கூட்டணி தர்மம்

 கூட்டணி கட்சிகளை ஒதுக்கி விட்டு 10 மேயர் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக, நேற்று  52 நகராட்சி தலைவர் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.  கூட்டணி கட்சிகளிடையே இது  மேலும்  அதிர்வை கூட்டணி கட்சிகளிடையேஏற்படுத்திவிட்டது.. 
உள்ளாட்சித் தேர்தல் நாள் அறிவிப்பு சில தினங்களில் வெளியாகிறது. கடந்த 16ம் தேதி, 10 மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அனைத்து இடங்களிலும் அதிமுகவே போட்டியிடும் என்பதை வெளிப்படுத்தும் இந்த பட்டியல்  அறிவிப்பு, கூட்டணி  கட்சிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக 2 கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளும் போயஸ் தோட்டம் வந்து, அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை யில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மீண்டும் 17ம் தேதி மாலை சந்தித்து பேசுவதாக தெரிவித்தனர்.   மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.  அதில், அதிமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று மாலை சந்திப்பு நடைபெறவில்லை. 
 இதுபோல,மற்றொரு கூட்டணி கட்சியான நடிகர் விஜயகாந்த்கட்சியிலும் அவசர ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் தொடரலாமா, வேண்டாமா  என்பது குறித்து நிர்வாகிகளுடன் சூடுபறக்க ஆலோசனை நடந்தது. எனினும், எந்த முடிவும் எடுக்காமலேயே கலைந்து சென்றனர்.
    
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான 2&வது வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா நேற்று அதிரடியாக வெளியிட்டார். இதில், 52 நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா அறிவித்து வருவது, கூட்டணி கட்சியினரிடையே மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 நடிகர் விஜயகாந்தின் கட்சியில் கோபம் அதிகரித்துள்ளது. கூட்டணியை  முறித்துக்கொண்டு, தனித்தே போட்டியிடலாம் என்று முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஓரிரு நாளில் இறுதி முடிவு தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
கடந்தசட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்தார். அதுபோலவே இப்போது நடந்து வருகிறது..
கம்யூனிஸ்ட்கள், விஜயகாந்த் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தனித்து போட்டியிடலாம் என்று ஒரு தரப்பும்,   மூன்றாவது அணி அமைத்து  போட்டியிடலாம் என்று இன்னொரு தரப்பும் கருதுவதாக தெரிகிறது. எனினும், நடிகர் விஜய்காந்த்கட்சியினர் தனியாக போட்டியிடுவதில் ஆர்வமாக உள்ளதாக தெரிகிறது. அதற்குக் காரணம் முன்பு தனித்தே சில இடங்களில் ஊராட்சிகளை சாதிய ரீதியில் கைப்பற்றியதுதான். 
சட்டசபை தேர்தலை போலவே,  கடைசி நேரத்தில் ஜெயலலிதா இந்த முறையும் இப்படி அதிரடியாக வேட்பாளர்களை அறிவிப்பது கடந்த தேர்தலில் இப்படி அறிவித்ததால் அதிக இடம் பிடித்ததாக ஏற்பட்ட ஒரு மூடநம்பிக்கையால்தான் [அல்லது செண்டிமெண்ட் என ஆங்கிலத்தில் கூறலாம்]                 






                   
 ஆனால் இப்படி அறிவிப்பதன் மூலம் பதட்டத்தில் உள்ள கூட்டணி [கொத்தடிமைக்]கட்சிகள் கடைசியில் தான் ஒதுக்கும் கழிவான தொகுதிகளை வாங்கிக்கொண்டு செல்வார்கள் என்ற ஜெயலலிதாவின் முன்யோசனைதான் இந்த அறிவிப்புகளின் பின்னணி எனத் தெரிகிறது..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனிதாவின் சாபம்.
                                        


ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:  
சிறையில் பட்ட கொடுமைகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எனக்கு நீதிமன்றம் 32 நாள் தான் சிறை தண்டனை அளித்தது. ஆனால் சிறை நிர்வாகத்தினர் வேண்டுமென்ற சில காரணங்களை கூறி 37 நாள் என்னை சிறையில் அடைத்து வைத்திருந்தனர். கூடுதலாக 5 நாள் சிறையில் வைத்திருந்ததற்காக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள 74 வயதான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பல கொடுமைகளை அனுபவித்து வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு போதிய மருத்துவ வசதி அளிக்கப்படவில்லை. தரையில் படுத்துறங்கும் அவரால் எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. மருத்துவ வசதிகளை செய்து தர சிறை நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரை சந்தித்து விளக்கி கூற உள்ளேன். திமுகவினர் மீதான அதிமுகவின் அடக்குமுறையை மக்கள் ஏற்கவில்லை. இதனை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் இருக்கும். அனைத்து இடங்களிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்
.”
____________________________________________________________________________________________________________
_இப்போ கொஞ்சம் சரியாவோம்.


                                            
முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !

இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..

மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !

நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !

ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !

ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

இது ஏழாவது உண்மை:.ஐ தமிழில் இருந்து மீள்பதிவு இது.
                                                                




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?