கூட்டணி தர்மம்-பகுதி இரண்டு,
""உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க., மேற்கொள்ளும் ஒதுக்கீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,'' என, இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
பாவம் இவர்கள்நிலை.
இது தற்போதைய செய்தி: |
தமிழகத்தில் 2 கட்டமாக அக்டோபர் 17 மற்றும் 19ம் திகதிகளில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. |
இதுகுறித்து சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியதாவது: வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 29ம் தேதி, வேட்புமனு பரிசீலனை 30ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி அக்டோபர் 3. அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் நடைபெற உள்ளது. முதன்முறையாக இந்த உள்ளாட்சி தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு அனைத்து மாநகராட்சிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் மற்ற பகுதிகளுக்கும் நடக்கவுள்ளது. ஆனால் தனது கூட்டணிகட்சிகலைக் கழற்றிவிட்டு தி.மு.க,வைப்போல் தனியே நின்று வாரி சுருட்டிக்கொள்ள அ.தி.மு.க,ஜெயலலிதா எண்ணிவிட்டார். அதற்கேற்றார்போல் அய்யரும் தேர்தல் தேதிகலை அறிவித்து விட்டார்.தா.பாண்டியன் போல் இன்னும் காத்திருக்க நேரம் கொடுக்கப்படவில்லை.இன்றே வேட்புமனுதாக்கல் ஆரம்பம். அதற்குள் இவர்கள்தொகுதியைக் கண்டெடுத்து பிரித்துஅதன் பின் விருப்பமனு வாங்கி தேர்வு செய்து வேட்பாளர்கலை அறிவித்து அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து காலம் மிக சுருக்கம். கருணாநிதி கூறியது போல் தனி,பெண்கள்தொகுதிகளை எல்லாம் தேர்தல் ஆணையம் முன்னதாக முறையற்ற் முறையில் அ.தி.மு.க.விற்கு மட்டுமே கூறியுள்ளதாகத் தெரிகிறது. அ.தி.மு.க.பட்டியல் அதற்கேற்ற முறையில் அமைந்துள்ளது தெரிகிறது.தேர்தல் ஆணையத்தின் -ஆளுங்கட்சியின் தேர்தல் முறைகேடுகள் ஆரம்பமாகி விட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. இதை தி.மு.க.வைத்தவிர மற்ற கட்சிகள் எதிர்க்காததது ஏனோ? ஜெயா அரசின் மாநில தேர்தல் ஆணையர் அய்யரோ தொகுதி விபரங்களை அரசுதான் வெளியிட வேண்டும் என்று கூறுகிறார்.இதுவரை ஆன்,பெண்,தனித்தோகுதிகலை தேர்தல் ஆணையம்தானே அறிவித்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு தேவையான நேரம் தராமல் அ.தி.மு.க.பட்டியல்காரர்கள் மட்டும் உடனே மனு தாக்கல் செய்யும் அளவில் மட்டுமே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது தவறு. அதை விட முக்கியம் இன்றுதான் பல இடங்களில் தேர்தல் வகுப்புகள் நடக்கிறது.ஆனால் அதற்கு வழியின்றி அனைவரும் மனு வாங்க செல்லவேண்டும் ,பயிற்சிகூட இல்லாதவர்களை வைத்து நடக்கப் போகிறது.இந்த உள்ளாட்சித் தேர்தல் _____________________________________________________________. |
ஐ.நா. நடக்கப்போவது என்ன?
======================================================
தற்போதுஐ. நா, சபை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மூன்றாண்டுகளுக்குப் பிறகு செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் இம்முறை பலவீனமான நிலையில்தான் உலக நாடுகளின் தலைவர்களை, குறிப்பாக, வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பும், மத்திய அரசின் மீது ஒன்றன் பின் ஒன்றாக எழுந்திருக்கும் ஊழல் புகார்களும் பிரதமர் மன்மோகன் சிங் மீதிருந்த மரியாதையை வெகுவாக உலக அரங்கில் பாதித்திருப்பதாக அமெரிக்கப் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.
சாதாரணமாக, இதுபோன்ற உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ளும்போது வல்லரசு நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து உரையாடுவது வழக்கம். பல பிரச்னைகளுக்கு அதிகாரபூர்வமல்லாத முறையில் இந்த சந்திப்புகளின் மூலம் தீர்வு காணப்படுவதும் வழக்கம்.
அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பும், மத்திய அரசின் மீது ஒன்றன் பின் ஒன்றாக எழுந்திருக்கும் ஊழல் புகார்களும் பிரதமர் மன்மோகன் சிங் மீதிருந்த மரியாதையை வெகுவாக உலக அரங்கில் பாதித்திருப்பதாக அமெரிக்கப் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.
சாதாரணமாக, இதுபோன்ற உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ளும்போது வல்லரசு நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து உரையாடுவது வழக்கம். பல பிரச்னைகளுக்கு அதிகாரபூர்வமல்லாத முறையில் இந்த சந்திப்புகளின் மூலம் தீர்வு காணப்படுவதும் வழக்கம்.
