வெள்ளி, 30 செப்டம்பர், 2011

ஊத்தி மூடு,,,,,

                                                   
  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தால் எழுந்த பிரச்னைக்கு, காங்கிரஸ் மேலிடம் நேற்று தீர்வு கண்டது. "நிதி அமைச்சக கடிதத்தில் இடம் பெற்றுள்ள விஷயங்கள், தன்னுடைய கருத்தை பிரதிபலிக்கவில்லை' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததால், பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டை, அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், தடுத்து நிறுத்தியிருக்கலாம்' என்ற குறிப்பை, கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பியதாக தகவல் வெளியானது. இது, உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதோடு, மத்திய அமைச்சர்களுக்குள் மோதல் உள்ளது போன்றும் செய்திகள் வெளியாகின. அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த நிதி அமைச்சர் பிரணாப்பும், பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்தக் குறிப்பு விவகாரம் தொடர்பாக, நியூயார்க்கில் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்திய இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில், காங்கிரஸ் தலைவர் சோனியா தீவிர ஆர்வம் காட்டினார். இதனால், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் இல்லத்தில், நேற்று மிக முக்கியமான ஆலோசனைகள் நடந்தன. டில்லி அரசியல் வட்டாரங்கள் அனைத்துமே, ஒரே இடத்தில் குவிந்ததுபோல இருந்த அந்த ஆலோசனைகளின் விளைவுகள் என்ன என்பது குறித்து அறிய, அனைத்துத் தரப்புமே ஆவலாய் இருந்தன. முற்பகலில் மட்டும், இரண்டு முக்கிய கூட்டங்கள் நடந்தன. காலை 10 மணிக்கு துவங்கி 12.30 மணி வரை, ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், சோனியாவுக்கு மிகவும் நம்பகமான அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், அகமது படேலும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவருடன், தீவிர ஆலோசனையில் சோனியா ஈடுபட்டார். அப்போது, நிதி அமைச்சகக் குறிப்பு வெளியானது உட்பட பல விஷயங்கள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் முடிந்ததும், 12.30 மணியளவில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கார், சோனியாவின் இல்லத்திற்குள் நுழைந்தது. ஏற்கனவே இருந்த அந்தோணி, அகமது படேல் ஆகியோருடன், பிரணாப்பும் இணைந்து கொள்ள, மீண்டும் இரண்டாம் கட்ட ஆலோசனை நடந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலையில், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர், அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர். 

சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த சல்மான் குர்ஷித், "எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பிரச்னையும் இல்லை' எனக் கூறினார். இதன்பின், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும், மாலையில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டுக்குச் சென்று, பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பது குறித்து, அவருடன் ஆலோசித்தனர். அப்போது, பிரதமர் அலுவலகத்துக்கு, நிதி அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்ட குறிப்பு குறித்து, இருவரும் தங்களது கருத்துக்களை, பிரதமரிடம் தெரிவித்தனர். மாலை 6 மணிக்கு, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றும், அப்போது பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றும் தகவல் பரவியது. 
ஆனால், அதற்கு முன்னதாக, தன் அலுவலகத்தில் இருந்து காரில் கிளம்பிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்துக்குச் சென்றார். இதையடுத்து, இருவரும் கூட்டாகச் சேர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரும் உடனிருந்தனர். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த சிறிய அறிக்கையை, பிரணாப் முகர்ஜி வாசித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, கடந்த ஆண்டு ஜனவரியில் மீடியாக்களில் பல கதைகள் வெளிவந்தன. இந்த விவகாரம் குறித்து, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குறிப்பை, அதிகாரிகள் தரப்பு தயாரித்தது. நிதி அமைச்சகம் சார்பில், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட குறிப்பு, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு நடவடிக்கை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அக்டோபர் 2003ல் பின்பற்றப்பட்ட கொள்கை தான், 2007-08லும் தொடரப்பட்டது. அந்த அடிப்படையில் தான், அதிகாரிகள் தங்களின் விளக்கங்களை, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் குறிப்பில், அனுமானமாகக் கூறப்பட்டுள்ளதும், அதில் உள்ள விளக்கங்களும் என்னுடைய கருத்தல்ல. இவ்வாறு, பிரணாப் முகர்ஜி கூறினார்.

இதன்பின் பேசிய சிதம்பரம், ""என்னுடைய சீனியரான பிரணாப் முகர்ஜி படித்த இந்த அறிக்கை, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள விஷயங்களை, முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது'' என்றார். பிரணாப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக டில்லியில் நடந்து வந்த பரபரப்பு அரசியல், தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "பிரச்னை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, அவசரம் அவசரமாக இந்த அறிக்கையை காங்கிரஸ் மேலிடம் தயாரித்துள்ளது. இருந்தாலும், எதிர்க் கட்சிகள் இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து கிளறி விட்டுக் கொண்டு தான் இருக்கும். இந்தப் பிரச்னையால் ஏற்பட்டுள்ள பூகம்பம், இப்போதைக்கு முடிவுக்கு வராது' என்றன.

பிரணாப் முகர்ஜி மத்திய நிதி அமைச்சர் : நிதி அமைச்சகம் சார்பில், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட குறிப்பு, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு நடவடிக்கை. இந்த குறிப்பில், அனுமானமாகக் கூறப்பட்டுள்ள விஷயங்களும், விளக்கங்களும், என்னுடைய கருத்து அல்ல.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் : என்னுடைய சீனியரான பிரணாப் முகர்ஜி படித்த இந்த அறிக்கை, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது.


 : "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், நிதி அமைச்சகத்தின் குறிப்பு வெளியானது தொடர்பாக, பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை வேடிக்கையாக உள்ளது' என, பா.ஜ., தெரிவித்துள்ளது. பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் அலுவலகத்துக்கு, நிதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட குறிப்பு வெளியான விவகாரம், முடிவுக்கு வந்து விட்டதாக, நிதி அமைச்சரும், உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று (நேற்று) பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை, வேடிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில், இரண்டு அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஈகோ பிரச்னை முக்கியமானதல்ல. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்புக்கு, யார் பொறுப்பேற்பது என்பது தான் முக்கியம். பிரணாப் முகர்ஜியின் அறிக்கையால், மத்திய அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, மக்கள் இழந்து விடுவர். பிரணாப் முகர்ஜியின் அறிக்கையை ஏற்பதாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். அவருக்கு எதிரான சாட்சிகள் அதிகம் உள்ள நிலையில், இவ்வாறு அவர் கூறுவதை ஏற்க முடியாது. உடனடியாக, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், அவருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

                                                                                                [அ]   சிங்கம் ?                                       

ஏகாதிபத்தியமும் அதன் முட்டாள்தனங்களும்,

பேராசிரியர்:பிரபாத் பட்நாயக்,

சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க் கப்பட்ட உடனே நடைபெற்ற அமெரிக்க உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கண்டோலிசா ரைஸ் அதிரடியாக ஒரு கேள்வியை எழுப்பி னார்: “இந்த பயங்கரமான துயரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகி றோம்?” அவருடைய கவலை என்பது இந்த பயங்கர தாக்குதலைப் பற்றியதாக வோ அல்லது குற்றம் செய்தவர்களை நீதிக் குட்படுத்துவது தொடர்பாகவோ இல்லை. மேலும் அந்தக்கூட்டத்திலேயே, இந்த சந் தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இராக் மீது ஒரு போரினைத் தொடுத்து அதன் மூலம் நல்ல பலனை அடையலாம் என்ற விவாத மும் எழுப்பப்பட்டது. அல்கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு உள்ள பகைமை குறித்து நன்றாக அறிந்திருந்த போதும் இந்தப்போருக் கான விவாதம் எழுப்பப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
                                            

பளிச்செனத் தெரிந்த உள்நோக்கம்இராக் “பேரழிவு ஆயுதங்களை” தயாரித்து வைத்துள்ளது என்பது போன்ற பொய்களை அதிவேகமாகப் பரப்பியதே, இராக் மீதான படையெடுப்பிற்கான காரணத்தை உருவாக் கத்தான் என்று நாம் அறிய முடியும். ஐக்கிய நாடுகள் சபை இதற்கான எந்தவொரு ஆணையும் வழங்கியிராத சூழலில், அமெரிக் காவின் நட்பு நாடுகளான பிரான்ஸ் போன்ற நாடுகள் இப்படி ஆணை எதுவும் இல்லையே என்பதை வலியுறுத்திய பிறகும்கூட, இராக் மீது ஆக்கிரமிப்புப்போர் நடத்தப்பட்டது.

