மூட்டுவலியும் -கம்பும்



இன்றைக்கு, 40 வயதை கடந்த, 80 சதவீதம் பேருக்கு மூட்டுவலி உள்ளது. 

அதற்கு உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாததே காரணமாகும். அப்படியே வேலை செய்தாலும், பெரும்பாலானவர்கள் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்கின்றனர். 

இதனால், உடல் எடை அதிகரித்து மூட்டுவலிக்கு வழி வகுக்கிறது. 

பாஸ்ட்புட் போன்ற நவீன உணவு பழக்கத்தில் ஆர்வம் காட்டுவதால், உணவை கட்டுப்படுத்த முடியவில்லை. 

மூட்டுவலிக்கு மருந்து, மத்திரைகள் தற்காலிகமான தீர்வை தருகிறதே தவிர, நிரந்தர நிவாரணத்தை தருவதில்லை. 

மூட்டுவலியை பொறுத்தவரை, இயற்கை வழியான மருந்து மற்றும் உணவு முறைகள் வாயிலாக நல்ல பலன் கிடைக்கும். 


அவற்றை குறித்து பார்க்கலாம்:
குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து, கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா, 10 கிராம் அளவு எடுத்து, அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் குறையும். வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். 


இதனை தினமும், 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும். 
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து சூடாக்கி, மூட்டுவலியுள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். நொச்சி இலைச் சாற்றை மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும். 


கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால், வலி குறையும். 
வில்வ மர இளந்தளிரை வதக்கி, இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம். 

கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை, சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவலாம். பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும். 

புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தை கழுவி வந்தால், மூட்டுவலி குறையும். 

குப்பைமேனி இலைகளை, நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன், எலுமிச்சை சாறு கலந்து மூட்டின் மேல் பூசினால் வலி குறையும். 


எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்ச்சி, ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி, வெந்நீரில் கழுவினால் வலி தீரும். 


கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து, வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குணமாகும். 
கை, கால் வலிக்கு காலையில் சிறிதளவு தேனும், அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடலாம். தூதுவளை இலையை மை போல் அரைத்து, சிறிதளவு பசும்பாலில் கலந்து, காலையும் மாலையும் சாப்பிட்டால், கை, கால் வலி பறந்து போகும். 


தக்க மருத்துவர் ஆலோசனையுடன், இந்த சிகிச்சைகளை பெறுவது பாதுகாப்பானது.

======================================================================================
 கம்பு
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. 
வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில், மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. 
இது இந்தியா முழுவதும் பயிராகும் செடி வகையாகும். 
வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும், அதன் மருத்துவ குணத்தையும் காண்போம்.
நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில், அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். 
சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல், வேக வைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில், இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது, அதிக உஷ்ணமடையும். 
இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி, காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். 

 மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். 
இ துபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.
 இன்று சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள், கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். வயிற்று புண்களை குணப்படுத்தும், குணம் கம்புக்கு உண்டு. 
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி, மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். 
அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும். 
உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். 
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால், சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம். 
======================================================================================
இன்று,
ஜூன்-28.
  • ரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)
  • மால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
  • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
  • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)
======================================================================================

டுவல் எனர்ஜி எக்ஸ் - ரே அப்சார்ப்சயோமெட்டரி (DXA). 
இது நம் உடலில் உள்ள கொழுப்பை அளக்க உதவும் பரிசோதனைக் காண கருவி.  தனியார் மருத்துவமனைகளில்தான்  உள்ளது.இதன் மூலம் நம் உடலின் கொழுப்பை கணக்கிட்டு அதிகமாயின் குறைத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
 உடல் எடையும்  அதற்கான கொழுப்பு அளவு( சதவீதத்தில்) விபரம்.

தேவையான அளவு - 12 முதல் 13 - 2 முதல் 5.


விளையாட்டு வீரர் - 16 முதல் 20 - 6 முதல் 13.


பிட்னஸ் - 21 முதல் 24 - 14 முதல் 17.


அதிகபட்ச அளவு - 25 முதல் 31 - 18 முதல் 25.


அதிக உடல் பருமன் - 32க்கும் அதிகமாக - 25க்கும் அதிகமாக.கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

==========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?