இந்த முறை ஐ.நா.சபையின் பொதுக்குழு கூட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் யாரையுமே சந்திக்கப் போவதில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தின்போது ஈரான் இலங்கை, நேபாளம், ஜப்பான், தெற்கு சூடான் என்று ஐந்து நாட்டு அதிபர்களிடம் மட்டுமே நேரடிப் பேச்சுவார்த்தையில் பிரதமர் அதிகாரபூர்வமாக ஈடுபட இருக்கிறார்.
புதிதாக உருவாகி இருக்கும் தெற்கு சூடான் அதிபருடனான நமது பிரதமரின் முதல் சந்திப்பு, நல்லிணக்க சந்திப்பாக இருக்குமே தவிர, முக்கியமான எந்த முடிவுகளும் அதில் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை.
அதேபோல, இலங்கை அதிபர் ராஜபட்சவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் சந்திப்பின்போது முக்கியமான பிரச்னைகள் எதையும் விவாதிக்க இருப்பதாக இதுவரை தகவல் இல்லை. வர்த்தக ரீதியான சில ஒப்பந்தங்கள் பற்றியும் இலங்கையில் இந்திய முதலீட்டை அதிகரிப்பது பற்றியும் அவர்கள் பேசக்கூடும் என்று சொல்லப்படுகிறதே தவிர, இலங்கைத் தமிழர் பிரச்னை, இந்தச் சந்திப்பின்போது முன்னிலைப்படுத்தப்படும் என்று தோன்றவில்லை.
ஜப்பானின் புதிய பிரதமர் யோஷிஹிகோ நோடாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் முதல் சந்திப்பு இது என்பதால், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஃபுகுஷிமா அணு உலை விபத்து பற்றியும் அதன் தொடர் நடவடிக்கையாக ஜப்பான் மேற்கொள்ளும் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்தும் பிரதமர் விவாதிக்கக்கூடும் என்று சொல்லப்பட்டாலும், அவர்களது சந்திப்பு வர்த்தக உறவு பற்றியும், அணு மின் சக்தி ஒப்பந்தத்துக்கு ஜப்பானின் ஆதரவு பற்றியும்தான் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
பிரதமரின் நியூயார்க் விஜயத்தில் புதிய நேபாளப் பிரதமர் பாபுராம் பட்டராயுடனான சந்திப்புக்குத்தான் இந்திய வெளிவிவகார அமைச்சகம் முக்கியத்துவம் கொடுக்கிறது. கடந்த சில மாதங்களில் சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை என்று இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளின் அதிபர்களையும் பிரதமர் சந்தித்திருப்பதால், நேபாள பிரதமருடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான சில முக்கியமான பிரச்னைகள் அலசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலம் வரை இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேபாளம், அங்கே நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பல பிரச்னைகளில் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. நேபாளத்துடனான இந்திய உறவு பலவீனமடைவதால் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்ற பயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் புதிய பிரதமருக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தி நேபாளத்தின் அரசியல் நிலையின்மையை அகற்ற பிரதமர் மன்மோகன் சிங் முயலக்கூடும் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் நியூயார்க் விஜயத்தின் மிக முக்கியமான நோக்கம் எப்படியாவது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என்று பிரதமருக்கு நெருக்கமான அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த பல வருடங்களாக கோரிக்கையாக மட்டுமே இருந்துவரும் ஐ.நா. சபையின் சீர்திருத்தம் இந்த முறை பொதுக்குழுவில் ஒரு தீர்மானமாக முன் வைக்கப்பட இருக்கிறது.
ஜி-4 நாடுகள் என்று அழைக்கப்படும் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேஸில் ஆகிய நான்கு நாடுகளும் இந்தத் தீர்மானத்தை வழிமொழிகின்றன. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் 193 அங்கத்தினரைக் கொண்ட ஐ.நா. சபையின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தினரின் ஆதரவும், "வீட்டோ' அதிகாரம் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளின் ஒப்புதலும் கிடைத்தாக வேண்டும். சீனாவைத் தவிர, ஏனைய நாடுகள் ஐ.நா. சபையின் சீர்திருத்தத்துக்கு ஆதரவாக இருந்தாலும், சீனா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்குமா என்பது சந்தேகமாகவே இருந்து வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் முந்தைய சீன விஜயத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பியபோது, சீன அதிபர் அதை புன்சிரிப்புடன் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் நீண்ட நாள் கனவான ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் என்கிற கெüரவம் நனவாகுமா என்பதுதான், இப்போதைய பிரதமர் விஜயத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் பதவி இந்தியா அடைந்துவிட்டால்அதன் மூலம் உள்நாட்டில் சரிந்து கொண்டிருக்கும் தனது அரசியல் செல்வாக்கை மீண்டும்பெற்றுவிடலாம் என மன்மோகன் சிங் எண்ணுகிறார்.அது நடக்குமா?ஏற்கனவே வரிசையாக நிற்கும் ஊழல்,விலைவாசி உயர்வு,கண்ணை மூடிக்கொண்டு பன்னாட்டு நிறுவனக் கொள்ளைக்கு துணைபோவது போன்ற வற்றை சமாளித்தால் தான் ஏதாவது செல்வாக்கை எதிர்பார்க்கலாம்.ஐ.நா.சபையில் இந்தியா உறுப்பினராவதில் இந்திய பாமர மக்களுக்கு என்ன கிடைக்கும்?