இராக்கின் எண்ணெய் வளத்தைக் கைய கப்படுத்துவது ஒன்றுதான் இந்த படையெடுப் பின் பிரதான நோக்கம். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன், தனது சுயசரிதையில் இதை மிகத்தெளிவாகவும், வெளிப்படையாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் வள நாடு இராக். கிட்டத் தட்ட 143 பில்லியன் பேரல்கள் எண்ணெய் இருப்பதாகக் கூறப்படுகிறது. புவியியல் அமைப்பு மற்றும் பூகம்பவியல் ஆய்வுகளின் படி, 350 பில்லியன் பேரல்கள் எண்ணெய் வளம் இராக்கில் உள்ளது என்று கூறப்படு கிறது. இதனடிப்படையில் பார்த்தோமானால், உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு இராக். அமெரிக்கா, இந்த மிகப் பெரும் எண்ணெய் வளத்தைத்தான் கைப் பற்றத் துடிக்கிறது. இதன்மூலம் அமெரிக் காவின் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் நாணயமான டாலரை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மிக நுட்பமான தந்திரமும் அடங்கியுள்ளது.

டாலரும் பெட்ரோலும்

அமெரிக்காவின் டாலர் உலகச் செல்வ வளங்களை சேமிப்பதற்கான ஒரு நிலையான சாதனமாக தொடர்ந்து நீடிக்க வேண்டுமென் றால், எண்ணெயினுடைய டாலர் மதிப்பு (சில ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும்) அதிவேக மாக உயரக்கூடாது. டாலர் என்பதுதான் கை யிருப்பு நாணயமாக இருக்க வேண்டும் என் பது அமெரிக்காவிற்கும் சரி, உலகின் ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பிற்கும் சரி மிக முக்கியமானது. ஏனெனில், உலக நாடு களுடன் அமெரிக்கா வைத்துள்ள ஒட்டு மொத்த பொருளாதார பரிவர்த்தனைகளும் டாலர் மதிப்பிலேயே அமைந்துள்ளது. உலக முதலாளித்துவ அமைப்பைப் பொறுத்தவரை யில், உலகெங்கிலும் உள்ள செல்வ வளங்க ளின் சொந்தக்காரர்களுக்கு, அவர்களுடைய செல்வங்களை சேமித்து வைக்க ஒரு நம்பக மான சாதனமாக அமெரிக்க டாலர் உள்ளது. எனவே எண்ணெய்யின் டாலர் மதிப்பு அதி வேகமாக உயரக்கூடாது என்பதே இதற்கு ஆதாரமாக அமைய முடியும்.

உலகின் எண்ணெய் வளத்தின் மீது அமெ ரிக்கா வைத்துள்ள கட்டுப்பாடுதான் உலக செல்வ வளங்களின் சொந்தக்காரர்களது மன தில் டாலர் என்பது சேமிப்பிற்கான ஒரு நிலையான சாதனமாக தொடரும் என்ற எண் ணத்தினை, நம்பிக்கையினை மிக ஆழமாக பதியச் செய்துள்ளது. அதன் காரணமாக டாலர் என்பது “தங்கம் போன்று நல்லது” என்று நம்பு கின்றனர். அந்த நம்பிக்கையுடன் தங்கள் சேமிப்பினை டாலரில் தொடர்வதையே விரும்புகின்றனர். எனவே, உலகின் எண் ணெய் வளத்தின் மீது அமெரிக்கா தனது கட் டுப்பாட்டினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இரண்டு காரணங்களில் இருந்து வருகிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய அளவிலான உள்நாட்டு நுகர்வுக்கு என்று மட்டுமல்லாது, டாலரை, அதாவது டாலரின் மதிப்பினை தாங்கி தூக்கி நிறுத்த வேண்டிய அவசியத்தில் இருந்தும் எழுகிறது.

அடுக்கடுக்கான அறிவீனங்கள்

ஆனால், இந்த எண்ணத்தோடு நடத்தப் பட்ட இராக்கின் மீதான அமெரிக்கப் படை யெடுப்பு என்பது, அமெ ரிக்கா எதிர்பார்த்ததில் இருந்து முற்றிலும் வேறானதாக மாறிவிட்டது. சதாமின் ஆட்சி மிக எளிதாக வீழ்த்தப்பட்டு விட்ட போதிலும், இந்தப்போரானது உள்நாட் டின் எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிரானதாக இழுத்துச்செல்லப்பட்டுவிட்டது. தற்போது நாடே துண்டாடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெ ரிக்கா தனது கைப்பாவையாக நிர்மாணித்த அரசாங்கமே கூட மக்களின் நம்பகத்தன்மை யை சிறிதளவாவது பெற வேண்டும் என்ப தற்காக, படையெடுப்பின் போது போடப்பட்ட திட்டத்திலிருந்து சிறிது மாறி செயல்பட வேண்டியதாகிவிட்டது. இதன் விளைவாக இராக்கின் எண்ணெய் வளங்களை அந்நியக் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதற்கான சட் டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டது. எண்ணெய் வளம் என்பது அரசின் சொத்தாகவே தொடரும் என்று அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்நிய எண்ணெய் கம்பெனிகள், அரசாங்கம் ஒரு பேரலுக்கு எவ்வளவு என்று நிர்ணயித்த தொகையை கொடுத்துவிட்டு எண்ணெய்யை இறைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள் ளன. அந்தக் கம்பெனிகள் கூட ஏல முறை யின் அடிப்படையில் போட்டிக்கு விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டன. மேலும் குர்து இன மக்களுக்கும், பாக்தாத் அரசிற்கும் இடையி லான கடுமையான முரண்பாடுகளின் கார ணமாக எழுந்த நிச்சயமின்மை காரணமாக வும், சீன மற்றும் ரஷ்ய கம்பெனிகள் மிகக் குறைந்த விலையில் ஏலத் தொகையை கேட்டிருந்ததன் காரணமாகவும், இராக்கின் எண்ணெய் வளத்தினைப் பெறுவதில் அதிக அளவில் லாபம் பெறும் அறிகுறிகள் இல் லாத காரணத்தால் அமெரிக்கக் கம்பெனிகள் இந்த ஏல முறையில் பங்கெடுக்காமல் தள்ளியே நின்றன.

அமெரிக்க அரசாங்கத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த போர் மிகப்பெரிய லாபத்தினை கொணர்ந்துள்ளது என்பது உண்மையே. அதேநேரத்தில், இந்த காலகட் டத்தில் ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய திட்டம் கிட்டத்தட்ட ஒரு கடுமையான அடியைச் சந்தித்துள்ளது என்றே கூறலாம். தனது சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், லத்தீன் அமெரிக்க நாடு களில் தலையீடு செய்யும் சக்தியை இழந்த தன் காரணமாகவும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது எனலாம்.

லிபியா

இருந்தபோதும், ஏகாதிபத்தியத்தின் அறி வீனமான செய்கைகளில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால், இத்தனை பாதிப் பிற்குப் பிறகும் திரும்ப திரும்ப அதையே செய் வது என்பதுதான். இராக்கில் செய்த அதே முட்டாள்தனத்தை தற்போது லிபியாவிலும் அரங்கேற்றுகிறது. இங்கேயும் கூட ஐக்கிய நாடுகள் சபையின் உண்மையான தீர்மானம் எதற்காக என்றால், கடாபியின் படைகளால் கலகக்காரர்களின் இடங்கள் அடித்து நொறுக் கப்பட்டதன் காரணமாக நிகழும் படுகொலை கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய வற்றைத் தடுப்பது என்பதுதான். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் இதனை லிபியாவின் எண்ணெய் வளத்தினை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்த்தன. 
லிபியா, எண்ணெய் வளத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்காவி லேயே மிகப்பெரிய நாடு. உலகளவில் ஒன் பதாவது இடம் வகிக்கும் நாடு. சுத்திகரிப்பு செலவு மிகக்குறைவு (ஒரு பேரலுக்கு ஒரு டாலர் தான் ஆகும் என்ற அளவிற்குக் குறைவு) என்பதும் ஏகாதிபத்தியத்தைக் கவர்ந்திழுக் கும் அம்சமாக அமைந்தது. எனவே, அமெரிக் காவும் அதன் கூட்டாளிகளும் ஐ.நாவின் தீர் மானத்தை மீறி, அதன் எல்லையைத் தாண்டி, சர்வதேச சட்ட விதிகளையும் மீறி, ‘ஜனநாய கத்திற்குக்’ கட்டியங்கூறுகிறோம் என்ற பெயரில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொணர்ந்து, அதனை நாம் எதிர்பார்த்த மாதிரியே நியாயப் படுத்துகின்றன.
                                                     

லிபியாவில் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு ஆட்சியை நிறுவி, அதன்மூலம் தம் முடைய திருப்திக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் வரும் ஆண்டுகளில் ‘அமைதி யாக’ ஒரு ஆட்சியை நடத்திக் கொள்ளலாம் என்ற கனவும், அந்த ஆட்சியின் மூலம் லிபி யாவின் அபரிமிதமான எண்ணெய் வளத் தைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற கன வும் இராக்கைப் போன்றே இங்கும் சுக்கு நூறாகப்போகிறது.

