வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பாபா’ ரா’ ரா’* உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்து வாரைச் சேர்ந்த யோகா குரு பாபா ராம் தேவ். பதஞ்சலி ஆசிரமத்தில் யோகா மையம் நடத்தி வருகிறார். டிரஸ்டும் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் மட்டு மின்றி வெளிநாடுகளிலும் யோகா மையங்களை நிறுவி நடத்தி வருகிறார். அன்னா ஹசாரேக்கு முன்னதாக பாபாராம்தேவ் ஊழலை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். இரவோடு இரவாக போலீஸ்படை சென்று ராம்தேவை அப்புறப்படுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தியது.
அதன் பிறகு பதஞ்சலி யோகா மையத்தில் உண்ணாவிரதம் இருந்தார். ஒரு வாரத்துக்குப் பின் சமரசம் ஆகி போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கொடுத்தார். அன்னா ஹசாரே திகார் சிறையில் இருந்த போது காந்தி சமாதி முன்பும், ஜெயில் வாசல் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத் தினார்.
இதற்கிடையே ராம்தேவ் நடத்தும் ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் வந்ததாகவும், வெளிநாட்டு வங்கிகளில் ராம்தேவ் கோடிக் கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் ராம்தேவ் நடத்தி வரும் நிறுவனங்களிலும் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பாபாராம் தேவின் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் அம்லா மற்றும் அலாக் வீரா ஜூஸ் ஆகிய 2 தயாரிப்புகளில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் ரூ.25 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளது. இதற்கும் அவர் முறையாக கணக்குகளை கையாளவில்லை என்று புகார் கூறப்பட்டது.
இது பற்றி சி.பி.ஐ.யின் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது. வெளி நாடுகளிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி முறைகேடு நடந்து இருப்பதை கண்டு பிடித்தனர். ரிசர்வ் வங்கியும் ராம்தேவின் டிரஸ்டில் பணம் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்து அறிக்கை அனுப்பியது.
இதை தொடர்ந்து ராம்தேவ் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அன்னியச் செலாவணி மோசடி சட்டத்தின் இன்று கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பாபாராம் தேவுக்கு சொந்தமான குட்டித்தீவு ஸ்காட்லாந்து அருகே உள்ளது. இதை அவரது ஆதரவாளர்கள் வாங்கி கொடுத்த தாக கூறப்படுகிறது. இதை தானமாக யாரிடம் இருந்து பெற்றார் என்றும் விசாரணை நடக்கிறது. இதே போல் மடகாஸ்கர் தீவில் உள்ள சொத்துக்கள் பற்றியும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்துகிறது.
ஏற்கனவே ராம்தேவ் உதவியாளர் பாலகிருஷ்ணா பாஸ்போர்ட் பெற போலியான தகவல்கள் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பாஸ் போர்ட் ரத்து செய்யப்பட்டது. இப்போது பாபாராம் தேவ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 
ஊழலுக்கு எதிராகப் போராடிய மாவீரரின் மர்மக்கதை மிக விறுவிறுப்பாக இருக்கிறது.
இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ராம்தேவ் ரசிகர்கள் கூறினாலும் ,இது போன்ற் குற்ற சாட்டுகள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ராம்தேவ் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது இருந்து வந்துள்ளது. 
மருந்துகளில் விலங்குகளின்[மனித விலங்கு உட்பட] கழிவுகளை சேர்ப்பதாகவும் வரி ஏய்ப்பு செய்வதாகவும் குற்ற்ம்சாட்டப்பட்டுள்ளார்.
அவரின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளது.
பிரகாஷ் காரத் மக்களவையிலேயே குற்றம் சாட்டியுள்ளார்.
அப்போது வாளாவிருந்த அரசு இப்போது தன்னையே எதிர்ப்பதால் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பலருக்கும் மருந்து தயாரிக்கும் ராம்தேவ் தனது வாய்க்கொழுப்பிற்கு மருந்து தயாரித்து சாப்பிட்டிருந்தால் இந்நிலை வந்திருக்காது.
யார்தான் தாங்கள் தயாரிக்கும் மருந்தை தாங்களே உபயோகிக்கிறார்கள்.?அம்மருந்து தரம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.
_______________________________________________________________________________________________


’2-ஜி’ மாட்டும் ’ஜி’க்கள்
                             
"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை வரம்பு, மேலும் விரிவடைகிறது. தே.ஜ., கூட்டணி ஆட்சியில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், அப்போது நிதி அமைச்சராக இருந்த, ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சி.பி.ஐ., நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், சி.பி.ஐ., சார்பில் ஏற்கனவே இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என, சி.பி.ஐ., சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையை, சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், வழக்கின் விசாரணை நிலை அறிக்கை, சி.பி.ஐ., சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பாக, நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ., சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, விசாரணை அறிக்கை விவரங்களை படித்தார்.

அவர் கூறியதாவது: தே.ஜ., கூட்டணி ஆட்சியின்போது அருண்‌ஷோரி, பிரமோத் மகாஜன் ஆகியோர் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தனர். இவர்களது பதவிக் காலங்களில், ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் மீறப்பட்டதாக தெரிகிறது. எனவே, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது, நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். "யுனிபைடு லைசென்சிங்' வழங்குவதற்கான மத்திய அமைச்சரவை குழுவின் தலைவராக, அப்போது ஜஸ்வந்த் சிங் தான், இருந்தார். மறைந்த பிரமோத் மகாஜன், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்திய மொபைல் போன் ஆபரேட்டர் சங்கத்தின் உறுப்பினர்கள், அப்போது, தொலைத் தொடர்புத் துறை செயலராக இருந்த ஷ்யாமல் கோசை சந்தித்து, மொபைல் போன் சேவை விதிமுறைகள் தொடர்பாக பேச்சு நடத்தினர். இது தொடர்பான விசாரணை, இம்மாத இறுதிக்குள் முடியும். இவ்வாறு வேணுகோபால் கூறினார்.
                                                   
                           
சி.பி.ஐ., வழக்கறிஞரின் வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள்," இந்த வழக்கு தொடர்பாக, 2001-07ம் ஆண்டுகளில் தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்த அருண்÷ஷாரி மற்றும் தயாநிதியிடம் விசாரணை நடத்தப் போகிறீர்களா? உங்கள் விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என, கேள்வி எழுப்பினர். "ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய மேக்சிஸ் நிறுவனத்திற்கும், அமைச்சர் தயாநிதிக்கும் இருந்த தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம். இதற்காக, மேக்சிஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம்' என, வேணுகோபால் கூறினார்.