இருவேறு வெறியர்கள்

 வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர்.

 இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே பிற்பட்டோர் பட்டியலில. அவர்கள் இருக்கின்றனர்.அரசு சலுகைகள் அனைத்தையும் பெறுகின்றனர்.

60%அதிகமான பெரும்பான்மெயினராக உள்ள மைத்தேயி சமூகத்தினர்தான். அரசப்பணிகளில் அதிகாரிகளாகவும் உள்ளனர்.

மேலும் முதல்வர் அச்சமூகத்தைச்சேர்ந்தவராக உள்ளார்.பெரும்பான்மை அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்களாகவும்அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

பழங்குடியினர் பலரும் கிறித்தவர்கள்.

மைத்தேயிகள் இந்துக்கள்,பாஜக ஆதரவாளர்கள்.

இதனால்தான் பழங்குடி யினர் பட்டியலில் அவர்களைச் சேர்க்க முதலமைச சரும்ஒன்றிய அரசும் ஆதரவளித்து வருகின்றன.நூதிமன்றமுமும் ஆரதரவாக தீர்ப்பளிக்கிறது.

மைத்தேயி இனத்தவர்கள் சமவெளிகளில்,நகரங்களில் வசிக்கிறார்கள்.

காடு,மலைப் பகுதிகளில் பழங்குடியினர் வசிக்கின்றனர்.

அப்பகுதிகளில் நிலம் வாங்க பழங்குடியினருக்குமட்டுமே அனுமதி உண்டு.மைத்தேயிகளுக்கு இடம் வாங்க இயலாது.

ஆனால் மலைப்பகுதிகளில் உள்ள மதிப்பு மிகு மரங்களை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதால் காடுகளில் இடம் வாங்க,மரங்களை அழித்துப் பணம் சம்பாதிக்க தாங்களும் பழங்குடியினராக மைத்தேயி இனத்தவர் ஆசைப்படுகிறார்கள்.

அதை நிறைவேற்ற பாஜக முயல்கிறது.அதனால் எத்தனை உயிர்கள் பலியானாலும் கவலை இல்லை என கருதுகிறது.

அதை தடுக்க பழங்குடியினர் நடத்தியப் பேரணியில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில், அங்கு குறிப்பிட்ட இரு சமூக மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை மாநிலம் முழுக்க பரவிய நிலையில், இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.

மோரே நகரில்  வைத்து குக்கி குழுவினரை இலக்குவைத்து மைத்தேயி இனத்தவர் தாக்கிய நிலையில் தாக்குதலுக்கு அஞ்சி குக்கி பழங்குடி மக்கள் தங்கள் இடத்தில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். 

இந்த வன்முறையியில் 60 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வன்முறை குறித்த பேசிய அந்த மாநில பாஜக முதல்வர் பிரேன் சிங், " வன்முறைக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், 40-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் குக்கி போராளிக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள்" என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூக மக்கள் சிறுபான்மை சமூகமான குக்கி பழங்குடி மக்கள் மீது அரசின் ஆதரவோடு தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 

தற்போது முதல்வரே கொல்லப்பட்ட, கைது செய்யப்பட்டவர்களின் பலர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த குக்கி பழங்குடி மக்கள் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

------------------------------------------------

மூதாட்டியை கொன்று தின்றவன்.

ராஜஸ்தான் மாநிலம் பளி என்ற பகுதியை அடுத்துள்ளது சாரதானா என்ற கிராமம். இங்கு சாந்தி தேவி என்ற 65 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். 

அந்த பகுதியில் கால்நடைகளை பராமரித்து விவசாயம் செய்து வரும் இவர், அக்கம்பக்கத்தில் இருக்கும் வயல்வெளிகளில் புற்கள் பறிக்க செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வயல் பகுதிக்கு சென்றுள்ளார்..

அப்போது அங்கே வந்த இளைஞர் ஒருவர் அந்த மூதாட்டியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரை அருகில் இருந்த கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். 

பின்னர் மூதாட்டியின் உடலை அந்த இளைஞர் அறுத்து சாப்பிட தொடங்கியுள்ளார். 

இளைஞர் சாப்பிட்டு கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது இதனை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டு தலைதெறிக்க ஓடினார்.

அந்த பெண் ஓடுவதை கண்ட அந்த பகுதி மக்கள் என்ன என்று விசாரிக்கையில், நடந்தவற்றை கூறியுள்ளார்.

 இதனை கேட்டு அதிர்ந்த ஊர் மக்கள் உடனே அங்கு வந்தனர். ஊர் மக்கள் வருவதை கண்ட அந்த இளைஞர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். இருப்பினும் அந்த இளைஞரை துரத்தி பிடித்த ஊர் மக்கள் கட்டிப்போட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு இளைஞரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அந்த இளைஞர் மும்பை சேர்ந்த சுரேந்திர தாகூர் (24) என்பது தெரியவந்தது. 

மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தெருநாய் கடித்ததால் நோய் தொற்று ஏற்பட்டு அதற்கான உரிய சிகிச்சை எடுக்கப்படமால் மனநலம் பாதிக்கப்பட்டு இவ்வாறு நடந்துகொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞருக்கு சிகிச்சையா நிறைவடைந்ததும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். 

-------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?