மோடி +ரஜினி : "கமல்ஹாசன் "


suran

"பல்வேறு பிரச்சினைகளை கிளப்பிய 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி விட்டது. நான் எந்த மதத்துக்கும், சாதிக்கும், கட்சிக்கும் எதிரி கிடையாது. 
அதனால் யாருடைய மனதையும் புண்படுத்தாமல், அனைவரும் ரசிக்கிற‌ வகையில் 'விஸ்வரூபம்-2' உருவாக்கப்பட்டு இருக்கிறது.
என்னுடைய‌ அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ஹே ராம், நாயகன் ஆகிய படங்களை புதுப்பித்து புதுபொலிவுடன் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
 'விஸ்வரூபம், தலைவா' விவகாரம் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சிக்கல் வந்த போது 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை, தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு.
எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்துகொள்வது அபத்தம். 
ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். 
நான் ஒரு போதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல தலைவா படத்துக்கும் ஏற்பட்டது. அதுபற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்?
அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைத் தானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
suran
சேகுவேரா ஆயுதம் ஏந்தினார். பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் பின்லேடனையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா? 
மோடியை ஆதரிப்பீர்களா? என்றால் நான் அரசியலுக்கு வர மாட்டேன். என்னுடைய அரசியல் என்பது என்னுள்ளே இருக்கிறது.வெளிப்படுவது வாக்களிக்கும் நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான். அந்த மையை என் கை முழுவதும் பூசி கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.எனது அரசியலை மற்றவர்கள் மீது திணிக்க விரும்பவில்லை.இன்றைய அரசியல் மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதாகவே இருக்கிறது.கொள்கை வெறும் பிரகடனத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள்.ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சிகளுடன் கூட்டுவைத்து தேர்தலில் இடம் பிடிக்கும் இவர்கள் மக்கள் அரசியல் செய்வதில்லை.வபதவிக்கான அரசியலையே செய்கிறார்கள்.அரசியல்வாதிகள் இந்தியாவின் -மக்களின் நலனை கருத்தில்  கொள்வதில்லை.அவர்களின் கொள்கையே மக்களின் வாக்குகளை பறித்து நாற்காலிகளில் அமர்ந்து இந்தியாவை அன்னிய நாடுகளிடம் விற்பதுதான்.
திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் ரஜினியின் போஸ்டரை பயன் படுத்தினார்கள். 
suran
அதற்கு நண்பர் ரஜினி எந்த விளக்கமோ-எதிர்ப்போ  அளிக்கவில்லை. மலிவான வாக்கு பெறும் அரசியலில் நண்பர் ரஜினி பயன்படுத்தப் படுவதை அவருக்கு அக்கட்சியுடன் ஒருமித்த கருத்து இல்லாவிட்டால் எதிர்த்து அறிக்கை விட்டிருக்கலாம்.
அதேபோல என்னுடைய போஸ்டரை  பாஜக -காங்கிரசு பயன்படுத்த அனு மதிக்க மாட்டேன். ஏனென்றால் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை வாக்கு சாவடியில் மட்டுமே தெரியும் ?"
என்று கமல்ஹாசன் கூறினார்.
ஃபிக்கி அமைப்பின் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும் 'ஊடகம் மற்றும் சினிமா குறித்த கருத்தரங்கம்' இந்த ஆண்டு அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இதனை அறிவிப்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை பெங்களூர் வந்திருந்தார். கமலின் நண்பரும்,கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் உடன் இருந்தார். அப்போதைய ஊடக செவ்வியில் கமல்ஹாசன் கூறியது.

------------------------------------------------------------------------------------------------------------
 லால் பகதூர் சாஸ்திரி!
-----------------------------------
எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த உருவத்தில் சிறிய மனிதர்.
அக்டோபர் இரண்டு . லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள். சாஸ்திரி என்றால் சாதி பெயர் இல்லை.
படித்து பெற்ற பட்டம் . 
இளவயதில் கங்கையை கடந்து தான் படிக்க செல்ல வேண்டும்.
 படகில் போக காசில்லாத நிலையில் நண்பர்களிடம் கடன் வாங்க மறுத்து, தினமும் நீந்தி மறுகரை போய் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்லூரி படிக்கிற காலத்தில் விடுதலைப்போரில் மனிதர் பங்குகொண்டு சிறை சென்றபோது, இன்னமும் சிறையில் அடைக்கும் வயது வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
திருமணம் செய்து கொண்டார் சாஸ்திரி. பெரும் வரதட்சணை பெறுவது வழக்கமாக இருந்த காலத்தில் கதராடை ஒன்று, ஒரு கை ராட்டை ஆகியன மட்டுமே பெற்றுக்கொண்டார் .
அடிக்கடி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை போவது இவருக்கு வழக்கம். ஒரு முறை மகளுக்கு உடல்நலம் முடியவில்லை என்று பதினைந்து நாள் அனுமதி பெற்று வந்தார். மகள் அந்த காலம் முடிவதற்குள்ளாகவே இறந்து போனார். இன்னம் சில நாட்கள் பாக்கி இருந்தும் , ஈமச்சடங்குகள் முடிந்த அடுத்த நொடி சிறை சென்றார் சாஸ்திரி.
இவர் அமைச்சரவையில் இருந்த காலத்தில் தான் பெண் நடத்துனர்கள் பதவியில் அமர்த்தப்பட்டார்கள். ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி இவர் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது. எளிமை,நேர்மை இது தான் அவர். வீட்டில் மனைவி மாதம் ஐந்து ருபாய் சேமிக்கிற அளவுக்கு கட்சி பணம் தருகிறது என அறிந்து, அந்த சம்பளத்தை குறைத்துக்கொண்டவர். அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக ரீதியாக பொறுப்பற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் ,"இனிமேல் நம் வீட்டில், சமையலில் காய்கறிகளை ,பருப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்!" என்றார்.
இந்திய பாகிஸ்தான் போரின் பொழுது தீர்க்கமாக வழிநடத்தியவர் . இந்தியாவின் எளிய பிரதமர்களில் ஒருவர் . பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த நேரு இவரை அனுப்பி வைத்த பொழுது அணிந்து கொள்ள ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக நேருவின் ஸ்வெட்டரை இவர் அளவுக்கு தையல்காரர் தைத்து கொடுத்தார்.
அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு எளிய மனிதன் சொன்னார்,"எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும் மறைந்து விட்டார்!" என்று . சாஸ்திரி பொன்ற தலைவர்கள் அரசியலில் அன்றும் இன்றும்  ஒருவரும் இல்லை.இனி வரப்போவதும் இல்லை."
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?