" சூரிய" மோசடி விபரம்.!
ஒன்றும் பதற வேண்டாம் .
கல்லடி பட்ட உம்மன் சாண்டி யே பதற வில்லை.தனது தவறுதான் .என்று சொல்லி விட்டார்.கல்லெறிந்த கட்சி அச்சுதானநதனே நேரில் ஆறுதல் சொல்லி கல்லடியை குணமாக்கி விட்டார்.
நாம் இப்போது இவ்வளவு களேபரங்களுக்கும் காரணமான சூரிய சக்தி [சோலார் பேணல் ]மோசடியை பற்றி பார்ப்போம்.
கேரளத்தைச் சேர்ந்த சரிதா நாயர் தன்னுடைய ‘டீம் சோலார் எனர்ஜி கம்பெனி’ என்ற நிறுவனம் மூலம் சோலார் பேனல்களை விற்பனை செய்து வந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘மின் தட்டுப்பாட்டை தடுப்பதற்கு கேரள அரசு சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை வகுத்திருக்கிறது. அந்த திட்டத்தின் மூலம் தோட்டங்களிலும், பண்ணை வீடுகளிலும் சோலார் பேனல்களை பொருத்தி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
அவ்வாறு கிடைக்கும் உபரி மின்சாரத்தை அரசே நியாய விலைக்கு வாங்கிக் கொள்ளும்.
இத்திட்டம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு மானிய விலையில் உபகரணங்களையும் வழங்க இருக்கிறது. இந்த திட்டத்துக்கான சோலார் பேனல்களை கேரளம் முழுவதும் விற்கும் உரிமையை கேரள முதல்வர் உம்மன் சாண்டி எங்கள் நிறுவனத்துக்கு வழங்கி இருக்கிறார்’ என்று கூறி, கேரள மக்களிடம் முன்பணமாக ரூ.5 லட்சம் முதல் 50 லட்சம் வரை வசூலித்திருக்கிறார் சரிதா நாயர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி கையெழுத்திட்ட சான்றிதழையும் வாடிக்கையாளர்களிடம் காட்டி பணம் வாங்கியுள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் சோலார் பேனல்கள் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோட்டயம் வாடிக்கையாளர் ஒருவர், டீம் சோலார் எனர்ஜி கம்பெனி மீதும், சரிதா நாயரின் மீதும் வழக்கு தொடர்ந்தார். உடனே கேரள காவல்துறை இவ்வழக்கை தீவிரமாக விசாரித்தபோது சரிதா நாயரின் ரூ.10 கோடி மோசடி அம்பலமானது.
இந்நிலையில், “சரிதா நாயரின் சோலார் பேனல் மோசடி சான்றிதழில் உம்மன் சாண்டி கையெழுத்திட்டு இருப்பதால் அவருக்கும் மோசடியில் தொடர்பு இருக்கிறது” என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதைத் தொடர்ந்து கேரளத்தில் போராட்டங்கள் வெடித்தன. சரிதா நாயரின் நிறுவனத்தை நிர்வகித்து வந்த பிஜூ ராதாகிருஷ்ணனையும் போலீஸ் பிடித்து விசாரித்தனர். அப்போது உம்மன் சாண்டி கையெழுத்திட்ட சான்றிதழை உம்மன் சாண்டியின் உதவியாளர் டெனி ஜோப்பன் என்பவரும் பாதுகாவலர் சலிம் மாலீக் என்பவரும் தயாரித்துக் கொடுத்த உண்மை வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பிஜூ ராதாகிருஷ்ணனின் கூட்டாளியும், டீம் சோலார் எனர்ஜி கம்பெனி நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்தவருமான ஷாலு மேனனுக்கும் சோலார் பேனல் ஊழலில் தொடர்பு இருந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.
முதல்வர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என பொதுமக்கள் தொலைக்காட்சியிலே பார்த்து தெரிந்துகொள்ளும் ‘முதல்வர் தரிசனம்’ திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக உம்மன் சாண்டி அறிமுகப்படுத்தினார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி காட்சியில் சரிதா நாயர் முதல்வர் அலுவலகத்துக்கு வந்து போவது போன்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன. சோலார் பேனல் விவகாரம் புகைய ஆரம்பித்த நேரத்தில் இந்த காணொளி காட்சிகள் வெளியானதும் உம்மன் சாண்டியின் தலை உருள ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ‘சோலார் பேனல் ஊழலில் உம்மன் சாண்டிக்கும் பங்கு இருக்கிறது’ என சொல்லி முதல்வரை முற்றுகையிட ஆரம்பித்தனர்.
