அ [வ] லையில் சிக்கிய சிதம்பரம்
இந்தியாவின் கருவூலத்திற்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப் பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும்2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள் வரிசையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முதலில் சிக்குகிறார். நிதியமைச்சராக இருந்தபோது, மத்திய தொலைத்தொடர்புத் துறை யின் இரண்டாம் தலைமுறை அலை வரிசைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) உரிமங்களை தனியார் நிறுவனங் களுக்கு வழங்குவது தொடர்பாக, ப. சிதம்பரம் மேற்கொண்ட முடிவுகளே ஊழலுக்குக் காரணம் என்று, தற்போ தைய மத்திய நிதி அமைச்சகம், பிரத மருக்கு எழுதிய கடிதமே அம்பலப் படுத்தியுள்ளது. இந்தப்பின்னணியில் ப.சிதம்பரம் உடனடியாக பதவியிலிருந்து வெளி யேற வேண்டுமென்ற குரல் வலுத் துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவ காரத்தில் நாட்டின் கருவூலத்திற்கு நஷ் டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில் லை என்று பிரணாப் முகர்ஜி தலை மையிலான நிதியமைச்சகம் நேரடி யாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகத் தின் மூத்த அதிகாரி ஒருவர் தற்போ தைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி யின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவல கத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப. சிதம்பரம் இடையே நடந்து வரும் மோத லும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்தவரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகி யோர் முன்னிலையில் உச்ச நீதிமன் றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்த போது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார். இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி யின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட தாகும். நிதியமைச்சகத்தின் பொருளா தார விவகாரங்கள் பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகர்ஜியின் முழு ஒப்புதலு டன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 14 பக்கம் கொண்ட அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை யை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதி யமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத் தனர்; ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில்’ என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச் சர் ஆ.ராசா எடுத்த முடிவுக்கு அப் போது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட் ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலி யுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது. ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ரூ.1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட் ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான். இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிர ணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவா கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு நிதிய மைச்சகம் அனுப்பிய இந்தக் கடிதத் தை தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத் தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது. இந்தக் கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடு கிறது என்றார். இந்நிலையில் இந்தக் கடிதம் குறித்து கருத்துக் கூற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார். இந்திய- அமெரிக்க முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து கூற முடியாது என்றார். அதே நேரத்தில் ஊழலை ஒழிக்க தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்ததே நான் தான் என்றும் அவர் கூறினார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகா ரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவ தைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமெ ரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிதம்பரம் தொலைபேசி மூலம் விளக்கமளித்தார். புதன் இரவு 20 நிமிடங்கள் இரு வரும் தொலைபேசியில் பேசினர். அப் போது, 27ம் தேதி நான் நாடு திரும்பும் வரை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிக்கிம் நிலநடுக்க பாதிப்புகளை பார்வையிட சென் றுள்ள அமைச்சர் ப.சிதம்பரத்தி டம், கங்டோக் நகரில், இப்பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.தப்பிக்குமளவு பேட்டி கொடுக்க யோசிக்க வேண்டாமா? இந்த ஒருகடிதமே இப்படி மோசமான அலையை உண்டாக்கியது என்றால் ஆ.ராசா 18 கடிதங்கள் தன்னிடம் இருக்கிறது .கடைசியில் வெளியிடுவேன்,எனக் கூறியிருக்கிறாரே.அவை ஏற்படுத்தும் அலையில் யாரெல்லாம் அடித்துக்கொண்டு போகப்போகிறார்களோ?சி.பி.ஐ.அந்த கடிதங்களை ஏன் கைப்பற்றி தனது முதலாளிகளைக் காப்பாற்றியிருக்கக்கூடாது.? |
”ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா பலிகடாவாக்கப்பட்டார் என்ற தனது கருத்து மேலும் உறுதிப்பட்டிருப்பதாக திமுக கூறியுள்ளது. பிரதமரும் நிதியமைச்சகமும் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் ராசா மீறினார் என்பதே இந்த வழக்கில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஏலம் இல்லாமல், குறிப்பிட்ட விலையில் உரிமம் அளிக்கலாம் என முன்னாள் நிதியமைச்சர் ஒப்புக்கொண்டார் என்பதை தற்போதைய கடிதம் வெளிப்படுத்தியுள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது.