துதிபாட நாடெங்கும் 700 கையாட்கள் ,
கொடிகாத்த குமரன்
------------------------------------
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4-ம் தேதி, நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923-ல் தனது 19-வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார்.
நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று,
ஈங்கூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.
காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.
1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் .
இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004-ல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
சுப்பிரமணிய சிவா
---------------------------------------
சுப்பிரமணிய சிவா (4அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர்.
அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர்.
தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத்தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர்;
சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். 'வீரமுரசு' எனப் புகழப்பட்டவர்.
இவரின் நாவன்மையும் அதனால் இவர் மக்களிடம் உருவாக்கிய விடுதலை கனலையும் பொறுக்காத வெள்ளையார் அரசு இவரை சிறையில் தள்ளியது .அங்கு இவரை தொழு நோயாளிகள் அறையில் அடைத்தது..அதன் மூலம் சிவாவையும் அந்நோய் பற்றிக்கொண்டது..
சிறையில் இருந்து வெளிவந்த சுப்பிரமணிய சிவாவை காந்தியின் காங்கிரசு கட்சி கண்டு கொள்ளவில்லை.இவருக்கும்,வ.உ.சி.க்கும் காங்கிரசு கட்சி துரோகம் இழைத்தது.இருவருமே வறுமையில் வாடினார்கள்.
சுப்பிரமணிய சிவா எவராலும் கண்டு கொள்ளப்படாமல் வாடி மரணமானார்..விடுதலைக்காக தங்கள் சொத்து சுகங்களை இழந்து வறுமையில் வாடி மறந்த தியாகிகள் எத்தனையோ பேர்கள். .ஆனால் நம்மை பொறுத்தவரை சுதந்திரம் வாங்கித்தந்தவர் காந்தி?.பகவத் சிங்,சுபாஷ் சந்திர பொஸ் போன்றோரை வெள்ளையனிடம் காட்டிக்கொடுத்த அவர்தான் நமது தேச தந்தை.?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி துதிபாட கையாட்கள் நியமனம்
குஜராத் மாநிலத்திலிருந்து 700 பாஜக ஊழியர்கள் ‘மோடியின் புகழ்’பாடுவதற்காக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள் என்று ‘ஓபன்’ என்னும் வார இதழில் திரேந்திரா கே ஜா என்பவர் எழுதியிருக்கிறார்.பாஜக-வின் மத்தியத் தலைமை நரேந்திர மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் குடுமிபிடிசண்டை இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில்,நரேந்திர மோடியின் லெப்டினன்டுகள் நாடு முழுவதும் உள்ள மக்களின்மனங்களில் ‘நரேந்திரமோடி இந்துத்துவாவின் சின்னம் மட்டும் அல்ல, ‘வளர்ச்சி’யின் நாயகனுமாவார்’ என்று பதிய வைப்பதற்காக கட்சி ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப இருக்கிறார்கள். நன்கு பொறுக்கி எடுக்கப்பட்ட இவர்கள் அனைவரும் நரேந்திரமோடியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவார்கள் என்றுகுஜராத் மாநில பாஜக தலைவர் ஒருவர் தெரிவிக்கிறார்.
