ஒமிக்ரான் பரவல்...

 பெருந்தொற்றின் தொடக்கத்திற்கே மீண்டும் நம்மை அழைத்துச் செல்ல ஒமிக்ரான் வரவில்லை. ஆனால், தற்போது ஒரு குழப்பமான சூழலுக்கு ஒமிக்ரான் வித்திடுகிறது. ஒமிக்ரான் குறித்த உறுதியான பதில்கள் கிடைக்க இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

ஒமிக்ரான் மிகவும் வேகமாகவே பரவுவதாகத் தெரிகிறது.

பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அல்லது முந்தைய பெரிய அலையின் காரணமாக, நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகியுள்ள இடங்களிலும்கூட, இது பாதிக்கிறது.

தென்னாப்பிரிக்கா அதன் டெல்டா அலையின் முடிவை ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அடைந்தது. நாளொன்றுக்குச் சராசரியாக 300 கொரோனா நோயாளிகள் என்ற அளவுக்கு பாதிப்பின் தீவிரம் குறைந்தது. ஆனால், தற்போது அதுவே, நாளொன்றுக்கு 10,000 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் நான்காவது அலையை உண்டாக்கக்கூடிய உந்து சக்தியாக இருக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள், ஒமிக்ரானுக்கான கோவிட் சோதனைகளில் விட்டுச் செல்லும் அசாதாரண தடங்களின் வழியே கண்காணித்தார்கள். இது எஸ்-ஜீன் டிராப் அவுட் (S-gene dropout) என அழைக்கப்படுகிறது. கடந்த நவம்பரின் பிற்பகுதியில் கிடைத்த பரிசோதனை முடிவுகளில், 0.1 விழுக்காடு மட்டுமே இந்தத் தடம் இருந்தது. ஆனால், இப்போது 5 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது. இது ஒரு நாளைக்குச் சுமார் 2,500 பேர் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரானின் பரவல் வேகத்தை அளவிடுவதில், அதன் மாறுபாட்ட புள்ளிவிவரங்களைக் கண்டறிய, இது துல்லியமான வழியில்லை. ஆனால், நச்சுயிரி மாதிரிகளின் முழு மரபணு பகுப்பாய்வுக்காக காத்திருக்காமல் விரைவான மதிப்பீட்டை உருவாக்க இது உதவுகிறது.

ஒமிக்ரான் பரவல், இன்னமும் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளதால், ஒமிக்ரான் பாதிப்புகள் பிரிட்டனில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் இரண்டு மடங்காக இருக்கலாம் என்று அந்த ஆரம்பக்கட்ட கணக்கீடுகள் கூறுகின்றன.

இது இங்கிலாந்திலுள்ள டெல்டா திரிபைவிட வேகமானது. 2020-ம் ஆண்டின் முற்பகுதியில் கோவிட்டுக்கு எதிராக நமக்கு நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதபோது வேகமாகப் பரவிய அசல் கொரோனா நச்சுயிரியோடு இதை ஒப்பிடலாம்.

நச்சுயிரியால் பாதிக்கப்படுவதற்கும் அதை வேறு ஒருவருக்குப் பரப்புவதற்கும் இடையில் மிகவும் குறுகிய இடைவெளி இருக்கலாம். அதிவேக வளர்ச்சி ஆற்றலின் காரணமாக, சிறிய எண்ணிக்கை விரைவில் பெரியளவில் பெருகும். ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்போது, மாத இறுதிக்குள் ஒரு நாளைக்குச் சுமார் 2,500 நோயாளிகள் என்பது 10,000-ஐத் தாண்டும்.

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்

ஆய்வாளர்கள், முதன்முதலில் ஒமிக்ரானிலுள்ள மரபணுப் பிறழ்வுகளின் பட்டியலைப் பார்த்ததிலிருந்து இருக்கும் கவலை என்னவெனில், அது தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கிறது. தடுப்பூசிகளை உருவாக்கப் பயன்படுத்திய அசல் கொரோனா நச்சுயிரிடமிருந்து இது மிகவும் வேறுபட்டுள்ளது, என்று கண்டறிந்தனர்.

