பன்னாட்டு கைகூலியின் வாக்கு மூலம்.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட தற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் போராட் டம் நடந்தது. மத்திய அரசிடம் இருந்த பெட்ரோல் விலையை நிர்ணய அதிகாரம், கடந்த ஆண்டு ஜூலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் தனது நிதி நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே விருப்பப்படி உயர்த்தலாம். அரசிடம் அனுமதி பெற தேவையில்லை. இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை பெட் ரோல் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த மே மாதம் லிட்டருக்கு ரூ5 உயர்த்தப்பட்டது. தற்போது ரூ3.14 உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. விலை உயர்வை ரத்து செய்யும்படி ஐ.மு. கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. ஐ.மு. கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திரிணாமுல் காங்கிரஸ், விலை உயர்வை ரத்து செய்யும்படி வலியுறுத்தி உள்ளது. ‘நாட்டின் பணவீக்கம் இரட்டை இலக்கை எட்டியுள்ள நிலையில், பெட்ரோல் விலையை உயர்த்தியதால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த விலை உயர்வை கைவிடுவது மட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் அரசே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன.
‘‘பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். அரசின் பொருளாதார கொள்கை திசை தெரியாமல் செல்கிறது’’ என்று பா.ஜ. முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இது பற்றி டெல்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில், ‘‘பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அவைதான் விலையை உயர்த்தி உள்ளன’’ என்று நழுவிக் கொண்டார்.
பெட்ரோல் விலை உயர்வு பற்றி மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா அளித்த பேட்டியில், ‘‘இது மிகவும் நல்ல செய்தி. இதனால், நமது பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைக்கு நல்ல நம்பகத்தன்மை கிடைக்கும். இந்த விலை உயர்வால் முதலீடு பாதிக்கும் என்று நான் கருதவில்லை’’ என்றார்.இவர் என்ன மாதிரியான மனிதர்.இவர் பொருளாதாரப் புலி என்கிறார்கள்.ஆனால் இவர் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே நாட்டில் விலைவாசி உயர்வையும்.பாட்டாளி மக்களை மேலும் ஏழைகளாக்கவுமே செய்துள்ளது.

நாட்டில் பெட்ரோல் விலைவுயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வு அலுவாலியாவுக்கு நல்ல செய்தியாம்.சாதாரணமனிதன் விலைவாசி உயர்வால் துன்பப்படுவது இவருக்கு நல்ல செய்தியாம்.’இவரது கவலை எல்லாம் விலைவாசி உயர்வால் அந்நியமுதலீட்டில் பாதிப்பு இருக்கக்கூடாது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவைல் இன்னும் தொழிலைத்துவக்கி கொள்ளையடிக்க-சுற்று சூழலை கெடுக்க நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடக்கூடாது என்பதாகத்தான் இருக்கிறது.சொந்த நாட்டில் விலைவாசிகள் உயர்ந்து மக்கள் துன்பப்படக்கூடாது என என்னுபவர்தான் பண வீக்கத்தையும்-விலைவாசி உயர்வையும் கட்டுக்குள் வைத்து மக்கள் நலன் பேணுபவர்தான் பத்வியில் இருக்க வேண்டும் .திட்டக்குழுத்தலைவராக இருக்க வேண்டும்.அவர்தான் உண்மையான பொருளாதார வல்லுனர்.அலுவாலியா எல்லாம் மக்கள் விரோதி சொல்லப் போனால் இந்திய நாட்டிற்கே எதிரி,காட்டிக்கொடுக்கும் கருங்காலி..இவரை இன்னும் பதவியில் வைத்திருப்பது நாட்டின் நல்வளர்ச்சிக்கே ஆபத்து.பன்னாட்டு நிறுவனங்களின் எடுபிடியான இவரை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும்.
மன்மோகன் சிங்,சோனியா-ராகுல் காந்திகள் உலகவங்கியின் அலுவலர்கள்தான் தாசர்கள்தான் என்றாலும் இவ்வளவு வெளிப்படையாக பேசுவதில்லை.அலுவாலியாவுக்கு அந்த கூச்ச உணர்வு கூட இல்லாமல் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் நோக்கத்தை கக்கி இருக்கிறார்நிலமை இன்னும் கெட்டு இந்திய பொருளாதாரம் இன்னும் அசிங்கப்படுவதற்கு முன் அலுவாலியாவை நீக்குவதே நல்லது.இந்தப் பொருளாதாரப்புலி -திட்டக் குழு தலைவர் இதுவரை எடுத்த நல்ல நடவடிக்கையால் ஏதாவது நன்மை,நல்லது இந்தியாவிற்கு கிடைத்துள்ளதா?பின் இவர் சேவை இந்தியாவிற்கு எதற்கு?.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டெங்கை பரப்பியது யார்?
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திடீரென டெங்கு பரவ, அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.தான் காரணம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
லாகூர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஹூசைமா புகாரி, இக்ராமுல் ஹக் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரை செய்தித் தாள்களில் நேற்று வெளியானது. அதில், 1980ம் ஆண்டுதான் பாகிஸ்தானில் டெங்கு கிருமிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பரப்பியது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளுக்கு எதிராக உயிர்க் கொல்லி கிருமிகளை பரப்பியது அமெரிக்கா. அப்படியே பாகிஸ்தானுக்கும் அதை அனுப்பி வைத்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில் பஞ்சாப் மாகாண சட்டசபை கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் சிலர், டெங்கு பரவ கடவுளின் கோபம்தான் காரணம். எனவே கடவுளிடம் மக்கள் மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். அது ஒன்றுதான் டெங்கு பிரச்னைக்கு தீர்வாகும் என்று கூறியுள்ளனர். டெங்கு பரவுவதை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் தீவிர பணியாற்ற வேண்டும். அதனால் சட்டசபை கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். அதை ஏற்று தேதி குறிப்பிடாமல் சபையை சபாநாயகர் ஒத்தி வைத்துள்ளார். ஆனால், டெங்கு காய்ச்சலுக்கு பயந்து உறுப்பினர்கள் பலர் லாகூருக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர்.

ஆக டெங்கு காய்ச்சலுக்கு கொசுதான் காரணம்.அதை ஒழிக்க வேண்டும் என்று யாரும் பேசியதாக நம்பியதாக தெரியவில்லை.அந்த கொசு மூலம் டெங்குக் கிருமிகளைப் பரப்பியது மட்டுமே அமெரிக்க வேலைஎன்பதையும் அவர்கள் உணர வேண்டும்.டெங்குக் கிருமிகளை மட்டுமல்ல எய்ட்ஸ் கிருமிகளும் அமெரிக்க பரிசோதனைக்கூடக் கண்டுபிடிப்புகள்தான் ,இன்னும் டி-கோலி,சிக்கன் குனியா என நிறைய அமெரிக்க உயிரி ஆயுதங்கள் கைவசம் இருக்கிறது.சமயம் வரும் போது வெளியேவரும்.