தொடரும் கடிதங்கள்
புதிய தொலைத் தொடர்பு உரிமங்கள் மற்றும் அலைக் கற்றை விநியோகம் குறித்து பிரணாப் முகர்ஜியின் ரகசியக் குறிப்பு மத்திய அரசைப் பிரச் சனைக்குள்ளாக்கும் என்று தெரியவருகிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக் கீடு விவகாரத்தில் விலை நிர் ணயம் செய்வது உள்பட தெளிவான கொள்கை உரு வாக்குவது குறித்தும் 2001ம் ஆண்டு விலைக்கு ஜனவரி 2008ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக வும் புதிய உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு இருவாரங்கள் முன்னதாக, 2007 டிசம்பர் 26 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அப்போதைய வெளி யுறவுத்துறையமைச்சரும் அமைச்சர்கள் குழுவின் உறுப் பினருமான பிரணாப் முகர்ஜி எழுதிய ரகசியக் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அலைபேசிச் சந்தை 2003ம் ஆண்டிலேயே பல மடங்கு வளர்ச்சியடைந் திருந்த போதிலும் மத்திய தொலைத்தொடர்புத்துறையானது 1999ம் ஆண்டு நிர்ணயித்த கொள்கையின்படி 2008ம் ஆண்டு விலை நிர்ணயம் செய் திருந்தது குறிப்பிடத்தக்கது. அலைக்கற்றைகளுக்கான சந்தை விலை, கொள்கை மற் றும் கொள்கை மாற்றம் போன் றவைகளை நிர்ணயிப்பதற்கு அரசு சிறப்புரிமை பெற்றுள்ள போதிலும், அரசு தனது கொள்கைகளில் வெளிப் படைத்தன்மையைப் பேணு வதற்காக, அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தொலைத் தொடர்புத் துறை புதிய விதிமுறைகளை ஏற் படுத்தியிருக்கவேண்டும் என்று பிரணாப் முகர்ஜி, பிரதமருக்கு எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர் வால் என்பவரால் தற்போது பெறப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு உரி மங்கள் மற்றும் அலைக் கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு அரசு முகமைகள் மற்றும் துறைகளின் கருத்துக் கள் வேறுபட்டுள்ளன என்று அந்தக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விதிகள் முந்தைய விதிகளை விடக் கடினமானதாக உள்ளது என்று பிரணாப் முகர்ஜி அதில் சுட்டிக்காட்டியுள் ளார். அடுத்ததாக, தொலைத் தொடர்பு பொறியியல் மையம், மிகமிகக் கடினமான விதிகளைப் பின்பற்ற வேண் டும் என்று தெரிவித்துள்ளது. அக்கருத்தை தொலைத் தொடர்புத்துறையின் செய லாளர் தலைமையில் அமைக் கப்பட்ட 3வது கமிட்டியும் வலியுறுத்தியுள்ளது. இருந்த போதிலும், தொலைத்தொடர் புத்துறை புதிய விதிகளைப் பின்பற்றவில்லை என்று பிர ணாப் முகர்ஜி தனது கடிதத் தில் சுட்டிக்காட்டியுள்ளார். பழைய கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் இத்தகைய போக்கு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும். மேலும் புதிய விதிகளைப் பின்பற்று வதன் மூலம் வழங்கப்படும் உரிமங்கள் வலுவானவையாக இருக்கும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் இவ்விவகாரத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று பிரதமரின் தனிச் செயலாளர் டிசம்பர் 28, 2007ம் ஆண்டு குறிப்பு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், இத்தனை குறிப்பு களையும் வாங்கி வைத்துக் கொண்ட பிரதமர் மன் மோகன் சிங் கமுக்கமாக இருந்துள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலே: “இந்திய ஜனநாயகம்”கட்டுபோடும் போது எடுத்தப்படம்
________________________________________________________
|
கூடங்குளமும் புகுஷிமாவும் |
-என்.ராமதுரை |
தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் ஜப்பானில் விபத்துக்குள் ளாகிய புகுஷிமா அணுமின் நிலையத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கூடங்குளம் தமி ழகத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. புகுஷிமாவும் அப்படித்தான். அது ஜப்பானின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.
