வியாழன், 30 ஜூன், 2016

திவாலாகும் அதிமுக அரசு.

தமிழ் நாடு  அரசு 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் சிக்கி  திணறுவதை, ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தி உள்ளது.
வரி வருவாய் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையால் அமலாகி சம்பளம் உயர்ந்தால், தமிழக அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்படும்.
தமிழக அரசுக்கான வரி வருவாயில், 70 சதவீதம் வணிக வரி மூலமாக கிடைக்கிறது. 2015 - 16ம் நிதியாண்டில், 72 ஆயிரத்து, 68 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 
பிப்., இறுதி வரை, 50 ஆயிரத்து, 100 கோடி ரூபாயே கிடைத்தது. ஒரு மாதத்தில், 22 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் வணிகர்களிடம், 'முன்கூட்டியே வரி கட்டுங்கள் ,அடுத்த மாதங்களில் சரி செய்து கொள்ளலாம்' என, கெஞ்சியும், வசூல் நடத்தியும், வரி வசூலாக, 61 ஆயிரத்து, 709 கோடி தான் கிடைத்தது. 

இது, இலக்கை விட, 10 ஆயிரத்து, 359 கோடி ரூபாய் குறைவு.
வரி வளர்ச்சி, 11.6 சதவீதம் வரை எதிர்பார்த்தாலும், 2.31 சதவீதமே உயர்ந்தது. '2011 - 12ல், 27 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி, படிப்படியாக சரிந்து, 2.31 சதவீதமாக குறைந்து வருவது தமிழக அரசின் நிதி நெருக்கடிக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது'
முந்தைய, நான்கு ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, வரி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை, சட்டசபையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே ஒப்புக் கொண்டார். 

இந்நிலையில், 2015 - 16ல் மட்டும், வணிக வரி மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய்; பத்திரப்பதிவு, வாகன வரி வசூல் வகையிலும், பிற வகையிலும், 1,900 கோடி ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்பட்டு, தற்போது, 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கி உள்ளது.
ரிசர்வ் வங்கி, மாநிலங்களின் நிதி பற்றாக்குறை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழக அரசிற்கு, 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய்க்கு நிதி நெருக்கடி உள்ளது; நிதி நெருக்கடிக்கு ஆளான மாநிலங்களில், தமிழகமே, முதல் இடத்தில் உள்ளது' என, கூறப்பட்டுள்ளது. 

அடுத்த இடத்தில், உத்தரபிரதேசம் - 31 ஆயிரத்து, 560 கோடி ரூபாய்; மஹாராஷ்டிரா - 30 ஆயிரத்து, 730 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி துவங்கும் போது, 2011 - 12ல், தமிழக அரசின் கடன் சுமை, 1.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 

அது படிப்படியாக அதிகரித்து, 2015 - 16ல், 2.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் நிதி ஆண்டு இறுதியில், 2.47 லட்சம் கோடியாக கடன் சுமை கூடும் என, கணக்கிடப்பட்டுள்ளது
இந்த கடன் சுமை என்பது அனுமதிக்கப்பட்ட அளவே என்றாலும், மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் இன்னும் அதிகரிக்கும். 
இது, கடன் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும்; இது, அனுமதி அளவையும்தாண்டலாம்.
வருவாய் வளர்ச்சியில் தொடர் சரிவு, சம்பள உயர்வால் பற்றாக்குறை என, அரசுக்கு நிதி நெருக்கடி இன்னும் அதிகரிக்கும். இதை எப்படி சமாளிக்கப்போகிறது என்பதே, மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 
தமிழக அரசு வரி வருவாயை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தியில் முதலீடுகளை அதிரிக்கச் செய்வதிலும் சிறப்புக்கவனம் செலுத்தினால் மட்டுமே, தமிழகம் ஓரளவு தப்ப முடியும்.
வரி வசூல் குறைந்ததற்கான காரணங்கள் 
* அரசுக்கு அதிக வருவாய் தரும் வணிக வரித்துறையில், 50 சதவீத பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நிலுவை வரி வசூலித்தல்; வரி ஏய்ப்பை தடுப்பதில் அரசு கவனம் செலுத்தவில்லை
* மாநிலத்தில், பெரிய அளவில் வர்த்தகம் மேம்படவில்லை; தொழில் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கம் அளிக்கவில்லை. வரி விதிப்பு நடைமுறைகளில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. தவறான வரி விதிப்பு முறையால், பல நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தன
* ஒற்றைச்சாளர முறையில் தொழில் அனுமதி என்பது, ஏட்டளவில் தான் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் சலுகைகள், தமிழகத்தில் தரப்படவில்லை
* வேளாண் உற்பத்தியிலும் பெரிய அளவில் சிறப்புக்கவனம் செலுத்தப்படவில்லை. மின் தட்டுப்பாடு தற்போது இல்லை என்றாலும், தேவைக்கேற்ப மின் உற்பத்தியில் கவனம் செலுத்தப்படாததும் சிக்கலுக்கு காரணம்
* பத்து ஆண்டுகளில், வரி விலக்கு அளிப்பதில் கவனம் செலுத்திய அரசு, இலவசங்களுக்கு செலவிடும் தொகையை எந்த வகையில் ஈடுகட்டுவது என்றோ, புதிதாக வரி விதிப்புக்களிலோ கவனம் செலுத்தவில்லை
* வரி ஆலோசகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளை, அரசு அழைத்து பேசி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவும் தவறி விட்டது. இதுவே, சிக்கலுக்கு முக்கிய காரணம்.

