செப்டம்பர் 11 - அக்டோபர்-20


செப்டம்பர்-11 பத்தாண்டுகளுக்குப்பின்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11ம் நாள் அமெரிக்கா பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி உலக வர்த்தக இரட்டை கோபுர கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. அந்நாள் அமெரிக்க மக்களின் மனதிலிலுந்து என்றுமே அழிக்க முடியாத துன்ப நாளாகும். 9.11 பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து பத்து ஆண்டுகளாகியுள்ள இந்நாளில் அமெரிக்காவின் பல சிந்தனையாளர்கள் பல்வேறு கோணங்களிலிருந்து அந்த பயங்கரவாத தாக்குதலை மதிப்பீடு செய்கின்றனர். அமெரிக்காவில் புகழ் பெற்ற சர்வதேச அமைதி நிதியத்தின் தலைவர் Jessica Matthews அம்மையார் அந்நாள் முதல் பயங்கரவாத எதிர்ப்பு அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் ஆழமாக பதிந்து விட்டது என்று குறிப்பிட்டார்.


நீண்டகால வரலாற்றைப் பார்த்தால் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் குறைந்தது 10 ஆண்டுகளில் பயங்கரவாத எதிர்ப்பில் அமெரிக்காவை முன்னணி நாடாக்கியுள்ளது என்றார் அவர். பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றிய மக்களின் புரிந்துணர்வை மாற்றியது. பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மென்மேலும் கடுமையாக உருவாகியுள்ளதை அறிந்து கொள்ள இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கு துணை புரிந்தது. இது குறித்து Brookings கல்லூரியின் மூத்த ஆய்வாளர் Bruce Riedel கூறியதாவது. 9.11 பயங்கரவாத தாக்குல் புலனாய்வு கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் படி 9.11 தாக்குதலை நடத்த அல்கயிதா இயக்கம் ஏறக்குறைய 5 லட்சம் அமெரிக்க டாலர் மட்டுமே செலவிட்டது. ஆனால் அந்தத் தாக்குதல் நியூயார்க்கிற்கு மட்டுமே பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இழப்புகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட மொத்தம் பொருளாதார இழப்பு 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை தாண்டியது. பயங்கரவாத எதிர்ப்பினால் ஏற்பட்ட ஈராக் போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போருக்கு 4 லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.


பயங்கரவாதத்தை எதிர்த்து உள்நாட்டு பாதுகாப்பைப் பேணிக்காக்க அமெரிக்கா போர் நடத்தியது மட்டுமல்ல இயல்புக்கு மாறான பல வழிமுறைகளையும் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான்-ஆப்கான் எல்லைப்புறங்களில் நடத்தப்பட்ட பல ஆளில்லா விமான தாக்குதல்களால் அங்குள்ள மக்களின் எதிர்ப்பை அமெரிக்கா சம்மாதித்து கொண்டது. 9.11 தாக்குதலை நடத்திய அல்காயிதா இயக்கத்தின் தலைவர் பின்லாடன் பாகிஸ்தானுக்குள் வைத்து தாக்கி கொல்லப்பட்டதை இவ்வாண்டு மே திங்கள் அமெரிக்கா அறிவித்தது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மாபெரும் முன்னேற்றமடைந்ததை இது காட்டியது. ஆனால் அமெரிக்கா முன் அறிவிப்பின்றி தன்னிச்சையாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் மனநிறைவின்மை தெரிவித்தது. அமெரிக்க மக்களில் பெரும்பாலோர் 9.11 தாக்குதலுக்குப் பிந்திய பத்து ஆண்டுகளில் அமெரிக்கா தெரிவு செய்த பாதையில் சரியானது அல்ல என்று Brookings கல்லூரி நடத்திய கருத்து கணிப்பு கூறுகின்றது..
_________________________________________________________________________________________
=====================================================================
வராது வரும் மாமணி.
                         

 சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அக்டோபர் 20ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையை முடிந்த அளவுக்கு இழுத்துச் சென்று கால அவகாசம் பெறுவதற்கு ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்பது, பெரிய ரகசியமல்ல. அவருடைய வக்கீலின் வாதங்கள் மற்றும் செயற்பாடுகளை வைத்தே அதை யாரும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. அதேநேரத்தில், வழக்கு அவருக்கு சாதகமாக இல்லை என்பதையும், அதுவே காட்டிக் கொடுக்கின்றது.
இதைத்தவிர, மாநில முதல்வராக இருந்துகொண்டு, இப்படியான ஒரு வழக்கில் ஆஜராவதும் அவருக்கு தன்மானப் பிரச்சினையாக உள்ளது.
முந்திய வாய்தாக்களில் அவரது வக்கீல், முதல்வர் நேரில் ஆஜராவதில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி கூறி, நேரில் ஆஜராவதைத் தடுக்க முயன்றார். ஆனால், உச்சநீதிமன்றத்தில் இந்தக் கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க பெங்களூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அடுத்த கட்டமாக, முதல்வர் பணியில் முக்கிய அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இதனால் நீதிமன்றம் கூறும் எல்லாத் தினங்களிலும் அவரால் ஆஜராக முடியாமல் மக்கள் பணி தடுப்பதாகவும் அவரது தரப்பில் கூறப்பட்டிருந்தது. அதற்கும்கூட ஒரு வழி சொல்லியிருந்தார்கள் நீதிபதிகள்.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கான தினத்தை ஜெயலலிதாவே தேர்ந்தெடுத்துக் கொள்ள வழிவகுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னரும் வேறு எந்த ஆட்சேபணையும் கூற முடியாத நிலை முதல்வர் தரப்புக்கு ஏற்பட்டது.
இப்படி முதல்வர் தரப்பு சட்டத்திலுள்ள எந்த ஓட்டையையும் பயன்படுத்த முடியாமல் தடுத்த நீதிபதிகள், “ஜெயலலிதாவால் எப்போது ஆஜராக முடியும் என்று விசாரித்து அந்தத் தகவலை ஒரு வாரத்துக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்” என்று காலக்கெடு விதித்திருந்தனர்.
இப்படியான நிலையில்தான், முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. நீதிபதிகள் தன்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
“உங்கள் கட்சிக்காரர் நீதிமன்றத்தில்20ம் தேதி ஆஜராவாரா?” என்று ஜெயலலிதாவின் வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு ஜெயலலிதாவின் வக்கீல், பெங்களூர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக, தெரிவித்தார்.
வேறு வழி.

எப்படியோ வாய்தாராணி பட்டம்  வாங்கியாயிற்று.
                                                         

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?