வெள்ளி, 31 டிசம்பர், 2021

இதுதான் ராமராஜ்யம்?

 #go back modi 

தப்பே இல்லை.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முழுதும் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமளவிலான பயிர் சேதத்தை ஒன்றிய அரசின் குழுவினரும் வந்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 1,510 கோடியே 83 லட்ச ரூபாயும், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய 4719 கோடியே 62 லட்ச ரூபாயையும் வழங்கக் கோரி, ஏற்கனவே 3 விரிவான அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததுள்ளது தமிழக அரசு.அதை நினைவூட்டி டிசம்பர் 29 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அந்தக் கடிதத்தில், “ கொரோனாவால் அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக பயன்படுத்திவிட்டோம். 


எனவே, தமிழக அரசு கோரிய ஆறாயிரத்து 230 கோடியே 45 லட்ச ரூபாய் நிதியை வழங்கிட, உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் தமிழக முதல்வர்.

நேற்று நீட் தேர்வு தொடர்பாக தமிழக எம்பிக்கள் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் பெற்று காத்திருந்தும், அவர்களுக்கு அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை. 

இதை செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக முதல்வரின் கடிதம் எழுதிய மறுநாளான நேற்று (டிசம்பர் 30) இயற்கை சீற்ற நிவாரணமாக ஆறு மாநிலங்களுக்கு ரூ 3,063.21 கோடி வழங்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

அந்த மாநிலங்களில்  பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.

இது தொடர்பாக நேற்று மாலை உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“2021-ம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் மத்திய மானியமாக ரூ 3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இயற்கை பேரிடர்களை எதிர்கொண்ட இந்த ஆறு மாநிலங்களின் மக்களுக்கு உதவுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உறுதியை இது காட்டுகிறது. 

நிதி ஒதுக்கீட்டின் விவரம்:

‘டௌக்டே’ சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1,133.35 கோடி,

‘யாஸ்’ சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.586.59 கோடி,

2021 தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம்/நிலச்சரிவுகளுக்காக அஸ்ஸாமுக்கு ரூ.51.53 கோடி, 

கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, 

மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி ,

 உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ 187.18 கோடி

. இந்த கூடுதல் உதவியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்கு கூடுதலாகும்" என்று உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ 2021-22ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3,543.54 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

‘டௌக்டே’ மற்றும் ‘யாஸ்’ புயல்களுக்குப் பிறகு, 20.05.2021 அன்று தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குஜராத்திற்கு முன்பணமாக ரூ 1,000 கோடி புயல் உருவானவுடனே கொடுக்கப்பட்டது,

அதேபோல்  29.05.2021 அன்று மேற்கு வங்காளத்திற்கு ரூ 300 கோடி வழங்கப்பட்டது..

2021-22 ஆம் ஆண்டில், இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து கோரிக்கையைப் பெறுவதற்குக் காத்திருக்காமல், 22 அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுக்களை மத்திய அரசு உடனடியாக நியமித்தது” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரு மாத கால மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு  நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்காக காத்திராமல் மேற்கண்ட ஆறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் கோரிக்கை வைத்தும் தமிழநாட்டுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 31) திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கத்தில், “நிதி உரிமை என்பதும் நிதி வளம் என்பதும் ஒன்றிய அரசின் கையில்தான் இருக்கிறது. அதனை செய்து தர வேண்டிய தார்மீகக் கடமை அவர்களுக்குத்தான் இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி என்ற பெயரால் மாநிலங்களுக்கு வர வேண்டிய வருவாயை மொத்தமாக ஒன்றிய அரசின் கருவூலத்துக்கு பாஜக அரசு திருப்பியது.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளோ மோடி,அமித் ஷாவிடம் உரிமையுடன் கோரி தமிழ்நாடுக்கு  நேர்மையாக கிடைக்க வேண்டிய பேரிடர் நிவாரணத்தை,வரி ஒதுக்கீட்டை வாங்கித்தர வக்கின்றி தமிழ்நாடு அரசை எதிர்த்து அரசியல் செய்கிறார்கள்.அதற்கான அடிப்படை உரிமையை அவ்களுக்கில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.

சரியாகத் தர வேண்டிய நிவாரணம் போன்றவற்றை தராமல் குடும்ப அட்டைக்கு ஐயாயிரம் கொடு என அறிக்கை பா.ஜ.க,சார்பில்  விடுபவர்களைப் பார்த்தால் #go back modi சொல்வதில் தவறே இல்லை எனத் தெரிகிறது.

----------------------------------------------------------------------

கொரோனாவுக்கு முடிவு 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், 1 மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. 

இந்தியாவிலும் இந்த வைரஸ் கடந்த 2-ந் தேதி நுழைந்து வேகமாக பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது.

இந்த ஒமைக்ரான் வைரசில், கொரோனாவின் பிற எந்த உருமாறிய வைரசிலும் காணப்படாத அளவுக்கு அதன் ஸ்பைக் புரதத்தில் 37 பிறழ்வுகள் (உருமாற்றங்கள்) இருப்பதும், இந்த ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தித்தான் ஒமைக்ரான் மனித உடல் செல்களுக்குள் நுழைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பும் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடி) அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

 ஒமைக்ரானை மட்டுமல்லாது உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஸ்பைக் புரதத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட தளங்களை குறிவைக்கும் ஆன்டிபாடிகளில் (நோய் எதிர்ப்பு பொருள்) கவனம் செலுத்தி, வைரசின் தொடர்ச்சியான பரிணாமத்தை கடக்க ஒரு வழி இருக்கிறது என்பதை  இக்கண்டுபிடிப்பு சொல்கிறது.

ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்தக்கூடிய ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருப்பதால், இவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கவும், ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கவும் வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வகையான வைரஸ்களில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிப்பதின் மூலம், அவற்றை ஆன்டிபாடிகள் வீழ்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு, இந்த பகுதிகளை குறிவைக்கிற தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிபாடி சிகிச்சைகளை வடிவமைக்க உதவும். 

இது பரந்த அளவிலான மாறுபாடுகளுக்கு எதிராக பயனுள்ளதாக அமையும்.-----------------------------------------------------------------------------

ஹிட்லரின் கொ.ப.செயலாளர்

கோயபல்சின் 9 அடிப்படை கொள்கைகள்.1. பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். அது மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை.

2. நாட்டில் என்ன நடந்தாலும் எதிர்க்கட்சிகளை குற்றம் சொல்லுங்கள்.

3. எவ்வளவு பெரிய தவறையும், தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரிலே நியாயப்படுத்த வேண்டும்.

4. ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு பொய் பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

5. எல்லா விதமான உண்மைகளுக்கும், ஒரு பொய்க்கதையைப் புணைந்து அதை சமூகத்தில் உலாவ விட வேண்டும்.

6. தங்கள் கருத்துக்கு எதிராக இருப்பவர்களை எல்லாம் தேச துரோகிகள் எனச் சொல்ல வேண்டும்.

7. தம் இயக்கத்தில் உள்ள தலைவர்களை பொதுமக்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

8. அடிக்கடி பேரணி நடத்துங்கள். அடிக்கடி பெரும் திரள் கூட்டத்தை நடத்துங்கள்.

9. கடந்த காலப் பெருமைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள்.

கோயபல்ஸ்

ஒருவர் ஒரு இடத்தில் பொய் கூறுகிறார் என்றால் மெலிதாக கூறிவிட்டு கடந்துவிடுவார். திரும்பவும் அதைப்பற்றி அந்த இடத்தில் பேச்சு வராதவாறு அவர் பார்த்துக்கொள்வார்.