ஒசாமா பின்லேடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியது என்னவெனில், “அமெரிக்காவினை இஸ்லாமிய உலகில் இருந்து விரட்டியடிக்க ஒரே வழி, அமெரிக்கா வின் பிரதிநிதிகளான ஆட்சியாளர்களைத் தோற்கடிக்க ஒரே வழி, அமெரிக்கர்களை அதிக செலவிழுத்துவிடும் வகையில் சிறு சிறு போர்களுக்கு வரிசையாக இழுத்துவிடு வதன் மூலம் அவர்களை திவாலாகச் செய் வதுதான்” என்பதே. இந்த நோக்கத்தை நிறை வேற்ற ஒசாமாவின் எந்த ஒரு அமைப்பும் தேவையில்லை. எண்ணெய் வளங்களின் மீதான அமெரிக்காவின் தீராத வேட்கையே போதுமானது. ஆப்கானிஸ்தான், இராக், தற் போது லிபியா- என எவற்றிலிருந்தும் அமெ ரிக்கா தன்னை விடுவித்துக் கொள்ள முடிய வில்லை. இன்னும் ஏகாதிபத்தியத்தின் அறி வீனமான செயல்கள் அடுக்கடுக்காகத் தொடர்கின்றன.

பீப்பிள் டெமாக்ரசியில் இருந்துதமிழில்: ஆர்.எஸ்.செண்பகம், திருநெல்வேலி


[நன்றி தீக்கதிர்]
==========================================================================================

ஆளுங்கட்சி தில்லு-முல்லு.
                  
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற் பட்டவராக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்கிறது என்று மக்கள் நம்ப வேண்டும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் அப்படியில்லை என்றே முதல் கட்டத் தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறி விக்கும் வரை, ஆளுங்கட்சியைத் தவிர மற்ற கட் சிகளால் எந்தெந்தத் தொகுதி இடஒதுக்கீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்கிற விவரத்தை கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையர் கவலைப்படவில்லை. இது முதல் கரும்புள்ளியாகிவிட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முதலமைச் சர் சில நகராட்சிகளுக்கு அதிக தண்ணீர் வழங்க உத்தரவிட்டதும், பல அதிகாரிகளை இடமாற்றம் செய்ததும் விதி மீறலாகும். ஆயி னும், ஆரம்பத்தில் தேர்தல் ஆணையம் ஏனோ மவுனவிரதம் அனுஷ்டித்தது. அதேசமயம் ரயில்வே துறையில் சில அறிவிப்புகள் வெளி யிடப்பட்டபோது, தேர்தல் ஆணையம் உடனே விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. எதிர்க்கட் சிகள் பல இதனை சுட்டிக்காட்டிய பிறகு, மிகத் தாமதமாக இப்போது தமிழக அரசிடமும் விளக் கம் கேட்டுள்ளது. இது இரண்டாவது கரும்புள்ளி.

தேர்தல் விதிமுறைகளை ஒரே மாதிரியாக பின்பற்றுவது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா? அறிவுறுத்தப்பட்டுள் ளதா? வழிகாட்டப்பட்டுள்ளதா? இது போல் பல ஐயங்கள் எழுகின்றன. ஏனெனில், பல ஊர் களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வருகிற முரண்பட்ட தகவல்கள் தேர்தல் ஆணையத் தின் வழிகாட்டுதலில் குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது. அதேசமயம் ஆளுங்கட்சியின்பால் ஒரு சார்பு அணுகுமுறை பளிச்செனப் புலப்படு கிறது. எனவே, தனது நேர்மையை, நடுநிலையை, கண்ணியத்தை நிரூபித்துக்காட்ட வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது.

வேட்பு மனு பரிசீலனையின்போது ஆளுங் கட்சிக்கு எதிரானவர்களின் வேட்பு மனுக் களை முடிந்த அளவிற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருப்பதாக உலவும் செய்திகளை வெறும் வதந்தி என்று தள்ளிவிட முடியவில்லை. ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரவர்க் கம் எப்படியெல்லாம் ஆளுங்கட்சியின் கைப்பா வையாக செயல் படும் என்பதை கடந்தகால தேர்தல் அனுபவங்கள் நமக்கு அறிவுறுத்துகின் றன. குறிப்பாக கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் நடந்த ஜனநாயகப் படுகொலை கள் இன்றும் அந்த ரத்த வாடையோடு நம் நெஞ் சில் பதிந்திருக்கிறது. மீண்டும் அதுபோல் ஒரு ஜனநாயகப் படு கொலை எந்த மட்டத்திலும் எந்த வடிவத்திலும் எந்தச் சூழலிலும் ஏற்படா மல் தடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது. விழிப்போடு இருந்து ஜனநாயகத்தை காக்க வேண்டியது மக்கள் தொண்டர்களின் கடமை.

காவல்துறையை ஏவி, எதிர்க்கட்சிகளின் பணிகளை முடக்கவும் முன்னணி ஊழியர் களை சிறையில் அடைக்கவும் ஆட்சியாளர் கள் முயலக்கூடும் என்கிற அச்சம் உள்ளது. அதுவும் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு ஜனநாயக சக்திகள் கவலை கொள்ளா மல் இருக்க முடியாது. இப்படி பல்வேறு சந்தே கங்கள் இறக்கைக் கட்டிப் பறக்கும் சூழலில், தேர்தல் ஆணையம் தன் செயல்பாட்டின் மூலமே அவநம்பிக்கைகளைப் போக்க முடி யும். இப்போதும் அதற்கான கால அவகாசம் உள்ளது என்பதை தேர்தல் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டுகிறோம்.வியாழன், 29 செப்டம்பர், 2011

19 ஆண்டு காத்திருப்பு,

வாச்சாத்தி: 215 பேர் குற்றவாளிகள் 
                            தருமபுரி நீதிமன்றத்தில் வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில்  தீர்ப்பு கூறப்பட்டது. இதுவரை நீதிபதி குமரகுரு 215 பேரின் பெயரை வாசித்து குற்றவாளி என அறிவித்தார். குற்றவாளிகள் என குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் குற்றவாளிகள் மறுப்பு தெரிவித்தும் தாங்கள் நிரபராதி என்றும் குறைந்தபட்ச தண்டனை வழங்கவேண்டுமென்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். சிலர் தங்கள் மீதான குற்றத்தை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும்,126 வனம், வருவாய், 84 காவல்துறையைச் சேர்ந்தவர்கள். 2 ஆய்வாளர்கள் 6 சார் ஆய்வாளர்களும் குற்றவாளிகள் பட்டியலில் அடங்குவர். 4 ஐ.எஃப்.எஸ். (இந்திய வனப்பணி அதிகாரிகள்) அதிகாரிகளும் குற்றவாளிகள். குற்றவாளிகளுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் மீதும் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு ஐஎப்எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கனவே இறந்து விட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம், அதிகார துஷ்பிரயோகம், உள்ளிட்டவை தொடர்பாக ஐபிசி 147, 149, 323, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அத்தனை பேர் மீ்தும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிற‌து.

இந்த வழக்கு உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்படாமல், பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் இறந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை ஜாதியினர் .

இந்த கிராம மக்கள் காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.

வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு, வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.

