" சூரிய" மோசடி விபரம்.!
ஒன்றும் பதற வேண்டாம் . கல்லடி பட்ட உம்மன் சாண்டி யே பதற வில்லை.தனது தவறுதான் .என்று சொல்லி விட்டார்.கல்லெறிந்த கட்சி அச்சுதானநதனே நேரில் ஆறுதல் சொல்லி கல்லடியை குணமாக்கி விட்டார். நாம் இப்போது இவ்வளவு களேபரங்களுக்கும் காரணமான சூரிய சக்தி [சோலார் பேணல் ]மோசடியை பற்றி பார்ப்போம். கேரளத்தைச் சேர்ந்த சரிதா நாயர் தன்னுடைய ‘டீம் சோலார் எனர்ஜி கம்பெனி’ என்ற நிறுவனம் மூலம் சோலார் பேனல்களை விற்பனை செய்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘மின் தட்டுப்பாட்டை தடுப்பதற்கு கேரள அரசு சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை வகுத்திருக்கிறது. அந்த திட்டத்தின் மூலம் தோட்டங்களிலும், பண்ணை வீடுகளிலும் சோலார் பேனல்களை பொருத்தி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அவ்வாறு கிடைக்கும் உபரி மின்சாரத்தை அரசே நியாய விலைக்கு வாங்கிக் கொள்ளும். இத்திட்டம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு மானிய விலையில் உபகரணங்களையும் வழங்க இருக்கிறது. இந்த திட்டத்துக்கான சோலார் பேனல்களை கேரளம் முழுவதும் விற்கும் உரிமையை கேரள முதல்வர் உம்ம...