மோடி நல்லவரா? கெட்டவரா?


                                      
குஜராத்தில் நடந்த சிறுபான்மை மக்கள் படுகொலை குறித்த வழக்கில், முதல்வர் நரேந் திர மோடியைச் சேர்ப்பது குறித்து, அகமதாபாத் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், பாஜகவினரும், அதன் ஊதுகுழலாக செயல் படுகிற சில ஊடகங்களும், நரேந்திரமோடிக்கு உச்சநீதிமன்றம், நற்சான்றிதழ் கொடுத்து பாராட்டியிருப்பது போன்ற சித்திரத்தை ஏற் படுத்துகின்றனர்.

நரேந்திரமோடியை இந்த வழக்கிலிருந்து விடுவித்து- உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வில்லை. மாறாக, இதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை அகமதாபாத் நீதிமன்றத் திடம் விட்டுள்ளது.

மதச்சார்பற்ற இந்தியா வெட்கித் தலை குனியும் வகையிலும், இந்திய மக்கள் அதிர்ச்சி யடையும் வகையிலும் குஜராத்தில், சிறு பான்மை மக்களுக்கு எதிரான படுகொலை நடந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த பாதிப் பிலிருந்து இன்னமும் கூட பெரும்பகுதி மக்கள் மீளவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் போதுதான் நீதித்துறையின் மீதும், மதச்சார்பின்மை மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரும். ஆனால், நீதி கிடைப்பது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருவது வேதனை அளிக் கிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசா ரணையும்கூட மிகவும் மந்த கதியிலேயே நடை பெறுகிறது. இந்த வழக்கின் குற்றப் பத்திரி கையில் இடம் பெற்றுள்ள எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஒருமுறை கூட ஏறி இறங்கவில்லை.

மாறாக, சர்ச்சைக்குரிய இடம் குறித்து அலகா பாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென்றும், சன்னி வாரியத்திற்கு உரிமையுடையது என்று கூறப்பட்ட இடத் தையும் எங்களிடம் ஒப்படைத்துவிட வேண் டும் என்றும் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் குதி யாட்டம் போட்டதையும் மறந்துவிட முடியாது.

நான் முதல்வர் பொறுப்பில் இல்லையென் றால், நேரடியாக கொலைக்களத்தில் இருந்தி ருப்பேன் என்று கூறியவர்தான் நரேந்திரமோடி. அவரது தூண்டுதல் மற்றும் ஆதரவுடன்தான் படுகொலை நடந்தது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

குஜராத்தில் நடந்த படுகொலை குறித்து, அவர் ஒருபோதும் வருத்தம் தெரிவித்தது இல்லை. மாறாக, ஒருவித பெருமித உணர்ச்சி தான் அவரது பேச்சுக்களில் உள்ளது. ஆனால், சாட்சிகளைக் கலைக்கவும், அச்சுறுத்தவும் அரசு அதிகாரத்தை மோடி பயன்படுத்தினார் என்பதும் வெளிப்படை. இந்த நிலையில்தான், குஜராத் வன்முறையில் பலியான காங்கிரஸ் எம்.பி. ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா, உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். மோடியையும் 62 அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டுமென்று கோரினார். இதை அகமதாபாத் நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அதேநேரத்தில், அந்த வழக்கு விசாரணை செல்லும் திசையை கண்காணிக்கும் பொறுப்பு, உச்சநீதிமன்றத்திற்கு உண்டு; இந்த பொறுப்பை தட்டிக் கழித்துவிட முடியாது.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் மதக்கலவரம் நடைபெற்ற போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.
 
கலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் நினைத்து மனம் வெதும்பிய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.
 
அந்த கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.
 
=========================================================================================
திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று தெரிவித்தார்.
                       .
 
 திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க.  வேட்பாளராக கே என் நேரு அறிவிக்கப்பட்டுள்ளார்.
==========================================================================================================
அமெரிக்காவைக் காப்பாற்றும் சீனா.
                        
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 2008ல் ஏற்பட்டது போல மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் உலகளவில் ஏற்படலாம் என பல பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
தற்போது ஜப்பானின் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான நொமுரா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவுக்கான(எம்.இ.என்.ஏ) தன் ஆராய்ச்சிப் பணிகளை முடக்கியுள்ளது.
இதனால் துபாய் மற்றும் லண்டனில் நொமுரா சார்பில் பணியாற்றிய ஐந்து பேர் வேலையிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூசே ஏ.ஜி நிதி நிறுவனம், லண்டனில் உள்ள தன் எம்.இ.என்.ஏ ஆராய்ச்சிக் கிளையை மூடிவிட்டது.
ஜேர்மனியின் டாயிட்ச் வங்கியும் எம்.இ.என்.ஏ ஆராய்ச்சிப் பிரிவை மூடிவிட்டது.மேலும் பல நிறுவனங்கள் மூட தயாராகி வருகின்றன.
நமது இந்தியாவில் அம்பானி,அகர்வால்,டாடா என பெரும் பண முதலைகளுக்கு வரியில் சலுகைகலைக்காட்டி வரும் போது அமெரிக்காவில் புதிய குறைந்தபட்ச வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்  பாரக் ஒபாமா.
இதன்படி 10 லட்சம்(ஒரு மில்லியன்) டொலருக்கும் அதிகமான வருமானம் கொண்டோர் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்த வேண்டி வரும். வருமானம் அதிகரிக்க அதிகரிக்க வரியின் சதவீதம் கூடிக் கொண்டே போகும்.
இதன் மூலம் அமெரிக்காவின் நீண்ட கால பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க அவர் முடிவு செய்துள்ளார். மேலும் இந்த திட்டத்தால் சேமிப்புக்கான முக்கியத்துவம் அமெரிக்காவில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் நடுத்தர வருமானம் கொண்டோர் பணக்காரர்களை விட அதிக வரி செலுத்த வேண்டியுள்ளதாக நீண்ட காலமாக உள்ள குற்றச்சாட்டுக்கு இதன் மூலம் தீர்வு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
இந்த புதிய திட்டத்துக்கு “பபே ரூல்” என பெயரிட்டுள்ளார் ஒபாமா. பணக்காரர்கள் மிகக் குறைந்த வரியை செலுத்துவதாக குற்றம்சாட்டியவர்களில் முக்கியமானவர் பிரபல முதலீட்டாளரான வாரன் பபே. இதைக் குறிப்பிட்டே தனது திட்டத்துக்கு அந்தப் பெயரைச் சூட்டியுள்ளார் அதிபர் ஒபாமா.
ஆனால் ஒபாமாவின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பும் எனத் தெரிகிறது. காரணம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பணக்காரர்களுக்கு அதிக வரிச்சுமை தரக்கூடாது என்று கூறிவரும் கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் நாட்டின் பட்ஜெட்டில் பற்றாக்குறையைத் தவிர்க்க இது முக்கிய வழிமுறையாக பார்க்கப்படுகிறது.
ஒபாமாவின் இந்தத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் மெடிகேர், மெடிஎய்ட் போன்ற சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எந்த அளவு வருமானத்துக்கு எவ்வளவு வரி என்ற விவரத்தை இன்னும் ஒபாமா விரிவாகக் கூறவில்லை. இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் தோராயமாக 1.5 ட்ரில்லியன் கூடுதல் வருமானம் அமெரிக்க அரசுக்கு கிடைக்கும் என்றும், இது அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறையைத் தீர்க்கும் என்றும் தெரிகிறது.
எப்படியாவது அமெரிக்காவை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற ஒபாமா பல அதிரடிகளை செய்கிறார்.அதன் எதிரி என கருதப்படும் சீனாதான் இப்போது அமெரிக்காவிற்கு பெரும் தோகைகளை நம்பி கடனாகத்தரும் நாடாக உள்ளது.
    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?