ஆனால், இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் ஜெயா, செல்வி, சித்ரா, காந்தி, அபரக்கா, பாப்பாத்தி, காந்தி, மாரிக்கண்ணு, லட்சுமாயி, கம்சலா, முத்துவேதி, பூங்கொடி, மல்லிகா, சுகுணா, பாப்பாத்தி, முத்துவேதி, தேன்மொழி, பழனியம்மாள் உள்ளிட்ட 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக குற்றசாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி 1993ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கூட்டுக்குழுவினரின் அட்டகாசங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து அந்தக் குழுவைச் சேர்ந்த 269 பேரையும் சிபிஐ கைது செய்தது. மேலும் கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
2006ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இந்த வழக்கு நடந்து முடிந்துள்ளது. இதில் இன்று தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்துவருகிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் 29 வனத்துறையினர், 24 போலீசார், ஒரு வருவாய்த்துறை ஊழியர் உள்பட மொத்தம் 54 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   குற்றவாளிகளின் உறவினர்கள் நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து ஆர்பாட்டம் செய்து மிரட்டினார்கள். 

கூடங்குளம் :ஆரம்பம்,
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குனர் நளினிஷ் நகைக் வெளியிட்ட அறிக்கை:* கூடங்குளம் அணுமின் நிலையம், இயற்கை பேரிடர், நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, ராட்சத அலைகள், அணைகள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை, அபாய சேதம் இல்லாமல் சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
* அணுமின் கழக இடத்தேர்வு கமிட்டி, அறிவியல் பூர்வ ஆய்வு நடத்திய பின் தான் கூடங்குளம் தேர்வானது.
* அணுமின் நிலையத்தைச் சுற்றி, 1.5 கி.மீ., தூரம் கட்டுப்பாட்டு பகுதியும், 5 கி.மீ., தூரம் பாதுகாக்கப்படும் பகுதியும் அமையும்.
* காற்று ஊடுருவல் மூலமான, அதிக வெப்பம் உமிழாத தொழில்நுட்பத்தில் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கொதிகலனை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட்டு, கடலிலேயே உமிழப்படுகிறது.
* பயன்படுத்தப்பட்ட நீர் வெளியேறும் போது, 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் இருக்கும். இது மிகக்குறைந்த வெப்பநிலை; சாதாரண நீரின் தட்பநிலையை விட குறைந்தது. இதனால் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம், சென்னை கல்பாக்கம் அணு நிலையம் உள்ளிட்டவை, கடல்பகுதியில் உள்ளன. இந்த நிலையங்களால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
* இந்திய அணுமின் நிலையங்களை அமைக்கும் முன், அப்பகுதியிலிருந்து, 30 கி.மீ., சுற்றளவிற்கு, சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படும். அணுமின் நிலையம் இயக்கத்திற்கு பின், மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த, 40 ஆண்டுகளில், இந்தியாவில், எந்த அணு மின்நிலைய பகுதியிலும் கதிர்வீச்சு அபாயம் இல்லை.
* கூடங்குளம் அணு உலை கனநீரை பயன்படுத்தும், வி.வி.இ.ஆர்., ரக அணு உலை, கடந்த, 25 ஆண்டுகளில், இந்தியாவில், 15 உலைகள் இதே தொழில்நுட்பத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நளினிஷ் நகைக் தெரிவித்துள்ளார்.
* கூடங்குளம் நிலைய பகுதி, நிலநடுக்கம் ஏற்பட மிகக்குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் உள்ளது.
* கூடங்குளத்திலிருந்து, 88 கி.மீ., தூரமுள்ள திருவனந்தபுரத்தில், 4.3 ரிக்டர் அளவுக்கு, இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடங்குளம் நிலைய கட்டடங்கள், 6 ரிக்டர் அளவை கூட தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
* சுனாமி ஏற்படும் பகுதியிலிருந்து, 1,500 கி.மீ., தூரத்தில் கூடங்குளம் அமைந்துள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா அணுஉலை, சுனாமி ஏற்படும் மையத்திலிருந்து, 130 கி.மீ., தூரத்தில் அமைந்திருந்ததால் தான், அங்கு பாதிப்பு ஏற்பட்டது.
* கடந்த, 2004, டிசம்பர் 26ல், 9.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், சுனாமி பேரலையும் ஏற்பட்ட போது, கூடங்குளம் அணு உலை பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
* 2.2 மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தது. ஆனால், கூடங்குளம் நிலையம், இதையும் சமாளிக்கும் வகையில், கடல் மட்டத்திலிருந்து, 8.7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த விதத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை
""சுயநல நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்தசில தனிக் குழுக்களால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு போராட்டம் நடந்தது,'இவ்வளவு நாட்களாக இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?' என, இந்திய அணுமின் கழகம் கேட்டுள்ளது:கூடங்குளத்தில், அணுமின் உற்பத்தி, இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என, அணுமின் நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தின் கடற்கரையோர கிராமமான கூடங்குளத்தில், ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள் அமைக்கும் பணி, 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்பத்தில் நடந்து வருகிறது.முதல் அணு உலையின் பணிகள் நிறைவடைந்து, உற்பத்தியின் முன்னோட்டமான வெப்ப நீர் சோதனை ஓட்டம், கடந்த ஜூலை 2ல் துவங்கியது. மின் உற்பத்தி துவங்குவதற்கு முன், பொதுமக்களுக்கு அவசர நிலை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள், தற்போது நடந்து வருகின்றன.வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:முதல் அணு உலையின் வெப்ப நீர் சோதனை ஓட்டம், மூன்று கட்டமாக, வெவ்வேறு அழுத்த நிலைகளில் மேற்கொள்ளப்படும். ஒன்றரை மாதத்தில், யுரேனியம் எரிபொருள் நிரப்பப்படும். அனைத்துப் பாதுகாப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின், மும்பையில் உள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளின் ஆய்வு மற்றும் அனுமதிக்கு பின், உற்பத்தி துவங்கும்.
இந்த ஆண்டு டிசம்பருக்குள், முதல் உலையில் மின் உற்பத்தி துவங்கும். 2012 மார்ச்சில் முழு அளவில், மின் உற்பத்தியை அடையும். அதிலிருந்து 7 மாதங்களில், இரண்டாவது அணு உலையின் மின் உற்பத்தி துவங்கும். இரண்டு அணு உலைகளில் இருந்தும், கிடைக்கும் மின்சாரத்தில், 925 மெகாவாட் மின்சாரம், தமிழகத்திற்கு வழங்கப்படும்.மீதமுள்ள மின்சாரம் கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, மத்திய தொகுப்பு மூலம் வழங்கப்படும். அண்மையில், ஊழியர் என்ற போர்வையில், உளவாளி சிக்கிய சம்பவத்தின் மூலம், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று, காசிநாத் பாலாஜி கூறினார்..
எதுவானாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்பவர்கள் கோரிக்கை நிறைவேறாது.
தமிழக அரசும் பாதுகாப்பை பலப்படுத்திவிட்டுதான் உற்பத்தி செய்கிறார்கள் என கூறி கைகழுவிடப்போகிறது.
ஆகட்டும் பார்க்கலாம்தாங்க?
=========================================================
இது யாரின் குடிசை தெரியுமா?
இந்தியாவின் நட்சத்திரகிரிக்கெட்காரர் சச்சின்டெண்டுல்கர். இவரது கனவு இல்லமான இது ரூ.80 கோடி செலவில் மும்பையின் புறநகர் பகுதியான பெர்ரிகிராஸ் சாலையில் கட்டப்பட்டுல்ளது.  இவ்வீட்டிற்கு சச்சின் தற்போது குடி புகுந்துள்ளார். ஆடம்பரமான பங்காளவில் குடியேறிய சந்தோஷத்தில் சச்சின் இது ஒரு உணர்வுப்பூர்வமான தருணம். எனது கனவு இல்லத்தை கட்டி முடித்துள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.
பின்னே?கோடிக்கணக்கானோர் பிளாட்பாரத்தில் வசிக்க அவர்களின் கிரிக்கெட் பைத்தியத்தை வைத்து குவித்த பணத்தில் கட்டப்பட்டதாயிற்றே.இதற்கு வரி விலக்கு கூடக் கொடுத்திருப்பார்களே?
___________________________________________________________________________________________________


ஆறு நிறைய நீரிருந்தாலும் 
                     

புதன், 28 செப்டம்பர், 2011

அழகிரி ,ஆரம்பமாகப்போகிறது அதிரடி.மதுரையில், மாநகராட்சி மேயர் வேட்பு மனு தாக்கலுக்கு, வேட்பாளருடன் அழகிரி வந்தார். தேர்தல் அலுவலர் நடராஜனின் அறையில் நுழைந்ததும், அங்கிருந்த நிருபர்களை வெளியில் இருக்குமாறு அழகிரி கூறினார்.

தேர்தல் அலுவலர்நடராஜன், ""நிருபர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம்; அவர்கள் இருக்கட்டும்,'' என்றார்.

""உங்களிடம் தனியாக பேச வேண்டும்,'' என, அழகிரி கூறியதற்கு, ""தனியாக பேச இது நேரமல்ல, பின்னர் கட்டாயம் பேசலாம்,'' என்றார் நடராஜன்.

""தேர்தல் விதிமீறல் குறித்து நாங்கள் கூறிய புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?'' என, அழகிரி கேட்டார்.

""படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறேன்,'' என, நடராஜன் பதிலளித்தார்.

""சிம்மக்கல், சேதுபதி ஸ்கூல், ஜங்ஷன் பகுதியில் ஜெ., மற்றும் விஜயகாந்த் படங்களை வரைந்துள்ளனர். அதை அழித்து விடுங்கள்; இல்லையென்றால் நாங்கள் அழிப்போம்,'' என, எச்சரித்து விட்டு வெளியேறினார்.

,""அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. சுவரில் வரைந்துள்ள படங்களை அழிக்கவில்லையென்றால், நாங்களும் வரைவோம்,'' என்றார்.

 தேர்தல் அலுவலர் முன்னிலையில், நிருபர்களை பார்த்த அழகிரி, ""எல்லோரும் பார்த்துக்கோங்க, நாங்க ஐந்து பேர் தான் வேட்புமனுதாக்கல் செய்ய வந்துருக்கோம். நேற்று அ.தி.மு.க., மனுத்தாக்கலில் எத்தனை பேர் பங்கேற்றார்கள் என பார்த்தீர்களா? "தினமலர்' எங்கே? "தினமலர்' சார்பில் யாரும் வந்துருக்கீங்களா? முறைப்படி ஐந்து பேர் தான் வந்துருக்கோம்ணு கட்டாயம் செய்தி போடுங்க,'' என்றார். வெளியில் வந்ததும் கேள்வி கேட்டு பின்தொடர்ந்த பிற நிருபர்களிடம், ""அ.தி.மு.க., விதிமீறலை எழுதமாட்றீங்க; நாங்க என்ன செய்தாலும் உடனே எழுதுறீங்க,'' எனக்கூறி கிளம்பினார் அழகிரி.
                        

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வெறுத்துப்போன தா,தா,தா.பாண்டியன்.


                                          
ள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க,ஆரம்பித்துவைத்த தனித்துப்போட்டி அ.தி.மு.கவையும் தொற்றிக்கொண்டது.கூட்டணி கட்சிகளைக் கழற்றிவிட தனித்துப்போட்டி என கூறாமல் கூட்டணிகளுக்கு மிச்சம் வைக்காமல் அனைத்துத் தொகுதிகளையும் தனது வேட்பாளர்களை நிறுத்தி ஆக்கிரமித்துக்கொண்டது.
ஆனால் அது கதவை மூடிய பின்னும் மார்க்சிஸ்ட்,தா.பாண்டியன் கட்சியினர்{ இந்தியகம்யூனிஸ்ட் கட்சி என்று கூப்பிட இயலாதவாறு பாண்டியன்.அ.தி.மு.க,வின் துதிபாடி கட்சியாக்கிவிட்டார்.} தோட்டத்தின் கதவின் முன் தினம் முன்னிலையாகி அழைப்பை எதிநோக்கி நின்றனர்.ஆனால் எச்சிலைகள் வெளியே வந்து விழுந்தனவே தவிர அழைப்பு வரவே இல்லை.பேருக்கு சில அம்மா கட்சியினர் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டனர்.
மார்க்சிஸ்டுகளுக்கு கொஞ்சம் சுயமரியாதை இருந்ததால் தனியே சில இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து மோதி பார்க்கத்துணிந்து விட்டனர்.
ஆனால் தா.பாண்டியனோ அவர்கள் அவ்வாறு செய்வது அம்மாவை கோபப்படுத்திவிடும் இன்னும் கொஞ்சம் கெஞ்சிப்பார்க்கலாம் என்று தன் சார்பாக பழனிச்சாமியை தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார். பழனிச்சாமியின் செருப்புதான் தேய்ந்ததே ஒழிய தோட்டத்தின் கதவுகள் அடைக்கப்பட்டது அடைக்கப்பட்டதுதான். சட்டமன்றத்தேர்தலில் தோற்று முழிக்கும் தி.மு.க.வே தனியாக நிற்கும் போது அறுதி பெரும்பான்மை பெற்ற தனது கட்சிக்கு தொங்கு சதைக்கட்சிகள் தேவையா?என்பதே அ.தி.மு.க.தலைவியின் எண்ணம்.
இவர்களைப்போலவே இன்னொரு கழற்றிவிடப்பட்ட கட்சி தே.மு.தி.க, தனியே முழித்துக்கொண்டிருக்கும்  போது மார்க்சிஸ்டுகள் அவர்களை சந்தித்து தன்னம்பிக்கையை ஊட்டி சின்னதாகக்கூட்டணி அமைத்து தொகுதிகளை பங்கும் வைத்துவிட்டது.
தா.பாண்டியனோ எல்லாக்கட்சிகளும் போய் விட்டன.அம்மா நம்மீது இறக்கப்பட்டு சில இடங்களைக் கண்டிப்பாகத்தருவார்.வென்று காட்டுவோம்.என்ற அவாவில் இன்றுவரை தோட்டத்தை க்காவல் காத்ததில் வாட்ச்மேனுக்கு பேச்சுத்துணைக்கு ஆள்கிடைத்ததே ஒழிய தா.பா.கனவு பலிக்கவில்லை.
   இப்போது தா.பாண்டியன் கட்சி “அம்மாவுடன் நடத்திய பேச்சு வார்த்தை முறிந்து விட்டது.கூட்டணியும் இல்லை.தனியே போட்டி யிடுகிறோம்.வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்”
   -என்று அறிவித்துள்ளார்.
கொஞ்சம் முன்பு இந்த முடிவுக்கு வந்திருந்தால் மார்க்சிஸ்ட்-நடிகர் விஜய்காந்த் கட்சி கூட்டணியில் வத்தலோ,தொத்தலோ சில இடங்களைப் பெற்று கொஞ்சம் மரியாதையை மார்க்சிஸ்ட் மாதிரி காப்பாற்றியிருக்கலாம்.
இவர்கள் ஜெயலலிதா குணம் தெரிந்தே கூட்டணி வைத்த்வர்கள்.பின் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்தானே ஆக வேண்டும்.
உலக அரசியலையே கரைத்து ஞானம் கண்டது போல் கட்டுரைகளை ஜனசக்தியில் எழுது தா.பாண்டியன் கடைசியில் உள்ளூர் அரசியல் அம்மாவிடம் செல்லுபடியாக வில்லையே?
கருணாநிதி போட்டால் வரி.அம்மா வரி போட்டால் நிதி ஆதாரம் தேடுவது.இதுதானே தா.பா.வின் அரசியல் கோட்பாடு.
எவ்வளவுதான் அம்மா புகழ்ப் பரணியை சட்டமன்றத்தில் இடதுசாரிகள் பாடிய போதும்.கடந்த ஆட்சியின் அலங்கோலங்களைப்பட்டியல் போட்டு அம்மாவின் மனதைக் குளிர வைத்தும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடம் கூட வாங்கமுடிய வில்லையே?தா.பாண்டியன் தா,தா,என்று எவ்வளவுதான் கேட்டும் பலன் இல்லையே?
 சரி.நாள் முடிவதற்குள் போய் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யப் பாருங்கள்.போங்க ,போய் முதல்ல பிள்ளைகளைப் படிக்க வைக்கப்பாருங்கப்பா?
                               
