ஸ்டெர்லைட்- காத்திருக்கும் எமன்!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடுத்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
                     
இந்த விசாரணையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ கலந்துகொண்டு தனது தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும் என்று ஆலை நிர்வாகத் தரப்பில் வாதாடினார்கள்.
வைகோ தன்னுடைய வாதங்களை ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வைத்தார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டப்படியான அனுமதி இல்லாமலேயே, 40 மாதங்கள் இந்த ஆலையை இயக்கி இருக்கின்றார்கள். 2010 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து, இன்றுவரை, ஆலையை இயக்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடையாது. சட்டத்துக்கு எதிராகவே ஆலையை இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று வைகோ குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை மீண்டும்ஒத்தி வைத்துள்ளனர்.

                     




  மக்களைக்கொன்று குவிக்கும் இந்த நாசகார ஆலைக்கு மூடுவிழா நடத்தாமல்.அதில் இப்போது வேலைபார்ப்பவர்களைக் கவனத்தில் கொண்டு ஆலையை தொடர்ந்து நடத்தௌத்திரவிட வேண்டும் என ஆலையினரும்-ஆட்சியினரும் சொல்லிவருகின்றனர்.
   எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை என்கிறது இவர்கள் வாதம்.
நீர்-நிலம் -வளி மண்டலம் என ஒன்று விடாமல் அனைத்தையும் நாசப்படுத்தி மற்றொரு போபாலாகக் காத்திருக்கும் ஸ்டெர்லை ஆலை விடயத்தில் நீதிமன்றம் மக்கள் நலம் மட்டுமே கவனத்தில் கொண்டு நிரந்தரமாக மூடிட ஆணை பிறப்பிக்க வேண்டும்.
ஆலைக்கு அனுமதித்த அரசு அதில் வேலைபார்ப்பவர்களுக்கு வேறு பணி வழங்க வேண்டும்.
  தாமிரபரணி  ஆற்று வேளாண் மைக்கு உரிய நீரையும் ராட்சத மோட்டார்கள் மூலம் கொஞ்சம் கூட மனசாட்சியின்றி  உறிஞ்சி வேளாண்மையையும் பாழாக்கி வருகிறது இந்த நாசகார ஆலை.
 அதற்கு இந்த அரசும்-அலுவலர்களும் துணை நிற்கின்றனர்.
                                                   
  அதை விடக்கேவலம் இந்த ஆலையில் அன்றாடம் நடக்கும் விபத்துகளில் பழியானவர்களைப்பற்றி யோ  மோசடிகளைப்பற்றியோ ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவதில்லை.அனைத்து ஊடகத்தினரும் ஸ்டெர்லைட் நிறுவனம் தரும் பணத்திற்கும்-பரிசுகளுக்கும்-விளம்பரங்களுக்கும் சோரம் போனவர்கள்.
  ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் உற்பத்தியாகும் போது கனிம மணலில் பிளாட்டினம்,தங்கம்,வெள்ளி போன்ற உலோகங்களும் வெளியாகின்றன.அவை பற்றி அரசுக்குத்தெரிவிக்காமலேயே கடத்தி பணம் பார்க்கிறது அனில் அகர்வால் மோசடிக் கும்பல்.
இரு முறை பிடிபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் பூசி முழுகப்பட்டு விட்டது.
அரசும்-அரசியல் கட்சிகளும்ஸ்டெர்லைட் தரும் தேர்தல் நிதி- மற்றும் நிதிவகைகளில் கொள்கைகளை அலசி காயப்போட்டுவிட்டு அம்மணமாக நின்று ஆலையை ப்பாதுகாக்கின்றன.
 மற்ற மாநில மக்களால் விரட்டப்பட்ட அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட் ஆலைக்கு அம்மா,புரட்சித்தலைவி  ஜெ.ஜெயலலிதாதான் தமிழகத்தில் இடம்தந்து தனது ஆட்சிக்காலத்தில் மக்களின் நல்வாழ்விற்கு உலை வைத்தார்.
அவருக்கும்,சசிகலாவுக்கும் கணிசமான தொகையும்-பங்குகளும் வழங்கப்பட்டு விட்டன.பெற்ற பின் தான் ஆலைக்கு வழி.
சிதம்பரம் அனில் அகர்வாலின் நிறுவன சட்ட ஆலோசகராக இருந்தவர்.அவரின் ஆலோசனைகளும் அதிகம் அவர் பெற்ற பங்குகளும் அதிகம்.இப்போது சட்ட ஆலோசனைக்குழுவில் நளினி சிதம்பரம் உள்ளதாகத்தெரிகிறது.
இவ்வளவு ஆதரவு இருப்பதால் தான் அனிலின் ஸ்டெர்லைட் தொடர்கிறது.நீதிமன்றம் மட்டுமே மக்களின் கடைசி நம்பிக்கையாக உள்ளது.
வைகோ தொடர்ந்து செயல்பட்டு ஆலையை மூட வைக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட மக்களின் மீது சயனைட் தடவிய கத்தியாக ஸ்டெர்லைட் உள்ளது.
முறையான பாதுகாப்பு-சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் இல்லாமல் அரசையும் ஏமாற்றி பணம் குவிப்பதையே முதல் நோக்காகக் கொண்டு செயல் படும் ஸ்டெர்லை மூடப்படும் நாளே உண்மை  திருநாளாகும்.
வழ்க்கமாகப் பெய்யும் மழையும் போய் விட்டது.ஆற்று நீரையும் மோசடியாக உறிஞ்சி குடிநீர் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது.
ஆலையில் இருந்து கழிவுகள் சட்டவிதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் குவிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் சென்று மேய்ந்த கால் நடைகள் செத்து விழுகிறது.அதன் உரிமையாளர்களுக்குபணம் கொடுத்து வாயை அடைக்கிறது.
அருகில் இருந்த சில கிராமங்கள் இப்போது மக்கள் வாழ முடியாமல் கைவிடப்பட்டு பாழ்வெளியாக இருக்கிறது.                                                        
இக்கொடுமைகளைவிட பாதுகாப்பற்ற முறையில் நடக்கும் ஸ்டெர்லைட் போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை போன்ற விபத்துக்குள்ளானால் ஏற்படும் சேதம் போபாலை விட அதிகமாக இருக்கும்.
   ஆலை தொடர்ந்து இயங்க ஆணை பிறப்பித்தால் இதன் உரிமையாளர் அனில் அகர்வால்,அனுமதித்த ஜெயலலிதா-சசிகலா,ஆதரவளிக்கும் சிதம்பரம் உட்பட அரசு அதிகாரிகள் அனைவரும் ஆலை வளாகத்தில் அல்லது அருகில் தூத்துக்குடியில்தான் வசிக்க வேண்டும் என்ற ஆணையையும் நீதிமன்றம் வழங்க வேண்டும்.      
அப்போது தன்னாலே இவ்வாலை மூடுவிழாக்கண்டு விடும்.
         


.
                       


ப்பற்றி 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?