ஞாயிறு, 19 டிசம்பர், 2021

தங்கம் விலை குறையுமா?

 கொரோனா பேரிடரால் உண்டான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் உலக மக்கள் தங்கள் பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். 

இதனால் மக்கள் தங்கம் வாங்க ஆவலாக உள்ளனர். இதனால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத தங்கத்தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.


உலக தங்கக் கவுன்சிலின் கணக்கின்படி, சென்ற வருட தங்கத் தேவையைவிட 350 டன் அதிகமாக நடப்பு ஆண்டில் தேவைப்படுகிறது.

 2014ஆம் ஆண்டு நமது தங்கத் தேவை 898.6 டன்னாக இருந்துள்ளது. 

 தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கத் தேவை  900 டன்னாக உயர்ந்துள்ளது.


தங்கத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, விலையும் ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் தங்கம் கிடைக்கும் பரப்பு குறைகிறது.அதனால் முன்பைவிட தங்கம் கிடைக்கும் அளவும் குறைந்து வருகிறது.


 “தங்கத்தின் விலைக்கும் அமெரிக்காவின் பொருளாதாரப் புள்ளிவிபரங்களுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதால், அதிக ஏற்ற, இறக்கங்களுடன் வர்த்தகமாகி வருகிறது.


இன்றைய நிலையில், அமெரிக்கா டாலர் இன்டெக்ஸ் 95 - 96 ஆக காணப்படுகிறது. இது, 95-க்குக் குறைவாக இறக்கம் கண்டால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போதைய நிலையில் தங்கம் விலை உயர்ந்து வருவதைப் பார்த்து, பலரும் நகைகளை வாங்கி வருகிறார்கள். விலை இன்னும் உயர்ந்தால் என்ன செய்வது என்கிற பயம்தான் அவர்கள் தற்போது தங்கம் வாங்க முக்கியமான காரணமாகும். 

ஒரு அமெரிக்க  டாலரின்  ரூபாயின் மதிப்பு 76 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது.

இதனால்  நம் நாட்டில் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது .

இந்நிலை மாற தற்போது சூழல் இல்லை.இந்தியா தற்போது கடைபிடிக்கும் வலதுசாரி பொருளாதார கொள்கையில் விலை ஏறிய எந்தப் பொருளுமே குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

மேலும் உயரும்,அதை ஒன்றிய அரசே உயர்த்தி விடும் அளவில்தான் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளது.


யூ டியூப்பில் காண:https://youtu.be/mCC3rBAkB4o

--------------------------------------------------------------------------