் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட கணினிகளை காட்டி கொடுக்க கூகுள் ஒரு புதிய வசதியை அதன் தளத்தில் புகுத்தியுள்ளது.

நீங்கள் கூகுள் தளத்திற்கு செல்லும் பொழுது குறிப்பிட்ட சில மால்வேர்களால் உங்கள் கணினி  பாதிக்கப்பட்டிருந்தால் கூகுள் ஒரு எச்சரிக்கை செய்தியை அளிக்கும். இது போன்ற மால்வேர்களால் கிட்டத்தட்ட 2 மில்லியன் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

                         


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?