திவாலாகும் அதிமுக அரசு.

தமிழ் நாடு  அரசு 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் சிக்கி  திணறுவதை, ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தி உள்ளது.
வரி வருவாய் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையால் அமலாகி சம்பளம் உயர்ந்தால், தமிழக அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்படும்.
தமிழக அரசுக்கான வரி வருவாயில், 70 சதவீதம் வணிக வரி மூலமாக கிடைக்கிறது. 2015 - 16ம் நிதியாண்டில், 72 ஆயிரத்து, 68 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 
பிப்., இறுதி வரை, 50 ஆயிரத்து, 100 கோடி ரூபாயே கிடைத்தது. ஒரு மாதத்தில், 22 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் வணிகர்களிடம், 'முன்கூட்டியே வரி கட்டுங்கள் ,அடுத்த மாதங்களில் சரி செய்து கொள்ளலாம்' என, கெஞ்சியும், வசூல் நடத்தியும், வரி வசூலாக, 61 ஆயிரத்து, 709 கோடி தான் கிடைத்தது. 

இது, இலக்கை விட, 10 ஆயிரத்து, 359 கோடி ரூபாய் குறைவு.
வரி வளர்ச்சி, 11.6 சதவீதம் வரை எதிர்பார்த்தாலும், 2.31 சதவீதமே உயர்ந்தது. '2011 - 12ல், 27 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி, படிப்படியாக சரிந்து, 2.31 சதவீதமாக குறைந்து வருவது தமிழக அரசின் நிதி நெருக்கடிக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது'
முந்தைய, நான்கு ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, வரி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை, சட்டசபையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே ஒப்புக் கொண்டார். 

இந்நிலையில், 2015 - 16ல் மட்டும், வணிக வரி மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய்; பத்திரப்பதிவு, வாகன வரி வசூல் வகையிலும், பிற வகையிலும், 1,900 கோடி ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்பட்டு, தற்போது, 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கி உள்ளது.
ரிசர்வ் வங்கி, மாநிலங்களின் நிதி பற்றாக்குறை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழக அரசிற்கு, 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய்க்கு நிதி நெருக்கடி உள்ளது; நிதி நெருக்கடிக்கு ஆளான மாநிலங்களில், தமிழகமே, முதல் இடத்தில் உள்ளது' என, கூறப்பட்டுள்ளது. 

அடுத்த இடத்தில், உத்தரபிரதேசம் - 31 ஆயிரத்து, 560 கோடி ரூபாய்; மஹாராஷ்டிரா - 30 ஆயிரத்து, 730 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி துவங்கும் போது, 2011 - 12ல், தமிழக அரசின் கடன் சுமை, 1.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 

அது படிப்படியாக அதிகரித்து, 2015 - 16ல், 2.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் நிதி ஆண்டு இறுதியில், 2.47 லட்சம் கோடியாக கடன் சுமை கூடும் என, கணக்கிடப்பட்டுள்ளது
இந்த கடன் சுமை என்பது அனுமதிக்கப்பட்ட அளவே என்றாலும், மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் இன்னும் அதிகரிக்கும். 
இது, கடன் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும்; இது, அனுமதி அளவையும்தாண்டலாம்.
வருவாய் வளர்ச்சியில் தொடர் சரிவு, சம்பள உயர்வால் பற்றாக்குறை என, அரசுக்கு நிதி நெருக்கடி இன்னும் அதிகரிக்கும். இதை எப்படி சமாளிக்கப்போகிறது என்பதே, மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 
தமிழக அரசு வரி வருவாயை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தியில் முதலீடுகளை அதிரிக்கச் செய்வதிலும் சிறப்புக்கவனம் செலுத்தினால் மட்டுமே, தமிழகம் ஓரளவு தப்ப முடியும்.
வரி வசூல் குறைந்ததற்கான காரணங்கள் 
* அரசுக்கு அதிக வருவாய் தரும் வணிக வரித்துறையில், 50 சதவீத பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நிலுவை வரி வசூலித்தல்; வரி ஏய்ப்பை தடுப்பதில் அரசு கவனம் செலுத்தவில்லை
* மாநிலத்தில், பெரிய அளவில் வர்த்தகம் மேம்படவில்லை; தொழில் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கம் அளிக்கவில்லை. வரி விதிப்பு நடைமுறைகளில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. தவறான வரி விதிப்பு முறையால், பல நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தன
* ஒற்றைச்சாளர முறையில் தொழில் அனுமதி என்பது, ஏட்டளவில் தான் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் சலுகைகள், தமிழகத்தில் தரப்படவில்லை
* வேளாண் உற்பத்தியிலும் பெரிய அளவில் சிறப்புக்கவனம் செலுத்தப்படவில்லை. மின் தட்டுப்பாடு தற்போது இல்லை என்றாலும், தேவைக்கேற்ப மின் உற்பத்தியில் கவனம் செலுத்தப்படாததும் சிக்கலுக்கு காரணம்
* பத்து ஆண்டுகளில், வரி விலக்கு அளிப்பதில் கவனம் செலுத்திய அரசு, இலவசங்களுக்கு செலவிடும் தொகையை எந்த வகையில் ஈடுகட்டுவது என்றோ, புதிதாக வரி விதிப்புக்களிலோ கவனம் செலுத்தவில்லை
* வரி ஆலோசகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளை, அரசு அழைத்து பேசி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவும் தவறி விட்டது. இதுவே, சிக்கலுக்கு முக்கிய காரணம்.