சரியும் வணிக வரி

ஆண்டு / வருவாய் (ரூ.கோடியில்) / வளர்ச்சி (சதவீதத்தில்)
2010 - 11 / 31,117 / 25.37
2011 - 12 / 39,545 / 27.09
2012 - 13 / 47,885 / 21.09
2013 - 14 / 56,851 / 18.72
2014 - 15 / 60,314 / 6.26
2015 - 16 / 61,709 / 2.31
தமிழ் நாடு அரசு  கடன் சுமை
ஆண்டு / கடன் (ரூ.லட்சம் கோடி)
2011- 12 / 1.03
2012-13 / 1.20
2013-14 / 1.40
2014-15 / 1.78
2015 - 16 / 2.11

இது நடப்பு நிதியாண்டு முடிவில், 2.47 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தின் நிதி பற்றாக்குறை, 2015 - 16ல், 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் கடன் அளவை குறைக்க வேண்டும் என்றால், நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும். இதில், மஹாராஷ்டிரா வெற்றி கண்டுள்ளது; 
தமிழ் நாடு அரசு நிர்வாகத் திறன் இல்லாததால்  தோல்வி அடைந்துள்ளது.
தமிழகத்தில் மொத்த கடன் சுமை கூட இது வழி செய்யும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையும் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால், கடன் மேலும் உயரும். நிதி நிர்வாகத்தை மேம்படுத்தாவிட்டால், சில ஆண்டுகளில், மீள முடியாத கடன் சுமையில் தமிழகம் சிக்குவது உறுதி
ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் முதலீட்டாளர்களை நேரில் சென்று அழைத்து, தங்கள் பக்கம் முதலீடுகளை இழுத்துக் கொள்கின்றன. 
அந்ததொழில் வளர்சசி பற்றிய சிந்தனையே  தமிழக ஆட்ச்சியாளர்களிடம்  இல்லை. மாநில வளர்ச்சிக்கு துறைமுகங்கள் முக்கியம்.
மூடுவிழாவை நோக்கிச் செல்லும் சென்னை துறைமுகத்தை காப்பாற்றவோ, அதை மேம்படுத்தும் வகையிலான துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டப்பணிகளை தொடரவோ தமிழ் நாடு அதிமுக அரசு அக்கறை காட்டாததால், அண்டை மாநில துறைமுகங்கள் வளர்ச்சி பெறுகின்றன. 
நமக்கு நாமே தேடிக்கொண்ட வினை இது. அவசர கதியில் செயல்பட்டு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற, அரசு முயற்சிக்க வேண்டும்.

========================================================================================
இன்று,
ஜுன் -30.
 • காங்கோ விடுதலை தினம்(1960)

 • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)

 • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)
========================================================================================
நாம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ போன்ற Symbol வருவதை பார்த்திருக்கிறோம். 
இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1) '2G' - இது 2G நெட்வெர்க் இண்டர்நெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். 
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.


2) 'E' - இதுவும் 2G (2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இண்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. 
இதன் மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89 மணி நேரமும் ஆகும். இந்த 'E' பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

3) '3G' - இது 3G மொபைல் இண்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. 
இது இயங்க அவசியம் 3G இயங்குதள வசதியுடைய மொபைல் (Smart Phone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6 மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18 மணி நேரத்தில் அனுப்பவும் இயலும்.
4) Symbol 'H' - இது 3G மொபைல் இண்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. 
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாம் 1GB dataவை 25 நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.

5) 'H+' - இதுவும் 3G மொபைல் இண்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5 முதல் 20 நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15 முதல் 39 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.

6) '4G' - இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். 
இதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. 
இதன் மூலம் நாம் 1GB dataவை 3 நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5 நிமிடம் மட்டுமே போதும்.
=======================================================================================

புதன், 29 ஜூன், 2016

தமிழக அரசே விடுதலை செய்யும்?

"இராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை, ஏனைய குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. 

இம்முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். 

இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசிடமிருந்து எந்த விடையும் வரவில்லையென்றால், தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும்" என்று 2014 பிப்.19 அன்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார், அன்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. 

இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை கோரி நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. 
இப்போதும் தமிழகத்தின் முதலமைச்சர் அதே ஜெயலலிதாதான். பிறகு ஏன் இந்த மாற்றம்? 

மலையிலிருந்து மடுவில் குதித்திருப்பதன் நோக்கம் என்ன? 

இந்தப் 'பச்சை இரட்டை வேடத்தை' எவரும் கண்டிக்கவில்லையே என்? 

இவ்வாறு பல வினாக்கள் எழுகின்றன. விடுதலை செய்யப்போவதாக அவர் அறிவித்த நேரம், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருந்த கால கட்டம். 

தமிழ்த் தேசியவாதிகள் அந்த அறிவிப்பில் மகிழ்ந்து அறிக்கை விட்டனர். 

25 ஆண்டுகளாகத் தான் பிள்ளையைப் பிரிந்து வாடும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மா, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார். அந்த நிழற்படம் ஊடகங்களுக்குச் சென்றது. சுவரொட்டியாகவும் மாறி, அ.தி.மு.க.விற்கு ஆதரவைப் பெருக்கியது.

ஆனால் விடுதலை மட்டும் வரவே இல்லை. என்ன காரணம்? 


மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (Cr.P.C) 435(1) ஆம் பிரிவின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். 

அந்தச் சட்டப் பிரிவில், "மத்திய அரசுடன் கலந்துரையாடி (in consultation with...)என்று ஒரு தொடர் உள்ளது. கலந்துரையாடல் என்றால் மத்திய அரசுக்கு அறிவித்தல்தான் என்றனர் வழக்கறிஞர்கள் சிலர். ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. உச்சநீதி மன்றத்திற்குச் சென்று, எங்களைக் கேட்காமல் விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று மனு அளித்தது. 

