சங்(கி)கம் வளர்த்த தமிழ்?

 மோடியுடைய கரங்களில் நல்லாட்சிக்கு உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்தவேண்டுமோ? என ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பி உள்ளார். 

திருவள்ளுவர் அரசனுக்குத் தேவையான நான்கு குணங்களில் ஒன்றாகச் 'செங்கோலை' வைத்தார் - குறள் 390(செங்கோல்: செங்கோன்மை)

மற்று மூன்று குணங்கள்: கொடை, இரக்கம் மற்றும் ஏழை, எளிய மக்களைக் காத்தல்

குறள் 546 இல்அரசனைத் திருவள்ளுவர் எச்சரிக்கிறார்:

'வேல் அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாதெனின்'

(கோடாத கோல்: வளையாத செங்கோல்)

2023 ஆண்டில் தேவையான பாடத்தை அன்றே வள்ளுவர் சொன்னார்.

மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் வெடித்து 3 வாரங்கள் ஓடிவிட்டன. 75 பேர் மடிந்திருக்கிறார்கள்

ஆனால் இந்த நாள் வரை மாண்புமிகு பிரதமர் மணிப்பூர் கலவரங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை

மணிப்பூர் மக்கள் வன்முறையைத் தவிர்த்து அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கவில்லை.நேரில் செல்லவுமில்லை.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. 

அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.

 இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

அவருடைய கரங்களில் உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்தவேண்டுமோ?

----------------------------------------

செங்கல்லை மட்டும் நட்டுவிட்டு AIIMS பேராசிரியர் பதவிகள், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் மாநில அரசுக்கு சொந்தமான நூறு  இடங்களை சீட்டை திருடி அதில் AIIMS வகுப்புகள்.

சொந்த கட்டிடமே இல்லாமல் AIIMSசெங்கல் மட்டுமே உள்ளதற்கு மருத்துவக் கல்லூரி பாடங்கள் நடத்த அனுமதி.மாணவர் சேர்க்கை.

இதையெல்லாம் வெட்கமே இல்லாமல் செய்யும் தேசிய மருத்துவ ஆணையம்,..

விஜய பாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதுமூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கான சான்றிதழ் சமர்ப்பிப்பில், விதிமீறல் செய்து விட்டாராம்.

தருமபுரி,திருச்சி,சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி இடங்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.

1830ல் தொடங்கி நடந்துவரும் ஸ்டான்லி கல்லூரிக்கு CCTV live feeding இல்லாத்தால் உரிமத்தையே ரத்து செய்கிறார்கள்.

மொத்தமாக 500 இடங்களை காலி செய்துள்ளது... 500 குடும்பங்களின் எதிர்காலத்தை சிதைத்து விட்டு.திரிகிற செத்துப்போன மொழி சமஸ்கிருத்த்திற்கு பல்லாயிரம்கோடிகளை ஒதுக்கி வளர்க்கிற,இந்தியை பலவழிகளிலும் திணிக்கிற பா.ஜ.க,சங்கிகளுக்கு பல்லக்குத் தூக்குகிற மடத் தலைவர்களான ஆதினம் என்கிற பண்டாரங்கள் யாரும் மோடியை எதிர்த்து பேசக்கூடாது என்கின்றன.

ஓசியில் வயிறு வளர்க்கிற இவர்களுக்கு சமையல் எரிவாயு விலை,மெட்ரோல் மற்றும் பலபொருட்கள் விஉயர்வு பாமரமக்களைப் போல் பாதிப்பை உருவாக்குதில்லை.

தமிழ் மக்களுக்கு இன்றைய நிலையில்ஒரு பைசா கூட உதவாத ஆதீனங்கள் அறிவுரை கூற மட்டும் வருவது ஏன்.அதற்பான தகுதி இந்த மதுரை பண்டாரத்துக்கு,சங்கிக்கு ஏது? 

தமிழ் பாரம்பரியத்தை இந்தப் பண்டாரம்,பரதேசிகள் காப்பாத்தி  என்ன புடுங்க போரீங்க...!??

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?