அரசு கேபிள் -மற்றொரு சமச்சீர்?
மலையாளத்தில் கடந்த ஆண்டு மம்முட்டியை வைத்து பழசிராஜா என்ற வரலாற்று ஹிட் படத்தை எடுத்தவர் கோகுலம் கோபாலன்.
இவர் அடுத்து மெகா பட்ஜெட்டில், திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்தபடமும் வரலாற்று சம்பந்தப்பட்ட படம்தான். மன்னர் திப்புசுல்தானின் வாழ்க்கையை மையமாக மைத்து இப்படம் உருவாக இருக்கிறது.
இதில் திப்பு சுல்தான் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் கதையை ஜான்பால் எழுதியுள்ளார். வயலார் மாதவன் இயக்குகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இப்படத்தின் சூட்டிங் துவங்குகிறது. இதற்காக கமலிடம் நான்கு மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.
இது குறித்து ஜான்பால் கூறும்போது, கதையை எழுதும்போதே திப்பு சுல்தான் கேரக்டருக்கு கமல்தான் பொருத்தமானவர் என உணர்ந்தோம். அவர் தோற்றம் கம்பீரமாக இருக்கும்.
வேறு யாரும் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது. கமலுடன் நடிக்கும் இதர கேரக்டர்களுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. யுத்தம், சுதந்திரப் போராட்டம், காதல் போன்ற அம்சங்கள் படத்தில் இருக்கும் என்றார்.
இப்படத்தில் நடிக்க மொத்தமாக நான்கு மாதங்கள் கால்ஷிட் வாங்கப்பட்டுள்ளதாம்.அதன்பின்தான் சிவாஜி பிலிம்ஸ் படத்தில் நடிக்கத்துவங்குகிறாராம் கமல்.
---------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு எதிரான தீர்மானம்.ஆய்வு செய்யும் பான்கிமுன்
=============================================================..
அடுத்த வாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ஐ.நாவுடன் தொடர்புடைய உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|
இது தொடர்பில் தனது ஆலோசர்களுடன் பான் கீமூன் தொடர்ச்சியாகப் பல சந்திப்புக்களை ஏற்கனவே நடத்தி இருக்கின்றார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இலங்கை அரசும் தனது எதிர் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.
அந்த அமர்வில், இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விவகாரமே முக்கியமாக விவாதிக்கப்படவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்டப் பல நாடுகள் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன.
இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்குலகநாடுகளால் இந்தக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2009ஆம் ஆண்டு போர் முடிந்த கையோடு மனித உரிமைகள் சபையில் இவ்வாறு மேற்கு நாடுகளால் கொண்டுவரப்பட்ட இதுபோன்றதொரு தீர்மானம் இலங்கையால் முறியடிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையில் போருக்குப் பிந்திய அபிவிருத்திக்கு உதவவேண்டும் என்று இலங்கை ஆதரவு நாடுகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு ஆதரவான அந்தத் தீர்மானத்தை அன்று இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் என்பன ஆதரித்தன.
எனினும் அதன் பின்னர் போர்க் குற்றச்சாட்டுக்களில் இலங்கை ஈடுபட்டது என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் உள்ளன என்று ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை மற்றும் பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப்படம் என்பன வெளியாகிய நிலையில் உலகின் கருத்து இன்று பெருமளவில் மாற்றமடைந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச தரத்திலான விசாரணையை நடத்துமாறு மேற்குலக நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தி வந்தபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அவ்வாறான ஒரு விசாரணையை நடத்த அடியோடு மறுத்து வருவதுடன் போர்க் குற்றங்கள் எவையும் இங்கு இடம்பெறவில்லை என்றும் திரும்பத் திரும்பக் கூறிவருகிறது.
இத்தகைய பின்னணியிலேயே தற்போது மீண்டும் இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான ஒரு நிலையில் என்ன செய்வது, தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பன தொடர்பாகவே பான் கீமூன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நிறைவேற்றப்படும் தீர்மானம் சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை நியமிக்கும்படி கோரும் என்றே அனேகமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் அத்தகைய குழுவை எவ்வாறு நியமிப்பது, அதற்கான சட்டதிட்டங்கள் என்ன, விசாரணைக்கான காலவரையறை, உள்ளடக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பன உட்பட்டப் பல விடயங்களையே ஐ.நா. செயலாளர் ஆராய்ந்துவருகிறார்_____________________
________________________________________________________________ |
9/11
வருகிறது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க கோர்டில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டு விசாரணை நடந்து வருகிறது.