அந்த மனுவை ஏற்று விசாரித்த உச்ச நீதி மன்றம், 2015 டிசம்பர் 2 அன்று, கலந்துரையாடல் என்றால் மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதுதான் (in consultation means getting concurrence) என்று தீர்ப்பளித்தனர். 

அதனையொட்டி ஊடகங்களில் நடைபெற்ற விவாதங்களில், நளினியின் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், தோழர் தியாகு போன்றவர்கள், சட்டப் பிரிவு 435 குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்படி தமிழக அரசு தானே அவர்களை விடுதலை செய்ய முடியும். 

அதனை மத்திய அரசோ, நீதி மன்றங்களோ தடுக்க முடியாது என்றனர். அந்தப் பிரிவு மாநில ஆளுநரின் அதிகாரம் (Governor's power) பற்றி பேசுகிறது. "பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது....(The Government of State shall have the power to grant pardons....)" என்றுதான் அந்த விதி தொடங்குகிறது. யாரும் தடுக்க முடியும் என்பது போன்ற குறிப்புகள் ஏதும் அதில் காணப்படவில்லை. அவர்கள் சொன்னது சரியாகத்தான் இருந்தது.

ஆனால் அதற்கும் ஒருபடி மேலே போய், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "அந்த அம்மாவுக்கு அந்தத் துணிச்சல் உண்டு. பாருங்கள் இன்னும் இரண்டு நாள்களில் அவர்களை அவர் விடுதலை செய்து விடுவார்" என்று பாராட்டுப் பத்திரம் படித்தார். 


அற்புதம் அம்மாவும், அந்த அம்மா தன் பிள்ளையை விடுதலை செய்து விடுவார் என்று நம்பினார். இந்தப் பாராட்டு, நம்பிக்கை எல்லாம் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு, ஜெயலலிதாவுக்குப் பயன்பட்டதே அன்றி, பாதிக்கப் பட்டவர்களின் விடுதலைக்கு உதவவில்லை. 

அண்மையில் கூட, அவர்களை விடுதலை செய்யக் கோரி, ஒரு கோரிக்கைப் பேரணி நடைபெற்றது. வேலூரிலிருந்து தொடங்குவதாக இருந்த அந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு, சென்னையில் மட்டும் நடத்த அனுமதித்தது. பேரணி நடத்தக் கூட அனுமதியில்லையா என்று யாரும் பொங்கி எழவில்லை. "அம்மா" சொன்னதை அப்படியே கேட்டு நடந்தார்கள். 
சரி, வீரியத்தை விடக் காரியம்தான் முக்கியம், நல்லது நடக்கட்டும் என்று நாடு காத்திருந்தது. ஆனால் இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. இப்போது நளினியின் மனுவையும் தள்ளுபடி செய்யக் கோருகிறது தமிழக அரசு. 

இந்தச் சூழலிலும் அந்தத் "துணிச்சல்கார அம்மாவின்" பிம்பத்தை யாரும் குலைக்க விரும்பவில்லை. அவருடைய இரட்டை வேடத்தை கண்டித்து எந்த அறிக்கையும், எந்தத் தமிழ்த் தேசியத் தலைவரிடமிருந்தும் வரவில்லை. 

இதுவே தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றிருந்தால், நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்கும்! 

மூன்று செய்திகளை உள்வாங்கி இந்தக் கட்டுரையை நாம் நிறைவு செய்யலாம். 

1. உண்மையாகவே அவர்களின் விடுதலையில் ஜெயலலிதாவிற்கு விருப்பம் இருந்திருந்தால் அவர் இந்திய அரசமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவைத்தான் பயன்படுத்தி இருப்பார். 
அப்படி அவர் செய்யவில்லை. 

2. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 435(1) பிரிவின் கீழ் விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாகக் கூறியது, மத்திய அரசின் மேல் பழி போட்டுத் தான் தப்பித்துக் கொள்ள மட்டுமே! 

3. கோரிக்கைப் பேரணி நடத்துவதற்கும், நீதிமன்றத்தில் மனு அளிப்பதற்கும் கூட ஒப்புதல் தர மறுக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு விடுதலை வழங்குவார் என்று இன்னும் சிலர் நம்புகின்றனர். 
சரி, இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் அவர் நம்மை ஏமாற்றலாம்!
                                                                                                                     பேராசிரியர்   சுப.வீரபாண்டியன் 

அது அந்த காலம்

இன்று தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மீண்டும் முழுசாக விட்டு திரும்புவோமா என்ற ஐயம் உண்டாகியுள்ளது.

காரணம் ஆங்காங்கே நடக்கும் கொலை,கொள்ளை .

ஆனால் அதை தடுக்க வேண்டிய காவல்துறை அதை சட்டை செய்யாமல் இருசக்கர வாகனங்களை இன்சுயூரன் ஸ் இருக்கிறதா ?கெல்மட் இருக்கிறதா என்று சோதனை செய்து காலத்தைக்கழிக்கிறது .
காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவோ இன்னும் ஒரு படி மேலே போய் சட்டசபையில் அமைதி பூங்கா தமிழ் நாடு என்று அறிக்கை வாசித்து   எதிர்க்கட்ச்சிகளின் வாயை அடைத்து விட்டதாக கருதி தனது கடமையை  முடித்துக் கொள்கிறார்.

