ராதிகா சரத் குமாரால் சிக்கலில் சூர்யா?
மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் இலவசமாக கொடுத்த நிலத்தில் பிரம்மாண்டமான கட்டிடத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இயங்கி வருகிறது.
இந்த வளாகத்தை கட்ட அனுமதி தந்து அடிக்கல் நாட்டியவர் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர்.
இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிறு திரை அரங்கம் இருந்தது.
தற்பொது அது இடிக்கப்பட்டு அங்கே கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதற்குள் ஒரு திரையரங்கம் அமைக்கப்படுகிறது.
இதைநவீனமாக டிஜிட்டல்,குளுகுளு வசதியோடு வடிவமைத்து இருக்கிறார்கள். வர்த்தக சபை தொடர்பான விழாக்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் இதில் நடத்திக்கொள்ள முடியும்.
இத் திரையரங்கம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாயை வழங்கி இருக்கிறார் நடிகர் சூர்யா.சும்மா இல்லை இத் திரையரங்கத்திற்கு
நடிகர் சூர்யாவின் தாயார் லட்சுமி அம்மாளின் பெயரை சூட்டவும் வர்த்தக சபை நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதால்தான் .
அதில் ஒன்றும் இப்போது செய்தி இல்லை.இந்த சூர்யாவின் கனவு ராதிகா வால் கழிந்து விடும் போல் இருக்கிறது.
காரணம் .தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய ""சினிமா -100'' கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் பதிவு செய்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமையை நடிகை ராதிகாவின் " ராடன் ' நிறுவனத்துக்கு 22 கோடி ரூபாய்க்கு மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுள்ளது வர்த்தக சபை நிர்வாகம்,
இந்த செய்தி வெளியே கசிந்து, இதை டெண்டருக்கு விடாமல் தனிப்பட்ட ஒருவருக்கு எப்படிக் கொடுக்கலாம் என்ற கேள்வியை எழுப்பியதும் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் நடிகர் சரத் குமார் அவர் மச்சான் ராதாரவி இருப்பது தெரிய வந்துள்ளது.ஆனால் எதிர்ப்பு அதிகமாக வர ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிட்டது வர்த்தக சபை .
ராதிகா கொடுத்த முன் பணமும் திருப்பித் தந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இந்த திரை அரங்கத்தை கட்டுவதற்கும் வெளியெ தெரியாமல் தனிப்பட்ட முறையில் நடிகர் சூர்யாவிடம் இருந்து ஒரு கோடி ரூபாயை வர்த்தக சபை நிர்வாகம் வாங்கியது எப்படி?
என்ன நியாயம்?
இப்படியோர் திட்டம் இருப்பின் அதை முறையாக வெளிப்படுத்தியிருந்தால் "நீ -நான்' என்று போட்டி போட்டுக்கொண்டு பல கோடி தருவதற்கு எத்தனையோ பேர் முன் வருவார்களே? என்ற பிரச்னை சரத் குமார் கும்பலால் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
தந்தை சிவகுமாரின் ஆலோசனையைக் கேட்டுஅம்மா லட்சுமி பெயரில் தியேட்டர் கட்ட ஒரு கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்து விட்டு முழிக்கும் நடிகர் சூர்யாவின் கனவு நிறைவேறுமா?
சினிமா -100 விழா நடத்துவதற்கு சரத் குமார் ,ராதாரவி பேச்சைக்கேட்டு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு விழாவாக நடத்தியதை தொடர்ந்து திரை உலகித்தினராலும் ,ரசிகர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைஎன்ன போகிறது?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சிறு நீரகக் கற்கள் தொல்லை.?
சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது எனலாம்.
சிறுநீரகத்தில் கல் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்படும். நாளடைவில் சிறுநீர் பாதையில் தடையை உண்டாக்குகிறது. சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம். இதற்குமுக்கிய காரணம் தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ளாததே.
பால், தயிர். மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ஸலேட்டை ஈர்த்துக் கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்ஸலேட் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும்.
வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பினால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அதிகரிப்பதினால் கற்கள் ஏற்படுத்துகின்றது.
அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூமிரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூமிரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.
அதிக அளவு வெப்பத்தால் உடலில் அதிகம் வியர்க்கிறது. வெளியேறும் வியர்வைக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடுகின்றன. நம் உட்கொள்ளும் உணவு முறைகளில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. புரச்சத்து, நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேவையான அளவு உட்கொள்வதில்லை. இவை சீறுநீரகக் கற்கள் உருவாகக் முக்கிய காரணம்.
சிறுநீர் குழாயில் கீழ்ப்பகுதியில் காணப்படும் 4 மி.மீ. அளவை விட சிறிய கற்களில் 90 சதவீதம் தானாக வெளியேறி விடுகின்றன. அளவு 6 மி.மீ.க்கு மேல் இருந்தால் 20 சதவீதம் மட்டுமே தானாக வெளியேறும். நோயாளிகள் தாராளமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் வெளியேறி, அதன் மூலம் கற்களும் வெளியேறி விடும். வாழைத்தண்டு அல்லது மாற்று மருந்துகள் சிறுநீர் பெருக்கியாக செயல்படுகின்றன. வலி மிகுதியாக இருப்பின் டாக்டரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளலாம்.
பெரிய கற்கள் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தும் போது அறுவை சிகிச்சை தேவைப்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரக நீக்கம் தேவைப்படும். பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால் பகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இல்லாதவர்களுக்கு லேப்ராஸ்கோபி முறையில் கற்கள் மட்டும் பொடியாக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படும். இந்த கற்களை பரிசோதித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
வெயில் காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.
அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.
புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பெரிய கற்கள் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தும் போது அறுவை சிகிச்சை தேவைப்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரக நீக்கம் தேவைப்படும். பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால் பகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இல்லாதவர்களுக்கு லேப்ராஸ்கோபி முறையில் கற்கள் மட்டும் பொடியாக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படும். இந்த கற்களை பரிசோதித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
வெயில் காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.
அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.
புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சித்த மருந்து :நெருஞ்சில் குடி நீர் ,கல்நார் பஸ்பம்.
ஆயுர் வேதம்:வருணாதி கசாயம் ,சிலாசித் பஸ்பம்.
ஓமியோபதி : பெல்பரிஸ் வல்காரிஸ் ,சிலிசியா .
யுனானி: ஹயருள் யூத் பஸ்மம்.
மேற்கண்ட மருந்துக்களை மருத்துவர் அறிவுரையின் படி உட் கொண்டால் கற்களை கரைத்து நலமாக இருக்கலாம்.அறுவை சிகிச்சை தேவை இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------
காங்கிரசு தேர்தல் செலவறிக்கை !
கடந்தமக்களவைத் தேர்தலில், தன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணத்தை செலவழித்தது என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
அதில் மற்ற காங்கிரசு வேட்பாளர்கள் தங்கள் கைக்காசை செலவிட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் சோனியாவும், அவர் மகனும், துணைத் தலைவருமான, ராகுலும் தங்கள் சொந்தப் பணம், ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பணக்கார கட்சியாக காங்கிரசு உள்ளது.. நம்மை அடிமைபடுத்தியிருந்த, வெள்ளைக்காரர்களை விரட்ட, வெள்ளைக்காரர், ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்பவரால், 1888ம் ஆண்டு துவக்கப்பட்ட இ ந்தக் கட்சிக்கு, நாட்டின் பல நகரங்களில், பிரமாண்ட கட்டடங்களும், வணிக வளாகங்களும் என, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அது போக ரொக்கமாகவே பல ஆயிரம் கோடிகளை கை இருப்பாக வைத் து ள்ளது அந்தக் கட்சி.
அக்கட்சியின் தலைவராக இருக்கும், சோனியா, துணைத் தலைவராக இருக்கும், அவர் மகன், ராகுல் ஆகியோருக்கும், ஏராளமான சொத்துகள் உள்ளன.