வருகிறது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க கோர்டில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இணைதளமான விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவலில் கூறியுள்ளதாவது:மும்பை தாக்குதலில் லஷ்கர் தொய்பா அமைப்புக்கு உதவியதாக ஹெட்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை அமெரிக்க கோர்டில் நடந்துவருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று இது குறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ரோமர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நராயணனிடம் தெரிவித்தார். அதற்கு, நாராயணன் ஹெட்லியை மும்பை தாக்குதல் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வர ஆர்வமில்லை. இந்த நேரத்தில் ஹெட்லியை நாடு கடத்தி வருவது கடினம் தான். பெரும் சிக்கல் ஏற்படும் என கூறினார். இவ்வாறு விக்கீலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
இது பற்றிநாராயணன் கூறும் போது” விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் குறித்து பேட்டியளித்துள்ள எம் கே நாராயணன், விக்கீலீக்ஸ் தகவல் குறித்து அமெரிக்காவிடம் தான் கேட்க வேண்டும். ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வருவதில் தீவரமாக இருந்தோம். அதிகாரிகளுக்கு மத்தியிலான் பேச்சுக்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஹெட்லியை நாடு கடத்துவதில் இந்தியா ஆர்வமாக இருந்தது. தீவிரமாக செயல்பட்டோம்” என கூறினார்.
_________________________________________________________________
வருகிறது 9/11இதையொட்டி, வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கர்கள், கவனத்துடன் இருக்கும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, நாட்டின் உள்பகுதியில் இயங்கி வரும் சிறு ரக விமானங்கள் மீது, அல்-குவைதா தாக்குதல் நடத்தலாம் என, உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
=====================================================================
அரசு தொல்லைக்காட்சி.,
அரசு கேபிளில் இருநாட்கள் மட்டுமே ஒளிபரப்பிய ஆப்ரேட்டர்கள் மூன்றாவது நாளில் இருந்து அரசை ஓரங்கட்டிவிட்டு முன்போலவே சன் உட்பட அணைத்து சானல்களையும் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர்.
காரணம் மக்கள்.
இப்போது அரசு காட்டும் சானல்கள் தூர்தர்சன் டி.டி.எச்.ஐ ஆயிரம் ரூபாய் கட்டி மாட்டிவிட்டால் ஆண்டுமுழுக்க சும்மாவே பார்க்கலாமே.உங்களுக்கு எதற்கு 70 ரூபாய் தண்டம்.கேபிளைக்கழற்றி விடுங்கள்.என ஆங்காங்கே சண்டைக்கு வர அரசை நம்பிய ஆப்ரேட்டர்கள் அரசனை நம்பி புருசனைக்கை விட்டக்கதையாகி விடக்கூடாது என முன்பிருந்த நிலைக்கே மாரிவிட்டனர்.இதில் சில இடங்களில் எங்களிடம் முன்பு போலவே சன் உட்பட அனைத்து சானல்களும் தெரியும் என துண்டு அறிக்கை வேறு வெளியிட்டு உள்ளனர்.
இன்றைக்கும் கேபிள் மாட்டியிருக்கிறாயா? என சில இடங்களில் கேட்பதில்லை.
உங்கள் வீட்டில் சன் டி.வி.மாட்டிருக்கிறாயா? என்று கேட்கும் அளவில் கேபிள் இணைப்பு என்றாலே சன் டி.வி.என்று ஆகி விட்டது.
அரசு இனைப்பு கொடுத்து ஆரம்பிக்கும் முன்பே சன் உட்பட சில கட்டண சானல்களையும் இணைத்து ஆரம்பித்திருக்க வேண்டும்.
அவசர கோலம் அலங்கோலமாகி விட்டது.
ஜெயா அரசின் முக்கிய நோக்கமே சன் குழுமத்திற்கு ஆப்பு என்பதுதான்.
ஆனால் ஆப்பு திரும்பி விட்டதே.
முந்தைய ஜெயா ஆட்சிக்காலத்தில் சன் குழுமத்துடன் மோதி ஹாத்வே விஜய் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல் பட்டும் அரசு தோல்வியைத்தழுவியது .