காலையில் அலுவாக்கத்திற்கு செல்ல பேருந்துக்கு காத்திருக்கும் வேளையில் நம் பக்கத்தில் இருப்பவரை திடீரென வந்து போட்டுத்தள்ளி விட்டு சாவகாசமாக இரு சக்கர வாகனத்தில் போய் விடும் அவலம்தான் இன்று தமிழகத்தில்.

அந்த பக்கத்தில் நிற்பவருக்குப் பதிலாக அடையாளம்  தவறி நம்மையும் போட்டு விடக்  கூடிய  அபாயத்தை  ஒவ்வொருவரும்  தினமும் சந்திக்கவேண்டியதுதான் இன்றைய உண்மை நிலை.
சுவாதிக்குப் பதில் தவறாக  சுகாசினியை வெட்டி விட மாட்டார்கள் என்பதற்கு அரசு உத்திரவாதம் இல்லை.

இந்த கூ லிப்படை,கொள்ளையர்கள்,உணர்சசி வசப்பட்ட கொலைகள் இவைகளை தடுக்க அரசால்,காவல் துறையால் முடியாதா என்ன?

முடியும்.அதற்காகத்தானே காவல் துறையில் உளவுப்பிரிவே அமைக்கப் பட்டது.
ஆனால் ஜெயலலிதா ஆடசியில் உளவுப்பிரிவின் வேலையே திமுக உ ட்டப்பட்ட கடசிகளுக்கு எதிராக  வியூகம் அமைப்பதாக மட்டுமே ஆகி விட்டது.

இதுவரை நடந்த தேர்தல்களில் ஆளுங்கட் சி பலகீணமான இடங்களை காண்பதும் அதில் வெல்ல கடசிக்காரர்களை விட ஓடியாடி வேலை செய்வதுமே முழு நேர பணியாகி விட்டது.

அதிமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை திமுக அமைத்து விட்டாள் கூடாது என்பதற்காக நம் உளவுத்துறை மேற்கொண்ட பணி பிரதமர் மோடியால் கூட பாராட்டப்பட்டது.அதை நம்பித்தான் வாக்கு எண்ணிக்கை பாதிக்கு  முன்னதாக  10.30க்கே ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

இன்று காணாமல் போன அந்த தமிழ் நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு முந்தைய நிலையை பற்றி 
முகநூலில் வந்த ஒரு இடுகை இது. நமக்கு ஈக்கப் பெரும் மூசசை தான் தருகிறது.


"சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை நகர கால்துறையில் ஐ.எஸ். டிசியாக இருதயதாஸ் பணியில் இருந்தார். 
குற்றச்செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளாக இருப்பினும், ரவுடி, கோடி பட்டியலில் இருப்வர்கள், நக்சலைட், இந்து, முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் வாதிகள் என அனைத்து தரப்பினர் பற்றிய தகவல்களை கேட்டால் அடுத்த 5வது நிமிடத்தில், சம்பந்தப்பட்ட நபரின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ளமுடியும். 

அப்போது உளவுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் யார் என்பது காவல் துறையினருக்கும். உளவு துறையினரிடம் தொடர்பில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். 
ஒரு ஏரியாவை கவனிக்கும் உளவு துறை காவலராக இருந்தாலும், தகவல்களை மிகவும் துள்ளியமாக, விரல் நுணியில் வைத்திருப்பார்கள்.
இன்றைய நிலை அப்படியில்லை தலைகீழாக உள்ளது. 

உளவுத்துறையில் பணியாற்றும் பலரும் தங்களை வெளிப்படையாக நாங்கள் உளவுத்துறையில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறுவதை பார்க்க முடிகிறது. பத்திரிகையாளர்கள் பேட்டிக்காக வந்திருக்கிறோம் என்று கூறுவதைப்போல் வெளிப்படையாக கூறிக் கொண்டு திரிகிறார்கள். 
இவர்களில் பெரும்பான்மையினர் பத்திரிகையாளர்களிடம் தகவலை பெறுவதே மிகப்பெரிய பணியாக கருதுகிறார்கள். 
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் அறை, உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் அறை, பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில், பத்திரிகையாளர்கள் கூடும் இடங்களில் பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை ஆக்கிரமித்து, அவர்களின் பணிகளுக்கு இடையூறாக அமர்ந்து கொண்டு, உளவு பணியை மேற்கொள்கிறார்களாம்.

இதோடு நில்லாமல் பத்திரிகையாளர்களுக்காக நடத்தப்படும் சந்திப்புகளில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். இதற்கு பேர் உளவு துறையாம். இவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. கருமம்டா என தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

 காரணம் இந்த உளவுத்துறையினர் வாங்கிக் கொடுக்கும் டீ சிற்றுண்டி, உணவு மற்றும் இத்தியாதி இத்தியாதிகளுக்காக இவர்களுடனே ஐக்கியமாகிப்போன பத்திரிகையாளர்கள் பலர். பத்திரிகையாளர்களாக பணியைப்பற்றி இவர்களுக்கும் இவர்களுக்கான பணியின் தன்மை தெரியவில்லை. உளவுத்துறையில் பணியைபற்றி வரும் அவர்களுக்கும் அவர்களின் கடமைை என்ன என்பது தெரியவில்லை. 

இதனால்தான் இந்த இரண்டு துறையிலும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய நடைமுறையாக உள்ளது.
அண்ணாசாலையில், பாதுகாப்பு நிறைந்த, பாதுகாப்புக்காக 24 மணிநேரமும் காவல்துறையால் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட போவதை கூட முன்கூட்டி இவர்களால் தெரிவிக்கமுடியாமல் போன சம்பவம் நினைவிருக்கலாம். 