 ஆனால் கோயபல்ஸ் அப்படியில்லை, தாம் சொல்வது வடிகட்டிய பொய் தான் என்றாலும் அதை நயமாக எடுத்துரைத்து திரும்ப திரும்ப அதைப்பற்றி பேசி அதைக்கேட்டவர்கள் அனைவரையும் ''அட உண்மைதாம்பா'' என நினைக்க வைத்துவிடுவார். 

மக்களிடம் எந்த மாதிரி பேசினால் அவர்களுக்குள் தனது பொய்யை உண்மை என விதைக்க முடியும் என்ற வித்தையை கற்று வைத்திருந்தார் கோயபல்ஸ்.

100 ஆண்டுகளுக்கு முன்பு

கோயபல்ஸ் திறமை

அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகர்கள், தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என தற்போது இருந்தாலும், நூறாண்டுகளுக்கு முன்பே இதனை உலகிற்கு அறிமுகம் செய்தவர் ஹிட்லர். ஆம், தனது நாஜி கட்சிக்கு ஆலோசகராகவும், வியூக வகுப்பாளராகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் கோயபல்ஸை பணியமர்த்தி தனக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டார் ஹிட்லர். கொடூரனான ஹிட்லரையே தனது பேச்சால் மயக்கியவர் கோயபல்ஸ் என்றால் அவரின் திறமையை யூகித்துக்கொள்ளுங்கள்.

------------------------------------------------------------------------செவ்வாய், 28 டிசம்பர், 2021

புத்தாண்டு பரிசுகள்.

 மோடியின் ஆட்சியில் இந்திய ஒன்றிய அரசு 2022 முதல் பல பரிசுகளை இந்திய மக்களுக்கு வாரி வழங்க உள்ளது.

உலகிலேயே மிகச் சிறந்த பொருளாதாரக் கொள்கைகள்,நிதி திர்வாகம் கொண்ட பா.ஜ.க மட்டுமே இப்படி சாதனைகளை செய்ய முடியும் என ஐ.நா.மன்றமே வியந்துள்ளது.

இனி2022 புத்தாண்டு மோடி அரசு வழங்க உள்ள  மக்கள் நலத்திட்டங்கள் விபரம்:-

ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள், விலை ஏற்ற இறக்கம் என பல்வேறு விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. அதிலும், புத்தாண்டு என்றால் சொல்லவா வேண்டும். இதில் பெரும்பாலான விதிமுறைகள் சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் வகையிலே உள்ளன. ஆக, ஜனவரி முதல் மாறவிருக்கும் விதிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.

ஏடிஎம்  கட்டணம்

ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இப்புதிய கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இலவச வரம்புக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க இதுவரை 20 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இனி 21 ரூபாய் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையலுக்கு தேவையான கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. எனவே, ஜனவரியிலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தபால் துறை

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி) வாடிக்கையாளர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் 10000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவும், பணம் போடவும் கட்டணம் செலுத்த வேண்டும்.


தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணத்தை (சேவைக் கட்டணம்) ஜனவரி 1ஆம் தேதி முதல் மாற்றியுள்ளது.

உடைகள்

ஜவுளிப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி


விகிதத்தை 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்த புதிய வரி விகிதம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆடைகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
-------------------------------------------------------------------------------


--------------------------------------------------------------------------------

குடிமகன்களுக்கோர் நற்செய்தி!

ஆந்திராவில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ஒரு கோடி வாக்குகளைப் பெற்றால்,மக்களுக்கு ரூ.70க்கு மதுபானம் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயவாடா கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தில் “தரமற்ற” மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்கள் நன்கு அறிந்த மற்றும் பிரபலமான பிராண்டுகள் கிடைக்கவில்லை.

‘Special Status’, ‘Governor’s Medal’என்ற லேபிள்களின் கீழ் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.
அவர்கள் பிராண்டட் மதுபானங்களை விற்பனை செய்வதில்லை.பாஜகவுக்கு ஒரு கோடி ஓட்டுக்கொடுங்கள். வெறும் 70 ரூபாய்க்கு மதுவை வழங்குகிறோம். அதே சமயம், வருமானம் மிச்சம் இருந்தால், வெறும் 50 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம் என்றார்.

மேலும் பேசிய அவர், ” போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் அரசு ஈடுபட்டுள்ளது. மாநில அரசு) மக்களின் இரத்தத்தை குடிக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஒரு நபர் மதுபானம் வாங்கிட 12,000 ரூபாய் செலவிடுகிறார். இந்த பணத்தை அரசு வசூலித்துக்கொண்டு நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மக்களுக்கு திருப்பி கொடுக்கிறது என்றார்.

பிராண்டுகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், மாநிலத்தில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது

அண்மையில், ஆந்திர மாநில அரசு மதுபானத்தின் மீதான வாட் வரியை குறைத்தது, ஆனால் ‘சிறப்பு மார்ஜின்’ சேர்ப்புடன் மதுபானம் MRP விலை மாறாமல் இருந்தது, நுகர்வோருக்கு பலன் அளிக்கப்படவில்லை. 


இது போன்ற குறைகளை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் களைவதாக குடிமக்களுக்கு பா.ஜ.க, வாக்குறுதி தந்து வாக்குகளை கேட்டு வருகிறது.

----------------------------------------------------------------------------------
-


வென்றிடக் காரணம் என்ன?

 

மதவெறியும் பாசிசமே....

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி மூன்று நாட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான சங்பரிவாரக் கும்பல்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. 

 ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள புனித மீட்பர் தேவாலயத்தில் உள்ள ஏசு கிறிஸ்து வின் சிலையை இந்துத்துவா மத வெறிக் கும்பல் உடைத்து நொறுக்கி யது. இது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இஸ்லாமிய மற்றும் கிறித்துவ சிறு பான்மை மக்களுக்கு எதிராக நடத்தப் படும் தாக்குதல்கள் வன்மை யாகக் கண்டிக்கப்பட்டன. 2021ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 300 தாக்குதல்கள் கிறித்துவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளன என்பதை மத்திய குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டியது. கடந்த சில நாட்களில் இத்தகைய தாக்குதல்கள் அதிகரித் துள்ளன. இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என பகிரங்கமாக அறைகூவல்விடப் பட்டது. கிறித்துவ  மக்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. 

கிறிஸ்துமஸ் மீது தாக்குதல்

கிறிஸ்துமஸ் அன்று மட்டும் பல்வேறு தாக்குதல்கள் நடந்துள் ளன. அவற்றில் சில:

1. ஆக்ரா/உத்தரப்பிரதேசம்

கிறிஸ்துமஸ் அன்றைக்கு உத்தரப் பிரதேச மாநிலமான ஆக்ராவில் ராஷ்ட்ரிய பஜ்ரங்தள் எனும் அமைப்பினர் கிறிஸ்துமஸ் தாத்தா என அழைக்கப்படும் “சாண்ட்டா கிளாஸ்” உருவ பொம்மையை எரித் தனர். “சாண்ட்டா கிளாஸ்” எந்த  பரிசுப் பொருளையும் கொண்டு வருவதில்லை. 

மதமாற்றத்தைதான் கொண்டு வருகின்றனர்” என அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அஞ்சு சவுகான் கூச்சல் போட்டார். மதமாற்றத்தை நிறுத்தவில்லை எனில் அனைத்து மிஷனரி பள்ளிகள் முன்பும் கலகம் செய்வோம் எனவும்  கொக்கரித்தார்.

முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் ஊழியரான இவர் 2015ஆம் ஆண்டு 1500 முஸ்லீம்களை இந்து மதத்துக்கு மாற்றும் “கர்வாபஸி” எனும் நிகழ்ச்சியை நடத்தியவர்.  “மகளைக் காப்பாற்றுங்கள்; மரு மகளைக் கொண்டு வாருங்கள்” என பிற மதங்களை சேர்ந்தபெண்களை காதலித்து இந்து மதத்துக்கு கொண்டு வாருங்கள் எனக் கூறியவர்.

2. வாரணாசி/ உத்தரப்பிரதேசம்

வாரணாசியில் உள்ள மட்ரிதம் ஆசிரமத்துக்கு வெளியே கிறிஸ்து மஸ் இரவு அன்று சுமார் 30 பேர்  ஜெய்  ஸ்ரீ ராம், மதமாற்றத்தை நிறுத்து, தேவாலயங்கள் ஒழியட்டும், மிஷனரிகள் ஒழியட்டும் என கூச்சல் போட்டனர். 

கிறித்துவ மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் இத்தகைய கலகங்கள் 2020ஆம் ஆண்டு மத மாற்ற தடைச்சட்டத்துக்கு பின்னர் அதிகமாகிவிட்டன என தலித் உரிமை கள் செயற்பாட்டாளர் முனைவர் அனூப் ஷிரமிக் கூறினார். இந்த ஆசிரமத்தை நடத்தும் பாதிரியார் ஆனந்த் “இது தேவால யமே அல்ல; இது ஆசிரமம். 

இங்கு  அனைத்து மதங்களை சேர்ந்தவர் களும் வந்து மன அமைதிக்காக பிரார்த்திக்கின்றனர். மதமாற்றம் என்பது அறவே இல்லை. எனினும் இத்தகைய கலகங்கள் நடக்கின் றன” எனக் கூறுகிறார். 

நாங்கள் காவல் துறையிடம் பாதுகாப்பு கேட்டும் எவரும் வரவில்லை எனவும், சங்பரிவார அமைப்பினர் கூச்சல் போட துவங்கிய உடனே காவல்துறைக்கு தெரிவித்தோம்; ஆனால் அவர்கள் கலைந்து சென்ற பின்னர்தான் காவலர்கள் வந்தனர் எனவும் ஆனந்த் கூறினார். “உத்தரப்பிரதேசத்தில் நிலைமை மிகவும்  மோசமாக உள்ளது. 

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பயத்துடன்தான் நாங்கள் பிரார்த்தனை நடத்துகிறோம். குறிப்பாக சிறிய தேவாலயங்கள்தான் கடும் தாக்குதல்களுக்கு இலக்காகின்றன” எனவும் அவர் கூறினார்.

3. ஹரியானா

ஹரியானாவில் பஜ்ரங் தள் அமைப்பின் ஹரீஷ் ராம்கலி என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகை க்கு முன்பாகவே டிசம்பர் 23 அன்று முகநூலில் எந்த ஒரு பள்ளிக்கூடமும் குழந்தைகளை சாண்ட்டா கிளாஸ் உடையை அணிய அனு மதிக்கக் கூடாது எனவும் தமது அமைப்பினர் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் குறிப்பாக  கிறிஸ்துவ பள்ளிகளுக்கு சென்று கண்காணிப் போம் எனவும் பதிவு போட்டார். அதே போல பல பள்ளிகளுக்கு பஜ்ரங் தள் அமைப்பினர் சென்று, குழந்தைகள் சாண்ட்டா கிளாஸ் உடை அணிவதை தடுத்தனர்.

4. குருஷேத்ரா/ஹரியானா

குருஷேத்ராவில் கிறிஸ்துமஸ் பண்டிகை யை கொண்டாடிக் கொண்டிருந்த கிறித்துவர் களின்  மேடையை சில சங் பரிவார அமைப்பி னர் திடீரென ஆக்கிரமித்தனர். 

அனுமார் கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தனர். வேறு வழியில்லாமல் கிறித்துவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

5. அம்பாலா/ஹரியானா

அம்பாலாவில் 143 ஆண்டுகள் பழமையான புனித ரெடிமீர் தேவாலயம் அடித்து நொறுக்கப்பட்டது.  தேவாலயத்தில் இருந்த இயேசுநாதர் சிலை உடைக்கப்பட்டது. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

6. குருகிராம்/ஹரியானா

பட்டோடி எனும் இடத்தில் ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த பொழுது சங்பரிவார அமைப்பினர் திடீரென புகுந்து மேடையை ஆக்கிரமித்தனர்.  ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடுமாறு அங்கிருந்தவர்களை நிர்பந்தப்படுத்தினர்.

 இந்து மதம் நீடூழி வாழ்க எனவும் அதர்மம் கூறும் ஏனைய மதங்கள் ஒழிக  எனவும் கூச்சல் போட்டனர். இந்துக்கள் யாரும்  வேறு மதத்துக்கு செல்லக்கூடாது எனவும் வேறு மதங்களை ஆதரிக்கக் கூடாது எனவும் மிரட்டினர். குருகிராமில்தான் முஸ்லீம்களின் தொழுகை கள் தடுக்கப்பட்டன என்பது நினைவுகூரத் தக்கது.

7. சில்சார்/அசாம்

அசாமின் சில்சார் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ்  பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு தேவாலயத்தில் புகுந்த பஜ்ரங் தள் அமைப்பினர் அனைத்து இந்துக்களும் வெளி யேற வேண்டும் எனக் கத்தினர். எந்த இந்துவும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடக் கூடாது எனவும் தேவாலயத்துக்கு வரக்கூடாது எனவும் மிரட்டினர். துளசி தினமான இன்று எவரும் அந்த தினத்தை கொண்டாடாமல் “கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி பொங்கட்டும்” என கூறுவது தங்களை புண்படுத்துகிறது எனவும் அவர்கள் கூறினர்.

இந்த தாக்குதல்கள் குறித்து கருத்து கூறிய முன்னாள் அகில இந்திய கத்தோலிக்க அமைப்பு தலைவர் ஜான் தயாள் “வாடிகனில் போப் ஆண்டவருடன் பிரதமர் மோடி இருக்கும் படம் வெளியிடப்படுகிறது.

 பிரதமர் மோடி இந்தியா திரும்பிய அதே நாளில் கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கான கிளர்ச்சிகள் நடக்கின்றன. இப்பொழுது அந்த சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. 10 மாநிலங்களில் அத்த கைய சட்டங்கள் உள்ளன. எங்கேயும் நிர்ப்பந்தப் படுத்தி மதமாற்றம் நிகழ்வது இல்லை. கர்நாடகா வில் இயற்றப்பட்டுள்ள சட்டம் மிகமிக மோச மானது; பழிவாங்கும் தன்மை கொண்டது” என்றார். முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களும் கிறித்துவர்கள் மீதான தாக்கு தலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை! இவை அங்கும் இங்கும் எதேச்சையாக நடப்பவை அல்ல; நன்கு திட்டமிட்டுதான் இவை நடத்தப்படுகின்றன எனவும் ஜான் தயாள் கூறினார். 

பல சமயங்களில் பாதிக்கப்பட்ட பாதிரியார்கள் மற்றும் ஏனைய கிறித்துவர்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகின்றன. உயர் காவல்துறை அதிகாரிகள் இவற்றை ஆதரிப்பதோ அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பதோ நடக்கும் பொழுது சாதாரண காவலர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் ஜான் தயாள்  கேள்வி எழுப்புகிறார்.

பாஜக மாநிலங்களில்தான்...

