அமெரிக்காவின் எச்சரிக்கையா. ?

 குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் சீன ஊடகம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஹெலிகாப்டரை இயக்கிய வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வந்தார் அவரும் இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ள நிலையில், சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கடந்த 9-ஆம் தேதி  இந்திய விமானப்படையில்  ஹெலிகாப்டர் விபத்தை விமர்சித்துள்ளது.

இது இந்திய அதிகாரிகள் தரப்பையும் வட இந்திய ஊடகங்களையும் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.  இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சீன ஊடகம் “ஹெலிகாப்டர் விபத்திர்கு காரணங்களாக ரஷ்யாவில்  தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் என்பதை விட மனிதர்களின் தவறுகளே காரணம் என இந்திய ஊடகங்களின் மூலம் தெரியவருகிறது
எனச் சுட்டிக்காட்டியிருந்தது.

விபத்திற்குள்ளான  எம்.ஐ-17 ஹெலிகாப்டரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பே எம்.ஐ-17வி5  இந்த ஹெலிகாப்டர் மிகவும் சக்திவாய்ந்த இயந்திரமும்  மின்னணு சாதனங்களையும் கொண்டது. ஆனால் ஒழுங்கற்ற ராணுவ அணுகுமுறை இந்தியாவில் சகஜமான ஒன்றுதான் என்கிறது அக்கட்டுரை.

மேலும், நிலையான நடைமுறை செயல்பாடுகளையும், ஒழுங்குமுறைகளையும் இந்தியப் படையினர் பெரும்பாலும் பின்பற்றமாட்டார்கள் .வானிலை சரியாகும் வரை பயணத்தை ஒத்தி வைத்திருந்தாலோ அல்லது விமானி “மேலும் திறம்பட” விமானத்தை ஓட்டி இருந்தாலோ இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று  விவரிக்கிறது அக்கட்டுரை.

“இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் முகாமிட்டு இருக்கும் இந்திய படைகள் உட்பட ஒட்டுமொத்த ராணுவ அணுகுமுறையில் இப்பிரச்னை மிகவும் பொதுவானது. அவர்கள் ஆர்வத்துடன் செயல்பாடுவார்கள். ஆனால், உண்மையில் போர் நடந்தால், சீன ராணுவத்தை எதிர்கொண்டு வெற்றிப்பெற அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை”, என்கிறது குளோபல் டைம்ஸ்.

 அப்பத்திரிகையில் அந்த நிபுணர் மேலும் கூறுகிறார்.

கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று, இந்தியச் செய்தி நிறுவனமான, ‘தி பிரிண்ட்’ வலைதளத்தில் வெளியான கட்டுரையை குறிப்பிட்டு குளோபல் டைம்ஸின் சீனப் பதிப்பு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், இந்திய விமானப்படையினருக்கு அவர்களின் பணிகளுக்கு முன்னதாக சரியான ஊட்டச்சத்து அளிக்கப்படுவது இல்லை; இதனால், அவர்களின் ரத்த குளுகோஸ் அளவு குறைந்து, அது அவர்கள் விமானம் ஒட்டும் திறனை பாதிக்கிறது; இது குறிப்பிட்ட காலத்தில் நடந்த விபத்துகளின் விசாரணையின்போது குறிப்பிடப்பட்டுள்ளது என்று அப்பத்திரிகை கூறுகிறது.

“இந்தியாவின் சொந்த ராணுவ ஹெலிகாப்டரே தனது பாதுகாப்புத் தலைவரைப் பாதுகாக்கத் தவறியது என்பதை செல்லானியும் மற்ற இந்தியர் பற்றாளர்களும் நினைவுக்கூர வேண்டும். இதுபோன்ற விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், அது இந்தியாவில் நடந்துள்ளது.” என்று அக்கட்டுரை கூறுகிறது.  “இந்தியாவின் மிகப் பெரிய எதிரி சீனா அல்ல, அதன் பின்தங்கிய நிலையே” என்பதையும் இந்த விபத்து காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள ட்விட்டர் குறுஞ்செய்தியில். செல்லானியின் ட்வீட்டின் திரைப்பிடிப்பை (ஸ்கிரீன்ஷாட்) குளோபல் டைம்ஸ் டிசம்பர் 8ஆம் தேதி பகிர்ந்துள்ளது. “இப்பார்வை அமெரிக்காவுக்கு இந்த விபத்தில் பங்குண்டு என்று சந்தேகிப்பதாக உள்ளது. ஏனென்றால், அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு வழங்கப்படுவதுடன் இந்தியாவும் ரஷ்யாவும் முன்நோக்கி செல்கிறது”.