இதுபோல் பல நிகழ்வுகள் இருக்கு பட்டியலிட நேரம் இல்லை. உதாரணத்துக்கு ஒன்று போதும்.
பத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்யாமல், தங்களை ஊரறிய அடையாளப்படுத்திக் கொள்ளாமல், இருதய தாஸ் காலத்து உளவுத்துறையைப்போல் இவர்கள் மாறவேண்டும். 

20 ஆண்டுக்கு முன் இப்போது இருப்பதைப்போன்ற நவீன தகவல் தொழில் நுட்பங்கள் அன்று இல்லை. இன்று இருப்பதுபோல் வாட் அப், பேஸ்புக், செல்போன், இமெயில் போன்ற வசதிகள் இல்லை. வாகன வசதிகள் இல்லை. 
இவ்வளவு வசதிகளும் உளவுத்துறையிடம் இப்போது இருந்தும், ஒரு நொடியில் தகவல் பறிமாற்றம் செய்யும் வசதி இருந்தும். குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணம் என்ன என்பதை காவல் துறையினரே தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

அண்ணாசாலையில் அதுவும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்கப்படுவதையே முன்கூட்டி சொல்ல முடியாத உளவுத்துறை, தெருக்கோடியில் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்கள் பற்றிய தகவலை எப்படி உடனடியாக சொல்வார்கள். 
உளவுத்துறை ஐஜி கே.என்.சத்தியமூர்த்தி
அன்றைய உளவுத்துறையினரின் பணிகளையும், இன்றைய உளவுத்துறையினர் பணிகளையும் ஓப்பிட்டால். உண்மை தெரிய வரும்.
காவல்துறையினர் தலைமையும், உளவுத்துறையின் தலைமையும் இப்பிரச்சனையை சற்று கவனத்தில் கொள்ள வேண்டும். உளவுத்துறையினர் பத்திரிகையாளர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

உளவு துறையில் பணியாற்றுபவர்களுக்கு உரிய ஆலோசனையை வழங்க வேண்டும். பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளில் ஈடுபடும்போது அவர்களுக்கு இடையூறாக ஏதோ ஒரு சந்தர்பத்தில் அல்ல பல சந்தர்பங்களில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

இது பல வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளிலும் இடம் பெற்றுள்ளது.

இனி வரும் காலங்களிலாவது பத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்யாமல் தங்கள் கடமைகளை செவ்வனே செய்திட வேண்டும்.

முகநூலில்  ==========================================================================================
இன்று ,
ஜூன்-29.
 • செஷெல் விடுதலை தினம்(1976)
 • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
 • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
 • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)
======================================================================================

அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா. 43 வயதான அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்துக் கொள்ளும் சிஸ்டர் மரியா, தன்னுடைய நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து  ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தார். 


இறக்கும் தருவாயில் அனைவரும் அன்பை பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்று கூறியவாறே சிஸ்டர் மரியா உயிரிழந்தார்.  

முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் உதடுகளில் பல மணிநேரம் சிரிப்பு உறைந்து விட்டது.

=====================================================================================

செவ்வாய், 28 ஜூன், 2016

மூட்டுவலியும் -கம்பும்இன்றைக்கு, 40 வயதை கடந்த, 80 சதவீதம் பேருக்கு மூட்டுவலி உள்ளது. 

அதற்கு உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாததே காரணமாகும். அப்படியே வேலை செய்தாலும், பெரும்பாலானவர்கள் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்கின்றனர். 

இதனால், உடல் எடை அதிகரித்து மூட்டுவலிக்கு வழி வகுக்கிறது. 

பாஸ்ட்புட் போன்ற நவீன உணவு பழக்கத்தில் ஆர்வம் காட்டுவதால், உணவை கட்டுப்படுத்த முடியவில்லை. 

மூட்டுவலிக்கு மருந்து, மத்திரைகள் தற்காலிகமான தீர்வை தருகிறதே தவிர, நிரந்தர நிவாரணத்தை தருவதில்லை. 

மூட்டுவலியை பொறுத்தவரை, இயற்கை வழியான மருந்து மற்றும் உணவு முறைகள் வாயிலாக நல்ல பலன் கிடைக்கும். 


அவற்றை குறித்து பார்க்கலாம்:
குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து, கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா, 10 கிராம் அளவு எடுத்து, அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் குறையும். வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். 


இதனை தினமும், 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும். 
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து சூடாக்கி, மூட்டுவலியுள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். நொச்சி இலைச் சாற்றை மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும். 


கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால், வலி குறையும். 
வில்வ மர இளந்தளிரை வதக்கி, இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம். 

கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை, சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவலாம். பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும். 

புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தை கழுவி வந்தால், மூட்டுவலி குறையும். 

குப்பைமேனி இலைகளை, நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன், எலுமிச்சை சாறு கலந்து மூட்டின் மேல் பூசினால் வலி குறையும். 


எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்ச்சி, ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி, வெந்நீரில் கழுவினால் வலி தீரும். 


கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து, வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குணமாகும். 
கை, கால் வலிக்கு காலையில் சிறிதளவு தேனும், அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடலாம். தூதுவளை இலையை மை போல் அரைத்து, சிறிதளவு பசும்பாலில் கலந்து, காலையும் மாலையும் சாப்பிட்டால், கை, கால் வலி பறந்து போகும். 


தக்க மருத்துவர் ஆலோசனையுடன், இந்த சிகிச்சைகளை பெறுவது பாதுகாப்பானது.

