அமெரிக்கா போல் .....?

-------------------------
suran

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில்.அல்லது அவர்  ஆணை பிறப்பித்ததில் அவர் படம்  சிரித்த உருவம் இல்லாத ஒரே திட்டம் என்ற பெருமையை கொண்டது அரசு மது பானக் கடை கள் தாம் [டாஸ்மாக்] .
தமிழகத்தில் 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன.
 இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.
டாஸ்மாக் கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.,) மற்றும் பீர் வகைகள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்படுகின்றன. 
சென்ற செப்டம்பர் மாதம், 2.88 கோடி பாட்டில்களை உள்ளடக்கிய, 24 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
 இதன் மதிப்பு, 288 கோடி ரூபாய். அதேசமயம், கடந்த ஆகஸ்ட் மாதம், 324 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது. 

இது, கடந்த ஜூலை மாதம், 29 லட்சம் பெட்டிகளாக இருந்தது.
 மது வகைகள் விற்பனை, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே, 46 லட்சம், 45 லட்சம் மற்றும், 43 லட்சம் பெட்டிகள் குறைந்துள்ளன.
டாஸ்மாக் விற்பனை தொடர் சரிவுக்கு, போலி சரக்கு விற்பனையே காரணம் என, கூறப்படுகிறது.
அண்டை மாநில சரக்கை பார்களில் நேரடியாக விற்பனை செய்தல், வெளி மாநில சரக்கை, கடைகளில் உள்ள காலி பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தல், போலி சரக்கை விற்பனை செய்தல் போன்ற, மூன்று விதமான முறைகேடுகள், தொடர்ந்து நடப்பதாக கூறப்படுகிறது. 
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான, 'குடிமகன்'கள் தங்கள் செலவை குறைத்துள்ளனர்.
 இதுவும், சரக்கு விற்பனை சரிவுக்கு காரணம் என, தெரிய வந்துள்ளது.

 டாஸ்மாக் நிறுவனம், சில்லரை விற்பனையில் மதுபான கடையை துவக்கிய போது, அதன் விற்பனை மற்றும் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட எஸ்.பி.யுடன், தொடர்ந்து, கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும்.
 அப்போது, உள்ளூர் பிரச்னை முதல், அனைத்து விவரங்களும் துல்லியமாக பரிமாறி கொள்ளப்பட்டது. தற்போது, டாஸ்மாக் ஆய்வு கூட்டங்களில், மது விலக்கு போலீசார் மட்டுமே பங்கேற்கின்றனர்.
இவர்கள், எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கண்காணிப்பு பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து, சுலபமாக சரக்குகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றது. 
இது உண்மையான காரணம் இல்லை.
suran
தமிழக குடிமகன்களிடம் பணவரத்து குறைவும்,மது பானங்கள்  விலை அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணம்.

மேலும் டாஸ்மாக் அலுவலர்களிடம் பெருகிவரும் முறைகேடுகள் அதிகரித்து விட்டதும் காரணம்.அவர்களுக்கு பணத்தை வெட்டி விட்டு போலிகளை விற்கலாம் -
அரசு நிர்ணய விலையை விட அதிகமாக குடிமகன்களிடம் வாங்கலாம் என்று மாறி விட்டதே அரசு வருவாயை மிகவும் பாதிக்கிறது .
மற்றபடி குடிமகன்கள் மதுபான உபயோகம் ,வாங்குவது குறையவில்லை.அரசு வருமானம் வேறு வழிகளில் சென்று விடுகிறது .அதுதான் விற்பனை குறைவின் உண்மை.
சரீ .
இப்படி டாஸ்மாக் வருமானம் குறைந்தால்ஜெயா அரசு எப்படி நடக்கும்?
   அமெரிக்கா போல் அரசு அலுவலகங்களை அடைக்கும் நிலை வந்து விடுமோ?
------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் கிழக்கு கடற்கரை கிராமங்கள், நகரங்களில் லஷ்கர் அமைப்பிற்கு பயிற்சி அளிக்க முகாம்கள் அ  மைக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. 
suran
லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம் அமைக்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப்பும் ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் லஷ்கர் தீவிரவாதிகள் இலங்கைக்கு செல்வதும் அம்பலமாகியுள்ளது.

 இலங்கையில் தளம் அமைத்து இந்தியா மற்றும் ஐரோப்பாவில் பெரும் தாக்குதல்களை நடத்த லஷ்கர் அமைப்பு சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்ச்சி தகவல்கள் சர்வதேச தீவிரவாதிகளை கண்காணிக்கும் நிறுவனம் மூலம் அம்பலமாகியுள்ளது. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?