"முதலில் சரிதா நாயர் என்பவர் யாரென்றே தெரியாது ."என்று சாதித்த சாண்டி பின்னர் காணொளிகள் வெளியான பிறகு சும்மா சந்திப்பு நடந்தது.ஆனால் ஊழல் நடக்கவில்லை என்று இன்றுவரை புலம்புகிறார்.
ஆனால் கேரளா எதிர்கட்சிகள் அதை நம்ப மறுக்கின்றன.முதலில் சரிதாவை யாரென்றே தெரியாது என்றவர்தானெ இவர் .என்கின்றன.
ஊழல் செய்தாரோ இல்லையோ .காவல்துறை தடுத்தும் தான்தான் சென்று கல்லடி வாங்கினேன்.காவல்துறை மீது தவறில்லை என்கின்ற முதல்வரும்.
தனது கட்சியினர் கல்லடியால் காயமுற்றவரைமருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல் சொல்லும் எதிர் கட்சித்தளைவரையும் பார்த்தால் இங்குள்ள தமிழக நிலை பெருமூச்சைத்தானெ தருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய நான்கு இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் மதவெறி எதிர்ப்பு மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு தலைநகர் புதுதில்லியில் உள்ள நடைபெற்றது.
சமாஜ்வாதிக் கட்சி பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் பீகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவர்களில் ஒருவருமான நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சமாஜ்வாதிக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், அதிமுக நாடாளுமன்றக்குழு தலைவர் தம்பிதுரை, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, குடியரசுக் கட்சித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், பிஜூ ஜனதா தள தலைவர் ஜெய் பாண்டா, ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச் தலைவரும் முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி, அசாம் மாநில முன்னாள் முதல்வரும் அசாம் கணபரிஷத் தலைவருமான பிரபு லால் மஹந்தா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி. பரதன், பார்வர்டு பிளாக் தலை வர் தேவபிரதா பிஸ்வாஸ், பஞ் சாப் மக்கள் கட்சித் தலைவர் பாதல், ஆர்எஸ்பி தலைவர் சிபி கோஸ்வாமி, தேசியவாத காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.டி.திரிபாதி உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர்.
இம்மாநாட்டிற்கு தி .மு.க போன்ற கட்சிகளுக்கு ஏன் அழைப்பில்லை?
மோடி நண்பரும் பாஜக அனுதாபியுமான ஜெயலலிதா கட்சிக்கு அழைப்பு.நேற்றுவரை பாஜக தயவில் கூட்டணியில் ஆட்சி செய்த நிதிஷ் குமாருக்கு அழைப்பு.
மார்க்சிஸ்டுகள் குறிப்பாக தமிழக தோழர்கள் தற்போது எடுக்கும் முடிவுகள் மிக தவறாக உள்ளன.
அதிலும் அவர்களின் ஜெயலலிதா அபிமானம் மிக அசிங்கமாக -அப்பட்டமாக தெரிகிறது.ஜெயா அரசின் தவறுகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை.சுட்டிக்காட்டவும் செய்வதில்லை.மொத்தத்தில் கட்சிக்கொடியில் அரிவாள் -சுத்திக்குப் பதில் இரட்டை இலை,வேட்டியில் முக்கறை இல்லாதது மட்டும்தான் இப்போதைய நிலை.
மக்களவை தேர்தலுக்குப்பின் காங்கிரசு - பாஜக தொங்கலில் இருந்தால் தனது மக்களவை உறுப்பினர்களை கொண்டு பிரதமர் பதவியில் மோடியை ஜெயலலிதா அமர்த்தும் நிலை உருவாகும் என்பது பிரகாஷ் காரத்துக்கு தெரியாமலா இருக்கும். ?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புது வீடு கட்ட ஆசையா?
புதிதாக வீடு கட்ட திட்டமிட்டவர்களுக்கும் ,அல்லது வீடு கட்டும் தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த "SWEET HOME 3D" மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும்.
இது இலவசமாக கிடைக்கும் சாப்ட்வேர்.
எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் .அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென்பொருளின் சிறப்பாக சொல்லலாம்.
கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்தவித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் சென்டி மீட்டரில் உள்ளீடு செய்ய வேண்டும். 10 அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செ.மீ.க்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செ.மீ.
மேல் வரிசையில் plan மெனுவில் create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.
சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள். இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம். இதில் நாம் திருத்த தேர்வு செய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றும் வண்ணங்கள் மற்றும் அளவு களை மாற்றி நம் விருப்பம் போல் அமைத்து மாதிரி வடிவை பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.
மேல் வரிசையில் plan மெனுவில் create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.
சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள். இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம். இதில் நாம் திருத்த தேர்வு செய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றும் வண்ணங்கள் மற்றும் அளவு களை மாற்றி நம் விருப்பம் போல் அமைத்து மாதிரி வடிவை பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------