அத்தோல்வியில் பாடம் படித்திருக்க வேண்டாமா?
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தயா-கலாநிதிகளுடனான சண்டையில் அரசு கேபிள் ஆரம்பிக்கப்பட்டும் சன் குழுமமின்றி நல்ல முறையில் செயல் படு த்த இயலாமல் ஒரங்கட்டப்பட்ட்து.
இதை எல்லாம் அரசு யோசித்து செயல் பட்டிருக்க வேண்டும்.
மக்களை குறிப்பாக பெண்களை சன் தனது நாடகங்கள் -சில நிகழ்ச்சிகள் மூலம் அடைமையாக்கி வைத்துள்ளது.
அந்த மாயை விலகும்படி மற்றைய சானல்கள் செயல்பட்டு மக்களாக மாறினால்தான் உண்டு.அது வரையில் அரசு கேபிள் சன் தொலைக்காட்சி யை விலக்கி சாத்தியமில்லை.
பிடிவாதம் அரசு காட்டினால் சன் டி.டி.எச்.சேவையில் இன்னும் பலர் சேர்ந்து விடுவதும் நடக்கும்.
அது அரசு சன் டி.டி.எச் சேவைக்கு ஆள் பிடித்துக் கொடுத்தது போல் அமைந்து விடும் அபாயத்தை உருவாக்கி விடும்.
________________________________________________________________
சோனியின் புதிய’ 360 டிகிரி ஸ்பீக்கர்’!
சோனி நிறுவனம் இப்பொழுது புதியதயாரிப்பை வெளியிடுகிறது.
உங்களின் அறை முழுவதும் 360 டிகிரி கோணத்தில் முழுமையான, இனிமையான இசையை பரப்பும் வகையில் ஸ்மார்ட்போனுக்கான புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.
ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் ரசனையையும் மனதில் கொண்டு இப்படிப்பட்ட அரிய படைப்புகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது சோனி நிறுவனம்.
இசை கேட்பது பலரது இயல்பான விருப்பம். இதை மனதில் கொண்டு தயரிக்கப்பட்டதுதான் இந்த 360 ஸ்மார்ட் ஃபோன் ஸ்பீக்கர்ஸ்.
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் உங்களை இசையில் மிதக்கச்செய்கின்றது இந்த புதிய ஸ்பீக்கர்கள். அதோடு துல்லியமான இசைமழையில் நனைய வைக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் அளித்த வாக்மேனை இன்னும் நம்மால் மறக்க முடியாது. எஸ்ஆர்எஸ் பிடிவி-25 என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்பீக்கர்கள் மொபைல் உலகில் புதிய அத்யாயத்தை எழுதும்.
இதனுடைய அழகான வடிவத்தைப்பார்த்தாலே, வாடிக்கையாளர்களின் மனதைக் கவர்ந்திழுக்கும் தன்மைக் கொண்டது.
பேலன்ஸ்டு க்வாலிட்டி சவுன்டு வசதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வயர்லெஸ் வசதியை நீங்கள் பெறமுடியும். உங்களுக்கு விருப்பமான இடங்களில் வைத்து இனிமையான இசையை உங்களால் கேட்கவும் முடியும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
இந்த நுட்பமான கண்டுபிடிப்பின் மூலமாக பொழுது போக்கு அம்சமாக படங்கள் பார்க்கவோ அல்லது வீடியோ கேம்கள் விளையாடவோ முடியும்.
இது போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு இல்லாமலும் எஸ்ஆர்எஸ் பீட்டிவி 25 ஸ்பீக்கரை உங்களால் உபயோகிக்க முடியும்.
இதில் யூஎஸ்பி சார்ஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரீச்சார்ஜ்புல் பேட்டரி வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.மற்றும் ஆர்டிபி ரிமோட் வசதியுன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐ-போன், ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற வகைத் தொழில் நுட்பங்களுக்கும் இந்த ஸ்மார்ட் போன் ஸ்பீக்கர்ஸ் பொருத்தமானதே.
உங்களுக்கு எவ்வளவு துல்லியமாகக் கேட்க வேண்டுமோ அவ்வளவு துல்லியமகக் கேட்க முடியும். எஸ்ஆர்எஸ் ஸ்பீக்கர்ஸ் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலும்,ஆர்டிப்பி சிகப்பு நிறத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது .