இயற்கையானார் குட்டி...

 ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் தனிச்செயலாளர் சண்முகநாதன், சென்னையில் இன்று காலமானார். 



அவருக்கு வயது 80.

சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சென்று பார்த்துவந்தார்.

கடைசியாக, நேற்றும் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்ததை, ஸ்டாலின் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சண்முகநாதனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தச் சென்றபோது, மிகவும் உடைந்துபோன நிலையில் இருந்தார்.

கருணாநிதியின் செயலாளராக மட்டுமின்றி, அவரின் மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு மூவருடனும் அன்னியோன்யமாக இருந்தவர், சண்முகநாதன்.

சண்முகநாதனின் திருமணத்தின்போது, அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் தமிழரசுவுக்கும் ஒரே மாதிரி ஒரே மாதிரி உடைதான் எனும் அளவுக்கு, அந்தக் குடும்பத்தில் ஒருவராக ஒன்றிப்போனவர், சண்முகநாதன்.

இந்திராகாந்தி கொண்டுவந்த அவசர நிலைக் காலத்தில், திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது, கருணாநிதியின் தனிப்பட்ட உதவியாளராக மாறினார். அதுவரை அரசுப் பணியில் இருந்துவந்தபோதும், கருணாநிதியின் அழைப்பை ஏற்று அவருடன் ஒட்டிக்கொண்ட சண்முகநாதன், அவர் இறக்கும்வரை தனிச்செயலாளராகப் பணியாற்றினார்.

கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அன்றாடப் பணிகளில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டபோதும், அவரின் இறப்புக்குப் பிறகும், சண்முகநாதன் அவருடைய செயலாளர் பணியே கடன் எனக் கிடந்தார் எனச் சொல்லமுடியும்.

கருணாநிதிக்காகவே என் பிறவி அமைந்தது என அவரே சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

கருணாநிதி எழுதிய கடிதங்கள் அனைத்தும் மொத்தமாகத் தொகுக்கப்பட்டு, சீதை பதிப்பகம் சார்பில் விரைவில் தனித்தனி புத்தகங்களாக வெளியிடப்படவுள்ளன.

நிச்சயமாக, சண்முகநாதன் இல்லாமல் வேறு ஒருவரால் இதைச் சிறப்பாகச் செய்ய வாய்ப்பே இல்லை என்கிறார்கள், கருணாநிதி குடும்ப வட்டாரத்தில்.

”தலைவருடைய இறப்புக்குப் பிறகே, குட்டி பி.ஏ.(அப்படித்தான் கருணாநிதியின் குடும்பத்தினர் அழைப்பது வழக்கம்.) மனதளவில் தொய்ந்துபோனார். அதன் பிறகு வரிசையாக உடல்நலிவு. சிகிச்சையெடுப்பதும் வீட்டுக்கு வருவதுமாக இருந்தவர், மூப்பும் சேர்ந்துகொள்ள மறைந்துவிட்டார். கலைஞருக்காக அவர் செய்யாமல் விட்ட பணி என ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு, அவருடைய கடிதங்களைத் தொகுத்து முடித்தபின்னர் அவர் மறைந்திருப்பது நிறைவானது.” என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.

கருணாநிதி குடும்பத்தில் குட்டி பி.ஏ., முரசொலி பத்திரிகையில் ’ஏஜிஎஸ் சார்’, பொது உலகத்தில் ’சண்முகநாதன் சார்’ எனப் பலவாறாக இருந்தபோதும், 1969 பிப்ரவரி 16ஆம் தேதி கருணாநிதியின் உதவியாளராகப் பணியில் சேர்ந்த சண்முகநாதனை, கருணாநிதியின் களஞ்சியம் என்று சொல்வது மிகப் பொருத்தம்!

-கதிர்

-----------------------------------------------------------

யூ டியுப் முடக்கம்.

இந்தியாவிற்கு எதிரான பிரசாரம் மற்றும் பொய் செய்திகளைப் பரப்பும் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணைய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகுர் கூறியுள்ளார்.

இந்த யூடியூப் சேனல்கள், இணைய தளங்கள் பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பில் செயல்பட்டு, தவறான செய்திகளைப் பரப்புகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



மேலும், விவசாயிகள் போராட்டம், சிஏஏ போராட்டம், அரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டுவது போன்ற கருத்துகளை வெளியிடுகின்றன. இவை 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலை குலைக்கும் வகையிலான தகவல்களையும் வெளியிடும் என்கிற அச்சம் உள்ளது.

இந்திய உளவுத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின்படி, இந்தியாவிற்கு எதிரான பிரசாரம் மற்றும் பொய் செய்திகளை பரப்பும் 20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்று ஒன்றியஅரசு தெரிவித்துள்ளது.

பொய்களை புள்ளிவிபரம்,புளுகுகளை ஆவணம் என்று வெள்ளைப்பலகை வைத்து பேசிய யூடியுபர் மாரிதாசு கைதை கருத்து சுதந்திரம் போச்சு எனக் கதறிய,ஆளுநரை கண்டு மனிகொடுத்த பா.ச.க.தல அண்ணாமலை,மற்றொரு அண்டப்புளுகர் சீமான்  ஆகியோர்  வாய்கள் தற்போது ஆடு,ஆமை அடைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.தங்கள் நாறவாயைத் திறக்கவில்லை.

---------------------------------------------- ------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?