பக்சேயிடம் விடை பெற்ற நிருபமா
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் மூன்று நாள் தனிப்பட்ட முறையில் நேற்றிரவு இலங்கை வந்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் தனது வெளிவிவகார செயலாளர் பதவியிலிருந்து ஜூலை31ல்விலகுகிறார்.
அதற்கு பிரியாவிடை கொடுத்து விருந்துஅளிக்கும் வகையில்இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் நிரூபமா ராவ் இலங்கை வந்துள்ளார். நிரூபமா ராவிற்கு இன்று காலை உணவுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டதாகஇலங்கை அரசின் ஊடகம் தெரிவித்துள்ளது.
நிரூபமா ராவ் இலங்கையின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனைகள் வழ்ங்கவுள்ளார். 2ம்தேதி இந்தியா திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1973ம் ஆண்டு முதல் நிரூபமா ராவ் இலங்கையுடன் இணைந்து பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார். அதில் விடுதலைப்புலிகள் ஒழிப்பும் ஒன்று. நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
=============================================================================================
உலகிலேயே முதன் முறை கருதரித்த ஆண்3 குழந்தை பெற்றார்.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் தாமஸ் பெட்டி(37). இவரது மனைவி நான்சி. நான்சிக்கு சிறுவயதில் செய்யப்பட்ட அறுவைசிகிச்சை காரணமாக குழந்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மனைவிக்குப் பதிலாக தானே குழந்தை பெற பெட்டி முடிவு செய்தார்.செயற்கை கருவூட்டல் மூலம் கடந்த 2008ம் ஆண்டு முதன்முதலாக பெட்டி கர்ப்பமானார். சுகப்பிரசவம் மூலம் அவருக்கு சூசன் என்ற மகள் பிறந்தாள். தொடர்ந்து 2வது மகன் ஆஸ்டின் பிறந்தான். கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி 3வது மகன் ஜென்சன் பிறந்தான். தற்போது அவனுக்கு ஒரு வயது ஆகிறது. 3 குழந்தைகளும் பெட்டிக்கு சுகப்பிரசவத்திலேயே பிறந்தன. பெட்டி குழந்தைகளை பெற்றாலும் அவர்களுக்கு நான்சி பாலூட்டினார்.இந்நிலையில் குழந்தை பெறுவதற்காக பெண்தன்மையடைந்த பெட்டி டெஸ்டோ ஸ்டீரான் ஹார்மோன்கள் உதவியுடன் மீண்டும் ஆண் தன்மையை அதிகரித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது சிக்ஸ் பேக் உடலை மீண்டும் பெற்றுள்ளார். பெட்டி பிறப்பால் பெண். ஆனால் ஆணாக மாறவேண்டும் என விரும்பியதால் தனது 20ம் வயதில் அறுவை சிகிச்சை மூலம் சட்டப்படி ஆணாக மாறினார்.
டெஸ்டோ ஸ்டீரான் ஹார்மோன் எடுத்துக்கொண்டதால் அவரது முகத்தில் மீசை, தாடி முளைத்து முழு ஆணாக மாறினார். தனியாக அவர் வெளியே சென்றால் யாரும் அவரை சந்தேகப்பட மாட்டார்கள். இந்நிலையில் அவர் சூசன்னாவை திருமணம் செய்து கொண்டு ஓரினச்சேர்க்கை தம்பதிகளாக இருந்து வந்தனர்.
குழந்தை பெற வேண்டும் என்பதற்காக கடந்த 8 ஆண்டுகளாக டெஸ்டோ ஸ்டீரான் எடுப்பதை பெட்டி நிறுத்தியிருந்தார். வயிற்றில் முதல் குழந்தையை சுமந்தபடி பெட்டி இருக்கும் புகைப்படம் அப்போது பத்திரிகைகளில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது 3 குழந்தைகள் பிறந்து விட்ட நிலையில் பெட்டி மீண்டும் டெஸ்டோ ஸ்டீரான் எடுக்கத் தொடங்கி விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீண்டும் ஒட்டிய வயிறு மற்றும் சிக்ஸ் பேக் உடலை பெற்றுவிட்டார். 3 குழந்தைகளுடன் வெளியே செல்லும் இந்த ஓரினத்தம்பதிகளை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.