======================================================================================
 கம்பு
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. 
வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில், மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. 
இது இந்தியா முழுவதும் பயிராகும் செடி வகையாகும். 
வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும், அதன் மருத்துவ குணத்தையும் காண்போம்.
நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில், அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். 
சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல், வேக வைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில், இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது, அதிக உஷ்ணமடையும். 
இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி, காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். 

 மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். 
இ துபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.
 இன்று சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள், கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். வயிற்று புண்களை குணப்படுத்தும், குணம் கம்புக்கு உண்டு. 
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி, மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். 
அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும். 
உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். 
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால், சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம். 
======================================================================================
இன்று,
ஜூன்-28.
 • ரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)
 • மால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
 • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
 • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)
======================================================================================

டுவல் எனர்ஜி எக்ஸ் - ரே அப்சார்ப்சயோமெட்டரி (DXA). 
இது நம் உடலில் உள்ள கொழுப்பை அளக்க உதவும் பரிசோதனைக் காண கருவி.  தனியார் மருத்துவமனைகளில்தான்  உள்ளது.இதன் மூலம் நம் உடலின் கொழுப்பை கணக்கிட்டு அதிகமாயின் குறைத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
 உடல் எடையும்  அதற்கான கொழுப்பு அளவு( சதவீதத்தில்) விபரம்.

தேவையான அளவு - 12 முதல் 13 - 2 முதல் 5.


விளையாட்டு வீரர் - 16 முதல் 20 - 6 முதல் 13.


பிட்னஸ் - 21 முதல் 24 - 14 முதல் 17.


அதிகபட்ச அளவு - 25 முதல் 31 - 18 முதல் 25.


அதிக உடல் பருமன் - 32க்கும் அதிகமாக - 25க்கும் அதிகமாக.கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

==========================================================================================


திங்கள், 27 ஜூன், 2016

நம்மையும் காயப்படுத்தி விடும்!ரொம்பவும் கவலையாக இருக்கிறது.

தமிழ் நாட்டின் முகநூல் மக்களை பற்றி எண்ணினால்.
சமூக வலைத்தளங்கள் மூலம் சிலநாடுகளில் அரசியல் மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது.பல ஆக்கப்பூர்வமான செயல்கள் நடந்துள்ளன.தேவையான ரத்தப் பிரிவை பரவவிட்டு பல உயிர்களை காத்திருக்கிறார்கள்.

படிக்க முடிந்து கல்விக்கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கு நிதி பிரித்து படிக்க வைத்துள்ளார்கள்.

அரசியல் கட்சிகளின் இன்றைய முக்கிய பிரசார களமாகவும் முகநூல்,டுவிட்டர் உள்ளது.அதில் இயங்காத அரசியல் தலைவர்களே  இல்லை எனலாம். நேரடியாக இல்லாவிட்டாலும் ஆள்வைத்து அரசியல் செய்ப்பவர்கள் உண்டு.


ஆனால் அவ்வாறு நல்லவை நடக்கும் சமுக வலைத்தளங்களில் சாதி,மத வெறியை தூண்டும், சண்டைகளை உருவாக்கும் பணிகளும் சிலரால் நடக்கிறது.இவை திட்டமிட்டே செய்யப்படுகிற செயலாகவே தெரிகிறது.

இவர்களில் பலர் தங்கள் பெயர்களிலேயே சாதியை துணையாக்கி உள்ளார்கள்.
இவைகளை விடக் கொடுமை இன்றைய கொடூர கொலையான சுவாதி கொலையை இவர்கள் கையாளும் விதம்.

இக்கொலையை நேரில் பார்த்தவர்கள்  போலவே அப்போது கும்மிடிப்பூன்டியில்  கொய்யாப்பழத்தைக் கடித்துக்கொண்டிருந்தவன் இடுகை போடுகிறான்.மனைவிக்கு மதுக்கூரில் காய்கறி நறுக்கி கொடுத்தவனும் இடுகை இடுகிறான்.

கொலைக்கான காரணம் ,அப்பெண்ணின் குண,நலன் வரை சுக்கு வேறு ஆணி வேறாக பிரித்து கற்பனையில் மேய்கிறார்கள்.

இதனால் வர்களுக்கு கிடைப்பது சில லைக்குகள்.
ஆனால் அப்பெண்ணின் பெற்றோர்,உறவினருக்கு தீரா மனக்கவலை.அப்பெண்ணின் பெயருக்கு களங்கம்.கிடைக்கும் சில லைக்குக்காக இப்படி மனம்போன போக்கில் கிறுக்குவது என்ன வகையான மனநோய்?

அரசியல் தலைவர்களை விமர்சிப்பதும் ,தங்களுக்கு  முன்,பின் தெரியாபெண்ணை பற்றி விமர்சிப்பதும் ஒன்றாகி விடாது.

காலையில் வீட்டிலிருந்து மகிழ்வுடன் பணிக்கு பெற்றோரிடம் கூ றிக் கொண்டு ரெயில் நிலையம் வந்து எதிர்கால கனவுகளுடன் காத்திருக்கும் ஒரு இளம் பெண்ணை ஒருதலைக் காதலில் ஒருவன் கொலை செய்தான் என்றால் எவ்வளவு பெரிய சோகம்,பாவம்.

அப்பெண்ணுக்காக கண்ணீர் சிந்தி எழுத வேண்டாம்.கண்டதை எழுதாமல் இருக்கலாம் அல்லவா?
பொதுவாகவே இறந்தவர்கள் கொடுமையாளர்களாக இருந்தால் கூட அவரின் சிறிய நன்மை செயலை மட்டும் பேசி அவரை வழியனுப்புவதுதான் பொதுவான நம் சமுக  செயல்பாடு.