_______________________________________________________________________________    
வளரும் வறுமைக்கோடு^ 
இந்தியா விடுதலை பெற்றபோது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை, 32 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது.
நம்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் என, பொருளாதார நிபுணர் அர்ஜுன் சென்குப்தாவும், 50 சதவீதம் பேர் என, என்.சி.சக்சேனாவும், 37.5 சதவீதம் என, பொருளாதார வல்லுனர் சுரேஷ் டெண்டுல்கரும் தெரிவித்துள்ளனர்.
நகர் புறங்களில் மாதம் 965 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்கள் மற்றும் கிராம புறங்களில் மாதம் 781 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்களை ஏழைகளாக கருதக்கூடாது. அவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்’ என, சமீபத்தில்உச்ச நீதிமன்றத்தில் திட்ட க்குழு தெரிவித்திருந்தது.
 தேசிய ஆலோசனை க்குழுஉறுப்பினராகவும், திட்டஆணையத்தின் செயலராகவும் உள்ள என்.சி.சக்சேனா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சக்சேனா கூறியதாவது: ஒரு மாதத்துக்கு 965 ரூபாய் வருவாய் என்றால், ஒரு நாளைய வருவாய் 32 ரூபாய் என்ற கணக்கு வருகிறது. இந்த 32 ரூபாயை வைத்து ஒரு குடும்பம் நடத்த முடியுமா? இந்த வருவாய் உள்ளவர்களை ஏழையாக கருதக்கூடாது எனஉச்ச நீதிமன்றத்தில் திட்டஆணையம் கேட்கிறது.
இந்த பிரச்னை திட்டஆணையக்கூட்டத்தில் புயலை கிளப்பியது.நம்நாடு சுதந்திரமடைந்த போது 32 கோடி பேர், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது. 72-73ம் ஆண்டு காலத்தில், ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாக கருதப்பட்டனர்.
தற்போது, ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழை எனப்படுகின்றனர். ஏன் ஏழைகள் அதிகரித்துள்ளனர் என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, ரேஷன் அட்டை கொடுக்கப்பட்டு மானிய விலையில் உணவு தானியங்கள் கொடுக்கப்படுகின்றன.
இந்த குடும்பஅட்டையை வைத்திருப்பவர்களில் 60 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள். இதில், பரிதாபம் என்னவென்றால் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 20 சதவீதம் பேருக்கு குடும்ப அட்டையே கிடையாது. பொது பங்கீட்டு முறையில் நிறைய குளறுபடிகள் உள்ளன.
வறுமையில் உள்ளவர்கள் குறித்து கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஏராளமான பழங்குடியினரும், ஏழைகளும் விடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை.இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
நம்மைவிட பின்தங்கிய நிலையில் உள்ள வியட்நாம், மியான்மர்[பர்மா], பூடான் நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனால், நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறையவில்லை.
ஏழைகளின் மேம்பாட்டுக்கு ஆண்டு தோறும், 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் பலனில்லை.வறுமையில் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பின் போது மக்கள் தவறான தகவல்களை தெரிவிப்பதால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்த சரியான விவரம் கிடைப்பதில்லை.
எனவே, புதிய அணுகுமுறையை பின்பற்றும்படி கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் தெரிவித்துள்ளேன். ஏழைகள் குறித்த சரியான கணக்கெடுப்பின் மூலம் தான் நலத் திட்ட உதவிகள் உரியமுறையில் சென்றடைய முடியும்.இவ்வாறு சக்சேனா கூறினார்
 __________________________________________________________________________________________
240 டன்கள்    வெள்ளி
_கடலில் 70 வருடங்களுக்கு முன்பு மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 240 டன்கள் வெள்ளி இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது. கப்பலில் 240 டன்கள் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன.
கப்பல் 1941, பிப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது. அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம். அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது.
இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர். தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 155 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரிய வந்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

2-ஜி வேடிக்கையான விசாரணை.

                                                           


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் அப்போதைய நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச் சருமான ப.சிதம்பரத்துக்கும் தெரி யும் என்றும், அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும் சிபிஐ நீதிமன் றத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.

அதே நேரத்தில், சிதம்பரத்தை குற்றவாளியாக்க முயலவில்லை என் றும், அவருக்கும் எல்லாம் தெரி யும் என்று மட்டுமே கூறுவதாகவும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.

திங்களன்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது வாதா டிய ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனையில் அப் போதைய நிதியமைச்சர் சிதம்பரத் துக்கும் ராசாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. மேலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை என்பது மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு. இந்த விஷயத்தில் ராசா குற்றவாளி என்றால் ஒட்டுமொத்த அமைச்சர வையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். 2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு தான், அடுத்தடுத்து வந்த அரசுகள், அடுத்தடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டங்களில் வழி மொழியப்பட்டது. உண்மை இப்படியிருக்க ராசா மட்டும் எப் படி குற்றவாளியாக்கப்பட்டார்?.

எனவே, பிரிவு 311ன் கீழ் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அழைத்து விசாரியுங்கள். பிரதம ரின் முன்னிலையில் அவர் ராசா வுக்கு அறிவுரை தந்தாரா இல் லையா என்பதைத் தெரிவிக்கட் டும். அதன் பின்னர் தேவைப்பட் டால் பிரதமரையும் அழைத்து விசாரியுங்கள்.

அதே போல டிராய் விதிமுறை களை ராசா மீறிவிட்டதாக எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. அப்படி அவர் விதிமுறையை மீறியதை நிரூபிக்க எதிர்க் கட்சிகள் ஏதாவது ஆதாரங்களை தாக்கல் செய்யத் தயாரா?

இவ்வாறு ராசாவின் வழக் கறிஞர் கூறினார்.

சிதம்பரத்துக்கு எதிரான சுவாமியின் மனு ஒத்திவைப்பு

இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தாக் கல் செய்த மனுவை தில்லி பாட்டி யாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

2ஜி வழக்கில் முன்னாள் நிதி யமைச்சர் சிதம்பரத்துக்கும் தொடர் புள்ளதாகவும், அவரை இந்த வழக்கில் சிபிஐ குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து அக்டோபர் 12ம் தேதி தீர்மானிக்கப்படும் என்று அறிவித்தார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர் புத்துறை அமைச்சர் ஆ. ராசா, அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாக சிபிஐ புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

இந்திய தண்டனைச் சட் டம் பிரிவு 409-ன் கீழ் இந்த புதிய குற்றச்சாடடை சிபிஐ பதிவு செய்துள்ளது.

இதற்கு முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரைதான் சிறை தண்டனை கிடைக் கும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் இப் போது கூறப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டு நிரூபிக் கப்பட்டால் ராசாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனை முதல் ஆயுள் தண் டனை வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதி பதி ஓ.பி.சைனி முன் சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் இந்த புதிய குற்றச்சாட்டை சுமத் தும் மனுவைத் தாக்கல் செய் தார். அதில் ராசாவோடு அவ ரது முன்னாள் தனிச் செய லாளர் சந்தோலியா மீதும், முன்னாள் தொலைத் தொடர் புத்துறைச் செயலாளர் சித் தார்த் பெகுரா மீதும் நம்பிக் கைத் துரோக குற்றச் சாட்டை சிபிஐ சுமத்தி யுள்ளது.

மேலும் திமுக எம்பி கனிமொழி மற்றும் ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர் லெஸ் ஆகிய நிறுவனங்கள் மீது 409-வது பிரிவின் கீழ் அத்துமீறல் மற்றும் 120பி பிரிவின் கீழ் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவு களின் கீழ் குற்றச்சாட்டு களை சிபிஐ சுமத்தியுள் ளது.

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவு களிலும் சிபிஐ குற்றச்சாட் டுகளை பதிவு செய்துள் ளது.


ப.சிதம்பரம் குறித்த கடிதம் வெளியானது எப்படி?  பிரதமர் அலுவலகம் மீது பிரணாப் குற்றச்சாட்டு
                       
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் குறை கூறி நிதியமைச் சகத்திலிருந்து எழுதப்பட்ட கடிதம் வெளி யாக பிரதமர் அலுவலகமே காரணம் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.

நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் 2ஜி ஊழலைத் தடுக்கத் தவறி விட்டார் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் விற்பனை விவ காரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம் பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் பிரணாப் முகர்ஜியின் ஒப்பு தலுக்குப் பிறகு தான் பிரதமர் அலுவலகத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த ஊழலில் ப.சிதம் பரத்திற்கும் தொடர்புள்ளது என்ற குற்றச் சாட்டு வலுத்துள்ளது. அவர், ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தி வருகின்றன. ஆனால், சிதம்பரத் தின் நேர்மையில் தனக்கு சந்தேகமில்லை என்று கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அவரை விட்டுக் கொடுக்க மாட் டேன் என்று கூறிவிட்டார்.