முன்னாள் பிரதமர், இந்திரா குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு சொந்தமான கட்டடங்கள், சொத்துகள், ரொக்கம் ஏராளமாக இருந்த போதிலும், அவர்கள், கடந்த தேர்தலில், தங்கள் சொந்தப் பணத்திலிருந்து, ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை.
காங்கிரஸ் பொருளாளர், மோதிலால் வோரா, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள புள்ளிவிவரத்தில், இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் சார்பில், 2009 லோக்சபா தேர்தலில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து, மோதிலால் வோரா அனுப்பியுள்ள விவரத்தில், கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 380 கோடி ரூபாயை, பலவிதங்களாக செலவிட்டுள்ளது.லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும், கட்சி சார்பில், தேர்தல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அது, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.
பெரிய மாநிலமான, உத்தர பிரதேசத்திற்கு, அதிகபட்சமாக, 25 லட்ச ரூபாய், அம்மாநிலத்தின் ஒவ்வொரு லோக்சபா தொகுதி, காங்கிரஸ் வேட்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரே பரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், அமேதி தொகுதியில் போட்டியிட்ட, அவர் மகன் ராகுலுக்கும் தலா, 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையை மட்டுமே அவர்கள் பயன்படுத்தி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேறு ஒரு பைசா கூட, தங்கள் சொந்தப் பணத்தை அவர்கள் செலவழிக்கவில்லை என்று காங்கிரசு அறிக்கை சொல்லுகிறது.
. தேர்தல் செலவுகள் அதிகரித்துள்ளதால், இப்போது, உ.பி.,க்கு, 40 லட்ச ரூபாய், ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்படுகிறது.
ஜனாதிபதியாக இருக்கும், பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்கத்தின் ஜாங்கிபுர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, 15 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அதற்கு மேல் அவர், தன் சொந்தப் பணத்தை செலவழித்தாரா என்பது குறித்து, தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
பிற வேட்பாளர்களுக்கு, சராசரியாக, பத்து லட்ச ரூபாயை, காங்கிரஸ் கட்சி, தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரும், அதிகபட்சம், 25 லட்ச ரூபாய் மட்டுமே தேர்தல் செலவாக செலவழிக்க முடியும் என, தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.குட்டி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, லோக்சபா காங்கிரஸ் வேட்பாளர்கள், ஐந்து லட்ச ரூபாய், கட்சியிடம் இருந்து, தேர்தல் நிதியாக பெற்றுள்ளனர்.
எனினும், ஆந்திராவை சேர்ந்த வேட்பாளர்கள், 4.5 லட்ச ரூபாய் தான் பெற்றுள்ளனர். இந்த வகையில், வேட்பாளர்களுக்கு, காங்கிரஸ் கட்சி, 36.91 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. 2009 லோக்சபா தேர்தலில், மொத்தம், 380.04 கோடி ரூபாயை அந்தக் கட்சி செலவழித்துள்ளது. நன்கொடையாக, 313.74 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
சோனியாவும், ராகுலும், கட்சி பணத்தை மட்டுமே செலவழித்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய சட்ட அமைச்சர், கபில் சிபல், கட்சியிடமிருந்து, ஒரு பைசா கூட வாங்காமல், டில்லியின், சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார். அவரைப் போல், டில்லி முதல்வர், ஷீலா தீட்சித்தின் மகன், சந்தீப் தீட்சித், கிழக்கு டில்லி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அவரும், ஒரு பைசா கூட, கட்சிப் பணத்தை பெறவில்லை.
தேர்தல் விளம்பரத்திற்காக, 207.88 கோடி ரூபாய் செலவழித்துள்ள காங்கிரஸ், 116.65 கோடி ரூபாயை, போக்குவரத்து செலவுக்காக செலவிட்டுள்ளது. சுவரொட்டி வகைகளுக்கு 21.33 கோடி ரூபாயை காங்கிரசு செலவிட்டுள்ளதாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------