பின்னோக்கு

 வளர்ச்சி நாயகன்!

சீனாவில் இருந்து 2019ம் ஆண்டு முடிவில் உலக நாடுகளுக்கு கொரோனா பெருந்தொற்று நோய் பரவத் தொடங்கினாலும், விரைவில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு பொருளாதார தரத்தை நிலை நிறுத்தியதோடு உலக வல்லரசு நாடாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சீனா முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.



இந்த நிலையில், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை லோவி இன்ஸ்டியூட், ஆசியா பவர் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த தரவுகள் இந்தியாவுக்கு பேரதிர்ச்சியையே கொடுத்துள்ளது. ஏனெனில், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா நான்காவது இடத்தையே பிடித்துள்ளது. குறிப்பாக இலங்கை, நேபாளம் இந்தியாவை விட முன்னேறியிருக்கிறது


இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 2020ம் ஆண்டோடு ஒப்பிடுகளையில் இரண்டு புள்ளிகள் குறைந்துள்ளது. மேலும் பொருளாதாரத்தில் கீழ்நோக்கிச் செல்லும் 18 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. பொருளாதாரத் திறன், ராணுவத் திறன், பின்னடைவு மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகிய நான்கு நடவடிக்கைகளில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

https://youtube.com/shorts/4jkthxEZyvM?feature=share





அதன்படி பாதுகாப்பு கூட்டணியில் 7வது இடத்திலும், பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டணியில் 8வது இடத்திலும் இந்தியா இருப்பதால் இரண்டு பலவீனமான அதிகார நடவடிக்கைகளுக்காக எதிர் திசையில் பயணிக்கிறது என லோவி நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்கால வளங்களுக்கான அளவீட்டில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மோடி அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு இந்த பட்டியல் மிகப்பெரிய உதாரணமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.



-----------------------------------------------------------------------------

ஆயிரங்கோடிப்பு......!

பிரபல நகை மற்றும் ஜவுளிக் கடையான சரவணா ஸ்டோர்ஸ் 1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறை ரெய்டில் அம்பலமாகியுள்ளது.

வணிக நிறுவனங்களில் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்கள், வருவாயை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டது வருமான வரித்துறை.

சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மொத்தம் 37 இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில் சோதனை முடிவை இன்று (டிசம்பர் 7) வெளியிட்டுள்ள வருமான வரித்துறை, “முதல் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, ஜவுளி மற்றும் நகைப் பிரிவில், கணக்கில் வராமல் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குழுமத்தில் நடைபெற்ற சோதனையில், போலியான விற்பனை ரசீதுகளை உருவாக்கி ரூ.80 கோடி வருவாயை மறைத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத தங்கம் வாங்கியது தொடர்பான ஆதாரங்களும் சேகரிப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத வாடகை ரசீதுகள் மற்றும் சில்லரை வியாபாரங்கள் என 7 கோடி ரூபாய் மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

2 நிறுவனங்களுக்குச் சொந்தமான 37 இடங்களில் நடந்த சோதனையில், ரொக்கம் ரூ.10 கோடி, ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

--------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?