இந்த தாக்குதல்கள் பா.ஜ.க.  ஆளும் மாநிலங்களில்தான் நடக்கின்றன. சிறுபான்மை மக்களை அனைத்து விதத்திலும் முடக்குவது என்பது ஆர்எஸ்எஸ்-சின் வழிகாட்டுதல். 

அதனை பா.ஜ.க. மாநில அரசாங்கங்கள் சிரமேற்கொண்டு அமலாக்குகின்றன. பா.ஜ.க. முதல்வர்களும் அமைச்சர்களும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நஞ்சு கக்கும் பொழுது தம்மை எவரும் எதுவும் செய்யமாட்டார்கள் என்பதை சங் பரிவார குண்டர்கள் தெளிவாக உணர்கின்றனர். 

இது அவர்களுக்கு ஆணவத்தையும் தைரியத்தையும் தருகிறது. எதையும் செய்யத் துணிகின்றனர். 

ஹரித்துவார் கூட்டத்தில், முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் எனக் கொக்கரித்த எவரும் இதுவரை கைது  செய்யப்படவில்லை. கிறித்துவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தவர் களும் கைது செய்யப்படுவார்களா என்பது மிகப்பெரிய கேள்விதான்! 

இவற்றைக் கண்டித்து  ஒரு வார்த்தை கூட பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ கூறவில்லை. 

சங் பரிவாரத்தினர் தக்குதல்கள் நடத்தும் அதே சமயத்தில் மத ஒற்றுமை நிகழ்வுகளும் நடக்கவே செய்தன. விவேகானந்தர் நிறுவிய இராமகிருஷ்ணா மடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வழக்கம் போல கொண்டா டப்பட்டன. தமிழகத்தில் பல கோவில்களில் கிறிஸ்துமஸ் கோலங்கள் போடப்பட்டன.

கொல்கத்தாவில் ஒரு கேக் கடை முன்பு நின்ற நீண்ட மக்கள் வரிசை சமூக ஊடகங் களில் வைரலானது. 

காரணம் அந்த கடை யூதர்களுக்கு சொந்தமானது. அங்கு கிறிஸ்து மஸ் கேக் செய்வது இஸ்லாமியர்கள். வரிசையில் நிற்கும் மக்களில் பெரும்பாலானோர் இந்துக் கள். இந்த பன்முகத்தன்மையை சீர்குலைக்க சங்  பரிவாரத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டுள்ள னர். 

அதற்கு எதிர்வினையும் உள்ளது. எனினும் இந்த எதிர்வினை மேலும் வலுப்பெற வேண்டும் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்!

நன்றி:The Wire

------------------------------------------------------------------------------------

கடைசிலதான் பழனி


இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர் களை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை, "அடுத்து சில அமைச்சர்கள், இறுதியாக எடப்பாடிதான் எங்கள் குறி' என்கிறார்கள்.

 

"லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே உங்களை எச்சரிக்கிறோம். நீங்கள் என்ன சுத்தமானவர்களா? சட்டம்-ஒழுங்கிலும், போக்குவரத்துத் துறையிலும் வாங்கித் தின்றவர்கள்தானே? அ.தி.மு.க. ஆட்சி வருமானால் உங்களின் சட்டையை கழட்டுவோம்'' என வெளிப்படையாகவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மிரட்டினார்.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய போலீஸார், "சி.வி.சண்முகம் உட்பட அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களுடைய பயத்தின் வெளிப்பாபயத்தின்,விரகதியின் இந்தப் பேச்சு'' என்கிறார்கள்.

---------------------------------------+---------------------------------

வென்றிடக் காரணம் என்ன?

யாரும் எதிர்பார்த்திராத வெற்றி இது. சண்டிகர் போன்ற ஒரு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு நகரில், எப்போதும் பாஜகவும் காங்கிரஸுமே ஆட்சி செய்து கொண்டிருந்த ஒரு நகரில் ஆம் ஆத்மி அநேக இடங்களில் நகராட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று திங்கள் கிழமை அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது.

ஆம் ஆத்மி 14 இடங்களில் வெற்றி பெற, இரண்டாம் இடத்தை பிடித்த பாஜக 12 வார்டுகளிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் அகலி தளம் ஒரே இடத்திலும் வெற்றி பெற்றது. 

சண்டிகரில் ஆம் ஆத்மி வெற்ற பெற காரணம் என்ன ?

ஆம் ஆத்மி டெல்லியை ஆட்சி செய்யும் முறை சண்டிகரில் அக்கட்சிக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. நகராட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் இக்கட்சி வெற்றி பெற இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. பாஜக ஆட்சி நடைபெற்ற கடந்த ஆண்டில் 200 மடங்காக உயர்த்தப்பட்ட குடிநீர் வரி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 

ஆம் ஆத்மி இந்த முறை தேர்தலில் மக்களுக்கு 20 ஆயிரம் லிட்டர் நீர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

மோடி அலையின் காரணமாக 2016ம் ஆண்டு பாஜக அனைத்து நகராட்சி இடங்களிலும் வெற்றி பெற்றது. 26 வார்டுகளில் 21 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது (அதன் கூட்டணி கட்சியான ஷிரோமணி அகலி தளம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது). அதனால் பாஜக மேயர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

குப்பைகளை அகற்ற அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தண்ணீர் வரி, சொத்து வரி போன்றவை உயர்த்தப்பட்டது.

 இது சண்டிகர் வார்டுகளில் பாஜகவிற்கு எதிரான கடுமையான போக்கு அதிகரித்தது. குறிப்பாக காலனி பகுதிகளில், அடிப்படை வசதிகளை பெற அதிக செலவு செய்ய வேண்டியதால், குடியிருப்போர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.

அதிக அளவு திறந்த வெளிகளுக்கு பெயர் போன சண்டிகரில் கடந்த சில காலங்களாக வாகன நிறுத்தத்திற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.

 இடப்பற்றாக்குறை அதிகரித்த காரணத்தால் பார்க்கிங் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. 

இவை அனைத்தும் பாஜகவிற்கு எதிரான மனப்போக்கை மக்கள் மத்தியில் அதிகரித்தது.

நீர், மின்சாரம் மற்றும் கழிவு மேலாண்மை போன்றவற்றிற்கு அதிக வரி செலுத்தி அதிருப்தியுற்ற மக்கள், தங்கள் நகரின் தூய்மையை பாஜக முற்றிலுமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

2016ம் ஆண்டு சண்டிகர் இந்தியாவில் தூய்மையான நகரங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. தற்போது 66வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இது அங்கே வசிக்கும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

குப்பை அள்ளும் பிரச்னையை ஆளும் பா.ஜ.க,கட்சியினர் முறையாக கையாளவில்லை. 

குப்பைகளை அகற்றுவதற்கோ அல்லது பதப்படுத்துவதற்கோ முறையான வழிமுறைகள் இல்லாததால், தாதுமஜ்ராவ பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சண்டிகர் எப்போதும் தூய்மையான நகரங்களில் ஒன்றாக பெருமை அடைந்தது. ஆனால் அதற்கும் தற்போது வாய்ப்பு இல்லாமல் போனது மக்களை வருத்தத்திற்கு ஆளாக்கியது.

தேர்தலுக்கு முன்னாள் பாஜக வேட்பாளர்கள் மோடி பெயரை,நிர்வாகத் திறனை(?) மட்டும் பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் ஆம் ஆத்மி கட்சியில் இடம் பெற்றிருந்த புதிய வேட்பாளர்கள் உள்ளூர் பிரச்சனைகளை கையில் எடுத்தனர். இது அங்குள்ள மக்களுடன் எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆட்சிக்கு வந்தால் மாற்றங்கள் நடக்கும் என்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மக்களிடம் கூறியுள்ளனர்.