இந்த பத்திரிகையின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள விமர்சகர் செல்லானி, “தனது ட்வீட் தவறாகப் பயன்படுத்தபட்டது” என்று குற்றம் சாட்டினார்.

அங்கு, பைடெள கெளஜி (Paitou Guoji) என்பது தேசிய பாதுகாப்பு பத்திரிகை நடத்தும் புதிய ஊடகத்தளம். இந்த வலைதளமும் செல்லானியின் ட்வீட்டை விமர்சித்துள்ளது. ராவத்தின் மரணம் விபத்து அல்ல, ஆனால் “குறிப்பிட்ட நாடுகளின் ரகசிய சூழ்ச்சி” என்று அவர் கருத்து தெரிவித்திருப்பதாக விமர்சித்துள்ளது.

 “ராவத்தின் விமான விபத்து ஒரு சதியா என்பது தற்போது தெரியவில்லை. ஆனால் சீனா மீது பழி சுமத்துவது தற்போது சரியில்லை. ராவத்துக்கு அமெரிக்கா ஏதாவது செய்திருக்க வாய்ப்பு உள்ளது,” என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு இடையேயான உச்சி மாநாட்டில், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் 28 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த விபத்து அச்சம்பவத்தையடுத்து நடந்துள்ளது என்று அக்கட்டுரை கூறுகிறது.

“பிரதமர் நரேந்திர மோதிக்கு அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட ராவத்தின் விமான விபத்து இருக்கலாம். ஏனென்றால், இந்தியாவும் ரஷ்யாவும் நெருங்கி வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. ரஷ்யாவிடமிருந்து ராணுவ ஆயுதங்களை தொடர்ந்து இந்தியா வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை”, என்று அந்த கட்டுரை கூறியுள்ளது.

----------------------------------------------------------------------------

பொதுத்துறை வங்கிகள் விற்பனைக்கு எதிர்ப்பு.


பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் நிதித் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வங்கி ஊழியர்கள் சங்கங்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தன. இதுதொடர்பாக இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், நிதித் துறை பிரதிநிதிகளுடன் முதலில் மும்பையிலும், நேற்று டெல்லியிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, திட்டமிட்டப்படி இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 90 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை திரும்ப பெறக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பும் வங்கி ஊழியர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், ”வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் தமிழ்நாட்டில் ரூ.10,000 கோடி மதிப்பிலான 11 லட்சம் காசோலைகளும், நாடு முழுவதும் ரூ.37,200 கோடி மதிப்பிலான 40 லட்சம் காசோலை பரிவர்த்தனைகளும் பாதிக்கப்படும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை இன்னும் தீவிரமாக நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஞாயிற்றுகிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் மொத்தமாக மூன்று நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஆனால், இணைய வழி சேவைகள் வழக்கமாக நடைபெறும். ஏடிஎம்களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்க வங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு அளித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்களிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூலிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள் பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில்குறிப்பிட்டுள்ளார்

உழைத்துச் சம்பாதித்துப் பொதுத்துறை வங்கிகளில் போட்டுள்ள சேமிப்புகளைக் கூட சுரண்டுவதற்கு ஏதுவாக இதுபோன்ற வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிவிட ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயலாகும்.

நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையாகத் திகழும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவினையும் அதுதொடர்பாக அவசர அவசரமாகக் கொண்டுவரும் வங்கிச் சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து வங்கி ஊழியர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்..

-------------------------------------------------------------------- .





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?