வழிகாட்டி கோள்

 வழிகாட்டி சேவைக்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு கடிகாரம் கொண்ட NVS-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்-12 ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். 

அப்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துக்கும்-சென்னை அருகே திருப்போரூரில் செயல்படும் ஜப்பானைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ்நிறுவனத்துக்கும் இடையே, 83 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அதன் பின்னர் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பி பிரிஜ் பூஷணை கைது செய்து வீரர்களை விடுதலை செய்ய வேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.

விஷச் சாராய விவகாரம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறவுள்ளது.


பாஜக வின் சட்டம்-ஒழுங்கு
மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டுமென நேற்று டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் நடுரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பாஜக எம்பியாக இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தார். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் இவர் மீது புகார் கலை வைத்தனர். 

இது குறித்து மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் செய்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது அதன் காரணமாகப் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. 

விசாரணை மேற்கொண்ட விசாரணைக் குழு மத்திய அரசு விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த மாதம் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் செய்யத் தொடங்கினர்.

இதனை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் போக்சோ உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் பிரிஜ் பூஷன் சரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, ஆனால் கைது செய்யப்படவில்லை.

 இதனால் போராட்டம் தொடர்ந்து வெடிக்கத் தொடங்கியது. இந்த போராட்டத்திற்குப் பல தலைவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. 

அப்போது ஞாயம் கேட்டு மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் செய்ய முடிவு செய்தனர். நிலையில் நேற்று காலை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புதிய நாடாளுமன்ற நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர்.

அப்போது அனைவரையும் வழிமறித்து காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தியாவுக்காக ஒலிம்பிக் உள்படப் பல போட்டிகளில் பதக்கம் வென்ற சங்கீதா போகத், வினேஷ் போகத், பஜ்ரங்கு புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் தரதரவென சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் குறித்து மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து, உடனே பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என டெல்லி காவல் ஆணையருக்குக் கடிதம் எழுதியது.

டெல்லியில் நேற்று போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த மற்றும் அது தொடர்புடைய அனைவரின் மீதும் காவல்துறையினர், 

இந்தியத் தண்டனை சட்டமான ஐபிசி 147 (கலவரத்துக்கான தண்டனை) ஐபிசி 149 (சட்டவிரோதமாக கூடுதல்), ஐபிசி 186 (அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல்), ஐபிசி 188 (அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறி செயல்படுதல்), ஐபிசி 332 (தானாக முன்வந்து காயங்களை ஏற்படுத்துதல்), ஐபிசி 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தாக்குதல்) மற்றும் பிடிபிபி எனும் பொது சொத்துகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்புக்கும் வகையிலான சட்டத்தின் 3வது பிரிவு (பொதுச்சொத்துகளை சேதப்படுத்தும் வகையில் தவறான செயலில் ஈடுபடுதல்) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குற்றம் செய்த ,கைது செய்யப்பட வேண்டிய பாஜக எம்.பி.யை கைது செய்ய வக்கற்ற டெல்லி அமித் சா கைத்தடியான காவல்துறை மாதிக்கப்பட்டவர்களையே மீண்டும் மீண்டும் கைது செய்கிறது.

------------------------------------------------------

முன்னாள் பிரதமர் சரண் சிங் நினைவு நாள் இன்று (மே 29).

இந்தியாவின் 7வது பிரதமராக பதவி வகித்தவர் சரண் சிங். 

சிலநாட்கள் மட்டுமே பிரதமராக இருந்துள்ளார்.

இவர், தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியதே இல்லை.

பாரதிய லோக் தள் கட்சியின் தலைவரான சரண்சிங், ஒரு முக்கிய அரசியல் நெருக்கடிக் காலத்தில் ஜனதா கட்சி என்ற பெயரில் கூட்டணியில் இணைந்து மாபெரும் வெற்றி பெற்றார்.

. இந்திய தேசிய காங்கிரஸ் அரசுக்கான தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்ட நாள்தான் நாடளுமன்றதை முதல் முறையாக சந்திக்கும் நாளாக சரண்சிங்குக்கு அமைந்ததது. 

மற்ற ஆதரவு ஏதுமில்லாத நிலையில், சரண் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 

1979ம் ஆண்டு ஜூலை 28 முதல் 1980 ஜனவரி 14 வரை இவர் பிரதமராக பதவி வகித்தார்.

உத்தர பிரதேசம், லக்னோவில் உள்ள அமௌசி விமான நிலையம், அவரது மரணத்துக்குப் பின் சவுதரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் என சூட்டப்பட்டது. 

சரண் சிங்குக்கு5 குழந்தைகள்  . .

அவரது மகன் அஜித் சிங் தற்போதுஅவருடைய பாரதிய லோக் தள் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார்.

சரண் சிங் 29 மே 1987 அன்று மரணமடைந்தார்

----------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?