அப்படியிருக்கையில் நாம் பழகி,பேசி ஏன் பார்த்தும் கூட இராத ,கொலையான நேரம் வரை அப்படி ஒருவர் உலகில் இருப்பதையே அறியாத நாம் அவரை பற்றி,குணத்தைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அறிக்கை எழுதுவது எவ்வகை நியாயம்?
இதில் சிலர் அது கவுரவக் கொலை ,அவர் இன்ன சாதி .கொன்றவன் இன்ன சாதி .அந்த சாதி தலைவருக்கு கண்டனம்.இந்த சாதி அதனால்தான் ஊடகங்கள் இதை பெரிது படுத்துகின்றன என்பதுவரை போய்விட்டனர்.

இவர்களை பார்த்தால் சிரிப்பாகவும்,பாவமாகவும் இருந்தாலும்.
இவர்கள் முகநூல் செய்கைகள்,இடுகைகளால் உண்டாகும் பாதிப்பை எண்ணினால் பயமாக இருக்கிறது.
முகநூல் பலஇடங்களில் மாற்றத்தை உண்டாக்கிய,உண்டாக்கக் கூடிய  கருவி.அதை தவறாக கையாண்டால்?

சுவாதி பலவித எதிர்கால கனவுகளுடன் வாழ்க்கையை துவக்கும் படிகளில் இருப்பவர்.கனவுகளுடன் வந்தவரை கருமாதிக்கு அனுப்பியவன் உண்மையில் நல்லவனாக இருக்க மாட்டான்.இருக்க முடியாது.
சுவாதியை காதலித்து அதனால் ஏற்பட்ட பட்டு கொலையாக இருந்தாலும் கூட அதை தவிர்த்திருக்கலாம்.கொலையினால் அவன் சிறைக்கு சென்று தான் வாழ்க்கையையும் இழப்பத்தை  தவிர என்ன காணப்போகிறான்?

காதல் என்பது இருபக்கமும் மனதளவில் உண்டாக்கக்கூடியது.ஒருபக்கம் மட்டும் வந்தால் அதற்கு காதல் என்று பெயரிட முடியாது.சுவாதியை விட்டால் உலகில் வேறு பெண்கிடைப்பது அவ்வளவு கடினமா?
உண்மையில் அவரை அவன் காதலித்திருந்தால் அக்காதல் தோல்வியடைந்தால்அவர் நினைவால்  மனம்வருந்தி அழைவானே தவிர சிதைக்க எண்ண  மாட்டான்.

இனி சுவாதி கொலைக்கு காரணத்தை கண்டு பிடிக்க வேண்டியது காவல் துறையின் பணி.அக்கொலை பற்றி உங்களுக்கு உருப்படியான தகவல்கள் தெரிந்தால் காவல்துறையிடம் சொல்லுங்கள்.இல்லாவிட்டால் வேறு பணிகளைப்பாருங்கள்.
உங்கள் கற்பனைகளை கட்டவிழ்த்து உண்மைபோல்  காட்டாதீர்கள்.

நாலுபேர் நாலு விதமாக பேசுவைத்து என்பது இயற்கை மனித குணம்.
ஆனால்  அதை முகநூலில் இடுகையாக இடாதீர்கள்.
அதை லட்சக்கணக்கில் பார்க்கிறார்கள் .
இதை சுவாதி கொலைக்காக மட்டும் சொல்ல வில்லை .

சாதியை சொல்லி மோதிக்கொள்கிறவர்கள் தான் முக்கியமாக கண்டு கொள்ள வேண்டும்.
சாதியினால் தமிழ்  நாட்டில் உள்ள அனைவருமே பயன் பெற்றதில்லை.

அதை வைத்து பிழைப்பு அரசியல் நடத்துகிறவர்களைத்தவிர.

அதனால்தான் தமிழ் நாட்டில் சாதி மோதல்கள் மின்னல் நேரத்துக்கே வந்து இடித்து செல்கிறது.

 அதை விட அவலம் நாம் தமிழர் கடசியினர் என்று சொல்லிக்கொள்ளும் சிலரின் இடுகைகள்.

அவர்கள் இடுகையை அவர் சைமன் அனுதாபி என்று தெரியாமல் போய் ஏதாவது பதில் கொடுத்து விட்டால் அடுத்து முகம் சுழிக்க வைக்கும் வசவு வார்த்தைகள்.வந்தேறி பட்டங்கள் நமக்கு கிடைக்கும்.

இன்று வேடிக்கை அல்லது சுவாரசியத்துக்காக நீங்கள் இடும் இடுகையை மற்றவர்கள் எதிர்காலத்தில் நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுக்காக இட்டு வேடிக்கை காட்டும் அளவுக்கு வந்து விடலாம்.

சமுக வலைத்தளங்கள் கூர்மையான ஆயுதம் எதிரியை மட்டும் அல்ல நம் கையையும் காயப்படுத்தி விடும்.
=======================================================================================
இன்று,
ஜூன்-27.

உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)

உ லகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)


கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)


சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)

========================================================================================ஞாயிறு, 26 ஜூன், 2016

முதலில் கவனிபோதை ஒழிப்புத்தினம் இன்று.

போதை என்ற இரண்டு எழுத்தால் இன்று உலகமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. 
சொல்லப் போனால் தமிழ்  நாட்டில் இந்த போதை வியாபாரத்தால்தான் அரசாங்கமே தள்ளாடாமல் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கைதான் எதிர்காலம் பற்றிய பயத்துடன் போதை ஏற்றாமலேயே  தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

அரசு தரும் போதையை தவிர மேலும் அதிகப்  போதைக்கென சிலர் சட்ட விரோதமான போதை பொருட்களைத் தேடி அலைவது இங்கு மட்டுமல்ல உலகமெங்கும் நடக்கத்தான் செய்கிறது.
உலகமெங்கும்  சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வியாபாரமும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் பயன் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

'
இந்தாண்டு மையக்கருத்தாக்க வைக்கப்பட்டுள்ளது " முதலில் கவனி'  . 

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது முதலில் கவனம் செலுத்தி அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு உதவ வேண்டும் என்பது இதன் நோக்கம்.
 போதை என்றால் சிலர்  மது,பான்பராக் ,கஞ்சா  மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி, உலகம் முழுவதும் மற்ற போதை பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது. 
இதன் வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, மது, ஊக்க மருந்து, ஒயிட்னர் உள்ளிட்ட போதைப்பொருட்கள்தான் பள்ளிசிறுவர்களில் ஆரம்பித்து இளைஞர்களின் வாழ்க்கை வரை  சீரழிக்கிறது .

ஆனால் போதை உலக விவகாரங்கள் சற்று அதிக பயத்தை தருகிறது.அந்த அளவு அது உலகை இறுக்கி பிடித்து வைத்துள்ளது.

உலகமே அந்த பிடியால் தள்ளாடத்தான் செய்கிறது.

:உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தை இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம்தான் பிடித்துள்ளது. 
ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது .
 இதை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் தங்கள் கைவசம் உள்ள சட்டங்கள் மூலம்  முயற்சிகள் எடுக்கின்றன. 

இந்திய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985ன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ல் தொடங்கப்பட்டது. 
இது மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. 
இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 வருட சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.

ஆனால் இதனால் ஒன்றும் போதை பொருட்கள் கடத்தல் குறையவில்லை.போதை வியாபாரம்  ஆண்டுக்கு,ஆண்டு இது அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. 
காரணமாக தமிழ் நாடு அரசு இன்று தேருக்கு இரண்டு கடைகளை டாஸ்மாக் மூலம் திறந்து சாதாரணமானவர்களுக்கும் போதை பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற பள்ளிகள்,கோயில்கள் அருகில் கூட மதுக்கடைகள் மக்களின் எதிப்பையும் மீறி திறந்துள்ளது.
கோயில் இருக்கிறதோ,பள்ளிக் குடம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடை இல்லாத இடம் இல்லை தமிழ் நாட்டில்.இதில் ஆண்டுதோறும் விற்பனையை கூட்டும் குறியீடு கட்டாயம் வேறு.

பள்ளிசிறுவர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் முதலில் அரசு தரும் மதுவில் தங்கள் வாழ்வை ஆரம்பித்து அடுத்து அதை விட உச்ச போதையை தரும் இனங்களை தேட ஆரம்பித்து விடுகின்றனர்.

அதனால் அபின்,மர்ஜூனா ,எலெஸ்டி இன்னும் வாயில் நுழையா பெயர் போதை சாமான்கள் எல்லாம் நாட்டில் நுழைய ஆரம்பித்து விடுகின்றன.

 கணினி துறையில் மட்டுமல்ல இங்கேயும் புதிய,புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி போதைப்பொருட்கள்  கடத்தல் நடக்கிறது. 

'போதை' சமூகத்தை அழிக்கும் ஒரு 'அரக்கன்'. போதைப்பொருளால்  அதை உபயோகிப்பவர் மட்டும் பாதிக்கப் படுவதோடு நின்று விடுவதில்லை. அவரது குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. 

மேலும் இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் மூலக் காரணமாகவும் அமைந்து விடுகிறது.. உலகில் பலர் அடிமையாகவே மாறிவிட்டனர். 

அப்போதைய பெற எந்த அளவுக்கும்,தரம் தாழ்ந்து போகவும்,சமுக விரோத செயல்களில் இறங்கவும் தயங்காநிலைக்கு சென்று விட்டனர்.

தமிழ் நாட்டில் நடக்கும் பைக் திருட்டு ,செயின் பறிப்பு செய்யும் இளைஞர்களில் பலர் அதை போதைக்காவும்,ஜாலியாக இருக்கவுமே தங்கள் செய்ததாக வாக்குமுக்குலம் கொடுத்துள்ளனர்.
உலகம் முழுக்க இதே கதைதான்.

போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதைவிட சட்டவிரோதமாக கடத்தி கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்படுவதாலும் நாடுகளின் பொருளாதாரப் பாதிப்பும்  ஏற்படுகிறது.
இதை தமிழ் நாடு அரசு கேள்விப்பட்டால் இவற்றையும் அரசுடைமையாக்கி  டாஸ்மாக் மூலம் விற்பனை செய்து அரசுக்கு பணம் திரட்டும் வேளையில் இறங்கி விடக் கூ டாது என்பதுதான் இப்போதைய கவலை.

ஆக போதை பழக்கம் உடல்நலம்,பொருளாதாரம் சமூகம் ஆகியவற்றை கெடுப்பதோடு நாட்டையும் சீரழிக்கிறது.
 =========================================================================================
இன்று,
ஜூன்-26.


 • உலக  போதைப் பொருள் ஒழிப்பு தினம்.

 • ருமேனியா கொடி நாள்

 • மடகாஸ்கர் விடுதலை தினம்

 • உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் திறக்கப்பட்டது(1976)
=========================================================================================