’101’ -மொய் அல்ல கேள்விகள்.


காவல்துறையினருக்கு உண்டாகும் பதட்டம்
                                                                                          படம் நன்றி;தினமலர்                          
நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க.,வினரை கைது செய்யும் போலீஸ் அதிகாரிகளுக்கு, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்' கீழ் 101 கேள்விகளை அனுப்பி பதில் கேட்டுள்ளது தி.மு.க., வழக்கறிஞர் அணி.தமிழக போலீசில் புதிதாக உருவாக்கப்பட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க, தமிழகத்தில் எட்டு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.
தொடர்ந்து தி.மு.க.வினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்வதையும் அவர்களை பிணையில் வரவிடாமல் அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு சிரையிலேயே வைத்திருக்கும் அ.தி.மு.க.கைக்கூலிபோல் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வழக்குகளில் சிக்க வைக்க தி.மு.க,முயற்சித்து வருகிறது.
முதல் கட்டமாக தனியே காவல் துறையில் ஜெயலலிதாவுக்கு அதிக எடுபிடித்தனம் செய்யும் அதிகாரிகளின் முந்தைய சொத்து,தற்போதைய சொத்து விபரங்களை தனியார் துப்பறியும் நிறுவனங்கள் மூலம் திரட்டிய தி.மு.க.தற்போது அதையே தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்க நடவடிக்கை எடுத்துள்ளது.இதில் வசமாக பல காவல் அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கும் தி.மு.க.அவர்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவைக்கும் முயற்சியில் இறங்கப்போகிறது.பழிக்குப்பழி.

அதற்கான பயிற்சி அளிக்க, தி.மு.க., வழக்கறிஞர் அணியின் சிறப்புக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. தி.மு.க., வழக்கறிஞர் அணி மாநில அமைப்பாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து தி.மு.க., வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்படும் தி.மு.க., பிரமுகர்கள் மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்துக்குப் பின், நில அபகரிப்பு வழக்குகளை விரைந்து விசாரித்து, தி.மு.க.,வினரை கைது செய்து சிறையில் அடைக்கும் போலீஸ் அதிகாரிகளை மிரளச் செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில், "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்' கீழ் 101 கேள்விகள் அனுப்பி, பதில் கேட்கப்பட்டுள்ளது.
                                             
சம்பந்தப்பட்ட அதிகாரி எப்போது, எந்த பதவியில் பணியில் சேர்ந்தார், பெற்றோர் என்ன வேலை பார்க்கின்றனர், அவர்களின் வருமானம் எவ்வளவு, அவரது குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், பணியில் சேரும்போது குடும்ப வருமானம் எவ்வளவு, அசையும் சொத்து, அசையா சொத்து மதிப்பு எவ்வளவு, தற்போது உள்ள சொத்து, வருமானம் என்ன என, குடும்பம் பற்றி கேட்கப்பட்டுள்ளது.அதிகாரியின் மனைவி வேலையில் உள்ளாரா, பணியில் உள்ளார் என்றால் தனியார் நிறுவனமா, அரசு ஊழியரா, போலீஸ் அதிகாரிக்கு துறையில் இருந்து வாகனம் தரப்பட்டுள்ளதா, அவ்வாகனத்தை எதற்காக பயன்படுத்துகிறார், அரசின் நிபந்தனைக்கு மாறாக வாகனத்தை பயன்படுத்துகிறாரா, எத்தனை குழந்தைகள் உள்ளனர்; அவர்களின் படிப்புக்கான மாத கல்விக் கட்டணம் எவ்வளவு செலுத்துகிறார். நன்கொடை செலுத்தியுள்ளாரா.
ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா, பிறரிடமிருந்து, "அன்பளிப்பு' ஏதேனும் பெற்றுள்ளாரா, சம்பளம் தவிர, எதன் மூலமாவது வருமானம் வருகிறதா, வங்கியில் செய்துள்ள டிபாசிட் எவ்வளவு என்றும் கேட்கப்பட்டுள்ளது.

