மஞ்சப் பை.

 அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் ஆபத்துகளில் முக்கிய சூழல் ஆபத்தாக பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி குப்பைகள் மாறியுள்ள நிலையில், தமிழக அரசு ’மீண்டும் மஞ்சள் பை’ என்கிற பிரச்சாரத்தைத் தொடங்குகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இத்திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.


அடிப்படை வடிகால் கட்டமைப்பு இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் மழைக்காலங்களில் ஊர் முழுவதும் வெள்ளம் தேங்கிநிற்பதற்கு, பிளாஸ்டிக் குப்பைகளும் முதன்மையான காரணமாக இருக்கின்றன. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பொட்டலங்கட்டும் காகிதங்கள் போன்றவையே இதில் அதிக அளவில் பாதகமாக இருக்கின்றன. வடிகால்களை அடைத்துக்கொண்டு வெள்ள நீர் வடியாமல் தடுப்பதில் இவை கணிசமான பங்கு வகிக்கின்றன.

இந்த வடகிழக்குப் பருவமழையின்போது தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கேரளத்திலும் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை ஊடகங்களில் பார்த்திருப்போம். குப்பை கூளம் என்று சொல்வது மாறி, குப்பைக் கோளம்போல இந்த நெகிழிக் குப்பைகள் ஆங்காங்கே பெருமளவில் திரண்டு தேங்கியிருந்தது இன்னும் கண்ணில் மறையாத காட்சியாக இருக்கிறது.

டில், தெருவில், சாலைகளில் என வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் கடைசியில் ஒன்றுசேர்ந்து கடலில் திரள்கின்றன. ஒட்டுமொத்த பூமியிலும் இப்படித் திரளும் பிளாஸ்டிக் குப்பைகளால் மிகப் பெரிய அளவுக்கு சுற்றுச்சூழல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகள், நிலத்தைப் போலவே மக்காமல் இருப்பது ஒருபுறம் என்றால், மீன்கள் முதலிய கடல் உயிரினங்கள் இவற்றை உண்ணவும் செய்கின்றன. கடலுணவுகளை உண்ணும் மனிதர்களுக்கு நீண்டகாலமான, நிரந்தரமான பாதிப்புகளையும் இவை ஏற்படுத்துகின்றன.

ஓசியானா எனும் கடல் சூழலியல் அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் அமேசான் இணையவர்த்தக நிறுவனம் மட்டும் உற்பத்திசெய்த பிளாஸ்டிக் பை வகையறா 106.6 கோடி கி.கி.. அதாவது, 67 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சரக்கு வண்டி அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகளைக் கடலில் கொட்டுவதற்கு சமமானது.

அமேசான் கடந்த ஆண்டு பயன்படுத்திய நெகிழிக் குப்பைகளின் அளவு, 2019ஆம் ஆண்டில் அது பயன்படுத்தியதைவிட 29 சதவீதம் கூடுதல் என்கிறது ஓசியானா அறிக்கை.

இந்தப் பிரச்னையைத் தடுக்கும்வகையில், தமிழ்நாட்டில் 2019 ஜனவரி முதல் தேதியிலிருந்து 14 வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. விழிப்பூட்டல், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பழையபடி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தலைகாட்டியபடிதான் இருக்கின்றன.

இந்த நிலையில், அவரவராக உணர்ந்துகொள்ளும் வகையில், துணிப்பைகளைப் பயன்படுத்துவதற்கான இயக்கத்தை அரசு தொடங்குகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை இதைத் தொடங்கிவைக்கிறார்.

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக, வாழை இலை / பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி / உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில்/ மரம் / மண்பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி / காகிதம் / சணல் பைகள், காகித / துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், உண்ணக்கூடிய தேக்கரண்டிகள் ஆகியவற்றை இனி நாம் எல்லோரும் பயன்படித்துவோம்.

---------------------------------------------------------------------------

தலைமறைவு பாலாசி.

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். 


இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை கடந்த 17ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.பி.மனோகர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படைகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேடிதிட்டமிட்டுள்ளத

இந்த நிலையில், போலிஸார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக விக்ரமின் சாமி படத்தில் வரும் வில்லனை போன்று வெவ்வேறு கார்களில் மாறி மாறி தப்பித்து வருகிறார் ராஜேந்திர பாலாஜி.

 இன்னும் ஒரு படி மேல் சென்று வெவ்வேறு கெட் அப்-ல் ராஜேந்திர பாலாஜி வலம் வருவதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆனால் போலிஸாரும் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருக்கும் 600 பேரின் செல்போன் எண்களை ட்ராக் செய்து அவரை பிடிப்பதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளி நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளது எனத் தெரிகிறது.


மோடி எங்க டாடி என வசனம் பேசிய இவரை காப்பாற்ற முடியாது என டாடி முகத்தை திருப்பிக் கொண்டாராம்.

ஏற்கனவே கிரிமினல்களின் கூடாரம் என வட மாநிலங்களில் நல்லபெயர்.தமிழ்நாட்டில் ரவுடிகள்,தாதாக்கள் புகலிடம் எனப் பெயர்.

இந்த நிலையில் தாமரையை மலரவைக்க என்ன செய்வது.குற்றவாளிகளிடம் இருந்து ஒதுங்கி நிற்கும் என்பதே தற்போதைய பா.ஜ.க.தலைமை முடிவில்.

--------------------------------------------------------------------------

கீழ வெண்மணி.


https://youtu.be/U0sl84ITK3A


உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் இருப்பதாக ராஜ்யசபாவில் கேரளாவை சேர்ந்த புதுமுக எம்.பியான ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டினார்.

கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் புதுமுக எம்.பி.யுமான ஜான் பிரிட்டாஸ்  ராஜ்யசபாவில் பேசியதாவது:

இந்தியாவில் இதுவரை 47 பேர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்களில் 14 பேர் பிராமணர்கள்.

பிராமணர் ஆதிக்கம் 1950-ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 14 பேரில் 11 பேர் பிராமணர்கள். 1980-ம் ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாமல் போனது ஏன்? உலகத்திலேயே நீதிபதிகள் நியமனம் இந்த அளவு ரகசியமானதாக எங்கேனும் இருக்கிறதா? நீதித்துறையின் சுதந்திரத்தை தற்போதைய நீதிபதிகள் நியமன முறை (கொலீஜியம், கொலிஜியம்) கேள்விக்குள்ளாக்குகிறது.

நீதிபதிகள் தேர்வு முறை மீது விமர்சனம்

தகுதியான நீதிபதிகளை கண்டறிந்து நியமிக்க நீதித்துறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. நீதிபதி அகிலேஷ் குரேஷி திட்டமிட்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக்கப்படாமல் இருக்கிறார் ஏன்? அவர் செய்த குற்றம்தான் என்ன? இந்த நாட்டின் அதிசக்தி வாய்ந்த நபரை சிறைக்கு அனுப்பியவர் என்பதாலா? (2010-ம் ஆண்டு குஜராத் மாநிலம் சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சிறைக்கு அனுப்பியவர்).

நீதிபதி பதவிகள் காலியிடங்கள்

நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் இத்தகைய நீதிபதி நியமனங்களை நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார். நீதித்துறையில் பன்முகத்தன்மை இல்லை. நாட்டின் உயர்நீதிமன்றங்களில் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 1098. ஆனால் 406 நீதிபதி பதவிகள் காலியாக இருக்கின்றன. உயர்நீதிமன்றங்களில் மட்டுமே 57 லட்சம் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இவ்வாறு ஜான் பிரித்தாஸ் பேசினார்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?