தேர்தலையொட்டி மோடி நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வதற்குமுன் இவர்கள் அவர் குறித்து மக்கள் மனதை நன்கு பதப்படுத்தும்வேலையைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.நரேந்திர மோடியைத் துதிபாடி துண்டுப்பிரசுரங்கள், குறுந்ததடுகள்தயாராக இருக்கின்றன. ‘‘குஜராத் வளர்ச்சிக்கான சிறந்த முன்மாதிரி(ரோல் மாடல்) மாநிலம் என்று உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் பதிவுசெய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள், குறுந்தகடுகள் தயாராக இருக்கின்றன. இவைகள் பாஜக-வின் மத்தியத் தலைமை ஒப்புதலுக்குப்பின்இவ்வாறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று பாஜக-வின் குஜராத் மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.மோடிக்கு ஆதரவு நாடு தழுவிய அளவில் ‘அலை’யை உருவாக்குவதற்காகஅனுப்பப்படும் இத்தகைய ஊழியர்கள் ‘செய்ய வேண்டியதுஎன்ன?’, ‘செய்யக்கூடாதது என்ன?’ என்று ஒரு பட்டியலே கொடுக்கப்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, இந்த ஊழியர்கள் கார்களில் பயணம்செய்யக்கூடாது என்றும், மக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துவசதிகளையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று ஓட்டல்களில் தங்குவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிந்த அளவிற்கு கட்சி ஊழியர்களின்இல்லங்களிலேயே தங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக் கிறார்கள். இவ்வாறு அனுப்பப்படும் ஊழியர்கள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளுக்கே சென்று வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தபோதிலும், குர்ஷீத் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோமற்றும் வாரணாசி செல்வதற்குத் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். ‘‘எங்களில் பலர் கிராமங்களில்தான் வேலை செய்யப் போகிறோம்,’’ என்று கூறிய குர்ஷீத், ‘‘நானும், வேறு சிலரும் மட்டுமே நகரங்களில் வேலை செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்,’’ என்றும் கூறினார். காந்திநகரில் கட்சி வட்டாரங்களிலிருந்து வந்த தகவல்களின்படி மேற்படி ஊழியர்களின் பட்டியல் தில்லிஅசோகா ரோட்டில் உள்ள மத்திய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து செயல்படுத்துமாறு கட்டளை வந்தபின் இவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள்என்றும் தெரிகிறது. இவர்களுடன் வைக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களும், குறுந்தகடுகளும் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிகிறது.மோடி இவ்வாறு நாடு முழுவதும் ஊழியர்களைத்தன் மாநிலத்திலிருந்தே அனுப்பி வைப்பதற்கு முக்கியகாரணம் என்ன? அவர் நாட்டின்பிற பகுதிகளில் உள்ள பாஜக எந்திரத்தை முழுமையாக நம்பாததே காரணமாகும். பாஜகவிற்குள் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது தொடர்பாககுடுமிபிடி சண்டை இப்போதும் நடந்து கொண்டிருந்தபோதிலும், தலைமை, மோடியைத்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றுஅறிவித்துவிட்டது. அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் உள்ளபாஜகவினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய அளவிற்குத் தனக்குப் பலம் இல்லை என்று மோடி கருதுவதுபோல் தோன்றுகிறது. அதன்காரணமாகத்தான் அவர் தன் மாநிலத்திலிருந்து ஆட்களை அனுப்பிவைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் தலைவராக தனக்குமிகவும் நெருங்கிய சகாவான அமித் ஷாவை மோடி அனுப்பி வைத்ததற்கு அதுதான் காரணம். அவர் சென்றபின்னர்தான் முசாபர்நகரில் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. அகில இந்தியஅளவில் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தனக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணிசமான இடங்கள் கிடைக்க வேண்டும் என்றநோக்கத்தோடுதான் அமித் ஷா அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அமித் ஷாவை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதுதொடர்பாக மத்தியத் தலைமை சென்ற மே மாதத்தில் அனுமதிஅளித்தபோது, பாஜகவிற்குள் இருப்பவர்கள், இல்லாதவர்களில்பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் பின்பற்றப்பட வேண்டியதேர்தல் உத்திகள் என்பது இரு மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியானவை அல்ல. ஆயினும் மோடி அமித் ஷாவை அனுப்புவதில் மிக உறுதியாக இருந்தார்.
குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் அனைத்திற்குப் பின்னாலும் அமித் ஷா இருந்தார். அதேபோன்று உத்தரப்பிரதேசத்திலும் உருவாக்குவதற்கான பொறுப்பு அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் அரசியல் பொறுப்பை அமித் ஷா ஏற்றுக்கொண்டபின்னர்தான் மாநிலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வகுப்புக் கலவரங்கள் நடைபெறத்துவங்கின. இதேபோல் மோடியின் ஆட்கள் 700 பேரும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டு அவர்களும் தங்கள் செயல்களில் இறங்கிவிட்டால் நாடு என்னாகுமோ ?
- ச.வீரமணி.