சைவப் பூனையின் உண்ணாவிரதம்.
-சீத்தாராம் யெச்சூரி எம்.பி., |
நூற்றுக்கணக்கான எலிகளை விழுங் கிவிட்ட ஒரு பூனை தனது பாவங்களைக் கழுவும் பிராயச்சித்தமாக புனிதப்பயணம் புறப்பட்டதாம். அந்த சைவப் பூனையின் கதைதான் மோடியின் கதையும். பிராயச்சித்தம் என்பது எல்லா மதங்களி லும் கலாச்சாரங்களிலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்ற ஒன்றேயாகும். யூத மதத்தினர் (தங் களது ஆண்டு முதல் மாதம் பத்தாவது நாளான) ‘யோம் கிப்புர்’ தினத்தன்று பாவங் களுக்கு பிராயச்சித்தமாக உண்ணாவிரதம் இருப்பார்கள். கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும், முஸ்லிம்கள் ரம்ஜான் மாதம் என்றும் இவ்வாறு உண்ணா நோன்பு மேற்கொள்வது வழக்கம். “உனக்கு நன்மை செய்யும் என்று உணர்ந்து நீ நோன்பு இருந்தால்தான், அது உனக்கு நன்மை செய்யும்” என திருக்குரான் கூறுகிறது. நமது நாட்டின் கலாச்சாரத்திலும் இதே போன்று பிராயச்சித்தமாகவும், புனிதப் படுத்திக் கொள்வதற்காகவும் நோன்புகள் பல வற்றை இந்து மதமும் ஜைன மதமும் கூறு கின்றன. மகாத்மா காந்தி, விடுதலைப் இயக்கத்தில், உண்ணா நோன்பினை ஒரு ஆன்மீக போராட்டக் கருவி என்ற நிலைக்கு உயர்த்தினார். கேலிக்கூத்து! மோடியின் உண்ணா நோன்பு, இத்தகைய உயர்ந்த இலட்சியங்களை கேலிக் கூத்தாக் கியிருக்கிறது. 2002 குஜராத் மதவெறிப் படுகொலை, அனைத்து அரசியல் சாசனம் சார் அமைப்புகளின் கண்டனத்திற்கும் ஆளாகியிருக்கிறது. தேசிய மனித உரிமைக் கமிஷன், தேர்தல் கமிஷன், சமூக ஆர்வலர் அமைப்புக்கள் என அனைவரும் அதை கண்டித்திருக்கின்றனர். படுகொலைகள், மிகக் கொடூரமான கற்பழிப்புகள், உடல் உறுப் புக்களை வெட்டியெறிதல் என பல்லாயிரக் கணக்கானோர் அன்று சித்ரவதைக்கு ஆளானார்கள். இன்று, ஒன்பது ஆண்டுகள் ஆகிய பின்னரும் கூட, 21,448 பேர் தங்களது பழைய இடங்களுக்கு திரும்ப முடியாமல், 11 மாவட்டங்களில் உள்ள 45 முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இது பற்றியெல்லாம் எவ்வித வருத்தமும் தெரிவிக் காத மோடி, “வளர்ச்சி என்ற மந்திரத்தின் மூலம், அவர்களது காயத்தினை குணப்படுத்தி விட்டதாக” கூறுகிறார். ஆனால், அப்படியும் ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை. ஆழ மான வறுமையும், கடுமையான வருமான ஏற் றத்தாழ்வுகளும் குஜராத்தில் நீடிக்கின்றன என பிரபலமான பொருளியல் அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பொருளாதார ஆய்வுகளும் அத னையே உறுதி செய்கின்றன. அம்மாநிலத்தில் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் முஸ்லிம்கள்தான். இந்த மாநி லத்தில் உருது மொழியில் ஒரு நாளிதழ் கூட வெளிவருவதில்லை என ஆய்வுகள் தெரி வித்திருக்கின்றன. வளர்ச்சியின் பயன்கள் சாதி -மதங் களைக் கடந்து அனைவரையும் சென்றடைந் திருக்கிறது என்ற வாதத்தின் பொய்மையினை இந்த ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்திருக் கின்றன. திசை திருப்ப... இந்த நேரத்தில் ஏன் இந்த