குடிநீர் விநியோகம், கல்வி, திடக்கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற அனைத்து விவகாரங்கள் குறித்து தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டனர் ஆம் ஆத்மி கட்சியினர்,

ஜெய் ஸ்ரீ ராம், இந்துத்துவ கொள்கைகளை வைத்து பாஜகவினர் வாக்காளர்கள் மத்தியில் மோடி அலையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். உள்ளூர் மக்களின் பிரச்சனைகள் குறித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு பதிலாக நரேந்திர மோடி தலைமையில் ஏற்படுத்தப்பட்ட மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டனர் பாஜகவினர்.

கொரோனா இரண்டாம் அலை பாஜகவின் பிம்பத்தை தகர்த்தது. 

மக்கள் பிரதிநிதிகள் மூலம் தேவையான படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் போன்றவை கொரோனா இரண்டாம் அலையின் போது கிடைக்கவில்லை என்று மக்கள் நினைக்கின்றனர்.

மக்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருந்த போது ஆளும் கட்சியின் கவுன்சிலரை கூட அணுக இயலாத சூழல் நிலவியது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய பெரிய உதவிகள் அந்த நேரத்தில் கிடைக்கவில்லை. மாறாக தண்ணீர் வரி மட்டுமே அப்போது  பா.ஜ.க,வால் உயர்த்தப்பட்டது.

--------------------------------------------------------++----------------திங்கள், 27 டிசம்பர், 2021

குட்டித் தூக்கம் நல்லதா?

 

பாபா வாங்கா....

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. 

கண் தெரியாதவர்.

  இவர் தனது 85 வயதில் 1996-ஆம் ஆண்டு காலமானார். 

இவர் அங்கு, பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு  தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். 

இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 
14-12-1503-ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவரது வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும், விபத்துக்களையும், கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன் தான் அவரது நூலை அணுக வேண்டியிருக்கிறது.

அதுபோல் தான் இந்த பெண் பாபா வாங்கா. இவரது கணிப்புகளில் அதிகம் பலித்து உள்ளன.

2016 ஆண்டு மிகப்பெரிய ஐஎஸ்  அமைப்பு போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர். அவர்கள் 2043 ஆம் ஆண்டு  ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள்  ஆட்சியை  நிறுவுவார்கள் என கூறினார்.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார்.
 அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். 
பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார். 
இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.

இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.

2020 ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்புகளில் சில நடந்து உள்ளன 

* 2020ஐ பொருத்தவரை, வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம்தான்

* 2020ல் ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடக்கும். மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்கும் திறன் இழந்து மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம் என்று கூறி இருந்தார்.

ஐரோப்பா காணாமல் போகும் என்றும் பாபா கூறியிருக்க, பாபா கூறியது பிரெக்ஸிட்டை மனதில் வைத்துதான் என்றும் மக்கள் கருதுகின்றனர். அத்துடன் 2020ல் ஐரோப்பாவை தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள் என கூறி இருந்தார்.

2021 ஆம் ஆண்டு குறித்தும் வருங்காலம் பற்றிய கருத்துக்கள் பல பலித்து உள்ளன. 2021 ஆம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கும் என்றும், அமெரிக்கவின் 45- ஆவது அதிபர்  ( டொனால்ட் டிரம்ப் ) மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும் கூறினார் அது பலித்தது.

 2021ஆம் ஆண்டின் இறுதி தருவாயில் உள்ளோம். வரப்போகும், 2022 ஆம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாபா வாங்கா  2022 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் தற்போது வைரலாகி உள்ளன.

* வாங்கா பாபாவின் கூற்றுப்படி, 2022 இல் உலகின் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளின் ஆபத்து அதிகரிக்கும். முன்னதாக 2004 சுனாமியை முன்னறிவித்து இருந்தார் வாங்கா.

* மேலும் ஆஸ்திரேலியாவுடன் பல ஆசிய நாடுகளும் தீவிரமான போர்களால் தாக்கப்படும் என்று கணித்துள்ளார். 

* இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கடலோரப் பகுதிகளை மூழ்கடிக்கும் பெரும் சுனாமி உருவாகும் என கணித்து உள்ளார்.

* சைபீரியாவில் இதுவரை உறைந்திருந்த ஒரு புதிய கொடிய வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள். புவி வெப்பமடைதலின் பேரழிவு விளைவுகள் காரணமாக, வைரஸ் விரைவாக கட்டுப்பாட்டை மீறி பரவும் என கணித்துள்ளார்.

* இந்தியாவில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் வெட்டுக்கிளி தாக்குதல்களால் நாடு பாதிக்கப்படும், இது பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களை அழிக்க வழிவகுக்கும், பஞ்சத்தை ஏற்படுத்தும் எனவும் கணித்து உள்ளார்.

* பூமியில் உள்ள வாழ்க்கையை ஆராய வேற்றுகிரகவாசிகள் ஓமுவாமுவா    என்ற செயற்கைக்கோளை அனுப்புவார்கள், மேலும் அவை மனிதர்களைத் தாக்கி சிறைப்படுத்தக்கூடும். 

* 2130 ஆம் ஆண்டளவில், வேற்றுகிரகவாசிகளின் உதவியுடன் நீருக்கடியில் எப்படி வாழ்வது என்பதை இந்தியா கற்றுக் கொள்ளும் என்றும் அவர் கணித்துள்ளார்.

 * 2022-ல் உலகின் பெரிய நகரங்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும். ஆறுகள் மாசுபடுவதால் புதிய நீர் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

* 2022 இல், மக்கள்  ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவார்கள். மொபைல் பார்க்கும் நேரம் அதிகரிக்கும் மற்றும் மக்கள் கற்பனையை யதார்த்தத்துடன் குழப்பத் தொடங்குவதால் ஆபத்து உருவாகும் என கணித்து உள்ளார்.


+-------------------------------------------------------------------------------+


குட்டித் தூக்கம் நல்லதுதான்.

நீங்கள் அதிக நேரம் விழித்து கொண்டிருக்கும்போது உங்கள் மூளையில் அடினோசின் சுரப்பு அதிகமாகும்.  

இச்சுரப்பி தூக்க உணர்வை அதிகரிக்கும்.

"ஆனால் நாம் சிறிது நேரத்திற்கு தூங்கும்போது இந்த அடினோசின் குறைகிறது. 

எனவே நமது ஆற்றல் அதிகரித்து நாம் விழிப்புடன் இருப்போம்," 

இந்த குட்டித்தூக்கம் என்பது 10-20 நிமிடங்களுக்குட்பட்டதாக இருக்கும்.

"நமது நினைவாற்றல், புதுமையான சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், ஆராயும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த குறைந்தது 90 நிமிடங்களாக தூங்க வேண்டும் .

இம்மாதிரியாக 60-90 நிமிடங்கள் தூங்கும்போது இரவில் தூங்குவது போன்ற நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன." என்கிறார் சாரா.

 இவர் தூக்கம் குறித்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

---------------------------------------------------------------------------------------

https://youtu.be/sIWqMv8INqo

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

ஏசு எப்பொ பிறந்தார்

 வேளாண்சட்டங்கள்..

மீண்டும் வருகிறது...,?

