வெள்ளி, 4 அக்டோபர், 2013

"காமன்வெல்த் "?


suran

இப்போது காமன் வெல்த் அமைப்பு பற்றி அதிகமாக பேசப்படுகிறது.அதில் நமது பிரதமர் கலந்து கொள்வது பற்றி கூட இலங்கைக்கு எதிரான குரல்கள் உள்ளன.
சரி.இப்போது காமன் வெல்த் அமைப்பு என்றால் என்ன?
அதன் ஆரம்பம் எவ்வாறு?ஏற்கனவே சார்க்,ஐ.நா,என்று பல உள்ளது .அவைகளால் ஒன்றுமே நடவாத போ து  இந்த காமன்வெல்த் எதற்கு? கொஞ்சம் பார்ப்போம்.
உலக வரலாற்றில் நீடித்த பேரரசுகளில் மிகப்பெரியதும் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாகஆதிக்கம் செலுத்தியதுமான பிரிட்டிஷ் பேர ரசு உலக நிலப்பரப்பில் 25 விழுக்காட்டை விழுங்கி யிருந்தது
.1887ல் இருந்து துவங்கிய பிரிட்டன் மற்றும் காலனிய பிரதமர்கள் பங்கேற்ற கூட்டங்கள் 1911 முதல் பேரரசு சார்பு மாநாடுகள் (இம்பீரி யல் கான்பெரன்ஸ்) என்று அழைக்கப்பட்டன. 
பிரிட் டிஷ் பேரரசு என்பதை மாற்றி பிரிட்டிஷ் காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்க 1917ல் ஜான் ஸ்மட்ஸ் முன் மொழிந்தார்.
 இந்த மாற்றம் 1921ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
1926ல் நடைபெற்ற பால்பர் இம்பீரியல் மாநாட்டில் இதிலுள்ள அமைப்புகளுக்கு சம உரிமையும் கூடவே உள் நாட்டு, அயல் விவகாரம் ஆகிய அம்சங்களில் ஒருங்கிணைப்பும் உறுதிப்படுத்தப்பட்டன. 1931 முதல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து என ஒன்றன் பின் ஒன்றாக நாடுகள் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்கின. 
விடுதலையடைந்த ஒவ்வொரு நாடும் பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பில் இனி எவ்வாறு செயல்படுவது? என்பதை தீர்மானிப்ப தற்காகத்தான் இந்த மாநாடு.
suran
இதற்கு முன்பு, பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத் தின் கீழிருந்த காலனி நாடுகள் தொடர்ச்சியாக பல மாநாடுகளில் பங்கேற்றிருந்தாலும், இம் மாநாடுதான் அவர்களுக்கு சற்று ஆறுதலை அளித் தது. இதற்கு காரணம், இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய மாநாடுகளில்தாம் தத்தமது நாடுகளின் முறையாக தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.உருவாக்கமும், நிகழ்வுகளும்இங்கிலாந்தின் காலனி நாடுகளில் மிகப் பெரியது இந்தியா.
நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்த விடுதலைப் போராட்டத்தின் விளைவாக 1947 ல் சுதந்திரம் கிடைத்து மூன்றாண்டுகளுக்குப் பின்,‘ குடியரசாக’ மாறியது. இதற்கிடையில், 1950 ஆம் ஆண்டில் லண்டன் தீர்மானத்தின் அடிப்படையில் “புதிய காமன்வெல்த்” அமைப்புஉருவாக்கப்பட்டது. 
இந்த அமைப்பில் பல் வேறு நாடுகள் தங்களை உறுப்பு நாடுகளாக இணைத்துக்கொண்டன.
பிரிட்டிஷ் காமன்வெல்த் ஆக இருந்ததை படிப்படியாக மாற்றி 1971 ஆம் ஆண்டு முதல் ‘காமன்வெல்த்’ (பொது வள நாடுகள்) என்பதாக அழைக்கப்பட்டன. இந்த அமைப்பிலுள்ள அனைத்து நாடுகளின் அரசுத்தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் உறுப்பு நாடுஒன்றில் பொதுவள நாடுகளிள் ‘அரசுத் தலை வர்கள் மாநாடு’ (சிஎச்ஓஜிஎம்) நடத்தப்படும். இந்த மாநாட்டிற்கு. மாநாட்டை நடத்தும் நாட்டின் தலைவர் அல்லது குடியரசுத் தலைவர் தலைமை ஏற்கிறார். அவரே அடுத்த இரண்டு ஆண்டு களுக்கு தலைவராகவும் செயல்படுவார்.ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, பசிபிக் என்று ஐந்து கண்டங்களிலும் பரந்துவிரிந்து 54 நாடுகளை தன்னகத்தே உள்ளடக்கிய காமன்வெல்த் அமைப்பு குடிமக்கள் நலன், வளர்ச்சி, ஜனநாயகம், அமைதி என்கிற அம்சங் களின் அடிப்படையில் செயல்படத் துவங்கியது.
 பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்புக்கு ஆறாம் ஜார்ஜ் 1895-1952 கால கட்டத்தில் தலைமை பொறுப்பில் இருந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து மகள் இரண்டாம் எலிசபெத் ராணி புதிய காமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்றார்.
 1971ல் நடந்த முதல் மாநாடு தவிர அனைத்து மாநாடுகளிலும் எலிசபெத் ராணி பங்கேற்றுள்ளார். 87 வயதாகும் ராணியின் உடல் நிலை காரணமாக தற்போது இலங்கை யில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு ராணியின் சார்பில் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