நோய் எதிர்ப்பொருட்களைப் பயன்படுத்தும் சோதனையிலிருந்து நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் எவ்வாறு நிலைத்து நிற்கும் என்பது பற்றிய முதல்கட்ட தரவு இப்போது உள்ளது. இவை கொரோனா நச்சுயிரியின் மேற்பரப்பில் ஒட்டிக் கொள்கின்றன. அப்படி ஒட்டிக்கொண்டு அணுக்களை அது பாதிக்காமல் தடுக்கிறது.

இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்களின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பொருட்கள், நச்சுயிரியின் திறனை 20 முதல் 40 மடங்கு குறைப்பதாக இதுவரையிலான ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

ஆய்வுக்கூடத்தில் நடைபெறும் ஆய்வுகளின் முடிவுகள் நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்பதை எளிதில் சொல்லிவிட முடியாது. ஆனால், குறைவான பாதுகாப்பையே நல்கும் நோய் எதிர்ப்பொருட்களால், ஒமிக்ரான் அதிகம் பரவும் ஆபத்தும் ஏற்பட்டது.

இந்த நேரத்தில்தான், ஒரு நற்செய்தி வந்தது. ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் பரிசோதனைகளின் மூலம், மூன்றாவது டோஸ் நோய் எதிர்ப்பொருட்களின் அளவைப் பெருமளவில் அதிகரிப்பதைக் காட்டுகிறது. முந்தைய கோவிட் நச்சுயிரிக்கு எதிராக முந்தைய இரண்டு டோஸ்களும் செய்ததைப் போலவே, ஒமிக்ரானுக்கு எதிராக மூன்றாவது டோஸ் செய்யும் என்று பரிசோதனை முடிவுகள் பரிந்துரைக்கின்றன.

எடின்பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா.எலினோர் ரிலே, "இதுவரையிலான தரவுகள் உறுதியளிக்கிறது. பூஸ்டர் போட்டுக்கொள்வது கடுமையான நோய்த்தொற்றுக்கு எதிராக அதிகளவிலான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று பரிசோதனை முடிவுகள் அறிவுறுத்துகின்றன," என்று விவரிக்கிறார்.

ஒமிக்ரான் தொற்று எவ்வளவு கடுமையானது என்பது குறித்து இன்னும் தெளிவான பதில்கள் இல்லை.

ஆனால், ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டிருந்தாலோ அல்லது கடந்த காலத்தில் தொற்று ஏற்பட்டிருந்தாலோகூட, இந்தத் தொற்றின் தொடக்கத்தில் அதை எதிர்த்துப் போராடிய உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பு இன்னும் சிறந்த நிலையிலிருக்கும்.

நோய் எதிர்ப்பொருட்கள் உடல் பாதுகாப்பின் முக்கியப் பகுதியாக விளங்குகிறது. மேலும், அவை பூஸ்டர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவரை பரந்த, சிக்கலான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரேயொரு கூறு மட்டும்தான்.

ஒருவர் தொற்றுக்கு ஆளான பிறகு, நோய் எதிர்ப்பொருட்களைவிட, டி-செல்கள் நச்சுயிரியை அதிகம் கவனிக்கின்றன. ஆகவே, அவை புதிய திரிபுகளிடமிருந்து எளிதில் தவிர்க்கப்படுகின்றன.

ஆனால், ஒமிக்ரானால் ஏற்படும் நோய் எவ்வளவு கடுமையானது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள, யாரெல்லாம் அதற்குப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவேண்டும்.

ஒமிக்ரான் அலை உருவாவது, தடுப்பூசிகள் பெரும்பாண்மை மக்களைத் தீவிர நோய்வாய்ப்படுதலில் இருந்து தடுப்பது ஆகிய இரண்டுக்குமே சாத்தியக்கூறுகள் உள்ளன.

