எப்போதும் இதே நிலையா?



”இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய வெளி மாநிலங்களுக்கு ஆர்டர் வழங்குவதை கண்டித்து ஈரோட்டில் நேற்று 27 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் 8 கோடிரூபாய்க்கான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு சார்பில் ஏழைகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. இதை உற்பத்தி செய்ய ஈரோடு மாவட்டத்துக்கு அதிக அளவில் கூட்டுறவுத்துறை மூலம் ஆர்டர்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலைகளில் 5 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உள்ள கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யவும், மீதமுள்ள 95 சதவீதம் வெளிமாநிலங்களில் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கோ&ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் உமாசங்கர் அறிவித்தார். இது விசைத்தறியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகத்தில் விசைத்தறி தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
                         
இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய வெளி மாநிலங்களுக்கு ஆர்டர்கள் வழங்குவதை கண்டித்து நேற்று ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வீரப்பன்சத்திரம், சித்தோடு பகுதிகளில் 27 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் பகுதியில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த வேலை நிறுத்தத்தால் ஸீ8 கோடி மதிப்பிலான 16 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வீரப்பன்சத்திரம் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் அசோகன் கூறுகையில், ‘வெளி மாநிலங்களுக்கு இலவச வேட்டி, சேலை ஆர்டர் வழங்கும் அரசின் முடிவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் நடத்தி இருக்கிறோம். கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்துவோம்‘ என்று கூறியுள்ளார்.

     சென்ற முறை ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இதே போன்று ஆந்திராவில் இலவச சேலை-வேட்டிகளுக்கு.
ஆர்டர் கொடுக்கப்பட்டதால் தமிழக நெசவாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து போராட்டத்தி குதித்தனர்.பல நெசவாளர்கள் மண்டை காவல் துறையினரால் உடைக்கப்பட்டது.
                               
நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன.அது தனது ஆட்சிக்கு அசிங்கம் என அதைத்திறந்தவர்கள் தாக்கப்பட்டனர்,சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின் ஆட்சி மாறியது .
முந்தைய ஆட்சியில் செய்த தவறையே இம்முறையும் ஜெயலலிதா செய்கிறார்.
ஏன்?தமிழக நெசவாளர்கள் இலவச துணிவகைகளை நெய்யக்கூடாது.
நம் இலவசத்திற்கு செலவிடும் பணம் நமது தமிழகத்திலேயே உபயோகப்படக்கூடாது.எத்தனை ஏழை நெசவாளர்கள் வாழ்வில் அது உபயோகமாக இருக்கும் .ஆந்திர நெசவாளர்களுக்கு கொடுப்பதை இங்குள்ள உழைப்பாளி க்கு கொடுத்தாலென்ன?
நீங்கள் கமிசனை எதிர்பார்த்து இந்த ஆர்டர்களைக் கொடுக்கிறீர்களா? அதே கமிசனை இங்கேயே பெற்றுக்கொள்ளுகள்.
இங்குள்ள நெசவாளர் வாழ்க்கையில் மீண்டும் விளையாடி ஆட்சியை அலங்கோலமாக்கி.பறிகொடுக்காதீர்கள்.
======================================================================
மீண்டும் -மீண்டும் குண்டு வெடிப்பு,,,,

                   

 உயர்நீதிமன்றத்தின் 5ம் வாயிலில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பினர் உரிமை கோரியுள்ள போதிலும், அவர்கள்தான் இந்தத் தாக்குதலைச் செய்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என உட்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் எஸ்.ஜி.சின்ஹா, அதுபற்றி இந்திய உட்துறை அமைச்சின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். “அந்த அமைப்பினர் குண்டு வெடிப்புக்கு உரிமைகோரி அனுப்பிய இ-மெயிலை ஆராய்ந்து வருகிறோம். எமது ஆய்வுகளில், குண்டை வெடிக்க வைத்தது அந்த அமைப்பினர்தான் என்று கண்டுபிடிக்கப்படும்வரை, எதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை” என்பது அவரது கூற்று.
harkatuljihadi2011@gmail.com என்ற இ-மெயில் ஐடியில் இருந்தே உரிமை கோரல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இ-மெயில் எந்த இடத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதை 20 அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழுவினர் ட்ராக் டவுன் பண்ணிவிட்டனர்.
                      
ஜம்முவிலுள்ள கிஷ்ட்வார் மாவட்ட இன்டர்நெட் மையம் ஒன்றிலிருந்து குண்டுவெடிப்புக்கு உரிமைகோரல் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. மையத்தின் உரிமையாளர் விசாரிக்கப்பட்டுள்ளார். மேலதிக விபரங்கள் ஏதும் இன்னமும் தெரியவரவில்லை.
“இதுவரை எமது ஆய்வுகளில், சூட்கேஸில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. நன்கு திட்டமிட்டே இந்த குண்டுவெடிப்பை, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமுள்ள இந்தப் பகுதியில் நிகழ்த்தியுள்ளார்கள் என்பதும் தெரிகின்றது.
திட்டமிடலுக்காக அவர்கள் இந்தப் பகுதியில் ஏற்கனவே நடமாடி, பாதுகாப்பு ஏற்பாடுகளை நோட்டமிட்டு இருப்பார்கள் என்றும் கூறமுடியும். அதைத் தவிர, உறுதிப்படுத்தக்கூடிய வேறு தகவல்கள் ஏதும், தற்போது எம்மிடம் கிடையாது.” என்றும் கூறியிருக்கிறார் அவர்.
இவர் இப்படிச் சொல்வதன் காரணம், உயர்நீதிமன்றத்தின் 5ம் வாயிலில் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பது குண்டு வைத்தவர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. அத்துடன், இந்த கேட்டில் உள்ள மெட்டல் டிட்டெக்டர்களும் கடந்த சில நாட்களாகவே பழுதடைந்த நிலையில் உள்ள விஷயத்தையும் அவர்கள் அறிந்து கோண்டே, இந்த இடத்தை குண்டு வைப்பதற்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
தாக்குதலை நடாத்துவதற்கு ஒரு புதன் கிழமையைத் தேர்ந்தெடுத்ததிலும், கவனமான திட்டமிடல் இருந்துள்ளது. காரணம், மற்றைய நாட்களைவிட, புதன் கிழமைகளில்தான் 5ம் வாயிலில் ஜன நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
                                           