தமிழகத்தை 2004-ல் சுனாமி அலைகள் தாக்கின. புகுஷிமாவை இதேபோல கடந்த மார்ச் மாதம் சுனாமி தாக்கியது. ஆனால், ஒற்றுமைகள் இதோடு சரி, புகுஷிமாவில் உள்ள நிலைமைகள் வேறு. கூடங்குளத்தில் உள்ள நிலைமைகள் வேறு. ஆகவே, புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி கூடங்குளத்துக்கு ஏற்பட வாய்ப்பே கிடையாது. முக்கிய காரணம் பூகோள நிலைமைகள். நிலப்பகுதியில் ஏற்படுவதைப்போலவே கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் ஏற்படுகின் றன. கடலடி பூகம்பங்கள் சில இடங்களில் மட்டுமே நிகழ்கின்றன. பூமியின் மேற்பரப்பா னது பல சில்லுகளால் ஆனது. ஆங்கிலத் தில் இவற்றை “பிளேட்’ என்கிறார்கள். உல கின் கண்டங்களும் கடல்களும் இந்தச் சில் லுகள் மீது தான் அமைந்துள்ளன. சில்லுகள் என்பவை பூமியின் மேற்பரப்புக்கு அடியில் அமைந்த பிரம்மாண்டமான பாறைப் பாளங்கள். ஒரு சில்லு என்பது பல ஆயிரம் கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாகவும், பல கிலோ மீட்டர் தடிமன் கொண்டதாகவும் இருக்கலாம். உதாரணமாக, இந்தியத் துணைக் கண்டமும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் இந்தியச் சில்லு மீது அமைந்துள்ளது. சில்லு கள் ஆண்டுக்குச் சில சென்டிமீட்டர் வேகத் தில் நகருகின்றன. இந்தியச் சில்லு வடகிழக் குத் திசையை நோக்கி நகர்ந்து ஐரோப்பாவும் ரஷியாவும் மத்திய ஆசிய நாடுகளும் அமைந்த யூரேசிய சில்லுவை நெருக்குகிறது. அண்மையில் சிக்கிமில் ஏற்பட்ட பூகம் பத்துக்கு இதுவே காரணம். ஒரு சில்லு இன் னொன்றை நெருக்காமல் அதை உரசிச்செல் வது உண்டு. வேறு இடங்களில் ஒரு சில்லு இன்னொரு சில்லுக்கு அடியில் புதையுண்டு போவதும் உண்டு. பூமியின் மேற்பரப்பில் பிரதானமாக ஏழு பெரிய சில்லுகளும் மற்றும் பல சிறிய சில்லுகளும் உள்ளன. இந்தச் சில் லுகள் சந்திக்கும் இடங்களில்தான் பிரச்ச னைகள் தோன்றுகின்றன. இந்தியா அமைந்த சில்லுவின் கிழக்குப் பகுதியானது வங்கக் கடலுக்கு அடியில் பர்மா சில்லுக்கு அடியில் புதைகிறது. இப்படி நிக ழும்போது கடலடியில் கடும் பூகம்பம் ஏற் படும். 2004-ல் இப்படி நிகழ்ந்தபோதுதான் சுனாமி தோன்றி தமிழகத்தைத் தாக்கியது. மிகக் கடுமையான கடலடி பூகம்பங்களே சுனாமியை உண்டாக்குகின்றன. சுனாமி யைத் தோற்றுவிக்கக்கூடிய கடலடி மடு தமி ழகக் கரையிலிருந்து குறைந்தது 1,500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. 2004-ல் சுனாமி தோன்றியதற்குக் காரணமான கடலடி பூகம்பம் தமிழகக் கரையிலிருந்து சுமார் 1,860 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. தமிழகத்துடன் ஒப்பிட்டால், ஜப்பானைச் சுற்றி பசிபிக் சில்லு, யூரேசிய சில்லு, வட அமெரிக்க சில்லு, பிலிப்பின்ஸ் சில்லு எனப் பல சிறிய சில்லுகள் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகளின் சந்திப்புகள் ஜப்பானின் கரை களுக்கு மிக அருகில் உள்ளன. ஜப்பானில் ஓயாது பூகம்பங்கள் நிகழ்வதற்குக் காரணம், இந்தச் சில்லுகளின் நகர்வுகளே. ஜப்பானின் கிழக்குப் பகுதியில் சில்லுகள் ஒன்றுக்கு அடியில் இன்னொன்று புதைவதும் நிகழ்ந்து வருகிறது. இவை கடலடி பூகம்பங் களை உண்டாக்கும்போது சுனாமிகள் தோன் றுகின்றன. ஜப்பானில் சுனாமி தாக்குதல் என்பது சகஜம். சுனாமி என்பதே ஜப்பானியச் சொல்லாகும். ஜப்பானில், பூகம்ப எச்சரிக்கை நிலையங்களும், சுனாமி எச்சரிக்கை நிலை யங்களும் நிறையவே உள்ளன. ஆனால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் உஷார் ஆவதற்குப் போதுமான அவகாசம் இருந்தால் தான் எச்சரிக்கைக்கு அர்த்தம் உண்டு. இந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி புகுஷிமா வைத் தாக்கிய பூகம்பம் ரிக்டர் அளவுகோ லில் 9-ஆக இருந்தது. உடனே பூகம்ப எச் சரிக்கையும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட் டன. ஆனால், சுனாமிக்குக் காரணமான கட லடி பூகம்பம் புகுஷிமாவிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சுனாமி அலைகள் மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத் தில் செல்பவை. ஆகவே, சுனாமியிலிருந்து தப்ப, போதுமான அவகாசம் கிடைக்கவில்லை. இத்துடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் கரை ஓரமாகக் கடலடியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. கடலடி பூகம்பம் ஏற்படக் கூடிய, அதாவது சுனாமி தோன்றக்கூடிய பகுதி என்பது தமிழகத்திலிருந்து குறைந்தது 1,800 கிலோமீட்டரில் உள்ளது. ஆகவே, அப் பகுதியில் எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் பெரிய சுனாமி தோன்றியது என்றால் தமி ழகக் கரை ஓரமாக உள்ள இடங்களில் முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் குறைந் தது மூன்றரை மணி நேரம் அவகாசம் கிடைக்கும். 2004-ம் ஆண்டுக்கு முன்னர் வங்கக் கடல் பகுதியில் சுனாமியைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்ய எந்த ஏற்பாடும் இல்லா திருந்தது. அவ்வித ஏற்பாடு இல்லாமல் இருந்த நிலையிலும், தமிழகத்தின் கரை ஓரமாக அமைந்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலை யத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இப் போது சுனாமி எச்சரிக்கை நிலையங்கள் உள் ளதால், சுனாமி தாக்குதல் ஏற்படும் என்றால் கல்பாக்கத்திலும் சரி, கூடங்குளத்திலும் சரி முன்கூட்டி தக்க நடவடிக்கைகளை மேற் கொள்ள நிறைய அவகாசம் கிடைக்கும். எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் முக் கியமான பகுதி அணு உலையாகும். யுரேனி யம் அடங்கிய உலோகத் தண்டுகள் கட்டுக் கட்டாக அணு உலைக்குள் வைக்கப்பட்டி ருக்கும். யுரேனியம் அடங்கிய தண்டுகளை அருகருகே வைத்த மாத்திரத்தில் சில நூறு சென்டிகிரேட் அளவுக்குப் பயங்கர வெப்பம் தோன்றும். யுரேனியத்தின் விசேஷத்தன்மை இதற்குக் காரணம். இத்தண்டுகளை அப்படி யேவிட்டால் உருகும், ஆவியாகும், காற்றில் கலந்து சுற்று வட்டாரத்தில் கதிர்வீச்சு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, அணுஉலை எப்போதும் தண் ணீருக்குள் இருக்க வேண்டும். ஒருபுறத்திலி ருந்து குளிர்ந்த நீர் வந்து கொண்டிருக்கும். மறுபுறம் அந்த நீர் பயங்கரமாகச் சூடேறி நீராவி யாகி வெளியே சென்று கொண்டிருக்கும். இவ்விதமாகத் தோன்றும் நீராவியைக் கொண்டு ஜெனரேட்டரை இயக்கி மின்சாரத் தை உற்பத்தி செய்கிறார்கள். பூகம்பம் ஏற்பட்டால் அணுமின் நிலை யம் பாதிக்கப்படலாகாது என்பதற்காக, எல்லா அணுமின் நிலையங்களிலும் அணுமின் நிலையம் தானாகவே செயல்படாது நின்று விடும். ஆகவே, மின்சார உற்பத்தி அடியோடு நின்றுவிடும். அப்படியானால் அணு உலை என்னாவது? அதற்குத் தொடர்ந்து நீர் கிடைக் காவிட்டால் ஆபத்தாயிற்றே. ஆகவே, எல்லா அணுமின் நிலையங்களிலும் டீசலால் இயங் கும் ஜெனரேட்டர்களை