இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 29 ஜூன், 2016

அது அந்த காலம்

இன்று தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மீண்டும் முழுசாக விட்டு திரும்புவோமா என்ற ஐயம் உண்டாகியுள்ளது.

காரணம் ஆங்காங்கே நடக்கும் கொலை,கொள்ளை .

ஆனால் அதை தடுக்க வேண்டிய காவல்துறை அதை சட்டை செய்யாமல் இருசக்கர வாகனங்களை இன்சுயூரன் ஸ் இருக்கிறதா ?கெல்மட் இருக்கிறதா என்று சோதனை செய்து காலத்தைக்கழிக்கிறது .
காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவோ இன்னும் ஒரு படி மேலே போய் சட்டசபையில் அமைதி பூங்கா தமிழ் நாடு என்று அறிக்கை வாசித்து   எதிர்க்கட்ச்சிகளின் வாயை அடைத்து விட்டதாக கருதி தனது கடமையை  முடித்துக் கொள்கிறார்.

காலையில் அலுவாக்கத்திற்கு செல்ல பேருந்துக்கு காத்திருக்கும் வேளையில் நம் பக்கத்தில் இருப்பவரை திடீரென வந்து போட்டுத்தள்ளி விட்டு சாவகாசமாக இரு சக்கர வாகனத்தில் போய் விடும் அவலம்தான் இன்று தமிழகத்தில்.

அந்த பக்கத்தில் நிற்பவருக்குப் பதிலாக அடையாளம்  தவறி நம்மையும் போட்டு விடக்  கூடிய  அபாயத்தை  ஒவ்வொருவரும்  தினமும் சந்திக்கவேண்டியதுதான் இன்றைய உண்மை நிலை.
சுவாதிக்குப் பதில் தவறாக  சுகாசினியை வெட்டி விட மாட்டார்கள் என்பதற்கு அரசு உத்திரவாதம் இல்லை.

இந்த கூ லிப்படை,கொள்ளையர்கள்,உணர்சசி வசப்பட்ட கொலைகள் இவைகளை தடுக்க அரசால்,காவல் துறையால் முடியாதா என்ன?

முடியும்.அதற்காகத்தானே காவல் துறையில் உளவுப்பிரிவே அமைக்கப் பட்டது.
ஆனால் ஜெயலலிதா ஆடசியில் உளவுப்பிரிவின் வேலையே திமுக உ ட்டப்பட்ட கடசிகளுக்கு எதிராக  வியூகம் அமைப்பதாக மட்டுமே ஆகி விட்டது.

இதுவரை நடந்த தேர்தல்களில் ஆளுங்கட் சி பலகீணமான இடங்களை காண்பதும் அதில் வெல்ல கடசிக்காரர்களை விட ஓடியாடி வேலை செய்வதுமே முழு நேர பணியாகி விட்டது.

அதிமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை திமுக அமைத்து விட்டாள் கூடாது என்பதற்காக நம் உளவுத்துறை மேற்கொண்ட பணி பிரதமர் மோடியால் கூட பாராட்டப்பட்டது.அதை நம்பித்தான் வாக்கு எண்ணிக்கை பாதிக்கு  முன்னதாக  10.30க்கே ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

இன்று காணாமல் போன அந்த தமிழ் நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு முந்தைய நிலையை பற்றி 
முகநூலில் வந்த ஒரு இடுகை இது. நமக்கு ஈக்கப் பெரும் மூசசை தான் தருகிறது.


"சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை நகர கால்துறையில் ஐ.எஸ். டிசியாக இருதயதாஸ் பணியில் இருந்தார். 
குற்றச்செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளாக இருப்பினும், ரவுடி, கோடி பட்டியலில் இருப்வர்கள், நக்சலைட், இந்து, முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் வாதிகள் என அனைத்து தரப்பினர் பற்றிய தகவல்களை கேட்டால் அடுத்த 5வது நிமிடத்தில், சம்பந்தப்பட்ட நபரின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ளமுடியும். 

அப்போது உளவுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் யார் என்பது காவல் துறையினருக்கும். உளவு துறையினரிடம் தொடர்பில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். 
ஒரு ஏரியாவை கவனிக்கும் உளவு துறை காவலராக இருந்தாலும், தகவல்களை மிகவும் துள்ளியமாக, விரல் நுணியில் வைத்திருப்பார்கள்.
இன்றைய நிலை அப்படியில்லை தலைகீழாக உள்ளது. 

உளவுத்துறையில் பணியாற்றும் பலரும் தங்களை வெளிப்படையாக நாங்கள் உளவுத்துறையில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறுவதை பார்க்க முடிகிறது. பத்திரிகையாளர்கள் பேட்டிக்காக வந்திருக்கிறோம் என்று கூறுவதைப்போல் வெளிப்படையாக கூறிக் கொண்டு திரிகிறார்கள். 
இவர்களில் பெரும்பான்மையினர் பத்திரிகையாளர்களிடம் தகவலை பெறுவதே மிகப்பெரிய பணியாக கருதுகிறார்கள். 
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் அறை, உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் அறை, பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில், பத்திரிகையாளர்கள் கூடும் இடங்களில் பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை ஆக்கிரமித்து, அவர்களின் பணிகளுக்கு இடையூறாக அமர்ந்து கொண்டு, உளவு பணியை மேற்கொள்கிறார்களாம்.

இதோடு நில்லாமல் பத்திரிகையாளர்களுக்காக நடத்தப்படும் சந்திப்புகளில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். இதற்கு பேர் உளவு துறையாம். இவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. கருமம்டா என தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

 காரணம் இந்த உளவுத்துறையினர் வாங்கிக் கொடுக்கும் டீ சிற்றுண்டி, உணவு மற்றும் இத்தியாதி இத்தியாதிகளுக்காக இவர்களுடனே ஐக்கியமாகிப்போன பத்திரிகையாளர்கள் பலர். பத்திரிகையாளர்களாக பணியைப்பற்றி இவர்களுக்கும் இவர்களுக்கான பணியின் தன்மை தெரியவில்லை. உளவுத்துறையில் பணியைபற்றி வரும் அவர்களுக்கும் அவர்களின் கடமைை என்ன என்பது தெரியவில்லை. 

இதனால்தான் இந்த இரண்டு துறையிலும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய நடைமுறையாக உள்ளது.
அண்ணாசாலையில், பாதுகாப்பு நிறைந்த, பாதுகாப்புக்காக 24 மணிநேரமும் காவல்துறையால் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட போவதை கூட முன்கூட்டி இவர்களால் தெரிவிக்கமுடியாமல் போன சம்பவம் நினைவிருக்கலாம். 

இதுபோல் பல நிகழ்வுகள் இருக்கு பட்டியலிட நேரம் இல்லை. உதாரணத்துக்கு ஒன்று போதும்.
பத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்யாமல், தங்களை ஊரறிய அடையாளப்படுத்திக் கொள்ளாமல், இருதய தாஸ் காலத்து உளவுத்துறையைப்போல் இவர்கள் மாறவேண்டும். 

20 ஆண்டுக்கு முன் இப்போது இருப்பதைப்போன்ற நவீன தகவல் தொழில் நுட்பங்கள் அன்று இல்லை. இன்று இருப்பதுபோல் வாட் அப், பேஸ்புக், செல்போன், இமெயில் போன்ற வசதிகள் இல்லை. வாகன வசதிகள் இல்லை. 
இவ்வளவு வசதிகளும் உளவுத்துறையிடம் இப்போது இருந்தும், ஒரு நொடியில் தகவல் பறிமாற்றம் செய்யும் வசதி இருந்தும். குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணம் என்ன என்பதை காவல் துறையினரே தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

அண்ணாசாலையில் அதுவும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்கப்படுவதையே முன்கூட்டி சொல்ல முடியாத உளவுத்துறை, தெருக்கோடியில் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்கள் பற்றிய தகவலை எப்படி உடனடியாக சொல்வார்கள். 
உளவுத்துறை ஐஜி கே.என்.சத்தியமூர்த்தி
அன்றைய உளவுத்துறையினரின் பணிகளையும், இன்றைய உளவுத்துறையினர் பணிகளையும் ஓப்பிட்டால். உண்மை தெரிய வரும்.
காவல்துறையினர் தலைமையும், உளவுத்துறையின் தலைமையும் இப்பிரச்சனையை சற்று கவனத்தில் கொள்ள வேண்டும். உளவுத்துறையினர் பத்திரிகையாளர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

உளவு துறையில் பணியாற்றுபவர்களுக்கு உரிய ஆலோசனையை வழங்க வேண்டும். பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளில் ஈடுபடும்போது அவர்களுக்கு இடையூறாக ஏதோ ஒரு சந்தர்பத்தில் அல்ல பல சந்தர்பங்களில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

இது பல வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளிலும் இடம் பெற்றுள்ளது.

இனி வரும் காலங்களிலாவது பத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்யாமல் தங்கள் கடமைகளை செவ்வனே செய்திட வேண்டும்.

முகநூலில்  ==========================================================================================
இன்று ,
ஜூன்-29.
  • செஷெல் விடுதலை தினம்(1976)
  • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
  • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
  • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)
======================================================================================

அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா. 43 வயதான அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்துக் கொள்ளும் சிஸ்டர் மரியா, தன்னுடைய நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து  ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தார். 


இறக்கும் தருவாயில் அனைவரும் அன்பை பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்று கூறியவாறே சிஸ்டர் மரியா உயிரிழந்தார்.  

முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் உதடுகளில் பல மணிநேரம் சிரிப்பு உறைந்து விட்டது.

=====================================================================================