இதைத் தவிர, புதன் கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சென்டிமென்டலாக மற்றொரு காரணமும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. மூன்று மாதங்களுக்கு முன்னரும் (மே 25ம் தேதி) டில்லி ஹைகோர்ட்டில் குண்டுவெடித்தது. அதுவும் ஒரு புதன் கிழமை. ஜூலை 13ம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றதல்லவா? அதுவும் ஒரு புதன்கிழமைதான். அதற்குமுன், உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்ததும் ஒரு புதன்கிழமையே!
குண்டுவெடிப்புக்கு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பு உரிமை கோரிய பின்னரும், அதை உட்துறை அமைச்சு உறுதிப்படுத்தாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
கடந்த 4 வருடங்களாக இந்த இயக்கம் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கோண்டுள்ள போதிலும், அதை இந்திய அதிகாரிகள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதற்கு, உட்துறை அமைச்சின் ‘ஏதோ ஒரு’ கொள்கை ரீதியான காரணம் இருக்கலாம். குறிப்பிட்ட இயக்கம் இந்தியாவில் இயங்குவதை சில காரணங்களுக்காக அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல் இருக்கலாம்.
ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பின் கடந்தகாலச் செயற்பாடுகளைப் பாருங்கள், அதில் ஏதாவது ஒரு தாக்குதலுக்கு இந்த அமைப்புத்தான் காரணம் என மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதா என்பதையும் பாருங்கள்:
• 2007 ஆகஸ்ட் 25ல், ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு – ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி இயக்கம்தான் சந்தேக லிஸ்டில் உள்ளது. ஆனால், இன்னமும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை!
• 2008 மே 13ல், ஜெய்பூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு – இதே இயக்கம்தான் செய்ததாக சந்தேகம். ஆதாரங்கள் இல்லாததால் நிரூபிக்கப்படவில்லை.
• 2008 ஜூலை 25ல், பங்களுருவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் – இதே இயக்கம்தான் நடாத்தியது. இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.
• 2008 ஜூலை 26ல், அஹ்மதாபாத் தொடர் குண்டு வெடிப்புகள் – இதே இயக்கத்தின் கைவரிசைதான். இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.
• 2008 செப்டெம்பர் 13ல், டில்லி தொடர் குண்டு வெடிப்புகள். – இதே இயக்கம்தான். ஆதாரங்கள்? டில்லி போலிஸ் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
• 2008 அக்டோபர் 1ல், திரிபுரா அகர்தாலா குண்டு வெடிப்பு – இதே இயக்கம் உரிமை கோரியது. ஆனால், நிரூபின்ன ஆதாரம் கிடையாது.
• 2008 அக்டோபர் 30ல், அசாம் குண்டு வெடிப்புகள் – இதே இயக்கம் ஒரே நாளில் நான்கு இடங்களில் (குவாஹட்டி, பார்பேடா, காக்ராஜ்கர், பாங்கைகான்) குண்டு வைத்துள்ளது.
இந்தியாவின் மும்பையில் எத்தனை முறை குண்டு வைத்தாலும் பாதுகாப்போ-சோதனைகளோ  அடுத்த குண்டு வெடிப்புவரை அதிகரிக்கப்படுவதில்லை.அந்த பாதுகாப்பும் சில நாட்கள்தான்.கடலோரப்பாதுகாப்போ அதிக மோசம்.
சுற்றுலாத்துறையினர் போல் ”குண்டுவைத்து மகிழ இந்தியாவுக்கு வாங்க “ என விளம்பரம் தராதது ஒன்றுதான் இந்திய உள்துறையினர் செய்யாத குறை. அதையுமே செய்து விடாலாம்.

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக 3 ஆவதாக வந்துள்ள இ மெயிலில் அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஹியூஜி தீவிரவாத இயக்கம் அன்றைய தினமே பொறுப்பேற்றிருந்த நிலையில், நேற்று வந்த இரண்டாவது மெயிலில் இந்தியன் முஜாகிதீன் தாங்கள்தான் அந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக பொறுப்பேற்றிருந்தது.
மேலும் வருகிற 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வணிக வளாகம் ஒன்றிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தபோவதாகவும் அதில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று வந்த 3 ஆவது இ மெயிலில், அடுத்ததாக அகமதாபாத் நகரில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
யாகூ இ மெயிலில் இருந்து இந்த மெயில் வந்திருப்பதாகவும், இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
_________________________________________________________________________________________
தற்கொலை சாதனையா?
         
சீனாவில் தற்கொலைகளின் எண்ணி்க்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் தற்கொலை செய்து கொள்வதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை முயற்சிகள் சீனாவில் நடக்கின்றனவாம். இவர்களில் பெரும்பாலானோர் எப்படியாவது காப்பாற்றப்பட்டாலும், தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.
அதிக அளவு தற்கொலையில் ஈடுபடுவோர் 15 முதல் 34 வயதுக்குட்பட்டோர்தான் என்கிறது இந்த அறிக்கை.
75 சதவீத தற்கொலைகள் கிராமங்களில் நடப்பதாகவும், இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்தான் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் இன்று செப்டம்பர் 9-ம் தேதி சீனாவில் தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

                   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?