suran
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, பிரிட் டிஷ் பேரரசு விளை யாட்டு போட்டிகள் (பிரிட்டிஷ் எம்பயர் கேம்ஸ்) 1930 முதல் 50 வரையான 20 ஆண்டுகளில் நான்கு முறை நடத்தப்பட்டன. 1954 முதல் 1966 வரை பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் போட்டிகள்(பிரிட்டிஷ் எம்பயர் அண்டு காமன்வெல்த் கேம்ஸ்) என்றபெயரில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத் தப்பட்டன. காலனி நாடுகள் விடுதலை அடைந்ததும் 1970 முதல் 1974 வரை பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்(பிரிட்டிஷ் காமன்வெல்த் கேம்ஸ்) என்ற பெயரில் நடத்தப் பட்டு வந்தன.
 1978 முதல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்(காமன்வெல்த் கேம்ஸ்) என்றே அழைக்கப்பட்டு வருகின்றன.மாநாடுகளின் விவாதப் பொருள் குறித்து காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நாடாளுமன்றங்களின் மன்றம் (காமன்வெல்த் பார்லிமென்டரி அசோசியேஷன்) தீர்மானிக்கிறது.
 நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்விக்குழு சங்கம், சட்டம், சுகாதாரம், நிதித்துறை அமைச்சர்கள் என துணை அமைப்புகளின் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. நிறைவாக, காமன்வெல்த் அரசு தலைவர்களின் மாநாடு அதனை பிரகடனப்படுத்துகிறது.
suran
விலகலும், இணைதலும்தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய தென் ஆப்பிரிக்கா 1961ல் காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகிக் கொண்டது. பிறகு,நெல்சன் மண்டேலா தலைமையில் இடையறாத போராட்டத்தினால் கிடைத்த வெற்றிக்கு பின்னர் 1994ல் மீண்டும் இணைந்து கொண்டது.
நைஜீரியாவில் எண்ணெய் வளத்தை பாதுகாக்கப் போராடிய பத்திரிகையாளரும் சமூகப் போராளியுமான கென்சரோவிவா உள்ளிட்ட 10 பேரை 1995ல் தூக்கிலிட்டதால் நைஜீரியாவை 4 ஆண்டுகளுக்கு இடை நீக்கம் செய்து 1999ல் மீண்டும் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது காமன்வெல்த் அமைப்பு.பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு 1999ல் ராணுவக் கலகத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முஷாரப் அரசு, 2007ல் அவசர நிலையை பிர கடனப்படுத்தியதால் இரண்டாவது முறையாக இடைநீக்கம் செய்யப்பட்டு 2008ல் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டது. 
மனித உரிமை மீறல் மற்றும் ராணுவக்கலகம் நடத்தியதால் இரண்டு முறை நீக்கப்பட்டு பிஜி தீவுக்கு அந்த தடை இன்னமும் நீடிக்கிறது. ஜிம்பாப்வேயில் அதிபர் ராபர்ட் முகாபே-வின் அரசுக்கு எதிராக மக்கள் போராடியபோது அவர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக 2002ல் இடை நீக்கம் செய்யப்பட்டது.
 பின் னர் அந்த நாடு இந்த அமைப்பிலிருந்து விலகிக் கொண்டது. காமன்வெல்த் அமைப்பில் இணைவதற்கு எந்தநாடும் விண்ணப்பிக்கலாம். ஆனால், இரண்டுஆண்டுகளுக்கு ஒரு முறை கூடும் இம்மாநாடு தான் இறுதி முடிவு அறிவிக்கும். உறுப்பு நாடுகள் எப்போது வேண்டுமானாலும் விலகிக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எதிர்ப்பும்,ஆதரவும்1971ல் துவங்கிய காமன்வெல்த் அரசுத் தலைவர்களின் மாநாடு இதுவரை 22 முறை கூடியுள்ளது.
 23வது மாநாடு வரும் நவம்பர் 15 ல் துவங்கி 17 ந்தேதி வரை இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற உள்ளது.
suran
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் நடந்த மனித உரிமை மீறல் காரணமாக காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் அமைப்பிலிருந்தேஇலங்கையை நீக்க வேண்டும் என்றும் அந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது.                                                                                                                                                                         -சி. ஸ்ரீராமுலு
-------------------------

suran


suran