மோடி அரசு 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்கிற தொனியில் வேளாண் அமைச்சர் பேசியிருப்பது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாகச் சென்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய இந்த போராட்டம் ஓராண்டாக நீடித்தது.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் விவசாயிகள் டெல்லியின் திக்ரி, சிங்கு எல்லை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர்.

ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் முடிவை எடுத்தது.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தனியார் முதலீட்டு மாநாட்டில் பேசிய ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “வேளாண் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை.

ஆனால், இதைக் கண்டு அரசு ஏமாற்றமடையவில்லை. இப்போது ஒரு படிதான் பின்வாங்கியுள்ளோம். கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம்” என நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேர்தலுக்காகவே வேளாண் சட்டங்களை பா.ஜ.க அரசு வாபஸ் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், பா.ஜ.க அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

--------------------------------------------------------------------------------

மோடி ஒன்றிய அரசின்

 பாசிச நடவடிக்கைகள்.

கோவிட் பெருந்தொற்றில் ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கெடுவாய்ப்பாக அரசின் சார்பில் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி கள் போடும் இலக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தபோதிலும், இதுவரையிலும், அதாவது டிசம்பர் 18 வரையிலும், 39 சதவீதத்தினருக்கே முழுமையாக இரண்டு தவணை களும் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது.  நாட்டில் புதிய சுகாதார அவசரநிலை உருவாவதைத் தடுப்ப தற்காக, அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசிகள் போடுவதை உடனடியாக விரைவுபடுத்திட வேண்டும்.பெண்களுக்கான திருமண வயதை உயர்த்தியிருத்தல்

பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் வயதை, தற்போது 18 என்று இருப்பதை 21 என உயர்த்துவதற்காக ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆத ரிக்காது. இவ்வாறு உயர்த்துவதற்காக, அரசுத்தரப்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக அனைத்துத்தரப்பினருடனும் ஓர் ஆழமான ஆய்வு மேற்கொள்வதற்காக,  இந்த வரைவு  சட்டமுன்வடிவு சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும். ஒரு பெண், 18 வயதினை நிறைவடையும்போது அவர் சட்டப்பூர்வமாக வயதுக்கு வந்தவராகிவிடுகிறார். ஆனால், அவரைத் திருமணம் தொடர்பான காரணங்க ளுக்கு மட்டும் இளம் சிறாராகக் கருதுவது, சுய-முரண் பாடானதாக இருக்கிறது, வயது வந்த ஒருவர் தன் வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளிக்க மறுக்கும் விதத்திலும் அமைந்தி ருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவு, ஒரு பெண் தன் சொந்த வாழ்க்கை குறித்துத் தீர்மானித்திடும் உரிமை யைப் பறிக்கிறது.

பெண்களின் திருமண வயது தற்போது 18 என இருக்கும் சமயத்திலேயே, அரசாங்கம் 2017இல் வெளி யிட்டுள்ள  தரவின்படி பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயது அகில இந்திய அளவில் சராசரியாக 22.1 ஆண்டுகள் என்பதாகும். எனவே, இப்போது இதுபோன்றதொரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை.  இந்தச் சட்டமுன்வடிவானது, பெண்களின் சுகாதா ரக் காரணங்களுக்காகக் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுமானால், இந்த அரசாங்கம் பெண்கள் கரு வுற்றிருக்கும் நிலையில் தாய்-சேய் மரணம் ஏற்படாது தடுப்பதற்காக, அவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து உணவு வழங்குவதை உத்தரவாதப்படுத்திட என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இவற்றையெல்லாம் செய்யாது, பெண்களின் திருமண வயதை உயர்த்து வது மட்டும் தீர்வாகிவிடாது.

லக்கிம்பூர் கெரி கொலைகள்

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. அதில், கொலை செய்யப்படுவ தற்கு, “முன்கூட்டியே சதி மேற்கொள்ளப்பட்டது” என குறிப்பிட்டிருக்கிறது.  இந்த நிகழ்வில் எட்டுபேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பிரதானமாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர், அஜய் மிஸ்ரா வின் மகனாவார். அந்த அமைச்சர் ஒன்றிய அமைச்சர வையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பிலிருந்தும் குரல் எழுப்பப்பட்டுள்ளபோதிலும், பிரதமர் மோடி அவரைத் தன் அமைச்சரவையிலிருந்து நீக்கவில்லை. அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்  என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.வெற்றிகரமான வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

டிசம்பர் 16-17 தேதிகளில் நாடு முழுதும் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அதனை வெற்றி பெறச் செய்திருப்பதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது. வங்கிகள் தனியார்மயம் நோக்கி செல்லப்படுவதையும், மக்களின் சேமிப்புகளைத் தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகள் சூறையாட மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதையும் அதுவே வேலைநிறுத்தத்திற்கான காரணம் என்பதையும், வங்கி ஊழியர்கள் மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று விளக்கியிருந்ததால் இந்த வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும், பொது மக்களும் விரிவான அளவில் ஆதரவு தெரிவித்தனர். மோடி  அரசாங்கம் தன் ஆட்சிக்காலத்தில் 10.7 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட கடன்களை ரத்து செய்துள்ளது. இதன் பின்னர் வங்கிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வ தற்காக மீண்டும் பொது மக்களிடம் பணத்தை சேமித்திருக்கிறது.

பொதுத்துறை வங்கிகளை இந்தவிதத்தில் ஆபத்திற்குள்ளாக்கிவிட்டு, இதனையே ஒரு சாக்காக வைத்து, வங்கிகளைத் தனியார்மயப்படுத்திட நடவ டிக்கைகளை எடுத்திருக்கிறது. இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்திடும்.   அரசின் தனி யார்மயத் திட்டங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

விலைவாசி உயர்வு

நவம்பர் மாதத்தில் மொத்த விலைவாசிக் குறி யீட்டெண் 14.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது, கடந்த முப்பதாண்டுகளில் மிகவும் அதிகமானதாகும். மொத்த எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலைகள் 39.81 சதவீதம் உயர்ந்திருக்கிறது. உணவு மற்றும் எரிபொருள்களின் விலைகள் 12 ஆண்டுகளில் மிகவும் அதிகமாகும். இவை அனைத்தும் மக்களின் துன்பதுய ரங்களை அதிகப்படுத்தி இருக்கிறது.இதற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது.

வேலையின்மை

2021 நவம்பரில் மட்டும் ஊதியம் வாங்கிக்கொண்டி ருந்த 68 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வேலை களை இழந்துள்ளார்கள். நகர்ப்புற வேலையின்மை என்பது கடந்த 17 வாரங்களில் மிகவும் அதிகமாகி இருக்கிறது. அதேபோன்று ஒட்டுமொத்த வேலை யின்மை என்பதும் கடந்த 9 வாரங்களில் அதிகமாகி இருக்கிறது. பணவீக்கம் பாய்ச்சல் வேகத்தில் சென்றுகொண்டி ருப்பதுடன், இவையும் சேர்ந்து மக்கள் மீது மிகப்பெரிய அளவில் துன்ப துயரங்களைச் சுமத்தி இருக்கிறது. இவற்றின் விளைவாக, பொருளாதாரத்தில் மக்களின் தேவை சுருங்கி, பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்தி இருக்கிறது. வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதத்திற்குக் குறைந்தபட்சம் 7,500 ரூபாய் உடனடி யாக, நேரடியாக ரொக்கமாகக், கொடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தைப்   பிரதமர் அலுவலகம்  அழைத்ததற்குக் கண்டனம்

தலைமைத் தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச்சட்டத்தின் அதிகாரத்தின் கீழ் சுயேச்சை யாக இயங்கும் ஓர் அமைப்பாகும். இது நாட்டில் தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்து வதற்கு அமைக்கப்பட்டதாகும். அது, தன் கடமைகளை யும் பொறுப்புகளையும் நிறைவேற்றிட, அரசாங் கத்திற்குப் பயப்படாமல், முழுமையாக சுயேச்சை யாக செயல்பட வேண்டும். சமீபத்தில், பிரதமர் அலுவலகத்திலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையரும், இதர இரு தேர்தல் ஆணையர்களும் அழைக்கப்பட்டிருப்பது, அரசமைப்புச்சட்டத்தின் நெறிமுறைகளையும், சட்டங்களையும் முழுமையாகமீறிய செயலாகும். மோடி அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற முறை மற்றும் நடுநிலைத்தன்மை ஆகியவற்றின்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் சரியத் தொடங்கிடும். அரசமைப்புச்சட்ட நிறுவனங்களின் சுதந்திரத் தின்மீது தலையிடுவதை மோடி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் .

------------------------------------------------------------------------------------

போப் மரணம்?


பிரிட்டிஷ் தொலைக்காட்சியான ITV News அதன் நேரடி கிறிஸ்துமஸ் தின கவரேஜின் போது, செய்தி தொகுப்பாளர் கைலி பென்டெலோ (Kylie Pentelow), போப்பின் வருடாந்திர கிறிஸ்துமஸ் உரையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ​​அவர் தற்செயலாக போப் மரணித்ததாக அறிவித்தார்.

போப்பின் உரையை சுருக்கமாகக் கூறும்போது, 

​"தடுப்பூசிகள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று போப் கூறினார்

அவரது மரணம் அறிவிக்கப்பட்டு விட்டது" 

என்று கூறிவிட்டார்.

எனினும், அவள் உடனடியாக தன் தவறை உணர்ந்து, 'எக்ஸ்கியூஸ் மீ' என்று தன்னைத் திருத்திக் கொண்டார்.

இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

ஒருபக்கம், இது கிண்டல்செய்யப்பட்டாலும், மறுபுறம் இந்த தவறு சர்ச்சையை கிளப்பியதுள்ளது.

இது தற்செயலாக நடந்ததா அல்லது தயார் செய்யப்பட்ட செய்திஅறிக்கையில் அப்படி இருந்ததா என பலரும் விவாதித்து வருகின்றனர்.

உயிருடன் இருக்கும் போப் பிரான்சிஸ், சனிக்கிழமை வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் இருந்து தனது கிறிஸ்துமஸ் தின உரையை ஆற்றினார்.

அப்போது, சிரியா, ஏமன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் நடந்து வரும் மோதல்களைக் கண்டித்தார்.  

-------------------------------------------------------------------

ஏசு பிறப்பு எப்போது?

ஏசு கிறிஸ்து பிறப்பு கிரிகோரியன் நாட்காட்டியின்படி டிசம்பர் 25 அன்று பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது 

ஆனால் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அவருடைய பிறப்பைக் கொண்டாடவில்லை, இயேசு உண்மையில் எந்தத் தேதியில் பிறந்தார் என்பது யாருக்கும் தெரியாது (சில அறிஞர்கள் உண்மையான தேதி வசந்த காலத்தின் துவக்கத்தில் இருந்தது என்று நம்புகிறார்கள், அதை அவரது உயிர்த்தெழுதலின் நினைவாக ஈஸ்டர் பண்டிகைக்கு நெருக்கமாக வைப்பார்கள் ).

 டிசம்பர் 25 ம்தேதி  2 ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கலாம். டிசம்பர்25 ம் தேதிக்கு குறைந்தது மூன்று சாத்தியமான தோற்றங்கள் உள்ளன.

 ரோமானிய கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்பிரிக்கானஸ் , இயேசுவின் கருத்தரிப்பை மார்ச் 25 (உலகம் உருவாக்கப்பட்டதாக அவர் கருதிய அதே தேதி) என்று தேதியிட்டார், இது அவரது தாயின் வயிற்றில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 25 இல் பிறக்க உரிய 

3 ஆம் நூற்றாண்டில், அந்த நேரத்தில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளாத ரோமானியப் பேரரசு , டிசம்பர் 25 அன்று வெல்லப்படாத சூரியனின் (சோல் இன்விக்டஸ்) மறுபிறப்பைக் கொண்டாடியது. 

இந்த விடுமுறையானது குளிர்கால சங்கிராந்திக்குப் பிறகு நீண்ட நாட்கள் திரும்புவதைக் குறித்தது மட்டுமல்லாமல், சாட்டர்னாலியா எனப்படும் பிரபலமான ரோமானிய திருவிழாவைப் பின்பற்றியது (இதன் போது மக்கள் விருந்து மற்றும் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர் ). 

இது இந்தோ-ஐரோப்பிய தெய்வமான மித்ராவின் பிறந்தநாளாகும், இது ஒளி மற்றும் விசுவாசத்தின் கடவுள், அதன் வழிபாட்டு முறை ரோமானிய வீரர்களிடையே பிரபலமாக இருந்தது.ரோமில் உள்ள தேவாலயம் 336 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதிதான் பேரரசர் கான்ஸ்டன்டன் ஆட்சியின் போது முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடத் தொடங்கியது 

கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை பேரரசின் பயனுள்ள மதமாக மாற்றியதால், இந்த தேதியைத் தேர்ந்தெடுப்பது நிறுவப்பட்ட பேகன் கொண்டாட்டங்களை பலவீனப்படுத்தும் அரசியல் நோக்கம் கொண்டதாக சிலர் ஊகித்துள்ளனர். 

கிழக்குப் பேரரசில் இந்த தேதி பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அங்கு ஜனவரி 6 க்கு ஆதரவாக இருந்தது, மற்றொரு அரை நூற்றாண்டுக்கு, 9 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்துமஸ் ஒரு பெரிய கிறிஸ்தவ பண்டிகையாக மாறவில்லை.


---சனி, 25 டிசம்பர், 2021

செயற்கை இறைச்சி தயார்.

ஐஸ்லாந்தில் எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பல புதிய உணவு வகைகளை உருவாக்கி ஆய்வு செய்கின்றனர்.இங்குள்ள பசுமைக் குடில்களில் பார்லி செடிகள் வளர்க்கப்படுகின்றன. செடிகள் வளர்த்தபிறகு, விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன. விதைகள் அரைத்து சுத்தம் செய்யப்பட்டு, அதிலிருக்கும் வளர்ச்சிப் புரதம் தனியாக எடுக்கப்படுகிறது. பின்னர் இந்த புரத்தின் மூலம், விலங்குகளே இல்லாமல் ஆய்வகத்தில் இறைச்சி உருவாக்கப்படுகிறது.

நாம் இப்போது செயற்கை இறைச்சி தேவை என்ற என்ற காலகட்டத்திற்கு வந்துவிட்டோம். பூமி விரிவடையப்போவதில்லை, அதிகமான விவசாய நிலங்களோ உற்பத்தியோ கிடைக்கப்போவதில்லை. மக்கள் தொகை பெருகிவருகிறது. எல்லாருக்கும் உணவளித்தாகவேண்டும்.

விலங்குகள் இல்லாமல் ஆய்வுக்கூடத்தில் இறைச்சியை உருவாக்குவதன் அடிப்படை என்னவென்றால், காலப்போக்கில் இது நிலத்தின் மீதான தேவையைக் குறைக்கும். குறைவான ஆற்றல் இருந்தால் போதும். கழிவுகளும் வெகுவாக குறையும்.