"நம்மில் பெரும்பாலோர்" முற்றிலும் நன்றாக இருந்தாலும்கூட, "அனைவரும்" நன்றாக இல்லை என்பதுதான் பிரச்னை. நம்மில் சிலர் பலவீனமானவர்கள். சிலருக்கு தடுப்பூசிக்கு நன்கு செயலாற்றும் நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பு இல்லை. சிலருக்குத் தடுப்பூசி போடமுடியாது. சிலர் தடுப்பூசி போடவேண்டாம் என்று தேர்வு செய்துள்ளார்கள்.

டெல்டா திரிபு மற்றும் கோவிட் தொற்றுநோய்க்கு இன்னும் மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படும் நபர்களிடையே இதைப் பார்க்கிறோம்.

ஓர் அலை திடீரென, ஒரே நேரத்தில் தொடங்கினால், சிகிச்சை தேவைப்படுகிற இத்தகைய மக்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் கவனிக்க வெண்டிய சூழல் ஏற்படும்.

"இது அனைத்தையும் ஒன்றாக இணைக்கிறது," என்கிறார் வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் டில்டெஸ்லி. "ஆகவே, ஜனவரியில் இருந்ததைப் போன்ற ஒரு பெரிய அலை உருவாகும் வாய்ப்புள்ளது. ஒரு கட்டத்தில் அது மருத்துமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்."

ஆனால், இதுவரையிலான அனைத்து தரவுகளிலுமே இன்னமும் பெரியளவு நிச்சயமற்ற தன்மை இருப்பதாக அவர் எச்சரிக்கிறார்.

ஒமிக்ரான் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, எவ்வளவு தீவிரமானது அல்லது தடுப்பூசியின் செயல்பாட்டைத் தவிர்க்கிறது என்பதற்கான உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் இல்லை. 

---------------------------------------------


சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் குளச்சல் பேருந்து நிலையத்தில் மீன் விற்றுவிட்டு தன் வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறிய மீனவ மூதாட்டி செல்வமேரியை , தூர்நாற்றம் வீசுகிறது என்று கூறி நடத்துநர் கீழே இறக்கிவிட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பலரும் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். பேருந்து நடத்துநரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த முதல்வர், எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர், நடத்துநர், புகார் மீது நடவடிக்கை எடுக்காத நேரக் காப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள்ளேயே நாகர்கோவிலில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

வள்ளியூரில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நாகர்கோவில் பேருந்து நிலையத்தை சுற்றியும் பேருந்து நிலையத்திலும் ஊசி, பாசி விற்பனை செய்து வருகிறார்கள். விற்பனையை முடித்துவிட்டு தினமும் மாலையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வள்ளியூர் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த வயதான கண் குறைபாடு உடைய ஆண், பெண் மற்றும் குழந்தை ஆகிய மூவரும் ஏறியுள்ளனர். இவர்கள் பேருந்திற்குள் சத்தமாக சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்து நடத்துநர் அவர்களின் உடைமைகளை வெளியே எடுத்து வீசிவிட்டு மூவரையும் இறங்கு இறங்கு என்று கோபமாகக் கூறி இறக்கிவிட்டு சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அந்த குழந்தை அழுதுகொண்டே தன்னுடைய உடைமைகளை எடுத்து வைத்து கொள்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

இதற்கிடையே அரசுப் போக்குவரத்து நாகர்கோவில் மண்டலப் பொது மேலாளர், நரிக்குறவர்களைப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட புகாரில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர் நெல்சன், நடத்துநர் ஜெயதாஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து திமுக எம்.பி கனிமொழி ட்விட்டரில், "சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும்போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூகநீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கோயில்களில் குறவர் இனத்தவர்களுக்கு அன்னதானம் மறுக்கப்படுவதாகவும், எங்களைப் பார்த்தால் பேருந்தை நிறுத்துவதில்லை என்றும் மகாபலிபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அவருக்கும், அவரது சமூகம் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் முதல்வரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?