உண்ணா நோன்பு என்பது குறித்து, பல வகை காரணங் கள் கூறப்படுகின்றன. “மத வெறி அரக்கன்” என்ற வார்ப்படத்திலிருந்து வெளிவரவேண் டும் என்பது ஒரு தெளிவான காரணமாகத் தோன்றுகிறது. அண்மையில் உச்சநீதிமன்றம் வெளி யிட்ட ஒரு முடிவினை தவறாகப் புரிந்து கொண்டதிலிருந்து இது தொடங்குகிறது. குஜராத் கலவரங்களுக்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என உச்ச நீதிமன்றம் நற் சான்றிதழ் வழங்கி விட்டது போன்று ஒரு தோற்றத்தினை பிஜேபி ஏற்படுத்தி வருகி றது. ஆனால், உச்சநீதிமன்றம் கூறியிருப் பதே வேறு. குல்பர்கா சொசைட்டி தீவைப்பு கொலை வழக்கில் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து, நடுநிலையாளர் (ஹஅiஉரள ஊரசயைந) மற் றும் சிறப்புப் புலனாய்வுத் துறையின் ஆவ ணங்கள் என தனது கையிலிருந்த ஆவணங் கள் அனைத்தையும் விசாரணை நீதிமன்றத் திற்கு அனுப்பியிருக்கும் உச்ச நீதிமன்றம், அவற்றை சாட்சியமாக கொண்டு விசாரணை யினை விரைவு படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது. இது மோடியின் மீது முதல் தகவல் அறிக்கை (குஐசு) பதிவு செய்வது என்ற கட்டத்தினையும் தாண்டிய நிலைமை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பதே அதன் பொருள். குஜராத்தில் அண்மையில் அமைக்கப் பட்டிருக்கும் லோக் அயுக்தா, தன் மீது பெரு மளவில் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து விடும் என்ற அச்சத்தில் அதிலிருந்து மக் களின் கவனத்தைத் திசை திருப்புவதற் காகவும் இது நடைபெறுவதாகக் கொள்ளலாம். பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற திசையில், தனது தேசிய அரசியல் பிரவேசத் திற்கு கட்டியம் கூறுவதே இதில் மோடியின் பிரதான நோக்கம். “கூட்டுத் தலைமை” என்ற அடிப்படையிலேயே 2014 தேர்தலை எதிர்கொள்வோம் என அண்மையில் பி.ஜே.பி தலைவர் அறிவித்திருக்கிறார். பிற அம்சங் களில் மாற்றம் இல்லாத போது, ஒரு குறிப் பிட்ட அம்சத்தினை மட்டும் அதிகரித்தால் உற்பத்தி கூடிவிடும் என்று சொல்ல முடி யாது; சில வேளை அது உற்பத்திக் குறை விற்கும் இட்டுச்செல்லும் என்பது ஒரு பொரு ளாதார விதி (டுயற டிக னுiஅinளைாiபே சுநவரசளே). இந்த விதி இன்று அத்வானிக்கு நன்றாகவே பொருந்தும். இருப்பினும், அதையும் மீறி தனது ஆறாவது ரத யாத்திரையினை தொடங்குவது என அத்வானி முடிவு செய்திருக்கிறார். இரத்தக் களறியாக ... “ராமர் கோவிலை கட்டியே தீருவோம்” என்ற முழக்கத்துடன் 1990ல் அவர் சென்ற முதல் யாத்திரை, நவீன, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியக் குடியரசின் வரலாற்றில் கறைபடிந்த இருண்ட பக்கங்கள் என அனைவராலும் கருதப்படுகிறது. யாத்திரை கடந்து சென்ற ஒவ்வொரு இடமும் இரத்தக்களறியாக மாறியது. இரண்டு மாதங்களுக்குள், அதாவது டிசம்பர் மாதம் வாக்கில் கலவரங்களில் ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. பிரடரிக் ஹெகெல் என்ற அறிஞர், “வர லாறு மீண்டும் திரும்பும்” என்று கூறினார். அது குறித்து கார்ல் மார்க்ஸ் கூறும்போது, “முதல் முறை துயரமாக வரும் வரலாறு , மறுமுறை வரும்போது கேலிக்கூத்தாக மாறும்” என்றார். அவ்வகையில், அத்வானி யின் இந்த ஆறாவது யாத்திரை கேலிக்கூத் தானதே யாகும். இந்த நிலைமையில், பி.