``நாம் உண்கிற இறைச்சியை உருவாக்கும் விலங்குகளை வளர்க்கத் தீவனம் தேவை. அதற்கு விளைநிலங்கள் தேவை. 

செயற்கை இறைச்சியில் அதற்கான வேலையில்லை. 

எந்த விலங்குகளையும் கொல்லத்தேவையில்லை. ஸ்டெம் செல்களை எடுத்துக்கொண்டால் போதும். இந்த முறை செயல்திறனைக் கொண்டதாகவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காததாகவும் இருக்கிறது.

மாடுகளின் ஸ்டெம் செல்களை வைத்து ஆய்வுக்கூடங்களிலேயே பீஃப் பர்கர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், வறுத்த இறைச்சியைத் தயாரிக்கும் நிறுவனங்களும் இப்போது ஐஸ்லாந்தில் உருவாக்கப்படும் வளர்ச்சிப் புரதத்தைப் பரிசோதிக்கத் தொடங்கிவிட்டன.

முதல் வளர்ச்சிப்புரதங்கள் விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்டன என்றாலும், அதன் ஸ்டெம் செல்களை பார்லி தாவரத்தில் செலுத்தி வளர்ச்சிப் புரதம் எடுக்கும் இந்த செயல்முறை மலிவானது என்றும் பல மடங்கு அதிக உற்பத்திக்காக மாற்றியமைக்க ஏற்றது என்றும் நம்பப்படுகிறது.

ஆனால் இப்போதைக்குச் சிறப்பான வளர்ச்சிப் புரதங்களை உற்பத்தி செய்யக்கூடிய பார்லியை உருவாக்கும் முயற்சி, ஆராய்ச்சிக்கட்டத்தில் இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கு, வெவ்வேறு நிலப்பகுதிகளில் பார்லியை வளர்த்து பரிசோதனைகள் நடத்தவேண்டும். 

எரிமலைகள், புவிவெப்ப மையங்கள் கொண்ட ஐஸ்லாந்தின் விநோத நிலப்பரப்புதான் இதற்கு ஏற்றதாக உள்ளது.

மவுண்ட் ஹெக்லா எரிமலைகளிலிருந்து வரும் பஞ்சுபோன்ற பூமிஸ் கற்களில் பார்லியை வளர்க்கிறார்கள். பூமிஸ் கற்களிலிருந்து பார்லிக்கு ஊட்டச்சத்துக்கள் எதுவுமே கிடைக்காது என்பதால், பார்லிக்கு என்ன ஊட்டச்சத்து தேவையோ அதை மட்டும் வெளியிலிருந்து கொடுக்க முடியும்.

பார்லி

பட மூலாதாரம்

``அதிநவீன பசுமைக்குடிலில் பார்லியை வளர்க்கிறோம். புவியிலிருந்து கிடைக்கும் ஆற்றலால் இது வெப்ப மூட்டப்படுகிறது. 

இங்கு ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்கிறோம். விளக்குகளை எப்போது போடுவது, அணைப்பது, எப்போது ஜன்னல்களைத் திறப்பது, எப்போது கார்பன் டை ஆக்சைடை அனுப்புவது, செடிகளுக்கு என்ன ஊட்டச்சத்து தருவது என்று எல்லா முடிவுகளையும் கம்ப்யூட்டர்தான் எடுக்கிறது.`

ஆனால் காலப்போக்கில் இந்த செடிகள் திறந்தவெளி நிலங்களில் வளர்க்கப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டால் மட்டுமே உலகளாவிய செயற்கை இறைச்சிக்குப் போதுமான வளர்ச்சிப் புரதங்கள் கிடைக்கும். பல்வேறு சூழல்களில் வளரக்கூடியது என்பதாலும் அருகில் உள்ள பிற செடிகளோடு மகரந்த சேர்க்கையில் ஈடுபடாது என்பதாலும் பார்லி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், ஐஸ்லாந்தில் உள்ள மற்றொரு நிறுவனம், சாப்பிடுவதற்கு ஒரு புதிய பொருளைப் பரிந்துரைக்கிறது. அதுதான் பாசி!

வாக்ஸா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் நுண் பாசிகள் புரத்துச்சத்தும், ஒமேகா 3 ஊட்டச்சத்தும் நிறைந்தவை. வழக்கமான பயிர்களுடன் ஒப்பிடும்போது இவற்றை வளர்க்க, குறைவான வளங்களே இருந்தால் போதுமானது.

``இந்த அமைப்பின்மூலம் 500 மடங்கு குறைவான தண்ணீர், 1500 மடங்கு குறைவான நிலம் இருந்தாலே அதிகமான புரதங்களை உருவாக்கலாம்.

பாசி என்பது தாவர வகையைச் சேர்ந்தது என்பதால் இதில் இன்னொரு சூழல் சாதகமும் இருக்கிறது. அது ஒளிச்சேர்க்கை.

புவி வெப்ப அமைப்புகள் கொண்ட ஐஸ்லாந்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரமும், வெந்நீரும் உருவாக்கப்படுகிறது. ஆகவே இந்த பாசி வளர்ப்பு முறை கிட்டத்தட்ட கரிம உமிழ்வுகளே இல்லாமல் இயங்குகிறது. இங்கு ஒளிச்சேர்க்கையும் நடப்பதால் கூடுதலான கார்பன் டை ஆக்சைடும் உறிஞ்சப்படுகிறது. இதை 'நெகட்டிவ்' கரிம உமிழ்வு கொண்ட செயல்முறை எனலாம்.

உலகிற்கு உணவளிக்கவேண்டுமானால் இதுபோன்ற பண்ணைகள் எல்லா இடங்களிலும் நாடுகளிலும் அமைக்கப்படவேண்டும். ஆனால், அந்த இடங்களில் ஐஸ்லாந்தைப் போலவே புவிவெப்ப அமைப்புகளும் எரிமலைகளும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

சிறு இடங்களில் பயிர்களை வளர்ப்பது, அதிலிருந்து ஆக்சிஜனை உருவாக்குவது ஆகியவை செவ்வாய்க் கிரகத்திலோ நிலவிலோ கூடப் பயனளிக்கலாம் என வாக்ஸா கருதுகிறது.

நம்மால் பாசிகளை விரும்பி சாப்பிட முடிந்தால், விரைவில் இவையெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

நன்றி: தமிழோசை.

 ---------------------------------------------------------------------------

எலுமிச்சை சாறு.

பொதுவாக உடலில் கொழுப்பு அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதுதான்.

கடைகளில் விற்கப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் கொழுப்புக்கள் தங்கிவிடுகின்றது.

இதனை முடிந்தளவு கரைப்பது நல்லது. இதற்கு எலுமிச்சை பானம் உதவுகின்றது. தற்போது அதனை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.செய்முறை

  • சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும். இந்த தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும்.

  • வெதுவெதுப்பாக இருக்கும் வெல்லம் கலந்த நீரில் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். இவை இரண்டையும் நன்றாக கலந்து குடிக்கவும்.

  • தினமும் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்கும் போது உங்கள் உடல் எடையை குறைக்க முடியும். இதனுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

நன்மைகள்

  • உடல் பருமன், கொழுப்பு அதிக எடை, நீரிழிவு வியாதி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினசரி இந்த வெல்லம் மற்றும் எலுமிச்சை சேர்ந்த சாற்றை அருந்தலாம்.

  • நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சினைகளையும் இது சரி செய்கிறது.

  • இது நமது உடலில் ஒரு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.   

  • ------------------------------------------------------------------------------ •

https://youtu.be/z2qBAuxW8J0