வைத்திருப்பர். அணு உலைக்கு நீரை அளிப்பதற்கான பம்புகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை டீசல் ஜெனரேட்டர்கள் அளிக்கும். புகுஷிமா அணுமின் நிலையத்தைச் சுனாமி தாக்கியபோது டீசல் ஜெனரேட்டர்கள் கடல் நீரில் மூழ்கிப்போயின. அவை கடலோ ரமாகத் தாழ்வான இடத்தில் வைக்கப்பட்டி ருந்ததே காரணம். இவை மட்டும் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தால் புகுஷிமா வில் எந்த விபத்தும் ஏற்பட்டிராது. கல்பாக்கத் தில் டீசல் ஜெனரேட்டர்கள் உயரமான இடத் தில் இருந்ததால் 2004-ல் சுனாமி தாக்கிய போது பிரச்சனை ஏற்படவில்லை. இப்போ தெல்லாம் அணுமின் நிலையங்களில் நீரை அளிக்கும் பம்புகளை இயக்குவதற்குக் கூடு தல் ஏற்பாடாக பெரிய மின்சார பாட்டரி களையும் வைத்திருக்கின்றனர். டீசல் ஜெனரேட்டர் செயலிழந்தால் பாட் டரிகளைப் பயன்படுத்துவர். புகுஷிமாவில் இப்படியான நவீன ஏற்பாடுகள் இல்லாத தற்கு அது கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என்பதேயாகும். தவிர, சில ஆண்டுக ளில் புகுஷிமா அணுமின் நிலையத்தை மூடி விடத் திட்டமிட்டிருந்தனர். ஆகவே, அங்கு நவீன ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சுருங்கச்சொன்னால் புகுஷிமாவில் விபத்து ஏற்பட்டதற்கு டீசல் ஜெனரேட்டர்கள் இயங்காமல் போனதே காரணம். உலகில் இப்போது 30 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் உள் ளன. புகுஷிமா விபத்துக்குப் பிறகும் இவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. எனினும், புகுஷிமா விபத்துக்குப் பிறகு பொதுவில் மக்களிடையே அணுமின் நிலையங்கள் பற்றி ஒரு பயம் தோன்றியுள்ளது. எங்கோ ஒரு ரயில் விபத்தில் 100 பேர் மடிந்ததாகச் செய்தியைப் படிக்கின்ற ஒருவர், மறுநாள் காலையில் ரயிலில் ஏறும்போது அவர் மனதில் ஓர் அச்சம் நிலவும். இது இயல்பு. கூடங்குளம் பற்றிய அச்சமும் கிட் டத்தட்ட இது போன்றதே. எனினும் ரயில் விபத்தையும் அணுமின் நிலைய விபத்தையும் ஒப்பிட முடியாதுதான். எல்லாம் சரி, அணுமின் நிலையங்க ளுக்கு மாற்று உள்ளதா? நிலக்கரியைப் பயன் படுத்தும் அனல் மின் நிலையங்களை அமைப்பது தலைவலிபோய் திருகுவலி என் பதற்கு ஒப்பானது. காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலை கள் மூலம் ஆண்டில் சில மாதங்களுக்கு மட் டுமே மின்சாரம் கிடைக்கும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற இயலும். ஆனால், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ. 25 வீதம் செலுத் தத் தயாராக இருக்க வேண்டும். எரிவாயு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் போதுமான எரிவாயு கிடைக் கவில்லை. ஆந்திர மாநிலத்தின் கரை ஓர மாகக் கடலுக்கு அடியில் ஏராளமான அள வில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராட்சதக் குழாய்கள் மூலம் இதைத் தமிழகத் துக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுமா னால் எரிவாயுவைப் பயன்படுத்தும் மின் நிலையங்களை அமைக்க முடியும். ஏற்கெனவே நிறுவப்பட்டுத் தயார் நிலை யில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை என்ன செய்வது? அது பாதுகாப்பானதுதான் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரையில் காத்திருப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்றே தோன்று கிறது. நன்றி: தினமணி (23.9.2011) |