ஜே.பி தலைவர் நிதின் கட்காரி தனது உடல் பருமனைக் குறைப்பதற்காக, அண்மையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் நிலை பரிவுடன் நோக்கப்பட வேண் டிய தொன்றேயாகும். ஆனாலும், அவர் கூட களத்தில் இறங்குவதற்காகவே இதைச் செய்திருப்பதாக சில பார்வையும் உள்ளது. எந்த நிலைமைக்கும் தன்னை உடல் ரீதியாக தயார் நிலையில் வைத்துக்கொள்வது என்ற முடிவில் அவர் இருப்பதாகவும் கூறப் படுகிறது. இது தவிர, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பி.ஜே.பி தலைவர்களுமே, எதிர்காலப் பிரதமர் நாற்காலிப் போட்டியில் உள்ளார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். மீண்டும் அத்வானியின் யாத்திரைக்கு வருவோம். இம்முறை அது ஊழலுக்கு எதி ரான யாத்திரை என அவர் அறிவித்திருக் கிறார். ஊழலுக்கு எதிரான மக்களின் கோபத் தினை அண்ணா ஹசாரேயின் உண்ணா விரதம் ஒன்று திரட்டியிருக்கிறது. அதை அப் படியே தனக்கு கைமாற்றிக்கொள்ள முடியும் என அத்வானி நம்புகிறார். அத்வானியும், பி.ஜே.பியும் சற்று ஆத்ம பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சத்தீஸ்கர் மாநிலத்தில் பி.ஜே.பி கட்சியின் ராமன் சிங் தலைமையில் நடைபெறும் ஆட்சி குறித்து அந்த மாநில லோக் அயுக்தா மிகப்பெரும் ஊழல் குற்றச் சாட்டினைக் கூறியிருக்கிறது. அனைத்துத் துறைகளும் ஊழல் முடை நாற்றம், “குளத்தி லுள்ள தண்ணீரை அதிகமாகக் குடித்துக் குடித்தே இறந்துவிடும் மீன்களைப் போன்ற அதிகாரிகள்”. இதுவெல்லாம், ஊழல் ஆட்சி குறித்த லோக் அயுக்தாவின் வர்ணனை. பி.ஜே.பி ஆட்சி குறித்து கர்நாடக மாநில லோக் அயுக்தாவின் கடுமையான குற்றச்சாட் டிற்குப் பின்னர் சத்தீஸ்கர் ஆட்சி குறித்த குற் றச்சாட்டு. பி.ஜே.பி, மிகவும் தயக்கத்துடன் வேறு வழியில்லாமல்தான், முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் ராஜினாமாவினைக் கோரிப்பெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மா நிலத்தின் மாஜி அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், சட்ட விரோத சுரங்க நடவடிக் கைகளுக்காக கைது செய்யப்பட்டனர். உத்தர்காண்ட் மாநிலத்திலும் ஊழல் குற்றச் சாட்டுக்கள் அம்மாநில பி.ஜே.பி அரசினை காவு கொள்ளவிருந்த நிலையில், அதை தவிர்ப்பதற்காக, முதல்வரின் ராஜினாமா அவசர அவசரமாகப் பெறப்பட்டது. இதுதான் ஊழல் திசையில் பி.ஜே.பியின் இன்றைய சாதனை வரலாறு. யாரை பிரதமர் பதவிக்கு முன்நிறுத்துவது என்பதில் ஆர்எஸ்எஸ்ஸூக்குள் நடைபெறும் சச்சரவுகள், அவர்களது உள் விவகாரம். ஆனால், இதில் நமக்கு ஒரு தெலுங்கு பழ மொழி நினைவுக்கு வருகிறது. “கல்யாணமும் ஆகவில்லை, குடியிருக்க வீடுமில்லை. ஆனால், பிள்ளைக்கு பெயர் மட்டும் சோம லிங்கம் என்றானாம்” என்பதே அப்பழமொழி. தேர்தலும் வரவில்லை. பி.ஜே.பிக்கு ஆதரவும் குவிந்து விடவில்லை. எனினும், எலிப் பந்த யம் என்னவோ தொடங்கி விட்டது. “1992 இந்தியா”வும், “2011 இந்தியா”வும் ஒன்றல்ல எனக் கூறுபவர்கள் இருக்கிறார் கள். அவர்களுக்கு ஒன்றை மட்டும் நினைவு படுத்த வேண்டும். இன்றைக்கும் மதக் கலவரங்கள் நடைபெறுகின்றன; அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் பன்னிரண்டு உயிர்கள் இவ்வகை யில் பறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மேல் இதில் ஒன்றும் கூறத் தேவையில்லை. தமிழில் : இ.எம். ஜோசப் நன்றி : ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ - 20.9.201 --------------------------------------------------------------------------------------------------------------------------------- சிக்கலில் விஞ்ஞானிகள். பூகம்பம், புயல், எரிமலை உட்பட இயற்கை சீற்றங்கள் பற்றி மக்களுக்கு சரியான தகவல் தர தவறும் விஞ்ஞானிகள் சிக்கலை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் பூகம்ப எச்சரிக்கை விடுக்காத விஞ்ஞானிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத்தாலியின் லாகுய்லா பகுதியில் 2009ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டரில் அது 6.3 ஆக பதிவானது. அதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 300 பேர் பலியாகினர். பூகம்பத்துக்கு ஒரு சில நாட்கள் முன்பிருந்தே அந்த பகுதியில் சிறிய நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. அதுபற்றி புவியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் பலமுறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தினர். அதில் பூகம்ப ஆபத்து பற்றி விரிவாக ஆராய்ந்தனர். விஞ்ஞானிகள் இடையே பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டனர். எனினும், சிறிய அதிர்வுகளை தொடர்ந்து சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்படக்கூடும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடவில்லை. அடுத்த சில நாட்களில் பூகம்பம் ஏற்பட்டு 300 பேர் பலியாக நேர்ந்தது. இதுபற்றி ஆலோசனை நடத்தியும் மக்களுக்கு எச்சரிக்கை வெளியிடாதது விஞ்ஞானிகள் கடமை தவறியதாகும் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதுவரை இயற்கை சீற்றங்கள் குறித்த விஞ்ஞானிகளின் அறிவுரை மற்றும் கருத்துகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில்லை. முதல்முறையாக விஞ்ஞானிகள் கடமை தவறியதாக தொடரப்பட்ட வழக்கு உலகம் முழுவதும் கவனத்தை கவர்ந்துள்ளது. அதேநேரம், இயற்கை சீற்றங்கள் பற்றிய கணிப்புகள் துல்லியமாக இருக்க வாய்ப்பு குறைவு என்பதால் இதில் விஞ்ஞானிகளை தண்டிக்க முடியாது என்றும் ஒரு தரப்பில் விவாதம் எழுந்துள்ளது. இவ் வழக்கு தொடர்பாக இத்தாலி புவியியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 6 விஞ்ஞானிகள் விசாரிக்கப்பட உள்ளனர். |