சரியும் வணிக வரி

ஆண்டு / வருவாய் (ரூ.கோடியில்) / வளர்ச்சி (சதவீதத்தில்)
2010 - 11 / 31,117 / 25.37
2011 - 12 / 39,545 / 27.09
2012 - 13 / 47,885 / 21.09
2013 - 14 / 56,851 / 18.72
2014 - 15 / 60,314 / 6.26
2015 - 16 / 61,709 / 2.31
தமிழ் நாடு அரசு  கடன் சுமை
ஆண்டு / கடன் (ரூ.லட்சம் கோடி)
2011- 12 / 1.03
2012-13 / 1.20
2013-14 / 1.40
2014-15 / 1.78
2015 - 16 / 2.11

இது நடப்பு நிதியாண்டு முடிவில், 2.47 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தின் நிதி பற்றாக்குறை, 2015 - 16ல், 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் கடன் அளவை குறைக்க வேண்டும் என்றால், நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும். இதில், மஹாராஷ்டிரா வெற்றி கண்டுள்ளது; 
தமிழ் நாடு அரசு நிர்வாகத் திறன் இல்லாததால்  தோல்வி அடைந்துள்ளது.
தமிழகத்தில் மொத்த கடன் சுமை கூட இது வழி செய்யும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையும் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால், கடன் மேலும் உயரும். நிதி நிர்வாகத்தை மேம்படுத்தாவிட்டால், சில ஆண்டுகளில், மீள முடியாத கடன் சுமையில் தமிழகம் சிக்குவது உறுதி
ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் முதலீட்டாளர்களை நேரில் சென்று அழைத்து, தங்கள் பக்கம் முதலீடுகளை இழுத்துக் கொள்கின்றன. 
அந்ததொழில் வளர்சசி பற்றிய சிந்தனையே  தமிழக ஆட்ச்சியாளர்களிடம்  இல்லை. மாநில வளர்ச்சிக்கு துறைமுகங்கள் முக்கியம்.
மூடுவிழாவை நோக்கிச் செல்லும் சென்னை துறைமுகத்தை காப்பாற்றவோ, அதை மேம்படுத்தும் வகையிலான துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டப்பணிகளை தொடரவோ தமிழ் நாடு அதிமுக அரசு அக்கறை காட்டாததால், அண்டை மாநில துறைமுகங்கள் வளர்ச்சி பெறுகின்றன. 
நமக்கு நாமே தேடிக்கொண்ட வினை இது. அவசர கதியில் செயல்பட்டு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற, அரசு முயற்சிக்க வேண்டும்.

========================================================================================
இன்று,
ஜுன் -30.
  • காங்கோ விடுதலை தினம்(1960)

  • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)

  • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)
========================================================================================
நாம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ போன்ற Symbol வருவதை பார்த்திருக்கிறோம். 
இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1) '2G' - இது 2G நெட்வெர்க் இண்டர்நெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். 
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.


2) 'E' - இதுவும் 2G (2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இண்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. 
இதன் மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89 மணி நேரமும் ஆகும். இந்த 'E' பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

3) '3G' - இது 3G மொபைல் இண்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. 
இது இயங்க அவசியம் 3G இயங்குதள வசதியுடைய மொபைல் (Smart Phone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6 மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18 மணி நேரத்தில் அனுப்பவும் இயலும்.
4) Symbol 'H' - இது 3G மொபைல் இண்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. 
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாம் 1GB dataவை 25 நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.

5) 'H+' - இதுவும் 3G மொபைல் இண்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5 முதல் 20 நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15 முதல் 39 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.

6) '4G' - இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். 
இதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. 
இதன் மூலம் நாம் 1GB dataவை 3 நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5 நிமிடம் மட்டுமே போதும்.
=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?