முதலில் கவனி
போதை ஒழிப்புத்தினம் இன்று.
போதை என்ற இரண்டு எழுத்தால் இன்று உலகமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
சொல்லப் போனால் தமிழ் நாட்டில் இந்த போதை வியாபாரத்தால்தான் அரசாங்கமே தள்ளாடாமல் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கைதான் எதிர்காலம் பற்றிய பயத்துடன் போதை ஏற்றாமலேயே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
அரசு தரும் போதையை தவிர மேலும் அதிகப் போதைக்கென சிலர் சட்ட விரோதமான போதை பொருட்களைத் தேடி அலைவது இங்கு மட்டுமல்ல உலகமெங்கும் நடக்கத்தான் செய்கிறது.
உலகமெங்கும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வியாபாரமும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் பயன் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
'இந்தாண்டு மையக்கருத்தாக்க வைக்கப்பட்டுள்ளது " முதலில் கவனி' .
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது முதலில் கவனம் செலுத்தி அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு உதவ வேண்டும் என்பது இதன் நோக்கம்.
போதை என்றால் சிலர் மது,பான்பராக் ,கஞ்சா மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி, உலகம் முழுவதும் மற்ற போதை பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது.
இதன் வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, மது, ஊக்க மருந்து, ஒயிட்னர் உள்ளிட்ட போதைப்பொருட்கள்தான் பள்ளிசிறுவர்களில் ஆரம்பித்து இளைஞர்களின் வாழ்க்கை வரை சீரழிக்கிறது .
ஆனால் போதை உலக விவகாரங்கள் சற்று அதிக பயத்தை தருகிறது.அந்த அளவு அது உலகை இறுக்கி பிடித்து வைத்துள்ளது.
உலகமே அந்த பிடியால் தள்ளாடத்தான் செய்கிறது.
:உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தை இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம்தான் பிடித்துள்ளது.
ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது .
இதை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் தங்கள் கைவசம் உள்ள சட்டங்கள் மூலம் முயற்சிகள் எடுக்கின்றன.
இந்திய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985ன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ல் தொடங்கப்பட்டது.
இது மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது.
இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 வருட சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.
காரணமாக தமிழ் நாடு அரசு இன்று தேருக்கு இரண்டு கடைகளை டாஸ்மாக் மூலம் திறந்து சாதாரணமானவர்களுக்கும் போதை பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற பள்ளிகள்,கோயில்கள் அருகில் கூட மதுக்கடைகள் மக்களின் எதிப்பையும் மீறி திறந்துள்ளது.
கோயில் இருக்கிறதோ,பள்ளிக் குடம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடை இல்லாத இடம் இல்லை தமிழ் நாட்டில்.இதில் ஆண்டுதோறும் விற்பனையை கூட்டும் குறியீடு கட்டாயம் வேறு.
பள்ளிசிறுவர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் முதலில் அரசு தரும் மதுவில் தங்கள் வாழ்வை ஆரம்பித்து அடுத்து அதை விட உச்ச போதையை தரும் இனங்களை தேட ஆரம்பித்து விடுகின்றனர்.
அதனால் அபின்,மர்ஜூனா ,எலெஸ்டி இன்னும் வாயில் நுழையா பெயர் போதை சாமான்கள் எல்லாம் நாட்டில் நுழைய ஆரம்பித்து விடுகின்றன.
கணினி துறையில் மட்டுமல்ல இங்கேயும் புதிய,புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி போதைப்பொருட்கள் கடத்தல் நடக்கிறது.
'போதை' சமூகத்தை அழிக்கும் ஒரு 'அரக்கன்'. போதைப்பொருளால் அதை உபயோகிப்பவர் மட்டும் பாதிக்கப் படுவதோடு நின்று விடுவதில்லை. அவரது குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது.
மேலும் இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் மூலக் காரணமாகவும் அமைந்து விடுகிறது.. உலகில் பலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.
அப்போதைய பெற எந்த அளவுக்கும்,தரம் தாழ்ந்து போகவும்,சமுக விரோத செயல்களில் இறங்கவும் தயங்காநிலைக்கு சென்று விட்டனர்.
தமிழ் நாட்டில் நடக்கும் பைக் திருட்டு ,செயின் பறிப்பு செய்யும் இளைஞர்களில் பலர் அதை போதைக்காவும்,ஜாலியாக இருக்கவுமே தங்கள் செய்ததாக வாக்குமுக்குலம் கொடுத்துள்ளனர்.
உலகம் முழுக்க இதே கதைதான்.
போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதைவிட சட்டவிரோதமாக கடத்தி கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்படுவதாலும் நாடுகளின் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படுகிறது.
இதை தமிழ் நாடு அரசு கேள்விப்பட்டால் இவற்றையும் அரசுடைமையாக்கி டாஸ்மாக் மூலம் விற்பனை செய்து அரசுக்கு பணம் திரட்டும் வேளையில் இறங்கி விடக் கூ டாது என்பதுதான் இப்போதைய கவலை.
ஆக போதை பழக்கம் உடல்நலம்,பொருளாதாரம் சமூகம் ஆகியவற்றை கெடுப்பதோடு நாட்டையும் சீரழிக்கிறது.
இன்று,
ஜூன்-26.
- உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்.
- ருமேனியா கொடி நாள்
- மடகாஸ்கர் விடுதலை தினம்
- உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் திறக்கப்பட்டது(1976)