குடும்பத்துக்காகச் செலவிடப்படும் மாதாந்திர தொகை எவ்வளவு, அதிகாரியாக எப்போது பணியில் சேர்ந்தார், இன்னும் எத்தனை ஆண்டுகள் பணியாற்ற உள்ளார். பணியின் போது துறை ரீதியான நடவடிக்கையில் சிக்கியுள்ளாரா, அதிகாரியோ, அவரது குடும்பத்தினரோ கிளப்களில் உறுப்பினராக உள்ளனரா, மகள், மகன் என்ன வேலையில் உள்ளனர். உள்நாட்டில் பணியாற்றுகின்றனரா அல்லது வெளிநாட்டில் உள்ளனரா, தற்போது எத்தகைய வழக்குகளை விசாரித்து வருகிறார். வழக்குகளின் தன்மை, தற்போதைய நிலை என்ன என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தி.மு.க., வழக்கறிஞர் அணி தகவல் உரிமை சட்ட கேள்விகள் பற்றி சில காவல்அதிகாரிகள் கூறியதாவது:’ பணியில் நேர்மையாக இருப்பவர்கள் இக்கேள்விகளால் பயப்படத் தேவையில்லை. ஆனாலும், குடும்பத்தினர் பற்றிய தனிப்பட்ட கேள்விகள் கேட்டுள்ளதற்கு, ஆர்.டி.ஐ., நிபந்தனைக்கு உட்பட்டு பதில் அளிக்கப்படும் என்றனர்.தற்போதைய நிலையில் திருச்சி, திருப்பூர் பகுதிகளில் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் பணியாற்றும் எல்லா எஸ்.பிக்கள், ஏ.டி.எஸ்.பி.க்கள்,, - டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு ககள்,சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் த.உ.சட்டக்கேள்விகள் அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்.அ.தி.மு.கவினர் மீது வரப்பெற்ற நில அபகரிப்பு புகார்கள் ,அதன் மீது எடுக்கப்பட்ட நட்வடிக்கைகள்.சிறையில் தள்ளப்பட்ட அ.தி.மு.க வினர் விபரம் போன்றவைகளும் கேட்கப்படுகின்றன..
===========================================================================
இது உண்மையா?

