கலவரத்திற்கு காரணம் யார்?
தேவையற்ற ஒரு கலவரம்தமிழகத்தில் உருவாக்கப் பட்டுள்ளது.
பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 54-வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை போலீஸார் கைது செய்ததாக தகவல் பரவியது.
இதையடுத்து, அக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பரமக்குடி ஐந்து சாலை சந்திப்பில் பகல் 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அஞ்சலி செலு த்திவிட்டு வந்த வாகனங்களுக்கு வழிவிடுமாறு மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், வாகனங்களுக்கு வழிவிட மறுத்து, அவர்கள் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்கத் தடியடி நடத்தினர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸாரை நோக்கி கற்களை வீசியபடி தாக்குதல் நடத்தினராம்.
மேலும், அப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், போலீஸாரின் வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தினராம். கடைகளைச் சூறையாடியதாகக் கூறப்படுகிறது.
கல்வீச்சில் போலீஸார் பலர் காயமடைந்தனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீஸார் கண்ணீர்ப் புகை வீசினர்.
ஆனால், கலவரக் கும்பல் அதற்கும் கட்டுப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஆனால், ரகளையில் ஈடுபட்டவர்கள் அதிகமானோர் இருந்ததால், கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
போலீஸாரின் அதிரடிப்படை வாகனமான வஜ்ரா உள்ளிட்ட 10 வாகனங்களும், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், சுகாதாரத் துறை ஆய்வாளர் துணை இயக்குநர் அலுவலகத்துக்குச் சொந்தமான 3 ஆம்புலன்ஸ்கள், 3 ஜீப்புகள், 1 கார் ஆகியவையும் பலத்த சேதமடைந்தன.
4 மணி நேரத்துக்குப் பிறகு கலவரம் கட்டுக்குள் வந்தது.
இப்போது ஜான்பாண்டியனைக் கைது செய்ய வேண்டிய கட்டாயம் என்ன ஏற்பட்டுள்ளது அவர் போய் அஞ்சலியோ மரியாதையோ செய்து விட்டு வரப் போகிறார்.அத்துடன் முடிய வேண்டியதை இவ்வளவு தூரம்4 பேர்களின் உயிர் போகுமளவு நடவடிக்கை எடுத்த அதிகாரம் படைத்தவர் யாரோ?
இப்போது சாதி வெறியை வைத்துதானே ஜான்பாண்டியன்,பசுபதி பாண்டியன்,கிருஷ்ணசாமி,ராமதாஸ்,தங்கள் கட்சியையும் அரசியல் வாழ்க்கையையும் நடத்துகிறார்கள்.
இம்மானுவேல் சமாதிக்கு வரக்கூடாது என முன்பே தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டிர்ந்தால் கூட இத்தனை இழப்புகள் வந்திராது.
இப்போது தலித்கள் தங்கலை தூண்டிவிடுபவர்கள் வலையில் சாதியின் பெயரால் விழுந்து மழுங்கடிக்கப்பட்டு வெறியாளர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.ஜான்பாண்டியன் வராததால் என்ன இழப்பு வந்துவிடப்போகிறது.ஏன் இத்தனை வன்முறை வெறியாட்டம்.4 உயிர்களைப் போக்கும் அளவு நீங்கள் ஆடிய வெறியாட்டத்தால் உங்களுக்கு கிடைத்த ,கிடைக்கப்போகும் நன்மை,வளமை என்ன?
இழப்பை மட்டுமே பெற்றுள்ளீர்கள்.அந்த நால்வர் குடும்பம் தான் சீரழிவை தமதாக்கிக்கொள்கிறது.
அரசுக்கு ஒரு வேண்டுகோள் சாதிய வெறியைத் தாங்கிப்பிடிக்கும் குருபூசைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.அப்படி வழங்கினாலும் அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.அவரவர் பகுதியிலே கொண்டாடிக்கொள்ளட்டும்.குறிப்பிட்டப் பகுதியில் குவிவதால்தான்.வெறியாட்டமும்,கலவரங்களும் வருகிறது.
இன்று விடுதலைக்காகப் பாராடியவர்கள் அரசியல் தலைவர்களையும் சாதிய குறுகிய வட்டத்துக்குள் அடைப்பதை தடுக்க வேண்டும்.
முத்துராமலிங்கம்,காமராஜர்,வ.உ.சி போன்றோர் அப்படி பலியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் தன்னலமற்ற தொண்டுகலை மற்ற சாதியினர் கண்டு கொள்ள முடியாத அளவு சாதி அடையாலத்தைக் குத்தி விடுகிறார்கள்.அவர்களுக்கு குருபூசை கொண்டாடி கலவரத்துக்கும் வழிவகுக்கிறார்கள்.
சாதி சான்றுகளை பள்ளியில் கேட்காமல் இருக்கும் நிலை வந்தாலே நிலமைகள் கொஞ்சம் மாறும்.ஏழ்மை நிலையைக்கொண்டே சலுகைகள் வழங்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள்,பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற சாதிச் சான்றுகள்தான் பிஞ்சுகல் மனதில் சாதிய எண்ணங்களை நஞ்சாக ஏற்றுகிறது,அதை சாதியால் பிழைப்பு நடத்தும் [தறு]தலை வர்கள் நெருப்பாக்கி குளிர் காய்கிறார்கள்.அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் இறுக்கிறது.ஆனால் அவர்களும் ஓட்டுப்போறுக்க அதை கண்டு கொள்ளாமல் சலுகைகளை வழங்கி வளர்த்து வருவதுதான் கொடுமை.