ஏழை மக்களின் கோடீஸ்வர பிரதிநிதிகள்,


:நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கமல் நாத்துக்கு தான், மத்திய அமைச்சர்களிலேயே, அதிக அளவு சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சேர்த்து ரூ.263 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
மத்திய அமைச்சரவையிலேயே, மிக மிகக்குறைந்த சொத்துக்களை கொண்டவராக ஏ.கே.அந்தோணி உள்ளார். மொத்தமே ரூ.1.8 லட்சம் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார். இவரிடம் ரூ.84 ஆயிரம் ரொக்கம் உள்ளதாம்.
                        
இவர்கள் தவிர, சுஷில் குமார் ஷிண்டேவுக்கு, 7.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், அமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு, 56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும், வீர்பத்ர சிங்கிற்கு 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும், குலாம் நபி ஆசாத்துக்கு 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சர்களுக்கு எவ்வளவு சொத்து?மத்திய அமைச்சரவையில் உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த இணை அமைச்சர்களை பொறுத்தவரை, நெப்போலியனுக்கு, 10.90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி செல்வனுக்கு, 50.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாராயணசாமிக்கு 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பழனி மாணிக்கத்துக்கு சொந்தமாக, 55 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகனுக்கு வெறும் ஐந்து கோடி ரூபாய்க்குதான் சொத்து உள்ளது."மத்திய அரசு மற்றும் அதன் அமைச்சர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து அமைச்சர்களும், தங்களின் சொத்துப் பட்டியலை, பிரதமர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இந்த சொத்து பட்டியல் குறித்த விவரங்களை, ஆகஸ்ட் 31க்குள் அளிக்கும்படியும், அவர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, பிரதமர் அலுவலக இணையதளத்தில் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் உள்ள, 77 பேரில், விலாஸ்ராவ் தேஷ்முக், கிருஷ்ணா திராத், ஜெயந்தி நடராஜன், ஜிதேந்தர் சிங், ஜெகத்ரட்சகன் ஆகியோரை தவிர, மற்றவர்களின் சொத்து பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதுபற்றிய விவரம்:பிரதமருக்கு 4.8 கோடி ரூபாய்:பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. இரண்டு வீடுகள், "மாருதி 800' கார் ஆகியவை உள்ளன. இவரது மனைவி குர்சரண் கவுரின் பெயரில், பாட்டியாலா வங்கியில் சேமிப்பு கணக்கில், 22 லட்ச ரூபாய் உள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு, 1.25 கோடி ரூபாய். கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் மொத்த சொத்து மதிப்பு, 13.33 லட்ச ரூபாய். இவருக்கு அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் மதிப்பு, 16.22 கோடி ரூபாய். இவரது வங்கி கணக்கில் 65 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 
முதலீட்டின் பங்கு மதிப்பு 40 லட்ச ரூபாய். நகைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய். மற்ற சொத்துக்களின் மதிப்பு, 4.75 கோடி ரூபாய். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுக்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி கோடிகளில் குளிக்கும் இவர்களுக்கு மக்களின் வறுமையும் அதனை போக்க வேண்டும் என்ற எண்ணமும் எப்படி இருக்கும்?
க்கிறது.நீதிமன்றம் ஆணையிட்டும் ஒன்றும் நடக்கவில்லையே?
=======================================================================================================
++இளங்கோவன்[ ஏட்டிக்குப்] போட்டி+
ராஜீவ் காந்தியும் அவருடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு திரும்ப வந்தால் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
கேள்வி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் தண்டனையை குறைக்க வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதே?
பதில்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தலைவர் ராஜீவ் காந்தியும், தியாகி லீக் முனுசாமியும் அவர்களுடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்.
தலைவர் இளங்கோவன் எப்போதும் இடக்குமடக்காகப் பேசக்கூடியவர்தான்.அதற்காக தேவையற்றதை பேசியுள்ளார்.
ராஜிவ் காந்தி உயிருடன் வந்தால் தூக்குத்தண்டணையைநீக்கலாம் என்பது சரியானது அல்ல.
இதுவரை அப்படி தூக்குத்தண்டனை விலக்கப்பட்டவர்களுக்கு அப்படி உயிருடன் திரும்பியதால்தான் விலக்கு அளிக்கப்பட்டதா?
மனிதாபிமான முரையில்தான் விலக்கு கேட்கப்படுகிறது.ஏற்கனவே ஆயுள்தண்டனையை விட அதிகமாக 22 ஆண்டுகள் சிறையில் வாடியவர்களுக்குத்தான் 
தூக்குத்தண்டனை ஏன் அதிகமாக வழங்கப்பட வேண்டும்.அவர்கள்தான் 22ஆண்டுகள் தனிமைச்சிறையில் வாடிவிட்டார்களே?
ஒரு குற்றத்திற்கு இரு தண்டனைகளா?
ஆயுள் தண்டனை-அது முடிந்ததும் தூக்கா?
ராஜீவ கொலையில் அவர்களுக்கு தொடர்பில்லை என கூறப்படும் வாதங்களை ஒதுக்கி அரசு அதாவது காங்கிரசின் எண்ணப்படி மட்டுமே விசாரணை ஒருதலைப் பட்சமாக-புலிகளை குற்றம் சாட்டிமட்டுமே கடிவாள விசாரணை நடந்துள்ளது.
சந்தேகத்திற்காளான சந்திராசாமி,சுப்பிரமணியசாமி,நரசிம்மராவ் போன்றோரை இவர்கள் விசாரிக்கவே இல்லையே ஏன்?
இப்போதுகூட விசாரணை செய்யலாமே.
இம்மூவரும் தூக்கிலிடப்பட்ட பின்னர் இவர்கள் குற்ற வாளிகள் அல்ல எனத்தெரிந்தால் இளங்கோவன் என்ன செய்வார்? இவர்கள் உயிரை திருப்பி வழங்குவாரா?அல்லது தானும் தூக்குகயிற்றை முத்தமிடுவாரா?
முதலில் சந்தேகத்திற்கு இடமானவர்கலை விசாரிக்கப்பாருங்கள்’.
முன்னாள் சி.பி.ஐ,அலுவலர் மோகன் தாஸ் கூறுவதை சற்று கவனித்து செயல்படுங்கள்.உண்மைகள் வெளிவரட்டும் .அதன் பின் உங்கள் தண்டனைகளை நிறைவேற்றுங்கள்.
____________________________________________________________________
2-ஜி போய் 3-ஜி வந்துட்டு,,,.
3ஜி ,னுசொல்லுறாங்களே அப்படின்னு நிறைய பேர் நினைக்கலாம். இப்போ இருக்கும் 2ஜி க்கும், புது ரிலீஸ் ஆன 3ஜி க்கும் என்ன வித்தியாசம் அப்புறம் ஏன் நாம் 3ஜி க்கு மாறணும்.
சரி இப்போ ஏன் நாம 3ஜி போறோம்னா நாம இப்போ பயன்படுத்துற 2ஜி ல நமக்கு சில குறைகள் இருக்கு அதாவது உங்களுக்கு அருகில் டவர் இல்லை என்றால் சிக்னல் ப்ராப்ளம் ஆவதுதான்,வாய்ஸ் கிளாரிட்டி,டேட்டா ரேட் போன்றவை கூட.
சரி 3ஜில என்ன இருக்கு?
                              
  • வீடியோ காலிங்
  • மொபைல் டி‌வி
  • மிக வேகமான டேட்டா சர்வீஸ்
  • மிக அதிகமான ஏரியா கவரேஜ்
  • ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சர்வீஸ்
  • வீடியோ கான்பரன்சிங்
2ஜி ஐ நாம் GSM(Global System for Mobile Communication ) என்பது போல 3ஜி  ஐ IMT2000 என குறிப்பிடலாம். 2000 என்பது அதன் frequency. இதிலும் நிறைய வகைகள் உள்ளன.
3ஜி ஆனது உலகில் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டில் இது டொகோமோ நிறுவனத்தால் அறிமுகபடுத்தப்பட்டது. பின்னர் பல நாடுகள் இதை பயன்படுத்த தொடங்கின. இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் இதன் வேகமான டேட்டா ரேட் தான். அதாவது, நிற்கும் அல்லது நடக்கும் நபர்களுக்கு 2 MBPS, வாகனங்களில் செல்பவர்களுக்கு 384 Kbps. இது எல்லா இடங்களிலும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது. இன்னொன்று இதன் செக்யூரிட்டி.
2ஜி யில் மொபைல் மூலம் பிரவுசிங் செய்யும் போது போன் கால் வந்தால் இணைய இணைப்பு கட் ஆகிவிடும். ஏதாவது Download கொடுத்து இருந்தால் அது Failed  ஆகி இருக்கும். ஆனால் 3ஜி யில் இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். இதில் GPRS சேவைக்கு EGPRS, EEGPRS போன்ற பல முறைகள் உள்ளன.
இப்போது நாம் பயன்படுத்தும் போன்கள் மூலமாக 3ஜி சேவைகளை பெற முடியாது என்பது இதன் குறையாக இருப்பினும் அடிக்கடி போன் மாற்றுவதால் அடுத்த முறை போன் வாங்கினால் 3ஜி சேவை உள்ளதா எனக் கேட்டு வாங்கவும். சாம்சங், நோக்கியாவில் குறைந்த விலைக்கே 3G போன்கள் கிடைக்கின்றன. அதிலும் முன் காமிரா இருந்தால் மட்டுமே வீடியோ கால் பெற முடியும்.
எனினும் இலங்கை மற்றும் இந்தியாவிலும் தற்போது 3Gக்கு மேலதிகமாக 3.75G மற்றும் 4Gபோன்றவை அறிமுகமாகியுள்ளன.
ஆனாலும் இன்னும் 2-ஜி பிரச்னையே இங்கே முடியலையே.
                                      

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?