                       
தற்போது வெளியாகியுள்ளபுதிய செய்தி ஒன்று தடவியல் மற்றும் ஆய்வாளர்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்ந்தியுள்ளது.இது குறித்து ஆங்கில இணையத்தளத்தில் வெளிவந்த செய்தியை படித்து நீங்களே முடிவு செய்யுங்கள்.
   ” இங்கிலாந்தின் நாட்டின் கிராமப்பகுதி ஒன்றில் அண்மையில் மிகவும் விசித்திரமான ஒரு மர்ம உயிரினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்த நிலையில் பிடிக்கப்பட்ட இந்த உயிரனத்தின் தோற்றம் பலரையும் வியப்பில் ஆழ்ந்தியுள்ளது. இதுபற்றி உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்ட தடவியல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மைத்தன்மைகள கண்டறியாது குழப்பத்தில் உறைந்து போயுள்ளார்கள். இந்த விசித்திர உயிரினத்தை முதன் முதலில் பார்த்த கிராமவாசி இது பற்றி குறிப்பிடுகையில்:- இவ்வுருவத்தை முதலில் நான் பார்த்தவுடன் ஒரு சிசுவின் உடல் என நினைத்து உடனடியாக போலீசாருக்கு எனது செல்போன் மூலம் அழைப்பு விடுத்தேன். பின்னர் அவர்கள் அவ்விடத்திற்கு வரும் முன்னர் நான் அருகில் சென்று பார்த்த போது வியப்படைந்தேன். காரணம் அது உண்மையில் ஒரு சிசுவின் உடல் அல்ல மாறுபட்ட ஒரு தோற்றத்துடன் காணப்பட்டது . இதனால் அதனை என்னவென்று என்னால் அடையாளம் காணமுடியவில்லை.என தெரிவித்தார். குறித்த உருவத்தை ஆய்வுக்காக எடுத்து சென்ற தடவியல் நிபுணர்கள் புறஊதா கதிர்வீச்சுப்படம் எடுத்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதுவரை அடையாளம் காணப்பட்ட தகவல்களில் அடிப்படையில் குறித்த உருவம் 10-20 செ.மீ நீளமுடன் மிகச்சிறிய அளவில் காணப்பட்டுள்ளது. மேலும் இதன் எலும்புகள் ஒரு சிசுவின் எலும்புகளை ஒத்ததாகவும் உடல் அமைப்பு மனித உடலமைப்பை ஒத்ததாகவும் காணப்படுகிறது. முழுமையான 2கால்கள் மற்றும் கைகளுடன் தலையில் மெல்லிய திசுவுடன் மஞ்சள் நிறத்தில் முடி காணப்படுகிறது. கைகளில் சாதாரண மனிதர்களுக்கு உளள்ளதைப்போன்று ஐந்து விரல்கள் காணப்படுகிறது. இன்னுமொரு முக்கிய விடயம் என்ன வென்றால் இதன் முதுகுப்பகுதியில் இலைகள் போன்று இறக்கை அமைப்பு காணப்படுகின்றமையும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிறவுண் நிறத்தில் காணப்படும் இதன் இறக்கை தூரப்பார்வைக்கு அச்சு அசல் ஒரு இலையாகவே காணப்படுகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த ஆய்வாளர்கள் இது உரு மனித உருவமா? அல்லது பறவையா? அல்லது பூச்சி இனமா? என்பது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இது பற்றி அறிந்து கொள்வது மிகவும் கடினமான விசயமாக உள்ளது எனவும் மனித இனம் எனின் இனப்பெருக்க உறுப்பு நிச்சயம் இருந்திருக்க வேண்டும் ஆனால் இந்த உயிரினத்துக்கு இவ்வாறு இருக்கவில்லை மற்றும் இறந்த நிலையிலும் இது துர்நாற்றம் எதுவும் வீசவில்லை எனவே எமக்கு இது பெரும் வியப்பை தந்திருக்கிறது என குறிப்பிட்டார்கள்”
        இதுதான் அந்த செய்தி.அவ்வப்போது வரும் பரபரப்புக்கான பொய்யான தகவலா இது எனவும் தெரியவில்லை.
---------------------------------------------------------------------------------------------


உலகுக்கு புதிய ஆபத்து.
                     
முற்றிலுமாக செயலிழந்த நிலையிலுள்ள செயற்கைக்கோளொன்று இன்னும் சில தினங்களில் பூமியின்மீது விழும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். டெப்ரிஸ் எனப்படும் இந்த விண்கலத்தின் எடை7 டன்கள் ஆகும். இதனை நாசா விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர். இச் செயற்கைக்கோள் வரும் 23ஆம் தேதியளவில் பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இக்கோளானது பூமியை வந்தடையும் போது 1006 துண்டுகளாக உடையுமெனவும் இவற்றில் 26 துண்டுகள் மட்டுமே பூமியில் விழும் எனவும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு உடையும் துண்டுகளில் துண்டொன்றின் எடை 350 பவுண்ட்கள் எனவும் இவை பூமியில் மனிதரொருவரை மோதுவதற்கான சாத்தியம் உள்ளது எனவும் கூறப்படுகிறது. இது பற்றி இன்னும் அதிக தகவல்களை நாசா இன்று வெளியிடலாம். இது எப்பகுதியில் விழுமென நாசா விஞ்ஞானிகளால் சரியாக கணிக்க இயலவில்லை. அண்டார்டிகாவைத் தவிர பூமியின் எப்பகுதியிலும் இது விழலாம் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.  இரண்டு சூரியன்களை, ஒரு கோள் சுற்றி வருவதை, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். கெப்ளர்-16பி எனப் பெயரிடப்பட்டுள்ள இக் கோளானது பூமியிலிருந்து 200 ஒளிஆண்டு தொலைவில் அமைந்துள்ளதாம்.


                         

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு