குட்கா+ தங்கம்

 முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை ரெய்டு, குட்கா முறைகேடு போன்ற புகார்கள் பரபரப்பாக பேசப்பட்டன. ஆனால் கேரளாவில் நகைக் கடைகளில் நகை பெற்றுக் கொண்டு பணம் தராமல் மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விஜயபாஸ்கரை கேரளாவுக்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை.

2016 ஆம் ஆண்டில் கேரளாவில் நகை வியாபாரம் செய்யும் ஒரு பெரிய நிறுவனம் ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் மீது போலீசில் புகார் அளித்தது. ’எங்கள் கடையில் இருந்து 2.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை பெற்றுக் கொண்ட ஷர்மிளா அதற்கு பணம் கொடுக்கவில்லை’ என்பதுதான் அந்த நிறுவனத்தின் புகார். இந்தப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அங்கமாலி போலீஸார் ஷர்மிளாவிடம் விசாரித்தபோது, ‘இந்த நகை என்பது எனக்கு கிடைத்த கமிஷனாகும். நான் தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு நகை ழவாங்கிக் கொடுத்தேன். நகைக்கடையிடம் இருந்து தங்கத்தைப் பெற்றது தமிழகத்தில் (அப்போதைய) அமைச்சரான விஜயபாஸ்கர்தான்” என்றும் ஷர்மிளா போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.



இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க ஆரம்பித்தது. “கமிஷனே இரண்டரை கோடி ரூபாய் என்றால் பெரிய அளவில் தங்கம் வாங்கப்பட்டிருக்க வேண்டும்”என்பதால் இதுகுறித்து விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தது அமுலாக்கத்துறை.

அதன் அடிப்படையில் நேற்று (நவம்பர் 29) அமலாக்கத்துறை விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி அவரை கேரளாவுக்கு வரவழைத்தது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்து வரும் கொச்சி அமலாக்கத்துறை, விஜயபாஸ்கரை நேற்று காலை 10. 30 மணிக்கு கொச்சியில் இருக்கும் தனது அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதன்படி விஜயபாஸ்கரும் கொச்சியில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அப்போது ஷர்மிளா கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜயபாஸ்கரிடம் மாலை 7 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஷர்மிளா பெற்ற கமிஷனே இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் என்றால், அவர் விஜயபாஸ்கர் மூலம் அந்த நகைக்கடையில் வாங்கியது எத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் என்று அமலாக்கத்துறையினர் மதிப்பிட்டு சந்தேகப்படுகின்றனர். இதன் அடிப்படையில்தான் இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் முதல் வாரத்திலேயே விஜயபாஸ்கர் மீது ஷர்மிளா நெல்லை போலீசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

-----------------------------------------------------------------------------------

-ஒரு மாத காலமாக தமிழ்நாடு தண்ணீரில் மிதக்கிறது. சென்னை கடுமையான வெள்ள சேதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. கடலூர், நாகை, தஞ்சை, திருவாருர் என காவிரி டெல்வா மாவட்டங்களும்  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களும் கன மழைச் சேதங்களைச் சந்தித்திருக்கிறது.

இந்த பேரிடர் பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியக்குழுவும் வந்து சென்று விட்டது. ஆனால் 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஒரு ரூபாயைக் கூட ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதியாக அளிக்கவில்லை. வரி வருவாயை ஒன்றிய அரசுக்குக் கொட்டிக் கொடுப்பது தமிழ்நாடுதான் இந்த வருவாயை எடுத்துதான் இந்தி பேசும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு செலவு செய்து வருகிறது.

கடந்த 24-ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த தமிழ்நாடு எம்.பி டி.ஆர். பாலு  பெருமழைப் பாதிப்புகளுக்கு ரூ. 2, 079 கோடி வேண்டும். முதல்கட்டமாக ரூ. 550 கோடியை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் மத்திய குழு ஆய்வுக்கு பிறகே தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்தியக்குழுவும் வந்து சென்று விட்டது. இந்த நிமிடம் வரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.

ஆனால் குஜராத்தை புயல் தாக்கப் போகிற செய்தி வெளிவந்தவுடனேயே முன்பணமாக 200 கோடிகளை ஒன்றிய அரசு வாரி வழங்கியது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?