7000 க(ள)னவு
காணாமல் போனதா 7000 நெல் மூட்டைகள்,? தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியர் சாந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் வரவழைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகா...