தேவை சட்ட நடவடிக்கை.

 இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தனது மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி ஆலையை ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம் அமைக்கிறது.

மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோல் கதை காலத்தில்  டெல்லியிலேயே இல்லை.இங்கிலாந்து சென்றிருந்தார். புனைகதைகள் வரலாறு ஆகாது” -என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செங்கோல் குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்தார்.

கோவையில் கத்தியை வைத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிஎம்சி காலணி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் போன்ற விடியோக்களை பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு சந்தித்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக குடியரசு தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் துரைசாமி விலகியதற்கான காரணங்கள் குறித்து எனக்கு தெரியாது. திமுகவுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை. அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல.

மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில் அக்கட்சியின் நிறுவனர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோரை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் தொழிற் சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15-ம் தேதி சென்னை வருகிறார் . கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் அமிர்தசரஸில் இருந்து கத்ரா சென்ற பேருந்து பள்ளத்தில் கழிந்து விபத்துள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.


-----------------------------------------------------------------

தங்க பதக்கத்தை ஆற்றில் வீசிய முகம்மது அலி

பிரபல குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி.அமெரிக்காவைச் சேர்ந்ந கருப்பு இனத்தவர்.நீக்ரோ.



 ஒருமுறை அமெரிக்க இனவெறியை எதிர்த்து தான் வென்ற தங்கப் பதக்கத்தை ஒகியோ ஆற்றில் வீசினார்.

இந்த துணிச்சல் நிகழ்வு வரலாற்றில் இன்றளவும் நினைவுக் கூறப்படுகிறது.

அதன் போல எதிர்ப்பைக் காட்டத்தான் நம் வீரர்கள் முயன்றுள்ளார்கள்

--------------------------------------------------------------------

தேவை நேர்மையான ஒரு நடவடிக்கை.

மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள மல்யுத்த வீரர்கள், அதிகார வர்க்கத்தால் பார்க்கப்படாதவர்கள் மற்றும் கேட்கப்படாதவர்கள் ஆவார்கள்.

மேலும், குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரிகோம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

மைனர் பெண் சம்பந்தப்பட்ட வழக்கில் டெல்லி போலீசார் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றனர்.

 கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் சிங்கின் பாலியல் முன்னேற்றங்களுக்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களைக் கேட்டனர்.

நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள், வெற்றி மேடையில் நின்றவர்கள், கழுத்தில் பதக்கங்கள், தேசிய கீதத்தால் ஸ்டேடியத்தை நிரப்பியவர்கள் இன்று நீதி கேட்கிறார்கள்.

டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்களது போராட்டம் ஒருமாத காலத்தை தாண்டியுள்ளது. 

இந்த நிலையில், போகாட் தனது அனுபவங்களை பத்திரிகையில் பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது தேசத்தின் மகள்கள் கல்லடி படுவது நியாயமா எனக் கேள்வியெழுப்பினார்.

இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷண் சிங் மீது பாஜக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஏன் ஒரு கண்டிப்பு கூட வெளிப்பட்டதாக தெரியவில்லை.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானியும் எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

 இதற்கு முன் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த எம்.ஜே அக்பர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.அவர் முஸ்லீம்.

ஆனால் சிங் விவகாரத்தில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. நாட்டை பிரகடனப்படுத்திய வீராங்களைகள் வீதியில் போராடுகின்றனர். 

ஆனால் சிங் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரத்தில் அவர்களுக்கு தேவை நேர்மையான ஒரு சட்ட நடவடிக்கை.

-----------------------------------------------------

அந்தவிமான விபத்து நேரிட்டு இன்றுடன் அரை நூற்றாண்டு ஆகிறது! 

பாலதண்டாயுதம்
1973, மே  மாதம் 31ஆம் நாள்.

சென்னையிலிருந்து புறப்பட்டு புது தில்லியில் தரையிறங்குவதற்கு சற்றுமுன் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் மத்திய உருக்குத் துறை அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் கே. பாலதண்டாயுதம் உள்பட 48 பேர் உயிரிழந்தனர்.


சென்னையிலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்ட அந்த இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 ரக விமானத்தில் 58 பயணிகளும் 7 பணியாளர்களும் இருந்தனர்.


நாள்தோறும் திருவனந்தபுரம் சென்று திரும்பிய பின் சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டுச் செல்லும் விமானம் இது. இரவு 9.52 மணிக்கு தில்லி பாலம் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம். ஆனால், கடைசி நேரத்தில் விமான நிலையத்துடன் தொடர்பு அற்றுப் போய்விட்டது.

 சுமார் அரை மணி நேரம் கழித்துதான் விமானம் விழுந்து நொறுங்கிய தகவல் கிடைத்தது.


மோகன்குமாரமங்கலம்
இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.யான கே. பாலதண்டாயுதம்,ஒன்றிய அமைச்சர் மோகன் குமாரமங்கலம்(இவரது மகன்தான் ஒன்றிய அமைச்சராக இருந்து மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம்).

,  பஞ்சாப் முன்னாள் முதல்வர் குர்நாம் சிங், ஏஐடியுசி பொதுச்செயலர் சதீஷ் லும்பா  ஆகியோரும் இறந்தனர்.

மத்திய பாசனத் துறை துணை அமைச்சர் பாலகோவிந்த வர்மா, சிவகாசி தொகுதி எம்.பி.யான வி. ஜெயலட்சுமி, பானுசிங் பரூவா (எம்.பி.) ஆகியோர் தப்பிப் பிழைத்தவர்களில் சிலர்.

இந்த விமான விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. 48 பேரில் உடனடியாக 15 பேரை மட்டும்தான் அடையாளம் காண முடிந்தது.

-------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?