இந்த விவகாரத்தில் பிரணாப் முகர்ஜி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந் தியும் ப.சிதம்பரமும் கோபத்தில் உள்ள நிலையில், ஞாயிறன்று அமெரிக்காவில் இருந்தபடி ப.சிதம்பரத்துடன் தொலை பேசியில் பிரணாப் பேசினார்.

அப்போது தனது கடிதம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது. மேலும் நியூயார்க் நகரில் இருந்த பிரத மரையும் பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.

அப்போது, இந்தக் கடிதம் வெளியே கசிந்ததற்கு நான் காரணமல்ல, அதை பிரதமர் அலுவலகம்தான் வெளியிட்டுள் ளது. நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்று பிரணாப் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் திங்களன்று, பிரணாப் நாடு திரும்பியுள்ளார்.

சட்ட அமைச்சர் பேட்டி

இந்நிலையில், பிரதமர் அலுவலகத் துக்கு நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கடி தம் எழுதிய விஷயம் அற்பமானது. இதற் கெல்லாம் அலட்டிக் கொள்ளத் தேவை யில்லை என்ற ரீதியில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரி வித்துள்ளார்.

அந்த கடிதத்தை நானும் பார்த்தேன். கவலைப்படும் அளவுக்கு அதில் எந்த விஷயமும் இருப்பதாகக் கருதவில்லை என குர்ஷித் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திங்கள், 26 செப்டம்பர், 2011

சி.பி.ஐ.யா? தமிழகக் காவல்துறையா?


எது விசுவாசமானது?


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்படுள்ளது. ராசா உள்பட மூவரும் அரசு பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு தொடர்ந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை சிபிஐ இன்று தாக்கல் செய்தது. சிபிஐ வழக்கறிஞர் லலித் அந்த மனுவை, நீதிபதி ஓ.பி.சைனி முன்பு தாக்கல் செய்தார்.

                                 

பிரிவு 409-ன் கீழ் அரசு பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவிடம் உதவியாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் மீது அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அத்துடன், இந்த வழக்கு முடியும் வரை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிஐ இந்த புதிய வழக்கை தாக்கல் செய்திருப்பதால், ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான உத்தரவு தாமதப்படும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட ஏனைய 14 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 409 உடன் குற்றச் சதி புரிந்ததற்கான 120பி-யும் சேர்க்கப்பட வேண்டும் என சிபிஐ தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 7 வருட சிறையும், அதிகபட்சமாக ஆயுள் சிறையும் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
யாரௌக்குநம்பிக்கை மோசடி ராசா செய்தார்.?பிரதமருக்கா? சிதம்பரத்துக்கா/அல்லது சொனியா-ராகுலுக்கா?
சி.பி.ஐ ,ரொம்ப குழப்பத்திலும்-ராசா ,கனிமொழியை வெளியவே விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பதாகத்தெரிகிறது.
அதிலும் யாரையோ காப்பாற்றவே இவை எல்லாம் செய்வதாகவும் தெரிகிறது.
அதற்கு நீதி மன்றங்களும் துணை போவதுதான் வேதனையானது.
இதுவரை வழக்கின் போக்கை கண்டுவரும் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ ,நீதிமன்றத்தின் போக்கைக் கண்டிக்க வேண்டும் வழக்கு என்று வரும் போது சந்தேகத்திற்கு இடமானவர்களை எல்லாம் விசாரிக்க வேண்டும்.
சிதம்பரத்தை விசாரிக்க மாட்டேன்.அம்பான்யை விசாரிக்க மாட்டென்.
மாட்டிக்கொண்ட ஆ.ராசா,கனிமொழி யை வெளியே விடாமல் மாற்றி ,மாற்றி வழக்குகளைப்போட்டு உள்ளேயே [ஜெயலலிதா தி.மு.க,முன்னாள்களை செய்வதுபோல்]வைத்டிருப்பேன் என சி.பி.ஐ.பிடிவாதமாக இருப்பதுடன் பகிரங்கமாகவும் தெரிவிப்பது இந்த விசாரனை-வழக்கை சிறுபிள்ளைத்தனமாக சட்டங்களுக்கு அப்பால் கொண்டு போய் விட்டதாகத் தெரிகிறது.
தி.மு.க.வினரை மட்டுமே விசாரிப்பதும்,காங்கிரசினரை விசாரிக்க மறுப்பதும் எந்தவிதத்திலும் நியாயமாகாது.சி.பி.ஐ,தன் மேல் ஏற்படஉள்ள கரும் புள்ளியை அழிப்பதற்குப் பதில் மேலும் அதிகமாக்கிக் கொள்வதாகவேப் படுகிறது.
சிதம்பரம் ,பிரதமர் மன்மோகன்சிங் போன்றோரையும் விசாரணை வட்டத்தில் கொண்டுவர வேண்டும்.
தனக்கு ஒன்றுமே தெரியாது என பொய் கூறியவருக்கு கடிதங்கள் மூலம் எல்லாமே தெரிந்திருக்கிறது.ஏலம் விடாததினால்தான் இழப்பு என்றால் அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏதோ பலன் கிடைக்கப் போய்தானே சும்மாவும் -ஒத்துழைப்புடனும் இருந்துள்ளனர்?
________________________________________________________________________________

ஆஸ்கார் தேர்வாகாதது ஏன்?
                          
2011-ம் ஆண்டிற்கான மாநிலமொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது தேர்வுக்கு, 16 இந்‌திய மொழிபடங்களைத் தேர்வு செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா. அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் படங்களும், இரண்டு மலையாள படங்களும், ஒரு தெலுங்கு, ஒரு மராத்தி, ஒரு பெங்காலி படமும் அடக்கம்.
இதில் முதல் இரண்டு இடங்களையும் மலையாள படங்கள் இரண்டும் பிடித்தன. ”அ‌தாமின்டே மகன் அபு”,” உருமி ”இந்த இரண்டு படங்களில் ஆதாமின்டே மகன் அபு படம்தான் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. எந்திரன், தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும்  தள்ளுபடி ஆகிவிட்டதாம்.
                                 
 இது போன்ற நகல் படங்களுக்கு என்று ஆஸ்கர் போல் நகல் போஸ்கர் என்று விருது ஒன்றை ஏற்படுத்தக்கூடாதா?
________________________________________________________
     @இனி ஆட்டையை போட்டு படம் எடுப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க,,,,,, @               

 =================================================
                    

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பிரதமர்+தயாநிதி=2ஜி

தொலை தொடர்பு துறையில் ( 2004 முதல் 2007 வரை ) மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி, ஸ்பெக்ட்ரம் விதி நிர்ணயம் மற்றும் எந்த அளவுக்கு விற்கலாம் என்ற விஷயத்தில் அமைச்சரவை குழு எடுத்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியிருக்கிறது.
இந்த கடிதம் மூலம் தானே விலை நிர்ணயத்தில் ராஜாங்கம் நடத்தி ஆதாயம் தேட தயாநிதி முயற்சித்துள்ளார்,அதற்கு மன்மோகன் சிங்கும் அனுமதித்துள்ளார் என்று தெரிய வருகிறது.
தகவல் அறியும் சட்டம் மூலம் விவேக்கார்க் என்பவர் இந்த கடித நகலை பெற்றுள்ளார்.
2006 ஜனவரி மாதம் பாதுகாப்பு துறை பரிந்துரையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பது மற்றும் விலை நிர்ணயத்திற்கு அமைச்சரவை குழு பரிந்துரைக்க ஒப்புதல் வழங்கினார் பிரதமர். இதன்படி அமைச்சரவை குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால் பிரதமரும், தயாநிதியும் சந்தித்து ( பிப். 1ல் ) பேசிய பின்னர் தலைகீழாக மாறியது.
“சீக்ரெட்” லெட்டர் ஊருக்கு தெரிந்தது: பரிந்துரைகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சரவை குழுவிற்கு பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் வெளியானதை தொடர்ந்து தயாநிதி பொறுமினார். இதனையடுத்து அவர் பிரதமருக்கு 2006 பிப்., 28 ம் தேதி கடிதம் ஒன்று எழுதி அனுப்புகிறார். இந்த கடிதம் சீக்ரெட் என்று மேலிடத்தில் குறியிடப்பட்டுள்ளது.
இதில், அமைச்சரவை குழுவின் பரிந்துரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அந்தக் குழுவிற்கு தாங்கள் அளித்துள்ள அறிவுரைகள் நாம்பேசிக்கொண்டதற்கு மாறாக உள்ளது. இது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைதொடர்பு துறையே சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதற்கு பிரதமர் பிரதமர் மவுனம் காத்தார். இவரது அலுவலகம் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை .
இதனையடுத்து தயாநிதி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரத்தை விற்க துவங்கினார். இதே வழியில் 2008 ல் பதவிக்கு வந்த ராஜாவும் பின்பற்றியிருக்கிறார். இதனால் ஸ்பெக்ட்ரம் பெரும் ஊழலில் சிக்கியது. இதன் மூலம் இந்த ஊழலுக்கு வித்திட்டவர் தயாநிதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. இதன் காரணமாக பிரதமரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் வலுப்படுகிறது.
இந்நிலையில், தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனால் அரசியல் மேலும் சூடு பிடிக்கும் என தில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
2 ஜி ஸ்பெகட்ரம் முறைகேடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி விழுங்கி நிற்கிறது. இந்த ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து மத்திய அமைச்சர் ராஜா முதல் கனிமொழி மற்றும் மெகா கம்பெனிகளின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊழலுக்கு வழி ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் சிதம்பரம் பதவி விலக வேண்டும்; இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வருகின்றன.
             .
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங்,’ இந்த அரசாங்கம் பல்வேறு முடிவுகளை எடுக்கும் போது கூட்டணி தர்மத்தையும் காக்க வேண்டியுள்ளது’ என்று கூறியிருந்தார்.
   ஆனால் இந்த 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் முதலில் தனக்கு ஒன்றுமே தெரியாது என பிரதமர் கூறிவந்துள்ளார்.
இப்போது வெளியாகும் கடிதங்கள் அனைத்தும் அவருக்கும்,சிதம்பரத்திற்கும் ஏன் காங்கிரசில் உள்ள பெருந்தலைகள் அனைவருக்கும் தெரிந்தே நடந்துள்ளது.அவர்களுக்கும் 2ஜி விற்பனையில் பங்கு இருக்கிறது.ஊழல் ந்டந்திருந்தால் அதில் கையை நனைத்தவர்கள்-கறை படிந்தவர்கள்தான் அனைவரும் என நாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
ஆனால் இதில் ஆ.ராசாவும்,கனிமொழியும் மற்றும் அலுவலர்கள் சிலரும் மட்டும் சி.பி.ஐ.ஆல் மாட்டி பிணை கூட இல்லாமல் திகாரில் வைக்கப்பட்டிருப்பதும்,அதில் பங்குள்ள சிதம்பரம் ,மன்மோகன்,அம்பானி,ரத்டன் டாடா போன்றோரை விசாரிக்க கூட முடியாது என சி.பி.ஐ.கூறுவதும் இந்த வழ்க்கின் போக்கு நியாயமாக இல்லை.உண்மைக்குற்றவாள்கள் தப்ப விடப்படுகிறார்கள்.இவை உள்நோக்குடந்தான் நடக்கிறது என்ற உண்மையான சந்தேகத்தை எழுப்புகிறது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அணு உலைகள் ஆரம்பம்,

                      
சீனாவில் தற்போது 14 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும் தனது மின் தேவைக்கு சீனா, அனல்மின் நிலையங்களை நம்பித்தான் உள்ளது. இதனால். சீனா வெளியிடும் கார்பனின் அளவு அதிகளவில் இருப்பதாகவும், சுற்றுச் சூழலுக்கு அது பெரும் கேடு விளைவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

27 அணுமின் நிலையங்கள்: அதனால், 2020க்குள், 80 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உற்பத்தி மூலம் தயாரிக்க சீனா முடிவு செய்தது. இதையடுத்து, 27 அணுமின் நிலையங்களை அமைப்பதில் சீன அரசு தீவிரம் கொண்டது. இவற்றில் பெரும்பாலானவை நாட்டின் கடற்கரையோரம் அமைந்தவை. ஒவ்வொரு நிலையமும், ஆயிரம் மெகாவாட் திறனை விட அதிகம் உற்பத்தித் திறன் கொண்டவை. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்படுபவை.

அமெரிக்காவை விஞ்சும் தொழில்நுட்பம்: அதேநேரம், தனது சொந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தாண்டின் இறுதிக்குள் ஒரு அணுமின் நிலையத்தை செயல்படுத்துவதிலும் சீனா முனைப்பு காட்டி வருகிறது. சீனாவின் உள்நாட்டுத் தயாரிப்பான சி.ஏ.பி.,1400 அணு உலை, அமெரிக்காவின் ஏ.பி., 1000 அணு உலையை விட அதிகளவில் மின் உற்பத்தியில் ஈடுபடும் திறன் கொண்டது. சி.ஏ.பி.,யை வடிவமைக்கும் பணியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். தனது உள்நாட்டு அணுமின் நிலையங்களை அமைக்கும் கையோடு, பாகிஸ்தானுக்கும் ஒரு கிகாவாட் அணுமின் நிலையத்தை அமைத்துத் தருவதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

பீதியூட்டிய புக்குஷிமா: இந்நிலையில் கடந்த மார்ச்சில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமியைத் தொடர்ந்து புக்குஷிமா அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டதும், அதன் நீண்ட கால விளைவுகள் பற்றிய ஆய்வுகளும் உலகளவில், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கின. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், தங்களின் அணுமின் நிலையங்களில் துவக்க காலகட்டத்தைச் சேர்ந்தவற்றை இழுத்து மூடின. சீனா, 27 நிலையங்களின் கட்டுமானத்தையும் நிறுத்தி விட்டதாக அறிவித்தது.

மீண்டும் துவக்கம்: ஆனால், நாட்டின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, அவற்றை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளது. இது சமீபத்தில், சீனாவின் சுற்றுச் சூழல் துறையின் உயர் அதிகாரி அளித்த பேட்டி மூலம் உறுதியாகியுள்ளது. தேசிய மேம்பாடு மற்றம் சீர்திருத்த கமிஷனின் துணைத் தலைவர் ஷீ ஷென்ஹூவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,"மின் சேமிப்பில் குறைந்த செலவு, மின் திறன் அதிகரிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை மேம்படுத்தல், பசுமை வாயுக்களை வெளியிடுவதில் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புடன் கூடிய அணுமின் சக்தியை மேம்படுத்தல் ஆகியவற்றில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.

கார்பன் குறைப்பில் ஈடுபாடு: கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் தொழில்நுட்பமான, கார்பன் பயன்பாடு மற்றும் சேமிப்பு (சி.சி.யு.எஸ்.,) குறித்த ஆய்விலும் சீனா தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது. இந்தாண்டில் மட்டும் சி.சி.யு.எஸ்., ஆய்வுக்காக சீனா, 62.7 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. அதேநேரம், தற்போது செயல்பாட்டில் உள்ள மற்றும் கட்டுமானத்தில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும், சீனா, பாதுகாப்பு மற்றும் பேரிடர் தாங்கும் வலிமை குறித்த பரிசோதனைகளை இந்தாண்டின் இறுதிக்குள் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது. அதனால், இந்தியாவில் அணுமின் நிலையங்களுக்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களைப் போல சீனாவிலும் நடந்து விடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு தெளிவாகவே உள்ளது.

                                       
வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதங்களைக் கண்காணிப்பதற்காக, ஜப்பான், உளவு செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது.வடகொரியா மீதான தென்கொரியா மற்றும் ஜப்பானின் சந்தேகம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிக்கோ நோடோ பதவியேற்றவுடன், இருதரப்பு உறவுகளைச் சீர்படுத்த முயலும்படி வடகொரியா கோரிக்கை விடுத்தது. அதை ஜப்பான் கண்டுகொள்ளவில்லை. வடகொரியாவின் அணுஆயுத உற்பத்தி மீது அமெரிக்கா, ஜப்பானின் சந்தேகம் இன்னும் தீரவில்லை. கடந்த 22ம்தேதி, ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து, எச் - 2ஏ என்ற உளவு செயற்கைக் கோள் ஏவப்பட்டது. மொத்தம், 470 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆக., 28ம் தேதியே விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. சூறாவளி தாக்குதல் இருந்ததால், மூன்று முறை ஏவும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் கடந்த வாரம் ஏவப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இருக்கும் இடங்களை இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும்.